மின்சாரம்(EL!) - வியட்னாம்! vs TN

வணக்கம் நண்பர்களே..
இந்த பதிவு மின்சார சம்பந்தப்பட்டது(சம்சாரம் அல்ல!)..எனவே, யாரும் திட்ட வராதீங்க...


மின்சாரம் - இன்றைய தமிழ்நாட்டு வாழ்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது...நிற்க்க, சகித்து கொள்ளுங்கள் இந்த பதிவு வியட்நாமில்  இருக்கும் மின்சார விஷயம் பற்றியது..


கொஞ்ச நாள் முன் வரை நான் அசந்த விஷயம் மின்சாரம்..அதுவும் இந்த ஊருக்கு வந்து மூன்று முறை கட் ஆனதாக ஞாபகம்..இதற்கும் அனைவரின் வீட்டிலும் பிரிட்ஜ், ஏசி(இதில் ஹீட்டரும் அடக்கம்!), ஓவன் என நிறைய பொருள்கள் மின்சாரம் கொண்டே இயங்கி வருகின்றன...


சூடு குறைந்த உணவை வியட்நாமியர்கள் உண்ணுவதை விரும்புவதில்லை...அதிலும் தனியாக உண்ணுவதை தவிர்ப்பார்கள்...ஆங்காங்கே குழுவாக குறைந்தது 2 அல்லது 3 பேராவது இருப்பார்கள்..கொஞ்சம் ஆறினாலும் அதை சூடு செய்து விடுவார்கள் ஓவனில்...


இந்த ஊரு நாலு வித பருவ நிலை கொண்டதால் கொஞ்சம் வசதி படைத்த  எல்லோருடைய(!) வீட்டிலும் ஹீட்டர் மற்றும் ஏசி இருக்கும்...நானும் எப்படித்தான் இந்த அளவுக்கு மின்சாரம் இவங்களுக்கு கிடைக்குதுன்னு ஆச்சர்யப்பட்டுப்போனேன்..
இந்த நாட்டில் நீர்வளம் அதிகம்...நான் இருக்கும் ஹானோயில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்குன்னா பாத்துக்கோங்களேன்..அதே நேரத்தில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான தண்டனை உண்டு...இது தவிர அதிகப்படியான ஆறுகள் இருக்கின்றன அதன் குறுக்காக அணை கட்டி நீர் மின்சாரம் பெறுகிறார்கள்..


இதனிடையே மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் இதுவரை விநியோகித்து வந்த மின்சாரத்துரைக்கான வாரியம் மிகுந்த பணமுடையில் சிக்கிக்கொண்டது...காரணம் மின்சாரத்துக்கு ஆகு செலவு அதிகமாகிக்கொண்டே சென்று கொண்டு இருக்கும் நிலையில் குறைந்த விலையில் இருந்து அதிகமாக வாங்க முயலாததே காரணம் என்று முடிவாகி இருக்கிறது..


அப்படி கொண்டு வந்தால் மக்களிடம் மிகுந்த எதிர்ப்பு ஏற்ப்படும் என்று நினைக்கிறார்கள் போலும் எனவே சீரிய அளவில் போர் நேர வேலை போல செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். வரும் கோடையில் எந்த விதத்திலும் மின்சார தடை வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து வேலை நடந்து வருகிறது...


பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று மீடியாக்கள் வாய் மலர்ந்து வருவதை சரியல்ல என்று சொல்லி இருக்கிறார் நிர்வாகி...பார்ப்போம்!


ஒரு சிறிய நாடு தன் மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராமல் இருக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரத்தை எடுக்கிறது...


நம் தமிழ்நாடும் இதே அளவைக்கொண்டதே..நமக்கு மத்தி நிர்வாகம் எனும் விஷயம் மிகப்பெரிய தும்பிக்கை..!

இதனிடையே இந்தியா தன் தேவைக்காக மிகப்பெரிய அளவில் அதாவது 4500 KW திறன் கொண்ட விஷயங்களை சகோதர நாடான நேபாளத்தில் இருந்து தருவித்து கொண்டு உள்ளது... 
நம் மாநில நிர்வாகிகள்(!) ஈகோ பாக்காமல் மக்களின் தேவை உணர்ந்து மத்தியில் இந்த விஷயத்தை நேரில் போய் பேசினால் நிச்சயமாக எளிதில் தீர்வு கிடைக்கும்...


முடிந்தால் மத்தியில் பேசி கடலுக்கு நடுவே காற்றாலை அமைக்கும் திட்டத்தை ஏற்ப்படுத்தினால்..மின்சாரம் அதிகமாக கிடைக்கும்!

செய்வார்களா...!


கொசுறு: பிழைக்க வந்த ஊர்ல எனக்கு தங்கு தங்குதடையற்ற மின்சாரம் கிடைப்பது போல, என் தாய் நாட்டு மண்ணிலும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இதை பதிவிடுகிறேன்..நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. இரவு நேரத்தில் இங்கு ஒரு மணி நேரம் மின்சாரம், ஒரு மணி நேரம் மின் தடை என மாற்றி மாற்றி அனுபவித்து(!) கொண்டிருகிறோம்.

  ReplyDelete
 2. என்ன செய்ய?
  கரண்ட் விசயத்துல அரசன நம்பி, புருசன கை விட்ட கதையா இங்க இருக்கு....

  ReplyDelete
 3. என் பதிவுக்கு எதிர் பதிவு போல தெரியுதே,,,

  ReplyDelete
 4. >>தமிழ்வாசி பிரகாஷ் said...

  என் பதிவுக்கு எதிர் பதிவு போல தெரியுதே,

  haa haa ஹா ஹா அவன் நல்ல பதிவு போட்டாக்கூட இப்படித்தான் நாம கும்மனும் ஹி ஹி

  ReplyDelete
 5. சின்ன நாடுகள் முன்னுதரமாக செயல்படுகின்றது தமிழக முதல்வர்கள் தாம் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று பார்க்கின்றார்களே தவிர தொலைநோக்கில் அரியதிட்டங்கள் போட்டு மக்களை அவதிக்குள் ஆக்காமல் இருக்க பார்க்கின்றார்கள் இல்லையே எத்தனை கஸ்ரம் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கா விட்டால் அதன் பாதிப்பு நன்கு வெளிப்படும் பொருளாதாரத்தில். தமிழன் விதி போல இருட்டில் கிடக்கனும் என்று. 

  ReplyDelete
 6. நம் மாநில நிர்வாகிகள்(!) ஈகோ பாக்காமல் மக்களின் தேவை உணர்ந்து மத்தியில் இந்த விஷயத்தை நேரில் போய் பேசினால் நிச்சயமாக எளிதில் தீர்வு கிடைக்கும்
  >>>
  மக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமா பயன்படுத்தணும்ன்னு பொறுப்புணர்வு வரணும் ச

  ReplyDelete
 7. நல்லா அனுபவிங்க..!!!!
  :)))))

  ReplyDelete
 8. விழிப்புணர்வு பொறுப்பான பதிவு மாம்ஸ்

  ReplyDelete
 9. மின்சாரம்ன்னா என்ன? வியட்நாம்ல இருந்து இந்தியா வந்தா ஒரு கிலோ வாங்கிட்டு வாங்க மாம்ஸ்.......

  ReplyDelete
 10. ஹூ..ம்!பெருமூச்சே மிச்சம் விக்கி!

  ReplyDelete
 11. வணக்கம் மாம்ஸ்

  என்ன செய்ய ? கரண்ட் ஏன் வரல இப்ப இருக்குறவர கேட்டா போன ஆட்சி சரியில்லைனு சொல்றான்.அவர கேட்டா அதுக்கு முந்தி இருந்தவரு சரியில்லைன்றான்

  இப்படி அடுத்தவர குறை சொல்லி ஓட்டு வாங்கி இப்பவும் தொடருது....கன்னித்தீவு கதை போல

  ReplyDelete
 12. நாங்க என்ன பாவம் செஞ்சோம் ....

  ReplyDelete
 13. என்னத்த சொல்ல, எங்க ஊர்ல 14 மணிநேரம் மின்தடையாம்.....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி