எலைட் பார்(EL) - தமிழன் கனவுல மண்ணா!

வணக்கம் நண்பர்களே...
எம்புட்டு ஆசையா இருந்தோம்யா இந்த விஷயத்துல, எங்க வயித்துல இப்படி குத்திபுட்டீங்களே இது தகுமா..இதை பற்றிய பதிவு இது..
எலேய் பார் அட அது இல்லீயே...எலைட் பார் ஆங் இதை நெனச்சி நாங்களும் வெளிநாட்டுக்காரங்களுக்கு இணையா அவங்க குடிக்கிற சரக்க அடிக்கப்போறோம்னு கனவோடு இருந்தோமே...அதுவும் அவங்கள மாதிரியே சும்மா ஸ்டைலா ரெண்டு பொண்ணுங்க ஆடிட்டு இருக்குற பார்ல பெக்(மக்!) சிஸ்டத்துல குடிக்க இருந்தோமே...கானல் நீரா பூடுச்சே..


என்னம்மா இது எதோ கரண்ட கட் பண்ணீங்க பொறுத்துக்கணும்(!)...விலை வாசிய(தமிழ்வாசி அல்ல!) ஏத்துனீங்க பொறுத்துகிட்டோம்(!)...இதெல்லாம் எதுக்கு பொறுத்து கிட்டோம்...யாரு எவ்ளோ கஷ்டப்பட்டாலும் நாங்க வெளி நாட்டு சரக்க அந்த சூழ்நிலையிலேயே அங்கனக்குல்லையே குடிக்கிறாப்போல நீங்க கொண்டு வருவீங்க அப்படிங்கற நம்பிக்கையில தானே...


ஏம்மா ஏன்?
ப்ளீஸ் நாங்க என்னா கேட்டோம் உங்க கிட்ட...நாளு முழுக்க கரண்டு கேட்டோமா(!)...அரிசி பருப்பு விலைய குறைக்க கேட்டோமா(!)...இல்ல அணு உலைய பத்தி ஏதாவது தப்பா கிப்பா பேசிப்புட்டோமா...!


ஏதாவது தப்பா நெனச்சிருந்தா மன்னிச்சிக்கங்க...ஏதோ ஓட்டு கேக்க வரும்போது நீங்க எங்களுக்காக உழைப்பீங்கன்னு நம்பி ஏமாந்த குற்றத்துக்கு இப்போ நீங்க அடுத்த முடியாட்சிய நடத்துறத(!) கூட நாசுக்கா ஏத்துகிட்ட இந்த தமிழங்களோட மனோ திடத்த நீங்க புரிஞ்சிக்கணும்...


எவன் எப்படி போனா எங்களுக்கு என்ன...எங்களுக்கு அந்த வெளிநாட்டு சூழ்நிலையோட கூடிய ஏழை ச்சே எலைட் பார் வேணும்ங்கோ...பாத்து செய்யுங்கோ...இந்த பாரை குளிரூட்டவாவது சென்ட்ரல் கிட்ட கேட்டு கரண்டு வாங்கிகங்க...இது மட்டுமாவது எங்களுக்கு நினைவுல நடக்கட்டும்...
சரணம்! சரணம்...இப்படிக்கு எலைட் பாரை எதிர் நோக்கி இந்தியா வர காத்து கெடக்கும் ஒரு தமிழ் நாட்டு சாரிபா இந்திய பிரஜை...
கொசுறு: இன்றைய செய்தி" எலைட் பார் விஷயத்தில் தனியாக இப்போதைக்கு பார்கள் திறப்பதாக இல்லை" நிர்வாகம் முடிவு..!  


லேட்டஸ்ட் கொசுறு: இப்போதைக்கு வெளிநாட்டு பீர் மட்டுமே வார்ப்பதாக முடிவாம்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. ஆஹா.....ஊத்தி மூடிட்டாங்களா .....போச்சே/////

  ReplyDelete
 2. தமிழர்களின் மனக் குறையை
  மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  பொருத்தமான பாட்டு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பீராவது வாரத்தாங்க இல்ல எங்க புரட்சி தலைவி....! சும்மா கூவிகிட்டு....

  ReplyDelete
 4. பேராசைங்க உங்களுக்கு!

  ReplyDelete
 5. //இப்படிக்கு எலைட் பாரை எதிர் நோக்கி இந்தியா வர காத்து கெடக்கும் ஒரு தமிழ் நாட்டு சாரிபா இந்திய பிரஜை..//
  அய்யோ வடை போச்சே!

  ReplyDelete
 6. விக்கி சார் உங்களுக்கு எனது கண்டணம் இந்த செய்தியை நான் படித்து பதிவு போடலாம் என்று நினைத்து இருந்தேன். என் நினைப்பை திருடி நீங்கள் பதிவாக போட்டுவிட்டீர்கள். அட்லீஸ் என் பெயரையாவது சிறிதாக போட்டிருக்லாம் ஹூம்ம்ம்ம்ம்

  இன்று சர்க்கு அடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தேன் உங்களின் செயலால் சரக்கு அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

  எலைட் கடை திறக்காததற்கும் உங்கள் பதிவின் மூலம் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்

  ReplyDelete
 7. டாட் காம் மாறீனியே அலெக்ஸா ரேங்க்கிங்க் பாக்ஸ் மாத்தலையா? அது பழசையே காட்டுது. உன் இது என்னாகரது?

  ReplyDelete
 8. அண்ணே உங்க கடமை உணர்சியை நினச்சி கண்ணுல தண்ணியா கொட்டுது...!

  ReplyDelete
 9. //சி.பி.செந்தில்குமார் says:
  March 5, 2012 11:04 AM Reply
  டாட் காம் மாறீனியே அலெக்ஸா ரேங்க்கிங்க் பாக்ஸ் மாத்தலையா? அது பழசையே காட்டுது. உன் இது என்னாகரது?//

  ஆளாளுக்கு ஒரு கவலை. சிபிக்கு ஸ்பெஷல் கவலை!!

  ReplyDelete
 10. தமிழன் கனவுல மண்ணா! - ஸ்பீடா வாசிக்கேக்க தமிழன் கனவுல தமன்னான்னு தெரிஞ்சுது அதான் விழுந்தடிச்சு ஓடிவந்து பாத்தா...

  ReplyDelete
 11. ஏன்னா மாம்ஸ் இவ்ளோநாளா வெளிநாட்டு பீரே இல்லையா? என்ன கொடுமை!

  ReplyDelete
 12. அச்சச்சோ...ஊத்திகிச்சா

  ReplyDelete
 13. கவலப்படாதீங்க மாப்ள. இந்த மாதிரி விஷயத்துல அரசு வேகமாக முடிவெடுத்திடும். இல்லைனா 'குடி'மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் அப்படின்னு நல்லாவே தெரியும்.

  ReplyDelete
 14. பதிவுக்கு ஏற்ற பாட்டு ! நன்றி மச்ஹான் !

  ReplyDelete
 15. தக்காளி.. இதை கண்டிச்சு நீ ஏன் தீக்குளிக்க கூடாது? :-)

  ReplyDelete
 16. மாப்ள பீர் ஓவரா அடிக்காத....

  ReplyDelete
 17. ஒரு சாதாரண தமிழக “குடி”மகனின் நிலைமையை அப்பட்டமாக புட்டுபுட்டு வைத்த உங்களை பாராட்டியே தீர வேண்டும்.எதுக்கும் வாங்கோ பார்த்து செய்யலாம்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி