பெண்களுடன் தண்ணி அடித்த பக்கி! - Cheers

வணக்கம் நண்பர்களே..
இது ஒரு சுதி ஏறிய பதிவு...குடியை வெறுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு..மீறி தொடர்ந்தால் பக்கி பொறுப்பல்ல!..


அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு புறவாக்குல போய் குடிச்சிட்டு மல்லாந்துக்குற சமூகத்துல நானும் ஒரு ஆளா இல்லீங்கோ...இது நேத்து நடந்த ஒரு சம்பவம்..


ஒரு தொல்லை பேசி அழைப்பு..


ஹலோ பக்கி..


எஸ் அயாம்...


நான் தான் வன்(van - இது பெண்ணின் பெயர்) பேசுறேன்..


சொல்லுங்கோ..


நம்ம நண்பர்கள் உங்களை பார்க்கனும்னு சொல்றாங்கோ...இந்த ($#$#$@) அட்ரசுக்கு உடனே வர முடியுமா..


(பொண்ணுங்க கூப்டு போகாத ஆளு உண்டோ...)


இந்தா வரேன்..வைட் பிளீஸ்...(போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது!)


(வீட்டுக்காரம்மாகிட்ட நண்பர்கள் அழைப்புன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்..பின்ன பொண்ணு கூப்டுதுன்னு சொல்லவா முடியும்!)


அந்த குறிப்பிட்ட இடம் பிகப்பெரிய பார்....ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சரக்கடித்து கொண்டு இருந்தனர்...ஒரு நிமிஷம் வாய் பொளந்து பாத்துகிட்டு இருந்தேன்..திடீரென்று ஒரு குரல்..


ஹாய் பக்கி..


ஹிஹி...எப்படி இருக்க வன்..


ம்ம்..நல்லா இருக்கேன்..இவங்கள எல்லாம் நினைவு இருக்கா...(நாலு பெண்கள் இருந்தனர்)...


இல்லையே...சொல்லு..(எல்லாம் ஒரே மாதிரி முகம் எங்க கண்டு பிடிக்க ஹே ஹே!)


இவங்களுக்கு எல்லாம் போனவருசம் நீங்க தான் உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி வேலை வாங்கி கொடுத்தீங்க...


ஹஹா...ஆமாம்ல..நான் அப்படித்தான் உதவி செய்வதை மறந்து விடுவேன்..உதவி எனக்கு செய்தவர்களை மட்டும் தான் நினைவில் வைத்து இருப்பேன்..ஹிஹி (பன்ச்!)


(ஒரு வழியாக மொக்கை போட்டு கொண்டு இருந்தேன்..திடு திப்புன்னு ஒரு புல் பாட்டில் விஸ்கிய முன்னாடி வச்சாங்க...அடங்கொன்னியா சரக்கடிக்கரத விடணும்னு முடிவோட இருக்கும் போது தான் இப்படியெல்லாம் நடக்கணுமா!)


இன்னாது இது...


உங்களுக்கு ஒரு சின்ன ட்ரீட்...


எது..இதுவா..ஹிஹி நோ ட்ரின்க்...


நோ இது நாங்க அன்பா கொடுக்குற ட்ரீட் ப்ளீஸ் அடிங்க...(அடங்கோ!)


பம்மாத்து காமித்து கொண்டு இருந்த என்னை பார்த்த அத்தனை பிகர்களும்..கிளாசில் சரக்கை ஊற்றிக்கொண்டு சீயர்ஸ் சொன்னார்கள்...அட ஆண்டவா மறுபடியும் நான் அவுட்டா...பேசிக்கொண்டே பாட்டில் காலி...விடவில்லை அவர்கள் மறுபடியும் ஒரு சிவாஸ்...


அம்மா தாய்குலமே என்னைய விட்ருங்க...இது ஆவறது இல்ல...


நீர் பெரிய அப்பாடக்கருன்னு சொன்னாங்களே...எங்க இந்த புல் பாட்டில குடிச்சி காமியும்...(ஒரு சப்ப மூக்கு பிகரு என்னைய கலாச்சிடிச்சி!)


ஏய் யாரு கிட்ட...(இன்னைக்கு வீட்ல விளக்குமாறு எனக்கு பிய்ய போவது நெசம்!)
இந்த போட்டில ஜெயிச்சா ஒரு மண்ணுக்கும் லாபமில்லன்னு தெரிஞ்சும்...பாட்டில் காலி...


ஆளாளுக்கு போன்ல பிசியாயிட்டளுங்க..நானும் நக்கலா போன் போடணும்னு எடுத்தேன்..ஆங் யாரு கிட்ட பேசலாம்..முதல்ல எவ்ளோ அடிச்சாலும் தாங்குற சிபி..


ஹலோ..டேய் எங்க இருக்க..பஸ்சுலையா...


இல்லடா சினிமா தியேட்டர்ல...


அடங்கொய்யால...அப்படியே பூடு...(போன் கட் செய்தேன்..!)


அடுத்து நம்ம மனோ...


ஹலோ...


என்னடா என்ன பண்ணிட்டு இருக்க...எவ்ளோ அடிச்ச...


புல்லு..


அடங்கோ..முடியல...ராஸ்கல் வெறுப்புயேத்துரியா கொய்யால பிச்சி புடுவேன்..


ஹே ஹே...போடாங்க...(இந்த சரக்கு ஒரு ராட்சசன் போல...உள்ள போனதுக்கப்புறம் போன்ல யாரெல்லாமோ மாட்னாங்க...பாதிக்கப்பட்டவங்க சொன்னாதான் தெரியும்!)
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்யா நம்மள நாஸ்தி ஆக்கிடுறாங்க...அதுக்கப்புறம் காதுல கொய்யின்னு ஒரு சவுண்டு மட்டும் தானுங்கண்ணா கேட்டுது..எப்படியோ வீட்டுக்கு வந்து சேந்துட்டேன்..அந்த தாய்க்குலங்கள் வீட்டுக்கு நான் சேர்ந்து விட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சென்று விட்டார்கள்..ஒவ்வொருத்தியும் ஹாப் அடிக்கிராளுங்க..ஸ்ஸ் அபா கடவுளே என்னைய ஏன் இப்படி சோதிக்கிற...


வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா...வீட்டுக்காரம்மா என்ன நெனச்சாங்களோ தெரியல..இந்த நாதாரி மீண்டும் முருங்க மரம் யேரிடிச்சின்னு நெனச்சிருப்பாங்க போல ஒண்ணுமே திட்டல..ங்கே..


இதுக்கப்புறம் நடந்த களேபரங்களை விருப்பம் இருக்குறவங்க...நாய் நக்ஸ் கிட்டயோ இல்ல வீடு சுரேஷ் கிட்டயோ கேட்டு தெரிஞ்சிக்கங்க..(பய புள்ளைங்க அந்த மப்புலையும் என்னைய கொலையா கொல்லுதுங்க!)


கொசுறு: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்? 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. //இது ஒரு சுதி ஏறிய பதிவு...குடியை வெறுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு..மீறி தொடர்ந்தால் பக்கி பொறுப்பல்ல!..//
  எச்சரிக்கையெல்லாம் எங்களுக்கு எடுபடாது!

  ReplyDelete
 2. //ஹே ஹே...போடாங்க...(இந்த சரக்கு ஒரு ராட்சசன் போல...உள்ள போனதுக்கப்புறம் போன்ல யாரெல்லாமோ மாட்னாங்க...பாதிக்கப்பட்டவங்க சொன்னாதான் தெரியும்!)//
  நான் இல்லை!

  ReplyDelete
 3. //.ஒவ்வொருத்தியும் ஹாப் அடிக்கிராளுங்க..ஸ்ஸ் அபா கடவுளே என்னைய ஏன் இப்படி சோதிக்கிற...//
  கடவுள் எங்க சோதிச்சாரு? அவுகள்லா சோதிச்சிருக்காக!!!

  ReplyDelete
 4. அவ்வளவு தானா - நா என்னமோ என்னென்னமோ நினச்சேன் ஹிம்

  ReplyDelete
 5. Ippa thaan maams....
  From-ku vanthirukkeenga......

  Innum....innum.....
  Niraiya per irukkaanga....
  Avangalaukkum....phone...
  Poduvom....

  He....he...he.....

  ReplyDelete
 6. சுதி ரொம்ப ஏறிப் போச்சோ? ஏன் டாச்போர்டில் இந்த பதிவுக்கு ரெண்டு லிங்க் காட்டுது?

  ReplyDelete
 7. பார்த்து மாம்ஸ்.....
  உங்க கிட்ட பேசி அங்க நக்ஸ் வீட்டுல அவருக்கு பூஜை நடந்துச்சாமே, அப்படியா?

  ReplyDelete
 8. இதுவன்றோ சாதனை மாம்சு!

  ReplyDelete
 9. வணக்கம் வெங்கட் சார்!சீச்சீ...வெக்கமாயில்ல உங்களுக்கு?ஒவ்வொருத்தியும் ஹாப்,ஹாப் அடிச்சிருக்கிறாளுங்க!வெறும் ரெண்டே,ரெண்டு பெக் அடிச்சு ப்ளாட் ஆயிருக்கீங்களே?ஆண்குலத்துக்கே அவமான?!மில்லையா????

  ReplyDelete
 10. ஓஹோ!இதத்தான் மனோ சார்,சி.பி கிட்ட அவர் பதிவிலேயே கேட்டாரா?மொத்தத்தில எல்லாருமே "ஊறுகாயா" இருந்திருக்கீங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 11. யோவ் பக்கி, தைரியம் இருந்தா இன்னும் ரெண்டு ரவுண்டு விட்டுட்டு நாய்நக்ஸ் கூட போன்ல பேசுய்யா............ அப்புறம் ஒத்துக்கிறேன் நீ அடிச்சது தண்ணிதான்னு..........

  ReplyDelete
 12. யோவ்..தக்காளி..தைரியம் இருந்தா நீ பன்னிய திட்டி ஒரு போஸ்ட் போடுய்யா பார்க்கலாம்? அப்ப ஒத்துக்கிறேன் நீ பொம்பள புள்ளைங்களோட தண்ணி அடிச்சேன்னு :-)

  ReplyDelete
 13. //இது ஒரு சுதி ஏறிய பதிவு...குடியை வெறுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு..மீறி தொடர்ந்தால் பக்கி பொறுப்பல்ல!..// நான் குடிப்பதில்லைங்கோ

  ReplyDelete
 14. மாலதி said...

  //இது ஒரு சுதி ஏறிய பதிவு...குடியை வெறுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு..மீறி தொடர்ந்தால் பக்கி பொறுப்பல்ல!..// நான் குடிப்பதில்லைங்கோ.////அடடா,தப்பு பண்ணிட்டீங்களே?குடியை வெறுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவுன்னு போட்டும் படிச்சு கமெண்டு போட்டுருக்கீங்களே?

  ReplyDelete
 15. வைகை said...

  யோவ்..தக்காளி..தைரியம் இருந்தா நீ பன்னிய திட்டி ஒரு போஸ்ட் போடுய்யா பார்க்கலாம்? அப்ப ஒத்துக்கிறேன் நீ பொம்பள புள்ளைங்களோட தண்ணி அடிச்சேன்னு :-)////நல்லா கோத்து வுடுறாங்கைய்யா!!!!

  ReplyDelete
 16. இங்க வரும்போதே காத்துலயே சரக்கு வாடை வீசுது. போய்ட்டு அப்பாலிக்கா வரேன்

  ReplyDelete
 17. நந்தவனத்தில் ஒரு பக்கி
  பார்காரனை வேன்டி வாங்கி வந்தார் ஒரு பிரான்டி!
  அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தார்....நடு வீட்டில்
  அடி வாங்கினார் பூரிக்கட்டையில...அதுக்கு மேல மறந்து போச்சு!

  ReplyDelete
 18. பாவம்!யாரெல்லாம் அன்னைக்கு ஃபோன்ல மாட்டினாங்களோ!

  ReplyDelete
 19. அன்று விக்கி மாம்ஸ் இடம் தொலைபேசியில் மாட்டிவன் இன்னொரு பிஸ்கி கேட்டு இருப்பான் இந்தனை துயரம் கேட்டதை சொல்லியழ.ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கின்றன் நொந்த மனசை ..... குடியும் போதையும் படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 20. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி