ரசிக வெறியர்களை சந்தித்த பதிவர்! - True version

வணக்கம் நண்பர்களே...
இந்தப்பதிவில் வரும் விஷயங்கள் யாவும் உண்மையே...கற்பனை அல்ல...


நம்ம பதிவுலக நண்பர் ஒருவர் தன் பாட்டுக்கு(பாடிக்கிட்டு அல்ல!) வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிகிட்டு இருந்தார்...வேலையில் கொஞ்சம் அசந்து(தூங்கி!) விட்டதால் நேரம் ஆகி விட்டது...ரெகுலராக வரும் பேருந்தை தவற விட்டு விட்டார்...அடுத்து வந்த பேருந்தில் ஏற கால் வைத்தார்...
உள்ளிருந்து ஒரு குரல் அன்பாக அழைத்தது...


வாங்க சிவாஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது ####%) 


என்ன இந்த(பதிவுலக!) பேரு உங்களுக்கு...எப்படித்தெரியும்..


அட வாங்க...உங்களைத்தான் எங்களுக்கு நல்லா தெரியுமே...


ஓ அப்படியா...எப்படிதெரியும்..


அது இருக்கட்டும் உங்களுக்கு மட்டும் எப்படி அந்த விஷயம்(பதிவில் வந்த உண்மை) இப்படித்தான்னு எப்படி தெரியும்...


அட என்னோட அனுபவம் தாங்க...


ஓ...அப்போ அந்த திருட்டு மேட்டரு...


அதுவும் என்னோட...ஆங் (அடப்பாவிகளா)


என்னங்க பதில காணோம்....


அது ஒன்னுமில்லீங்க...


இம்புட்டு உலக விஷயம் எழுதுறீங்களே...நீங்க பெரிய ஆளுங்க...


என்னைய புகழாதீங்க...
ஹிஹி..அது சரி அந்த மேட்டரு போட்டீங்களே...அதனால ஒன்னும் இதுவரை வில்லங்கம் ஏதும் வரலியா..


(அடங்கோ!)...அய்யா ஊருல நடக்கறத தானே எழுதினேன்..அதுக்கு ஏன் வில்லங்கம் வரணும்...


இல்ல..இப்பல்லாம் ஊடகவியலாளர்கள் தாக்கப்படராங்களே...அதான் கேட்டேன்..


ஸ்ஸ் அபா...சார் நான் அப்படியில்ல...எதோ எம் போக்குக்கு எழுதிட்டு இருக்கேன்...நீங்க வேற பயத்த கெளப்பி விடுறீங்களே...


என்னன்னே இதுக்கு போயி பயந்துட்டா எப்படி...இன்னும் என்னெல்லாம் பாக்க வேண்டி இருக்கு...


யோவ்....என்னய்யா சொல்ற...


ஹஹா...பாக்கத்தானே போறோம்..


(இவனுங்க என்னைய வச்சி இங்க காமடி பன்றானுங்களா...நான் கூட என்னைய உற்சாகப்படுதுராங்கன்னு நம்பி பேசுனனே!)


என்னனே உங்களுக்குள்ளாரவே பேசிக்கிறீங்க...


கண்டக்டர்...இந்த பஸ் அடுத்ததா எங்க நிக்கும்...


ஏன்னே...


உங்களுக்கு புண்ணியமா போகும் அந்தா வர்ற நிறுத்தத்துல நிறுத்துங்க நான் இறங்கிக்கறேன்..


நிறுத்தம் வந்து பேருந்து நிற்ப்பதுக்குள் குதித்து(!) இறங்கி ஓடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தாராம்...


கொசுறு: பாவம்யா மனுஷன்...நாட்டு நல்லதுக்கு எழுதுனா இப்படியாவா கலாக்கிறது..கொய்யால..விளங்கிடும்யா!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. மாம்ஸ் ..வழக்கம் போல...
  ஒன்னும் புரியலை....
  ஒரு டிக்க்ஷனரி போடுங்க....

  நாங்க புருஞ்சிப்போம்ல...

  ReplyDelete
 2. சார்... இன்னான்னே புர்ல சார்.... கொஞ்சம் பாத்து டமில்ல எழுதுங்க சார்!!!

  :-)

  ReplyDelete
 3. பதிவர் பேரு சிவாஜி!

  பஸ்ல போறவர்

  கண்டுபிடிச்சிட்டேன்..ஹஹ!

  ReplyDelete
 4. விக்கி மாம்ஸ் புலனாய்வு துறையில இருந்திங்களோ?

  கமென்ட் போடணும்னு போட்டேன். ஒண்ணுமே புரியல.

  ReplyDelete
 5. ஹு இஸ் தாட் ப்ளாக் ஷீப்? (நான் ரசிகரை கேட்டேன்)

  ReplyDelete
 6. ஒண்ணுமே புரியலே ... உலகத்திலே (விக்கிலுகதிலே )...

  ReplyDelete
 7. அப்போ பாத்து நடந்துக்குங்கப்பு அப்புடீன்னு சொல்லுறீங்க?உங்களுக்கென்ன,வியட்நாமில இருந்துக்கிட்டு................................!

  ReplyDelete
 8. யாரந்த பதிவர் மாம்ஸ்

  மூணு தடவ படிச்சும் யாருன்னே தெரியலையே..


  ஹி ஹி ஹி

  ReplyDelete
 9. அதெப்படிங்க, உங்க பதிவில மட்டும் ஆடு தன்னால வந்து மாட்டுது! ஹா ஹா ஹா.

  ReplyDelete
 10. தக்காளி ஃபார்முக்கு வந்துட்டான் போல இருக்கு, ஒரு எழவும் புரியல.......

  ReplyDelete
 11. வீடு சுரேஷ் குமாருக்கு மட்டும் தெரிஞ்சுகிட்டாரே... எப்படி?

  ReplyDelete
 12. ம்ம்ம்ம்ம் ....யாராயிருக்கும்.........???

  ReplyDelete
 13. மாம்ஸ் ஆரம்பிச்சுட்டாரு! எதுவுமே புரியாம...ஏற்கெனவே இங்க செம்ம வெய்யில்! அவ்வ்வ்வ்!

  ReplyDelete
 14. ஒரே குழப்பமா இருக்கே ! அங்கேயும் வெய்யில் ஜாஸ்தியோ சார் ?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி