பென்ட்லி(Bentley) - சுய புராணம்

வணக்கம் நண்பர்களே...
என்னதான் வேலைப்பளு அதிகரித்தாலும் அதிலும் சில அனுபவங்கள் சுவாரசியம் மிகுந்தவைகளாக மாறிப்போகின்றன..அதில் ஒரு விஷயம் இந்த பதிவு...


பென்ட்லி கார் பற்றி அறிந்து கொள்ள - Bentley car 


இந்தியாவில் பார்க்க முடியாத கார் வகைகளை இங்கு ஹனோயில் பார்த்து வருகிறேன்...அதில் ஒன்று தான் இந்த கார்(!)...என்னதான் வியாக்கியானம் பேசினாலும் ஆசை யாரை விட்டது..


திடுதிப்பென்று ஒரு பெரிய மனிதரின்(!) அழைப்பை மறுக்க முடியாமல் வேலை விஷயமாக சந்திக்க வேண்டி வந்தது...அவரும் என்னுடைய மேலதிகாரி தங்கி இருக்கும் மேல் தட்டு ஹோட்டலுக்கு கார் அனுப்புவதாக கூறி போன் செய்தார்...


நானும் டொயோட்டா வரும் என்ற எதிர் பார்ப்பில் இருந்தேன்..அழைப்பு வந்தது கைப்பேசியில்...எடுத்து பேசினால் வெளியில் காத்திருப்பதாக அவரின் காரியதரிசி(ஹிஹி!) கூறினாள்...அடங்கொய்யால நானும் தலைவரும்(!) வெளியில் வந்து பார்க்கிறோம் படகு போல இருக்கிறது அந்த கார்..உள்ளே உட்கார்ந்த பொழுது தான் பல விஷயங்கள் புரிந்தன...


கார் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கினாலும் குலுங்க வில்லை..ஒரு வேலை அந்த காரிய(!) தரிசி பேச்சு கொடுத்து வந்ததாலா(!)..இந்தப்பயணம் மறக்க முடியாத விஷயம்...என்னமா பணக்காரங்க வாழுராங்கய்யா...


சும்மா சொல்லக்கூடாது...வாழ்கைய அனுபவிக்கிராங்கய்யா(!)...இந்த பந்தாவான காரை வைத்து இருக்கும் அந்த நபரை சந்தித்த போது அவரின் பேச்சில் ஒரு துளி பெருமை தெரியவில்லை..அவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்..


இப்படிப்பட்ட பயணங்கள் தான் மேல்மட்ட மக்களின் அன்றாட வாழ்கையை என்னை போன்ற சாதாரண மனிதனுக்கு உணர்த்துகின்றன..
என்ன வாழ்கடா இது...இல்ல என்ன மாதிரியான வாழ்கைடா இது...ம்ம் காலம் ஒரு நாள் மாறும் நம் கனவுகள் எல்லாம் தீரும்(!)..வந்ததை எண்ணி வியக்கின்றேன்..சிலர் சிரிப்பார்...சிலர் அழுவார்...நான்...???????


கொசுறு: பகிரணும்னு தோணிச்சி...தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. Car ulle ulla...
  Vasathi....pathium....
  Sollurathu...

  (bus-la thookkam varala
  maamas...yaaraavathu...
  Irunthaa kuummalaam...)

  ReplyDelete
 2. //என்னமா பணக்காரங்க வாழுராங்கய்யா...
  //

  இக்கரைக்கு அக்கறை பச்சை!

  ReplyDelete
 3. எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

  அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

  ஆனாலும் அவன் நல்லவன்

  ஹி ஹி

  ReplyDelete
 4. தமிழ்பதிவுலகிலேயே முதன்முறையாக.... பென்ட்லி கார் சவாரி செய்த பெருமை அடைந்த மாம்ஸ்க்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. மாமா நான் ஆடி கார்ல ஒரு முறை போயிருக்கிறேன்.(ஓட்டியதில்லை)அதுவே மிட்டாய் கடைய பார்த்த பட்டிக்காட்டான் மாதிரி உணர்வு இருந்தது...பென்ட்லி கார்ல நீங்க போனது அது மாதிரிதான் நினைக்கிறேன்.ஆனா நான் போன போது பக்கத்துல B.A.பிகரு இல்லை அதான் வருத்தம்..

  ReplyDelete
 6. //சி.பி.செந்தில்குமார் says
  எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

  அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

  ஆனாலும் அவன் நல்லவன்

  ஹி //
  பதிவைப் படிச்சு கமெண்ட் போட்டுறவே கூடாதுன்னு கொள்ளைப்பேரு கிளம்பிருக்காங்கப்பா!

  ReplyDelete
 7. //இந்தப்பயணம் மறக்க முடியாத விஷயம்...//
  எப்படி!

  ReplyDelete
 8. கொடுத்து வைக்கவேண்டும்!

  ReplyDelete
 9. பத்து மணி நேர பவர்கட்டுல அவனவன்
  கொட்டை பொசுங்கித்திரியிரோம்...மாப்ள...
  உனக்கு பெண்ட்லி கார் சவாரியா...
  நல்லா இருடே...நல்லா இரு...

  ReplyDelete
 10. Food sir...
  U...r...correct....
  I...
  Vazhi.....
  Mozhinjing.....
  :)
  :)
  :)

  ReplyDelete
 11. பென்ட்லி கார் சவாரியா? நமக்கு Prius தான் இதுவரை உச்சபட்ச சவாரி.

  ReplyDelete
 12. அந்த பெரிய மனிதர்ட்ட நம்ம பேரையும் சொல்லி வைங்க தலைவா...

  ReplyDelete
 13. கொய்யால வாழுரானுகாய்யா வாழட்டும் வாழட்டும்....

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் says: March 23, 2012 9:59 AM Reply
  எனக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான்.. அவனுக்கு குழந்தை மனசு... டீச்சர் என் கையை பிடிச்சு இழுத்துட்டான் அப்டினு புகார் பண்ணூவான்.. அவங்க ஊர்ல மின் தடை பிரச்சனை இல்லை.. இருந்தாலும் மின் தடை உள்ள நண்பனின் வருகையை ரெகுலரா எதிர் பார்ப்பான்.. நாம வந்தாத்தான் அவனும் வருவான்

  அப்படியாவது பிசியா இருக்கானா?ன்னு பார்த்தா வெட்டி அரட்டை தான் அடிப்பான்.. பி ஏ கூட..

  ஆனாலும் அவன் நல்லவன்

  ஹி ஹி//

  ஹா ஹா ஹா ஹா உண்மையை உண்மையா சொன்ன உன் டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணே....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி