என்னை(Who) யாரென்று எண்ணி நீ பார்கிறாய்!

வணக்கம் நண்பர்களே..



இன்னைக்கு ஒரு காதை(கதை!) சொல்லப்போறேன்...


அந்த அரசி பேரு மங்கம்மா...மங்கலமான பெயர்..தன் வார்த்தைகளால் எதிரிகளை குலை(!) நடுங்க வைக்கும் பேராற்றல் அமைய பெற்றவர்(ள்!)..எதிர்த்து யார் என்ன சொன்னாலும் அவர்களை தைரியத்துடன் சமாளிக்கும்(!) வல்லமை பெற்று இருந்தார்..அப்படிப்பட்ட அவருக்கு ஒரு விஷயம் உறுத்தலாகவே இருந்தது...அது என்ன வென்றால்..



தாயே...


சொல்லுங்க சேயே(!)...


என்ன இது இப்படி செய்து விட்டீர்கள்...திடுதிப்பென்று உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்களே...


உமக்கு தெரியாது..நான் முதலில் இருந்தே இந்த கருத்தில் தான் இருந்தேன்..இடையே அந்த சிறிய நாட்டு படையெடுப்பு காரணமாக அமைதி காத்தேன்..


என்ன தாயே..இப்போது உங்களுக்கும் அந்த முன்னாள் அரசருக்கும்(!) வித்தியாசம் இன்றி போய் விட்டதாக அல்லவா மக்கள் நினைத்து கொள்வார்கள்..!


குழந்தாய்(!) யார் மக்கள்..நான் மனவருத்தத்துடன் தூங்கிக்கொண்டு இருக்கும் போது எனக்கு சாமரம் வீசினார்களா...இல்லை எனக்கு பிரச்சனைகள் வரும்போது என்னை காக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா..


என்ன தாயே இது..அவரவர் தின பிரச்சினையே பெரிய பாடாக இருக்கிறது...தவிர எல்லா பொருள்களின் விலைகளும் கட்டுக்கடங்காமல் போய் விட்டன...அதை சமாளிக்கவே பாமரன் திண்டாடிகொண்டு இருக்கிறான்...இந்த நிலைமையில்(!)...


அதைதான் சொல்கிறேன்..கேள்..இவர்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை..ஒன்று நான் இல்லை அந்த அரசர்(!)...இப்படி இருக்க..யாரும் எதுவும் இடையில் புகுந்து செய்து விட முடியாது...மிஞ்சி போனால் ஒரு வார கூப்பாடு..பின்பு இதை மறந்து போவார்கள்...இப்போதிருக்கும் நிலைமையில் அவர்களுக்கு முக்கியம் உயிர் அல்ல...வேக்காடுக்கு தீர்வு அவ்வளவே..


இந்த நிலைமையில் நம்மை பற்றி தவறான புரிதல் அல்லவா ஏற்ப்படும்..


ஹஹா...அதை நாம் இப்போது சிந்திக்க வேண்டியதில்லை...கவலைப்படாதீர்கள்...இருக்கவே இருக்கு நிர்வாகத்துக்கு எதிராக கூப்பாடு போட்டால் கம்பிகளை என்னும்படி வைக்க திட்டங்கள்(!)..இதில் ஒரு விஷயத்தை கவனியுங்கள்..எல்லோரும் வேண்டும் என்கிறார்கள்...


ஆனால், எதிர்காலத்தில் அந்த மக்களுக்கான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்னும் தீர்வு எட்டப்பட வில்லையே...





விட்டு தள்ளுங்கள்..இப்போதைய வாழ்கையை மட்டுமே பார்க்க வேண்டும்...


இது சரியான பார்வையா...


கொசுறு: நாளை நடப்பது யாருக்கு தெரியும்..நடந்து பார்த்தால்...பளிங்குனால் ஒரு மாளிகை...உயரத்தில் ஒரு கோபுரம்...நம்மை அழைக்குது வா!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. //என்ன இது இப்படி செய்து விட்டீர்கள்...திடுதிப்பென்று உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்களே...

  உமக்கு தெரியாது..நான் முதலில் இருந்தே இந்த கருத்தில் தான் இருந்தேன்//

  இதுதான் அம்மாகிட்ட பிடிச்சதே! அவர் என்றுமே மாறியதில்லை. நாங்கதான் அவர் மாறிவிட்டதா நினைச்சு ஒவ்வொரு முறையும்...

  ReplyDelete
 2. வேக்காடு ஆரம்பிச்சிட்டாங்க...கரண்டு இனி கட் ஆகாதா....?ஆங்!

  ReplyDelete
 3. Naanga appave....appadi....
  Ippa kekkavaa venum....!!!!!

  ReplyDelete
 4. எலேய் நீ அம்மாவை வச்சி காமெடி கீமடி பண்ணலையே, ராஸ்கல் இடிந்தகரை அட்டாக் மாதிரி வியட்நாம் அட்டாக் வந்துரப்போகுது சாக்குரதை....

  ReplyDelete
 5. @வீடு K.S.சுரேஸ்குமார்//

  ம்ம்ம்ம் கட் பண்ண வேண்டிய இடத்தில் கட் பண்ணிருவோம், பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ வச்சிட்டா போச்சு....

  ReplyDelete
 6. வியத்னாம்ல கரண்ட் கட் இல்லையா?மாம்ஸ்!

  ReplyDelete
 7. நான்கு முறை வாசித்தேன்...ரசித்தேன்...இந்த நிலையிலும்...

  எனக்கு கோபப்பட மட்டும் தான் தெரியும்...இது ஒரு பாட பதிவு நண்பரே...

  "அது"க்கு தெரிந்தது அரசியல் மட்டுமே...நல்லா காய் நகர்த்தி *** அடித்து விட்டது...

  ReplyDelete
 8. என்ன கொடுமை சரவணா!

  ReplyDelete
 9. இது எதிர்பார்த்ததுதான்யா.......

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி