செல்லங்களை வளக்கலாமா - வியட்நாம்(VN)

வணக்கம் நண்பர்களே...
கொஞ்ச நாளா வீட்ல இருக்க வாண்டை பற்றி எழுதுவதில்லை..உங்களுக்கு குழந்தைகள் பிடிக்கும்னா தொடருங்க..


நான் என் மகனுடன் விடுமுறைகளில் ஊர் சுற்றுவது வழக்கம்(!)...எங்கன பாத்தாலும் பய புள்ளைங்க ஒன்னோட ஒன்னு இச் அடிச்சிட்டு இருக்கறத பாத்துட்டு "லவ் பண்றாங்களாம்" ன்னு 5 வயதுப்பய்யன் சொல்வதை கேட்டு அசட்டு சிரிப்புடன் பதில் சொல்லாமல் நழுவி விடுவது வழக்கம்...


இந்த மாஸ்டருக்கு செல்லப்பிராணிகள் வளக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை உண்டு..வீட்டுக்காரம்மாவுக்கோ இந்த விஷயம் பாகக்காய் அளவுக்கு கசக்கும் என்பதால் தவிர்த்து வந்தேன்..வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு தடையில்லை என்றாலும்..


இந்த முறை நகர்வலம் சென்ற போது ஒரு இடத்தில் இருந்த மீன் கடைகளை கண்டதும் குஷியாகிய மாஸ்டர்..எனக்கு இப்பவே வாங்கிட்டு போகணும் வீட்டுக்கு என்று அடம் பிடித்தான்..சரி வாங்கலாம் என்று அருகில் போன எனக்கு அதிர்ச்சி..
பல தொட்டிகளில் மீன்கள், சிறு பச்சை தவளைகள், சிறு ஆமைகள் இருப்பதை கண்டேன்..


என்ன கலர் மீன்கள் வாங்கனும்னு சொல்லுப்பா என்றதும்..


மீன் மட்டும் போதாது...தனி தனியா இன்னும் ரெண்டு கண்ணாடி தொட்டில தவளை ஒன்னுத்துலயும், ஆமை ஒன்னுத்துலயும் வளக்கப்போறேன்னு சொன்னதும்..என் மனைவி என்னை முறைக்க நான் செய்வதறியாது திகைக்க..


இல்ல கண்ணு மீனு மட்டும் தானே வாங்கனும்னு சொன்னே..


அது போனமாசம்..இது இந்த மாசம்னு மாஸ்டர் சொல்ல..ஸ்ஸ் அபா..


(ஏன்டா பாவிகளா விக்கறது தான் விக்குறீங்க வெறும் கலர் மீன்களை மட்டும் வித்தா போதாதா என்று உள்மனம் கேக்க தூண்டியது!)


மூணு முடியாது கண்ணு..வேணும்னா கலர் மீன்கள் மட்டும் வாங்கிக்க என்றதும்..


ஏன்...தவளை, ஆமை வளக்க கூடாதான்னு மாஸ்டர் கேக்க...


ஆமை தரித்துரம்னு வீட்டுக்காரமா சொல்ல...


அது என்னது தரித்துரம் அது எப்படி இருக்கும்னு மாஸ்டர் கேக்க...


(போற போக்குல என்னைய கிறுக்கனாக்கிட்டாங்களேன்னு நெனச்சி நான் கதற!)
முடிவா எதுவும் வாங்காம வந்தாச்சி..


திடு திப்புன்னு நாங்க(மாஸ்டர் இல்லாமல்!) நகர்வலம் போக இப்போது வீட்டுல மீன் தொட்டி வாங்கி வச்சாச்சி..உள்ளார 5 கலர் மீன்கள் உற்பட..இப்ப அந்த கதைய மறந்துட்ட எங்கள் மாஸ்டர்..ஏம்பா என்னைய கூட்டிட்டு போகாம வாங்குனீங்க என்று கேக்க..நான் "ங்கே"!


குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத போது தான் நம் கோவம் எல்லை மீறுகிறது...மீண்டும் மீண்டும் அவர்களின் கேள்விகள் மொய்க்க ஆரம்பித்ததும்..அதை எப்படிடா எதிர் கொள்வது என்று தெரியாமல் முழிக்கும் நம்மை குழந்தைகள் என்ன வென்று நினைக்கும்!கொசுறு; சிக்கு மங்கு சிக்கு மங்கு செக்க பாப்பா...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. ஆமை வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் ஆமைக் கறியாவது வாங்கிக் கொடுங்கள் ....எனக்கு ஏனோ கொஞ்சம் குமட்டுது!!!

  ReplyDelete
 2. அந்த கடைசி வீடியோ. உவ்வே!

  ReplyDelete
 3. அந்த இச் மேட்டருக்கும், நீங்க சொல்ல வந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்னு இன்னும் புரியல. ஙே!

  ReplyDelete
 4. ஆமைகறி சாப்புடுடா ராஸ்கல்......

  ReplyDelete
 5. மாமா நீரே ஒரு வளர்ப்பு பிராணி பிறகு எதற்கு மீன் நண்டு எல்லாம் நல்ல தண்ணீர் தொட்டியா பார்த்து முங்கிகங்க.......

  ReplyDelete
 6. குழந்தைகளோட கேள்விக்கு பதில் சொல்லுறது ரொம்ப கஷ்டம்தான் சகோ... அதோட தரித்திரம் எப்படி இருக்கும்னு கேட்ட அந்த குழந்தை தனத்தை ரசித்தேன், வயது ஆக ஆக எல்லாரும் எப்படி மாறிப்போகிறோம், குழந்தையாகவே இருந்திருக்கலாம் :)

  ReplyDelete
 7. மாப்ளே விக்கி

  ///(போற போக்குல என்னைய கிறுக்கனாக்கிட்டாங்களேன்னு நெனச்சி நான் கதற!)///

  மறுமகன் உங்கள பாடா படுத்திட்டார் போலே சூப்பர் ஹா ஹா ஹா

  ReplyDelete
 8. விக்கி

  ///மீன் மட்டும் போதாது...தனி தனியா இன்னும் ரெண்டு கண்ணாடி தொட்டில தவளை ஒன்னுத்துலயும், ஆமை ஒன்னுத்துலயும் வளக்கப்போறேன்னு சொன்னதும்..என் மனைவி என்னை முறைக்க நான் செய்வதறியாது திகைக்க..////

  என் சொந்த கத மாதிரி இருக்கு போன முறை ஊருக்கு போன போது இதே மாதிரி அனுபவப்பட்டேன்

  பறவை விக்கிற கடையில் என்மகன் வெள்ளை கிளி வாங்கி தாங்க என்று அடம்பிடிக்க என் மனைவி என்னையே முறைக்க கடைசியில் மகன் தான் வென்றான்

  ReplyDelete
 9. ///(ஏன்டா பாவிகளா விக்கறது தான் விக்குறீங்க வெறும் கலர் மீன்களை மட்டும் வித்தா போதாதா என்று உள்மனம் கேக்க தூண்டியது!)///

  சேம் பீலிங்
  பச்சக்கிளி மட்டும் விக்க வேண்டியது தானே(பச்சக்கிளி 40 ரூபாய் வெள்ளைக்கிளி 500 ரூபாய்)

  ReplyDelete
 10. மாப்ள நல்லவேளை பாம்பு பல்லி விற்கவில்லை என்று சந்தோசப்படுங்கள்

  ReplyDelete
 11. குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத போது தான் நம் கோவம் எல்லை மீறுகிறது//

  Join the club bro...

  ரொம்ப நாளாய் இது எனக்கு படாத ஒன்று...சமீப காலத்தில் தான் உணர்ந்தேன்...already a lot of damage has been done...

  இப்பவாவது உணர்ந்தோமே...

  ReplyDelete
 12. லன்ச்சுக்குத் தவளையும் உண்டா?

  ReplyDelete
 13. //குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத போது தான் நம் கோவம் எல்லை மீறுகிறது...//

  குழந்தைகள் எப்போதுமே நம்மைவிட புத்திசாலிகள். நமக்கு ஒன்றுமே தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

  ReplyDelete
 14. கொஞ்ச நாளா வீட்ல இருக்க வாண்டை பற்றி எழுதுவதில்லை..உங்களுக்கு குழந்தைகள் பிடிக்கும்னா தொடருங்க..
  >>>
  குழந்தைகளை பிடிக்காதவங்க இந்த உலகத்துல யாராவது இருப்பாங்களா சகோ

  ReplyDelete
 15. குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத போது தான் நம் கோவம் எல்லை மீறுகிறது..
  >>>
  ரொம்ப சரியா சொன்னிங்க சகோ எனக்கும் பிள்ளைகளின் வாயடைக்க தெரியாத போது கோவம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கேன்

  ReplyDelete
 16. குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத போது தான் நம் கோவம் எல்லை மீறுகிறது..
  >>>
  ரொம்ப சரியா சொன்னிங்க சகோ எனக்கும் பிள்ளைகளின் வாயடைக்க தெரியாத போது கோவம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கேன்

  ReplyDelete
 17. வணக்கம் வெங்கட் சார்!அது ஒரு வயது,ரசனை இருக்கும் வரை தான் தொடரும்! ஆயிரத்தில் ஒன்று,நூற்றில் ஒன்று தான் தொடர்ந்தும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும்!குழந்தைகள் இந்தக் காலத்தில் கொஞ்சம் அதிகமான விவேகம் உடையவர்களாகவே இருக்கிறார்கள்!ஒரு வேலை எங்கள் காலத்தில்(குழந்தைப் பருவம்)வெளிநாடு என்றால் எட்டாக்கனி.உலகம் சுருங்கி விட்டதாலும் தொழில் நுட்ப வளர்ச்சியும் காரணமாகலாம்.குழந்தைகளைக் கோபிப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை!

  ReplyDelete
 18. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி