கால்+ஏஜ் = காலேஜ் - காதல்?

வணக்கம் நண்பர்களே...
அது ஒரு காலேஜ் காலம், அப்போது தான் கல்லூரியில் இணைந்த நேரம்...அனைத்து வித கல்சுரல் போட்டிகளிலும்...குறிப்பாக பேச்சி போட்டிகளில்   விருப்பம் அதிகமாக இருந்ததால் அடித்து ஆடிய நேரம்..அப்படி ஒரு நேரத்தில் சென்னையின் ஒரு கல்லூரியில் இருந்து போட்டிகளுக்கு அழைப்பு வந்து இருந்தது...அதுவும் பெண்கள் கல்லூரி, பொதுவாக அக்கல்லூரி எந்த ஒரு ஆண்கள் கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுவதில்லை..


எங்கள் கல்லூரியை ரொம்ப சாந்தமான கல்லூரி என்று நினைத்து எப்போதுமே பெண்கள் கல்லூரிகள் எங்களுக்கு அழைப்பு விடுவார்கள்...அப்படி ஒரு அழைப்பை ஏற்று போட்டிக்கு சென்று இருந்தோம்..


ஏன்டா மாப்ள..எல்லாம் லேடிஸ் காலேஜ் தான் வந்து இருக்காங்க...நாம 5 பேர் மட்டும் தனியா தெரியிறோம்...


எலேய் அமைதியா இரு...சுத்தி பொண்ணுங்க நடுவுல மாட்டி இருக்கோம்...கலாச்சிடுவாங்க...


ஆமாம் மச்சி உசாரு...இவங்கள பாத்தாலே பயமா இருக்கு...பேச்சிலேயே பின்னி எடுக்கறாங்க...இங்க நாம ஜெயிக்கலன்னாலும் பரவால்ல ஒழுங்கா ஊரு போயி சேருவோம்..


ஒரு பெண் எங்களிடம் பேச்சி கொடுத்தாள்...


அலோ எந்த காலேஜ்...


(யக்கா நொந்த காலேஜ்) ###### காலேஜ்...


அட ஸ்கூல் பாய்ஸ்....


எது...அலோ ஏங்க வம்பு இழுக்கறீங்க...


அலோ நீங்கல்லாம் பொண்ணுங்க தனியா வந்தா என்னமா கலாய்கிறீங்க...நாங்க மட்டும் உங்கள சும்மா விட்ருவமா..


ஹிஹி..யக்கா..விடுக்கா..


என்னாது யக்க்காவா...


சரி தங்கச்சி...


அடேய் நான் உனக்கு தங்கச்சியா...


சரிங்க என்னங்கறீங்க இப்போ...


ஏன்டா ஒரு காலேஜுக்கு இன்விடேஷன் வந்து இருக்கே, அதுவும் லேடிஸ் காலேஜாச்சேன்னு யோசிக்க வேணாம்...சைட்டடிக்க கெளம்பு வந்துடறதா...
ஹேஹே...


என்ன சிரிப்பு...


அப்படியே புட்டு புட்டு வைக்கறீங்களே...நீங்க யாருங்க..


நான் தான் இந்த காலேஜ் சேர்மன்..


ஓ சேர் வுமன்(!)...


என்ன நக்கலா...


இல்லீங்க...


சரி வந்தமா...எதோ உளறிட்டு போனமான்னு இருக்கணும்...இங்க ஏதாவது சீன் போட்டீங்க...மவனே நறுக்கிடுவோம்..


அய்யோ...நீங்க போங்க...நாங்கல்லாம் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டோம்...


(அந்த பெண் அகன்றதும்...எங்கள் நிலைமையை நினைத்து கொண்டோம்...அப்போது!)


மாப்ள அந்த பிகரு சூப்பரா இருக்கு...அதுவும் இங்க தான் பாக்குது..ட்ரை பண்ணுவோமா..


ஏன்டா நாதாரி..இப்போதான் அந்த லேடி போலிஸ்(!) சொல்லிட்டு போனாங்க இல்ல...உனக்கு புரியலியா..


அட விடு மாப்ள...இவங்கல்லாம் அப்படித்தான்..நாமலே கண்டுக்கலன்னா யாரு கண்டுப்பா...ஏற்கனவே எல்லாம் நம்மளையே பாத்துட்டு இருக்காங்க...சரி வா பிட்ட போடுவோம்!


(அப்படியே நடந்து கேண்டீனுக்கு போனோம்...அந்த பெண்ணும் அவளுடன் சில நண்பிகளும் எங்களை தொடர்ந்தனர்!)


ஹாய்...


எந்த காலேஜ்...


###### ஏங்க...நீங்க எதாவது கலாசப்போறீங்களா..


ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல...சும்மா கேட்டோம்...


(உரையாடல் நீளமாகப்போக...ஒவ்வொருத்தரும் தனி தனியாக கடலை போட ஆரம்பித்தோம்!..அதில் என்னிடம் பேசிய ஒருத்தி...)


நான் செயின்ட்தாமஸ் மவுன்ட்ல தான் இருக்கேன்...


ஓ அப்படிங்களா...(எதுக்கு ஊரு பேருல்லாம் சொல்றா!)


நீங்க நங்கநல்லூர் கோவிலுக்கு வருவீங்களா..


ஏங்க...எப்பவாவது வருவேன்...


அங்க ஆஞ்சநேயர் சிலை பாத்து இருக்கீங்களா...


(என்னைய குத்தி காட்றா போல!)...ம்ம் பாத்து இருக்கேன்..


(பொண்ணுங்க சம்மந்தமே இல்லாம பேசிச்சிங்கன்னாலே வலை விரிச்சாசின்னு அர்த்தம்!)


வாங்களேன் இந்த சனிக்கிழம..


ஹிஹி...வந்துட்டா போச்சி...(சபாஷ் மவனே தேறிட்ட!)


(மீண்டும் அந்த லேடி போலிஸ்(!) அங்கு வந்தாள்!)


ஏன்டா உங்கள என்ன சொன்னேன்...
சாரிங்கோ டீ குடிக்க வந்தோமுங்கோ..இதோ கெளம்பிடுரோமுங்கோ...


கெளம்பு இங்க மீட்டரேல்லாம் போடக்கூடாது...


(பார்ரா இவங்க ஆளுங்க தான் மீட்டர் போட்டுட்டு இருக்காங்க..ஹேஹே!)


தொடரும்...


கொசுறு: நானும் ஒரு பதிவிலேயே முடிக்கணும்னு பாக்குறேன்..ம்ம் எல்லாம் சோம்பேறித்தனம்தான் காரணம்னு நெனச்சிடாதீங்க...வேலை வந்துரிச்சி ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. He....he....he....
  Arambathula....
  Sema bulb...pola...

  ReplyDelete
 2. தொடருங்கள் பல்புகளுடன்....-:)

  ReplyDelete
 3. சாமியார் காலேஜ் போல....

  ReplyDelete
 4. ஆரம்பமே அமர்க்களம் ? தொடருங்கள் !

  ReplyDelete
 5. சனிக்கிழமைக்கு அப்புறம்?????

  வெயிட்டிங்

  ReplyDelete
 6. மாம்ஸ் நல்லாத்தான் போகுது ...

  பல்பு வாங்கியதை கூட கௌரவமாக.. சொல்ரிகளே.

  பிடிச்சிருக்கு

  தொடருங்கள்

  ReplyDelete
 7. நல்ல தொடர் ஹிஹி தொடருங்கள் விக்கி சார்

  ReplyDelete
 8. கலைஞன் என்றாலே பெண்கள் தொடர்பு கிடைக்கத்தானே செய்யும் மாமு!

  ReplyDelete
 9. மாமா...நீங்க படிச்சது செத்தகாலேஜா....

  ReplyDelete
 10. //குறிப்பாக பேச்சி போட்டிகளில் விருப்பம் அதிகமாக இருந்ததால் அடித்து ஆடிய நேரம்..//

  யார் அந்த 'பேச்சி'?

  ReplyDelete
 11. மனசுல திருவள்ளுவர்னு நெனப்பு. நாலு லைனு சேந்தாப்புல எழுதவே மாட்டாரு. மனோ சகவாசம்!?

  ReplyDelete
 12. அண்ணே களி ஆட்டமா காளி ஆட்டமா அண்ணே...?

  ReplyDelete
 13. ரமேஷ் வெங்கடபதி said...
  கலைஞன் என்றாலே பெண்கள் தொடர்பு கிடைக்கத்தானே செய்யும் மாமு!//

  இவனை கலைஞன்னு சொன்னீங்கன்னா கலைஞனை என்னான்னு சொல்வீங்க அண்ணே ஹி ஹி...

  ReplyDelete
 14. நல்ல வேளை... நறுக்காமல் விட்டார்கள்;...

  ReplyDelete
 15. பெண்கள் தொடர்பு கிட்டுபவர்கள் எல்லாரும் கலைஞன் தானுங்க! கூட்டி கழிச்சு பாருங்க..பங்காளி மனோ!

  ReplyDelete
 16. இதுக்குத்தான்யா இந்த கல்யாணம் ஆனா ஆளுங்க எழுதுற கதைய நா படிக்கறதே இல்ல.. பொண்டாட்டியோட சேந்து மெகா சீரியல் பாத்து பாத்து தொடரும் போன்ற பழக்கம் வந்துடுது...

  ReplyDelete
 17. மாம்ஸ்.. நல்லா இருக்கு.. ஆஞ்சநேயர் கொளத்துல என்ன பண்ணீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க...:)

  ReplyDelete
 18. சோம்பேறித்தனம்தான் காரணம்னு நெனச்சிடாதீங்க...வேலை வந்துரிச்சி ஹிஹி!
  >>
  சீக்கிரம் சமைச்சுட்டு வாங்கண்ணா

  ReplyDelete
 19. கலக்குங்க மாம்ஸ்! அடுத்த பகுத்திக்கு வெயிட்டிங்! அங்க போன உங்க குரூப்ல ஹரீஷ் ராகவேந்திரா இருந்தாரா?

  ReplyDelete
 20. http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html

  முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

  ReplyDelete
 21. /////அது ஒரு காலேஜ் காலம், அப்போது தான் கல்லூரியில் இணைந்த நேரம்.../////

  தக்காளி... டுட்டோரியல் காலேஜ்ல படிச்சிட்டு அலப்பறைய பாத்தியா?

  ReplyDelete
 22. ///(பொண்ணுங்க சம்மந்தமே இல்லாம பேசிச்சிங்கன்னாலே வலை விரிச்சாசின்னு அர்த்தம்!)/////

  அனுபவஸ்தர் சொல்றார், கேட்டுக்குவோம்...!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி