வாடகை வீடு! Chennai Vs Hanoi

வணக்கம் நண்பர்களே...
சென்னை எனும் நகரத்தை நரகமாக்கிக்கொண்டு இருக்கும் விஷயங்களில் முக்கியமானது இந்த விஷயம் - இதைப்பற்றி வந்த நியூஸ் 


என்னமா முன்னேறி வருகிறோம் நாம்...


பெட்ரோல் விலை வாரத்துக்கு ஒரு முறை உயர்கிறது...


கரண்டு கிடையாது...


தொழில் முடங்கி வருகிறது...


இன்னும் பல...


நிர்வாகம் எப்படி எல்லாம் சுற்றி வளைத்து மின்சார விஷயத்தில் மக்களை அமைதியாக்கிவிட்டது...சரி விஷயத்துக்கு வருவோம்(இதுவரை!)..
சென்னையில் பேச்சு துணைக்கு ஆளில்லாதவர்கள் = பேச்சுலர்களுக்கு தான் வீடு எனும் முடிவுக்கு நிறைய வீட்டு உரிமையாளர்கள் வந்து விட்டதாக கேள்வி படுகிறோம்!


பாருங்கப்பா நான் எதுவும் தப்பா சொல்லல...முன்னாடி(!) எல்லாம் பேச்சுலர்களுக்கு வீடு கொடுத்தா அவ்ளோதான் என்று சொல்லி வந்த மவராசர்கள்(!) இன்று அவர்கள் மூணு பேர் சேர்ந்தா 10000 - 15000 ரூவா வரை தருவாங்க என்பதால் ஜரூராக வீடு விடுகிறார்களாம்...
பேச்சுலரா இருக்கும் போது வருந்திய பலர்...இப்போ குடும்பஸ்தனாகி வருந்தவேண்டியதாகி விட்டது...போற போக்குல கிராமத்துல கொண்டு போய் குடும்பத்தை விட்டு புட்டு (Forced)பேச்சுலர் வாழ்கைதான் வாழனும் போல...


ஒரு சின்ன சரிபார்ப்பு...


இந்த ஹனோயிலையும் Cost of Living அதிகம்தான்...அதே நேரத்துல வீட்டு உரிமையாளர்கள் எப்படி வாடகை வசூலிக்கிராங்கன்னா...


இப்போ ஒரு டபுள் பெட்ரூம் பிளாட்டுக்கு $300 (15000 ரூவா!)என்று வைத்துக்கொள்ளுங்கள்...மூன்று மாதம் அல்லது ஆறு மாத வாடகை முன்னமே வாங்கி வைத்து கொள்கிறார்கள்..இதை மாதம் மாதம் கழித்து வருகிறார்கள்...ஆறு மாதம் முடிந்ததும் மீண்டும் முன் தொகை அடுத்த ஆறு மாதத்துக்கு தர வேண்டும்...அதுவும் வெளிநாட்டவர் என்பதால் தான் இவ்வளவு அதிகம்..அதாவது அட்வான்ஸ் என்பது மட்டுமே...மீண்டும் மாதம் ஒரு முறை வாங்க மாட்டார்கள்..


இந்த வீட்டு விஷயத்தில் முழு வசதிகளும் அடக்கம்...அதாவது..
மின்விசிறி, பிரிட்ஜ், ஏசி/ஹீட்டர் உடன், டிவிக்கள்(!), காஸ் அடுப்பு, லாக்கர், வாஷிங் மெஷின், நெட் கனக்க்ஷன்(மாதம் தனி!), சோபாக்கள், இப்படி பல வசதிகள் உண்டு...இதெல்லாம் நம்ம ஊருல இருக்க வீட்டு முதலாளிங்க செய்து கொடுப்பாங்களா..!


இந்த நாட்டு குடிமக்கள் இதில் பாதி தான் தருகிறார்கள்...அப்படியே கணக்கு பார்த்தால்...ரூவாய் 7500, ஒரு குடும்பஸ்தன் மாதம் ஒரு முறை தன் பட்ஜெட்டில் இருந்து வாடகையாக செலவு செய்கிறார்..இங்கு அனைத்து குடும்பத்திலும் ஆண், பெண் பாகு பாடு இல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள்...வீட்டு செலவுகளை பிரித்துக்கொள்கிறார்கள்...


காலை உணவு, மதிய உணவு சில நேரங்களில் இரவு உணவு வெளியில்தான்...இப்படி வாழ்கையை வாழ்கிறார்கள்..அதுவும் குழந்தைகள் ஒன்னரை வயதில் இருந்து காப்பகத்தில் விடப்படுகின்றன..!


இவர்களுக்கு கிடைக்காத விஷயங்கள்:


சீரியல்கள் பார்க்க கிடைப்பதில்லை..


வீண் தம்பட்டம் அடித்துக்கொள்ள முடிவதில்லை..


இன்று என்ன சமையல் என்று ஆரம்பித்து...அடுத்தவர் வாழ்கையை கிண்டி பார்க்கும் அளவுக்கு போன் செலவு செய்வதில்லை...
மொத்தத்தில் நேரம் இருப்பதில்லை...இப்படியெல்லாமா இருக்கறது...ஒரு பொறுப்பு வேணாம்..


கொசுறு: நீயும் பொம்மை நானும் பொம்மை நெனச்சி பாத்தா எல்லாம் பொம்மை!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. மாமா...நம்மூர்ல பிரிட்ஜ் வாசிங்மிசின் சோபா கொடுத்தா ராவோட..ராவா...லவட்டிகிட்டு காலி பண்ணிட்டு போயிருவானுக...ஹஹஹ!

  ReplyDelete
 2. எல்லாமே பொம்மையா?

  அது சரி எதுக்கு அந்த பீச் படம்?

  ReplyDelete
 3. //நம்மூர்ல பிரிட்ஜ் வாசிங்மிசின் சோபா கொடுத்தா ராவோட..ராவா...லவட்டிகிட்டு காலி பண்ணிட்டு போயிருவானுக...ஹஹஹ!//
  வீடு சுரேஷ் குமார் வார்த்தைகளை அப்படியே வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 4. /இந்த வீட்டு விஷயத்தில் முழு வசதிகளும் அடக்கம்...அதாவது..//
  நல்ல வேளை அது என்னான்னு விளக்கமாச் சொல்லிட்டீங்க. இல்லேன்னா, நம்ம நக்ஸுக்கு அநியாயத்திற்கு சந்தேகம் வந்துரும்.

  ReplyDelete
 5. //மொத்தத்தில் நேரம் இருப்பதில்லை...இப்படியெல்லாமா இருக்கறது...ஒரு பொறுப்பு வேணாம்..//
  இதுதான் சூப்பர் பஞ்ச்!

  ReplyDelete
 6. Mumbai ahmedabad ingellam fully furnished apartments kedakkum... :)

  ReplyDelete
 7. Ithellaam...summa...maams...

  BAR & CHINNA VEEDU---2m
  sernthu iruntha sollunga....
  Anga vanthuduvom....

  He...he...he.....

  ReplyDelete
 8. அப்படியே சாப்பாடும் கொடுத்தாங்கன்னா புண்ணியமா போகும்னு நீ சொல்ல வர்றது புரியுது அண்ணாச்சி...

  ReplyDelete
 9. வீடு K.S.சுரேஸ்குமார் said...
  மாமா...நம்மூர்ல பிரிட்ஜ் வாசிங்மிசின் சோபா கொடுத்தா ராவோட..ராவா...லவட்டிகிட்டு காலி பண்ணிட்டு போயிருவானுக...ஹஹஹ!//

  யோவ் அதான் ஆறு மாசம் வாடகையை அட்வான்சா வாங்குராங்களே..?

  ReplyDelete
 10. FOOD NELLAI said...
  /இந்த வீட்டு விஷயத்தில் முழு வசதிகளும் அடக்கம்...அதாவது..//

  நல்ல வேளை அது என்னான்னு விளக்கமாச் சொல்லிட்டீங்க. இல்லேன்னா, நம்ம நக்ஸுக்கு அநியாயத்திற்கு சந்தேகம் வந்துரும்.//

  ஹா ஹா ஹா ஹா லகுட பாண்டிகள் பராக் பராக் பராக்.....

  ReplyDelete
 11. FOOD NELLAI said...
  //மொத்தத்தில் நேரம் இருப்பதில்லை...இப்படியெல்லாமா இருக்கறது...ஒரு பொறுப்பு வேணாம்..//

  இதுதான் சூப்பர் பஞ்ச்!//

  ஆபீசர், அவன் பொருப்புன்னு சொன்னது வேறே அர்த்தத்திலாம் ஹி ஹி....

  ReplyDelete
 12. நாங்க எல்லாரும் அங்கெயே வசிக்கலாம்னு கிளம்பி வர்றோம்! வேலையும் வசிக்க வீடும் புடிச்சி வைம்மா!

  ReplyDelete
 13. @வீடு K.S.சுரேஸ்குமார்

  "வீடு K.S.சுரேஸ்குமார் said...
  மாமா...நம்மூர்ல பிரிட்ஜ் வாசிங்மிசின் சோபா கொடுத்தா ராவோட..ராவா...லவட்டிகிட்டு காலி பண்ணிட்டு போயிருவானுக...ஹஹஹ!"

  >>>>>>>>>>>>

  மாப்ள இங்க அப்படியெல்லாம் போக முடியாது...தேசிய அடையாள அட்டை இருந்தாதானே வீடே கொடுப்பாங்க...இங்க எல்லார் கிட்டயும் இந்த அட்டை இருக்கும்..எங்க ஓடுனாலும் ஆப்புதான் ஹிஹி!

  ReplyDelete
 14. @மனசாட்சி™

  மனசாட்சி™ said...
  எல்லாமே பொம்மையா?

  அது சரி எதுக்கு அந்த பீச் படம்?

  >>>>>>>>>>>

  சும்மாதான் ஹே ஹே!

  ReplyDelete
 15. உலக சினிமா ரசிகன் said...
  //நம்மூர்ல பிரிட்ஜ் வாசிங்மிசின் சோபா கொடுத்தா ராவோட..ராவா...லவட்டிகிட்டு காலி பண்ணிட்டு போயிருவானுக...ஹஹஹ!//
  வீடு சுரேஷ் குமார் வார்த்தைகளை அப்படியே வழி மொழிகிறேன்.

  >>>>>

  கேள்விக்கு பதில் சொல்லிட்டேனுங்கோ சுரேஷ் = நீங்கோ!

  ReplyDelete
 16. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  /இந்த வீட்டு விஷயத்தில் முழு வசதிகளும் அடக்கம்...அதாவது..//
  நல்ல வேளை அது என்னான்னு விளக்கமாச் சொல்லிட்டீங்க. இல்லேன்னா, நம்ம நக்ஸுக்கு அநியாயத்திற்கு சந்தேகம் வந்துரும்.

  >>>>>>>>>

  ஆமாம்னே அவருக்கு எதுக்கெல்லாமோ சந்தேகம் வருது...மூக்கு பொடப்பா இருந்தா அப்படித்தான் போல ஹிஹி!
  ...............................

  //மொத்தத்தில் நேரம் இருப்பதில்லை...இப்படியெல்லாமா இருக்கறது...ஒரு பொறுப்பு வேணாம்..//
  இதுதான் சூப்பர் பஞ்ச்!

  >>>>>>>>>

  நம்ம நெலமையே நெனச்சேன்...ஸ்ஸ் அபா!

  ReplyDelete
 17. @மௌனகுரு

  மௌனகுரு said...
  Mumbai ahmedabad ingellam fully furnished apartments kedakkum... :)

  >>>>>>>>>>>

  கருத்துரைக்கு நன்றிங்கோ....அப்படியே அந்த அட்வான்ஸ் மேட்டரும் சொல்லி இருந்தா நல்ல இருக்குமுங்கோ!

  ReplyDelete
 18. NAAI-NAKKS said...
  Ithellaam...summa...maams...

  BAR & CHINNA VEEDU---2m
  sernthu iruntha sollunga....
  Anga vanthuduvom....

  He...he...he.....

  >>>>>>>>>

  யோவ் உன்ன சொல்லி குத்தமில்ல..வீட்ல சரியா அடிக்கல போல கொய்யால!

  ReplyDelete
 19. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  அப்படியே சாப்பாடும் கொடுத்தாங்கன்னா புண்ணியமா போகும்னு நீ சொல்ல வர்றது புரியுது அண்ணாச்சி...

  >>>>>>>>>>

  இது வேறயா...விளங்கிடும்!
  ...............................
  MANO நாஞ்சில் மனோ said...
  FOOD NELLAI said...
  //மொத்தத்தில் நேரம் இருப்பதில்லை...இப்படியெல்லாமா இருக்கறது...ஒரு பொறுப்பு வேணாம்..//

  இதுதான் சூப்பர் பஞ்ச்!//

  ஆபீசர், அவன் பொருப்புன்னு சொன்னது வேறே அர்த்தத்திலாம் ஹி ஹி....

  >>>>>>>>>>>>>

  எலேய் போட்டு கொடுக்கறியா!

  ReplyDelete
 20. ரமேஷ் வெங்கடபதி said...
  நாங்க எல்லாரும் அங்கெயே வசிக்கலாம்னு கிளம்பி வர்றோம்! வேலையும் வசிக்க வீடும் புடிச்சி வைம்மா!

  >>>>>>>>>

  செஞ்சிட்டா போச்சி மாப்ள...பாங்கோ!

  ReplyDelete
 21. இந்த தொல்லை தாங்க முடியாமத்தான் நான் சென்னையில் இருந்து ஓடி வந்துட்டேன் மாப்ள

  ReplyDelete
 22. ஹனோயில் எல்லாமே சென்னையை விட சீப்தானோ!

  ReplyDelete
 23. ... ம் ... கொடுத்து வச்சவங்க நீங்க !

  ReplyDelete
 24. சீரியல் பாக்காதா ஊரா..வேஸ்ட். மனோ பயணக்கட்டுரையை சீரியலா எடுத்து அங்க ரிலீஸ் பண்ணுங்க. பாதி ஜனத்தொகை பறந்து போயிடும்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி