கால்+ஏஜ் = காலேஜ் - காதல்!? - 2

வணக்கம் நண்பர்களே...

முன்னாள் படிக்க - இங்கு சொடுக்கவும்


கெளம்பி வந்தோமுங்கோ...


ட்ரைன்ல அந்த பொண்ணும், அவங்க நண்பிகளும் நாங்க ஏறிய பேட்டியிலேயே ஏறியதில், அனைவருக்கும் மகிழ்ச்சி(ஹிஹி!)...சரி கடலைய மீண்டும் ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சப்போ 3 பசங்க திடுதிப்புன்னு ஓடிவந்து ரன்னிங்க்ல அந்த ரயில் பெட்டிக்குள்ள ஏறினாங்க...
(அவர்களில் ஒருவன் வாய் மலர்ந்தான்...பான்பராக் ஸ்மெல் குப் என்று வீசியது!)


டேய் யார்ரா நீங்க...


இதோடா...ஏன் நண்பா இன்னா விசயம்...


இது என் பிகரு...


(அடங்கோ!) என்ன நண்பா...அப்படியா எங்களுக்கு தெரியாதே...நாங்க ஒன்னும் கலாட்டா எதுவும் பண்ணலியே...ஏன் இப்படி டென்சன் ஆகுறீங்க..


டேய் உனக்கு சொன்னா புரியாதா...எந்த காலேஜ்ரா நீ...


ஹிஹி ######(வேட்டி காலேஜ்!)...


ஹஹா ஸ்கூல் பாய்ஸ்...


கண்ணு நானும் பாத்துகிட்டே இருக்கேன்...எதுக்கு கலாய்ச்சிட்டே இருக்க..இது உன்னோட பிகருன்னா...பேசிட்டு போயேன்..நாங்க என்னமோ கைய புடிச்சி இழுத்தது போல பீல் பண்ற...


ஓ அதுவேற செய்வியா...


(அந்தப்பெண் இடை மறித்து!)


கிஷோர்...நான் உங்ககிட்ட ஏற்கனவே பலமுறை சொல்லிட்டேன்..எனக்கு உங்க கிட்ட பேச இண்டரெஸ்ட் இல்லன்னு...


(அடங்கோ அப்போ மீ செகண்ட்!)


இல்ல சுசி(!) நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிக்கோயேன்!


(ஆஹா பொண்ணு அவன் பக்கம் இல்ல..எட்றா அருவாள..இப்ப பாரு!)


மச்சி...அதான் பொண்ணு உன்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிடிச்சே அப்புறம் ஏன் டிஸ்டர்ப் பண்றே...


டேய் கெளம்பு...


ஹே ஹே...இதோடா சிக்னல் வர்ற வரைக்கும் தான் நீ சொல்றத எல்லாம் நாங்க கேட்டுட்டு இருந்தோம்...அடுத்து பேசுன...!


என்னடா பண்ணுவ...


உனக்கு என்ன வேணுமோ அம்புட்டும் கொடுத்து அனுப்புவேன்...
(கூட வந்த நண்பர்கள்(!) வம்பு வேண்டாம் என்று கதற, மற்ற பயணிகள் எழுந்து சமாதான உடன்படிக்கை படிக்க ஒரு வழியாக அப்போதைக்கு பிரச்னை முடிவுக்கு வந்தது!)


உனக்கு தில்லு இருந்தா தனியா இறங்கி வாடா என்றான்...


வந்துட்டா போச்சி...எங்க கண்ணு வரணும்...


நுங்கம்பாக்கம் இறங்கு பேசிப்போம்..


அது என்னடா நுங்கம்பாக்கம்..ஏன் அங்க தான் உன்னோட கூட்டாளிங்கல்லாம் இருக்காங்களா..


ஏய்..


(தெலுங்கு பட சீன் கணக்கா கொஞ்ச நேரம் கத்திட்டு அடங்கிட்டாங்க!...ஆனா நாம அடங்குவோமா!...St. Thomas மவுன்ட் ரயிலடி இறங்கிய அந்த பெண்...)


என்ன விக்கி ஞாபகம் இருக்குல்ல என்றாள்...(வாய கொடுத்து வம்பு வாங்கிட்டனோ!)


ம்ம்...பைங்க என்றேன்..


(அந்தப்பைய முறைக்க..நம்ம பயலுங்க சிரிக்க ஒரே கலவரம் ஹிஹி!...ஆனா பாருங்க நான் கோடம்பாக்கத்துலையே இறங்கிட்டேன்...ஏன்னா எங்க மாமா வீடு அங்க தான்...அங்கதான் அப்போதைக்கு எனக்கு வாசம்!)


அந்தப்பெண் சொன்ன படி, நங்கநல்லூர் சனிக்கிழமை போய் நிக்கிறேன்...எதிர்த்தாப்ல அந்த 6 அடி நண்பனும்(!) நிக்கிறான்...மங்காத்தாடா!


ஏன்டா இங்க வந்த...


என்னய்யா இது கோயிலு யாரு வேணா வருவாங்க உனக்கு என்ன ஹே ஹே..


நக்கலு...


இல்ல விக்கலு...போடா டேய்...
ஆஞ்சநேயர பாக்கும் போது எதோ தவறு செய்யிறேன்னு சட்டுன்னு உணர்தாப்ல இருந்துச்சி...திரும்பி பாக்குறேன் 5 பேர் நிக்குரானுங்க..அதுவும் பைக்கோட(அன்றைய பேமஸ் 100R யமஹா!) ஹாக்கி ஸ்டிக்க வச்சிக்கிட்டு...அடப்பாவிகளா..இம்புட்டுக்கு நான் ஒர்த் இல்லையேடா!...அங்க இருந்து கொஞ்ச தூரம் வரை ஓடி வர முடிஞ்சிது(உபயம் - NCC)...அதுக்கு பிறகு சுத்து போட்டுட்டாங்க...உங்க வீட்டு எங்க வீட்டு அடி இல்ல அம்புட்டு அடி...இதுக்கு மேல இது தேறாதுன்னு தூக்கி போட்டுட்டு போயிட்டானுங்க..


(நாம என்ன சினிமா ஹீரோவா அத்தனை பேரையும் அடிச்சி துவைக்க ஹேஹே!) 


தொடரும்...


கொசுறு: நினைவுகள் எப்போதும் தூங்குவதில்லை பல நேரங்களில் எட்டிப்பார்கின்றன...முகம் மட்டுமே மறைத்து இருக்கிறேன்...நினைவுகளை அல்ல...!..


மிச்சம்: ஸ்பாட்ல திரு. ஹரிஷ் இல்லை (இது நண்பர் "ஜி" க்காக!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. மாம்ஸ், அடி வாங்கிடிங்களா? ஐயோ...

  ReplyDelete
 2. எம்புட்டு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே எம்முட்டு நேரந்தான் இருக்கறது????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. Hi...hi...hi.,..

  Maams...
  Appaadi...ippathaan
  happy-nu.....

  Comment varum
  parunga......

  ReplyDelete
 4. இப்படி தனியாளா போயா மாட்டிக்கிறது?களவுக்குப் போனாலும் துணை வேணுமில்லா?

  ReplyDelete
 5. மாம்சு...
  இது என்னோட காலேஜ் லைப்-லயும் நடந்தது. என்ன நீரு பொண்ணுக்காக அடி வாங்கிநீரு. நானு, சரக்குப் போட்டுட்டு... ஹி ஹி ஹி....
  #காலேசுளை எல்லாம் படிச்சு இருக்கியான்னு கேக்கப்படாது.....

  ReplyDelete
 6. என்ன மாம்ஸ்,இன்னும் பயிற்சி வேண்டுமோ?(ஓடுறதுக்கு தான்)

  ReplyDelete
 7. //அதுக்கு பிறகு சுத்து போட்டுட்டாங்க...உங்க வீட்டு எங்க வீட்டு அடி இல்ல அம்புட்டு அடி...இதுக்கு மேல இது தேறாதுன்னு தூக்கி போட்டுட்டு போயிட்டானுங்க..//

  ஆஹா....... விட்டுட்டு போயிட்டாங்களே.....

  ReplyDelete
 8. மாம் அது மூத்தர சந்துதானே...சொல்லவேயில்லை....

  ReplyDelete
 9. அதுல திருந்தினது தான் போல....

  ReplyDelete
 10. உபயம் NCC- இரசித்தேன்...:)

  ReplyDelete
 11. பாவமா இருக்கு சார்... அப்புறம் .... தொடருங்கள் !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி