நீங்க நல்லா இருக்கோணும்! - வியட்நாம்(VN)

வணக்கம் நண்பர்களே...அடிக்கிற காத்துல அம்மி(மம்மி!)யும் பறக்கும்பாங்க...இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கு..ஏதோ பொத்துனாப்ல வேலை செய்ஞ்சிகிட்டு இருந்த இந்த பக்கி கிட்ட பல பெரிய பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு மேல இருக்குறவங்க படுற பாடு இருக்கே..ஸ்ஸ் அபா..சரி விஷயத்துக்கு வர்றேன்..


கடந்த சில நாட்களாக வேலையில வெளுத்து வாங்கிய நல்ல ஆத்மாக்கள்(!) என்னைய இரவு விருந்துக்கு கூப்பிட்டு இருந்தாங்க...நானும் ஓசில விருந்தாச்சே நல்லா முக்கிட்டு(மொக்கிட்டு!) வருவோம்னு நம்பி போனேனா..

ஒரு மனுஷன் வேலைய சரியா செய்யலன்னா என்ன பண்ணனும்...அட என்னய்யா பண்ணனும்...ஒரு மெமோ, ஒரு பணிஷ்மெண்டு, சம்பளத்துல பிடிப்பு இதெல்லாம் தானே பண்ணுவாங்க...இந்த பாவிப்பயளுங்க என்னைய என்ன பண்ணாங்க தெரியுமா...

பாருங்கய்யா உணவுகள...இந்த உணவுகளை பச்சையா கொடுத்துடுவாங்க...எதிர்ல அடுப்பையும்(!) கொடுத்துடுவாங்க..


நாமலே திருப்பி போட்டு பொங்கிக்கனுமாம்(என்னா ஒரு போங்கு!)..அடப்பாவிங்களா இதுக்கு எதுக்கு இந்த எடத்துக்கு வரணும்..(இதுக்கு பேரு hot pot!)வீட்லதான் இந்த வேலைய செய்யிரனே!(ஹிஹி!)...சரி இதான் இப்படின்னு..ரைட்டு இன்னைக்கு நாக்குல சனி நமக்குன்னு..அப்படியே பாத்துட்டு இருந்தேனா...ஒரு பொண்ணு(!) வந்து பக்கத்துல நின்னு கிட்டு எப்படி சமச்சி சாப்பிடனும்னு செஞ்சி காட்டி கிட்டே...அதுவே இந்த உணவை செய்ஞ்சி கொடுத்துச்சி..அப்படியே செய்யும் போதே சுட சுட சாப்பிடலானேன்(பசி ருசி அறியாது ஹேஹே!)...


ஏன்யா வறுவலுக்கு எதுவும் கிடைக்கலியா...கொய்யால...
 
சரி இதான் இப்படியாயிடிச்சே ஒய்னாவது ஒரு சிலி இல்ல ஒரு பிரெஞ்சுன்னு கொடுப்பாங்கன்னு பாத்தா..கொய்யால..ஸ்ஸ் அபா..எடுத்தானுங்க பாருங்க..


அடேய் இதெல்லாம் நல்லதுக்கு இல்லைங்கடான்னு சொல்லு முடிக்கறதுக்குள்ள....அடுத்தது...


இதெல்லாம் பார்க்குறப்போ..தேர்தல் முடிஞ்ச அம்மாவோட மீள் பார்வை கணக்கா தோணிச்சி எனக்கு(!)...எப்படியோ புல் கட்டு கட்டலாம்னு போனதுக்கு புல்லு கட்டு காமிசிட்டாய்ங்க!

நைட்டெல்லாம் கனவுலயும் இதான்யா வருது...நீங்க நல்லா இருக்கோணும்!

கொசுறு: நண்பர்கள் பதிவுக்கு வர கொஞ்ச நாளு ஆகும்..முடிஞ்சா உங்க கருத்துக்களை கொட்டிட்டு போங்கோ!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. மாம்ஸ் இப்புடி எல்லாமா சின்ன பயல பயமுறுத்துவது

  ReplyDelete
 2. இருந்தாலும் நீங்க நக்ஸை இப்படி பழிவாங்குவீங்கன்னு நினைக்கவேயில்லை.

  ReplyDelete
 3. /.ஒரு பொண்ணு(!) வந்து பக்கத்துல நின்னு கிட்டு எப்படி சமச்சி சாப்பிடனும்னு செஞ்சி காட்டி கிட்டே...அதுவே இந்த உணவை செய்ஞ்சி கொடுத்துச்சி..//
  நம்புறோம்ல!

  ReplyDelete
 4. //ஒரு மெமோ, ஒரு பணிஷ்மெண்டு, சம்பளத்துல பிடிப்பு இதெல்லாம் தானே பண்ணுவாங்க...இந்த பாவிப்பயளுங்க என்னைய என்ன பண்ணாங்க தெரியுமா...//
  இப்படி வேற பனிஷ்மெண்ட் கொடுக்கிறாங்களா! என்ன கொடுமை சரவணா!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. தேளு வருவலு...பாம்பு ஒயினை புல்கட்டு..கட்டிக்கிட்டு (உவ்வேவ்) பதிவு போடுதா..பதிவு....மனோ நீர் தெய்வம்யா....!

  ReplyDelete
 7. சில்லி பூரான் இருந்தால் பார்சல் செய்து அனுப்பவும்....நக்ஸ்க்கு ரொம்ம புடிக்குமாம்......(உவ்வேவ்)

  ReplyDelete
 8. ஆபிசர் வியட்நாம்ல இருந்தா என்ன பண்ணியிருப்பார்.....இப்படி எக்குதப்பா கொஸ்டின் எனக்கு வருது....

  ReplyDelete
 9. Super....dish...mamms....

  Full kattu katteenga...pola.....

  ReplyDelete
 10. தல... இந்தியா வரும்போது உசுரை கொடுத்தாவது அந்த பாம்பு புட்டி சரக்கை வாங்கிட்டு வந்திடுங்க... மத்ததை நாங்க பாத்துக்குறோம்...

  ReplyDelete
 11. பளிச்சுனு படத்தைப் போட்டு இப்ப எங்க கனவிலேயும்
  வரவழைச்சிட்டீங்களே
  பாட்டில்ல ஊறுகாயை மட்டும் பார்த்த எங்களுக்கு
  பாம்பை பாத்தா எப்படி இருக்கும்
  பயமுறுத்திட்டிங்களே பாஸ்
  உங்ககஷ்டங்களையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது

  ReplyDelete
 12. நாசமாபோச்சே மக்கா உன் வாழ்க்கை, பக்கத்துல மலை ஒன்னுமே இல்லையா...?

  ReplyDelete
 13. அடங்கோ...இதெல்லாம் செம்ம மேட்டரா இருக்கும் போலவே...
  தேள் வறுவல பாத்ததும் நாக்குல ஊருது...:))

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி