அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்

வணக்கம் நண்பர்களே...

இந்தப்பதிவு திரு. விஜயன் அவர்களின் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது..

ஜெஸ்ஸி ஜெ - 16:26 - Public
கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்:


நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.

உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர்.
இதை "பொன்சேத்தி' முறையில் அறுவை சிகிச்சையின்றி, "கியூர்' தொண்டு நிறுவன உதவியுடன் இலவச சிகிச்சையில் சரிசெய்யப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டை, அடையாறு குழந்தைகள் ஆஸ்பத்திரி, மதுரை, கோவை, தஞ்சை அரசு ஆஸ்பத்திரிகளுடன் தொண்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மதுரை ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டடத்தில் ஒவ்வொரு வெள்ளியும் இதற்காக பதிவு செய்யப்படுகிறது. இதற்கென ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிறந்த குழந்தைகள் முதல் பதிவு செய்யலாம். 6 மாதங்களில் வளைந்த கால் நேராகிறது. பதிவு செய்யும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் காலில் எலும்பு முறிவு பிரிவு டாக்டர்கள் மாவுக்கட்டு போடுகின்றனர். பின் 8 முதல் 3 ஆண்டுக்கு (குறைந்தது 4 முறை) இலவசமாக 1500 மதிப்புள்ள பிரத்யேக ஷூ வழங்குகின்றனர். இச்சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். பிசியோதெரபி சிகிச்சை தேவையில்லை.

"கியூர்' இயக்குனர் சந்தோஷ் ஜார்ஜ் கூறுகையில், "உள்வளைந்த கால்கள் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரி ஊழியருக்கு பயிற்சி அளிக்கிறோம். மருத்துவ ஆவணங்களை பராமரிப்பதுடன், குழந்தைகளின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம்,'' என்றார்.

ஒருங்கிணைப்பாளர் கே.காட்வின் ஜான் கூறுகையில், "பிறவியிலேயே குழந்தைகள் உள்வளைந்த கால்களுடன் இருந்தால், எங்களை 24 மணி நேரமும் செயல்படும் "ஹெல்ப் லைனில்' 96000 23151-ல் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

நண்பர்களே இதனை உங்களது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்..!!


கொசுறு: நாளைய பாரதம் நம் கைகளில்...விழித்து கொள்வோமா!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ் எல்லோரையும் சென்றடையட்டும்.......

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு விஜயன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு!

  ReplyDelete
 4. வணக்கம் வெங்கட்!எல்லோரையும் சென்றடையட்டும்.பகிர்ந்த உங்களுக்கும்,விஜயனுக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள் பற்பல!

  ReplyDelete
 5. வெகுஜன ஊடகங்களில் இதுகுறித்த விளம்பரத்தை அரசு செய்தால் பலருக்கு செய்தி போய்ச்சேரும்.

  ReplyDelete
 6. எல்லோரையும் சென்றடையட்டும்...பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும்...விஜயனுக்கும்...

  புது TEMPLATE வசதியாக... வேகமாக...முக்கியமாக ஆபீஸ்ல கிராஷ் ஆகாமல் இருக்கிறது...எல்லா காட்ஜட்டையும் சீக்கிரம் இணையுங்கள்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி