கிங்குக்கு சிங் எழுதிய கடிதாசி(Le)..(மானே தேனே!)

வணக்கம் நண்பர்களே...
காது கேக்காத வாய் பேசாத மாற்று திறனாளிகள் எவ்வளவோ பேர் தாங்களும் தங்களை நம்பி இருப்பவர்களையும் காப்பாற்றிவரும் இந்த தேசத்தில்..எதையுமே காதில் போட்டு கொள்ளாத அதிசய பிறவியான நிர்வாக பொம்மைத்தலைவருக்கு எழுதப்பட்ட கடிதாசி...ஆங் கடிதம்பா...


அண்ணே எப்படிகீரிங்கோ...


இங்கன நான் நல்லா கீறேன்...நீங்களும் நல்லா இருப்பீங்கோன்னு நம்புதேன்..இப்ப பாருங்க உங்களுக்கு பல தொல்லைங்கன்னு கேள்வி பட்டேன்..அதனால உங்க அரசியல் பிரச்சனைகள சந்திக்கரதுலையே உங்க நேரம் நெறைய செலவாயிடுறதா கேள்விபடுறேன்...இருந்தாலும் எனக்கு தோன்ற விஷயங்கள உங்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்குறதால இந்த கடிதாசி எழுதிறேனுங்க...


மேட்டரு இன்னான்னா..நம்ம படையோட பலம் ரொம்ப குறைச்சலா கீது...எப்ப பாரு எதிர் நாட்டுக்காரனுங்க அங்க அங்க சீண்டிகிட்டே இருக்கானுங்க...நாங்களும் எம்புட்டு நாள்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது....நீங்களா கண்டுப்பீகன்னு பாத்தா கண்டுக்கராப்ல தெர்ல..இதுல நைட் டைம்ல வேற வெளிப்பக்கமா வந்து விசில் அடிக்கிறானுங்க(எவனோ தூரத்துல விசில் அடிக்கீறான்!) அந்தப்பக்கதுக்காரனுங்க..உங்க காதுல சங்கு ஊதுனா கூடா கேக்காத மாதிரி நீங்க இருக்கலாம்..நாங்க இருக்க முடியுமா..


சரி மவனே எங்க கிட்டையா சீன் போடுறீங்கன்னு இருக்குற டாங்கி எடுத்து சுட்டா..வெறும் காத்து தான் வருது..என்னடான்னு பாத்தா உள்ளார வெடி பொருளே இல்ல...இதே நெலமையில போனா..நம்ம பசங்க கலவரமாயிருவாங்க..வெறும் துப்பாக்கிய மட்டும் புடிச்சிட்டு இருக்குறாப்ல ஆயிறும்...


இது இல்லாம...மேகத்து பக்கமா..எவன் வரான் எவன் போறாங்கறது பாக்குற கருவிங்க எல்லாம் சரியாவே ஒர்க் ஆக மாட்டேங்குது..நீங்க வேற நாம தூங்குற சிங்கம்னு எல்லாம் எங்கயாவது டயலாக் விட்ற போறீங்க...பிளீஸ்..கொஞ்சமாவது கவனிங்க...


நான் ஏற்கனவே என்னோட தலைமைக்கு கடிதாசி போட்டேன்...மக்கள் புகார் பெட்டில போட்ட கடிதாசி கணக்கா நெனச்சிட்டாங்க போல..நோ ரிப்ளை..மக்கள் வரிப்பணத்துல முக்காவாசி இங்கன செலவு பண்றதா சொல்றீங்க...இங்க வர்ராப்ல தெரியல பாதிலேயே வியாதிங்க ஆட்டைய போட்டுர்றாங்க போல...இதெல்லாம் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு தெரியும்னு நம்புதேன்...
இத கொஞ்சம் அஜால் குஜால் மேட்டரா நெனைக்காம(!) சீரியஸா எடுத்துகினு ஏதாவது பண்ணுங்க..இல்லனா சப்ப மூக்கு காரேன் எங்க சுடுவானு தெரியாது பாத்துகிடுங்க..


இப்படிக்கி..


நேத்து வரைக்கும் வீரரா காட்டிகினவர்.


கொசுறு: மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சி..கீழ இறங்கி வந்துபுட்டா அத்தனையும் போச்சி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

8 comments :

 1. பலமுறை முயன்றும் தங்கள் வலை
  திறக்கவில்லை!
  இன்று கிடைத்தது!

  சரியான நேரத்தில், நல்ல
  சவுக்கடி பதிவு! புத்தி வருமா?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 2. ////வெறும் காத்து தான் வருது.. ////

  மாம் நம்ம பொம்மை தலீவர் காலையில சாப்பிட்ட பூரி குருமா வேலை அப்படின்னு அறிக்கை வுட்டாலும் வுடுவாரு பாருங்கோ!

  ReplyDelete
 3. intha kaditham sing-kukku
  kidaichi...avar ....padichi....

  VILANKIDUM....

  ReplyDelete
 4. மாப்ள புலம்புறத தவிர வேற என்ன செய்ய முடியும்?

  ReplyDelete
 5. நாட்டின் பாதுகாப்பு பற்றி புலம்பியிருக்கிறீங்க மாம்ஸ்!

  ReplyDelete
 6. காதுல ஏறுனா அது "அதிசயம்"!இங்கதான் "அது" எதுவுமே நடக்காதே????

  ReplyDelete
 7. ரொம்ப அதட்டாதீங்க தல ...சிங் சொயங்குன்னு சோனியா கால்ல விழுந்த மாதிரி சீனா கால்ல யும் விழுந்துரப்போராறு...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி