வாய்ப்புகள் இப்படி அமைந்தால் - What to do?

வணக்கம் நண்பர்களே...இந்த காதையை படித்து...நீங்கள் இந்த நிலைமையில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று சொல்லிசெல்லுங்கள்...


பெரிய கம்பனியில் வேலை கிடைத்த ஒருவர் புது மாநிலத்துக்கு சென்று சேர்ந்தார்..அவருக்கு அந்த வேலையில் கிடைத்த மரியாதை வீட்டில் இருப்பவர்களுக்கே பொறாமை வரச்செய்தது...இப்படி இருக்கையில்..சம்பளம் குறைவாக இருந்த போதும் மனைவி, தாய், தந்தையுடன் வாழ்ந்து வரலானார் அந்த மாநிலத்தில்..


இந்த வேலையில் பல பெரிய பணக்கார மக்களின் வியாபாரத்தை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்...இதன் காரணமாக அவர்கள் இவரை எப்படியாவது தங்கள் வசப்படுத்தி சாத்தித்து கொள்ள நினைத்து இருந்தனர்..ஏனெனில், இவரின் செயல்பாடுகள் மூலம் மட்டுமே அந்த முதலாளிகள் தொடர்ந்து வியாபாரத்தை செய்து வர முடியும் என்ற "நாட்" இருந்தது...விஷயம் இப்படி இருக்க..


அங்கு வேலை செய்து வந்த பணியாளர்களை பார்த்து மனம் உருகினார் இந்த ஆபீசர்(!)..அவர்களின் உழைப்புக்கு ஏற்ற பணம் கிடைக்காததும்...இந்த பண முதலைகள் சார்ந்துள்ள வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடித்து வருவதும் அறிந்தார்..எப்படியாவது அந்த பணியாளர்களுக்கு நல்லது செய்ய முனைந்தார்...முடியவில்லை மாறாக...


டீல் வேறு விதமாக பேசப்பட்டது...அதாவது இந்த அதிகாரிக்கு மேல் அதிகாரியிடம் பேசப்பட்ட டீலால் இவர் மட்டம் தட்டப்பட்டார்..இவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை...
இந்த நிலைமையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பண உதவி தேவைப்பட்டது...எந்த விதத்திலும் தாயை காப்பாற்றிவிட துடித்தார்...இந்த நிலைமையில் மேலதிகாரி மாற்றலாகிப்போனார்...அதுவரை நேர்மை, நியாயம் என்று பேசி வந்தவருக்கு மனம் மாறியது...பணம் தேவை என்பதால் முதலாளிகளின் திருட்டு தனங்களை இவர் சார்ந்த நிறுவனத்தில் சொல்லி விடுவாதாக கூறி மிரட்டினார்...


கை மேல் பலன் வரலாயிற்று...பணத்தை பொழிய ஆரம்பித்தனர் அந்த வியாபாரிகள்!...அதுவரை நேர்மையாக மிரட்டி வந்த இவரின் குரல்...இப்போது வில்லன் கணக்காக மாறிப்போனது...காலம் உருள இவரின் நிறுவனம் இவரின் செயல்களை கவனிக்கத்தவறியது...


எளிதில் பணக்காரன் ஆனார்...அந்த பணியாளர்களை மறந்தார்...இன்று இவர் ஒரு வசதியான வியாபாரி!
இதில் இவரின் செயல்கள் மூலம் நீங்கள் உணர்வது என்ன...கருத்துக்களில் சொல்லுங்கள்?


கொசுறு: உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. அரசியலுக்கு வரலாம்

  ReplyDelete
 2. இந்த காலத்தில் இந்த மாதிரி ஆளுக்கு பெயர் ‘பொழைக்க தெரிஞ்சவன்’
  அந்த காலத்தில்...குறிப்பாக அறுபதுகளில் ‘அயோக்கியன்’
  அறுபதுகளில் திராவிடக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா அநியாயங்களும் நியாயமாகி விட்டது.

  ReplyDelete
 3. யார் அந்த பராசக்தி ஹீரோ?

  ReplyDelete
 4. //இதில் இவரின் செயல்கள் மூலம் நீங்கள் உணர்வது என்ன...கருத்துக்களில் சொல்லுங்கள்?//

  நல்லவனா வாழ்ந்தா உலகத்தில் இடமில்லை. மனசை கழற்றி வைத்துவிட்டு வாழ்க்கையோடு போகவேண்டியது தான்.

  ReplyDelete
 5. சுய பரிசீலனை இல்லையே...?

  ReplyDelete
 6. லஞ்சம் அவனை வளர்த்துவிட்டது அதனால் அவன் இன்று பெரிய பணக்காரன் ஆகிவிட்டான் .அவனின் இன்னொரு திறமை இப்போது அதுவாக கணிக்கப்படும்
  விக்கியண்ணா!

  ReplyDelete
 7. இந்தக் கதையின் நாயகரின் நிலை
  தேவையின் பொருட்டு மாற்றப்பட்டு
  அதுவே நிதர்சனம் ஆன கதை...
  இப்படிப்பட்டவர்கள் தங்களின் இந்த நிலைக்கு
  வக்காலத்து வாங்கியே பேசுவார்கள்..
  ஆயினும் இவர் போன்றவர்கள் அரசியல்வாதி
  ஆவதற்கு தகுதியானவர்கள்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி