இப்படியும் ஒரு DR!

வணக்கம் நண்பர்களே...


இந்தப்பதிவு அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை அடுக்கிய பதிவு மட்டுமே...

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, அவரின் மனவலியை புரிந்து கொள்ள முடிந்தது...அவருக்கு திருமணம் ஆகி கிட்ட தட்ட 6 வருடம் கடந்து போய் விட்டது...இன்னும் குழந்தை செல்வம் கிடைக்க பெறவில்லை..பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து விட்டு இருந்தபடியாக சொல்லி இருந்தார்..இதில் பல நண்பர்கள் அவரை கேலி செய்து வருவதாகவும் கூறினார்...அவரின் மனைவி தாங்காத மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிந்தது...இதற்கும் அனைத்து வித டெஸ்டுகளும் எடுத்து பார்த்ததில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றே சொல்லி இருக்கிறார்கள்....பணம் போனது தான் மிச்சம்...தீர்வு கிடைக்கவில்லை..

என்னுடைய அனுபவத்தை அவர் கேட்க்க நான் விளக்கினேன்..
எனக்கும் தனியார் மருத்துவமனைக்கும் ஏழாம் பொருத்தம்..என்னை பொறுத்தவரை திருமணம் நிகழ்ந்து குறைந்தது இரண்டு வருடமேனும் முடித்து குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்றால் தான் அந்த தம்பதிகளுக்கிடையே சரியான புரிதல் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...அதனால், நான் அதை பின்பற்றி வரலானேன்!

என்னுடைய நண்பி ஒருவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் பிறகும் குழந்தை விஷயம் கிடைக்கப்பெறவில்லை...நண்பியின் கணவர் பல மருத்துவர்களிடம் சென்று பார்த்து வந்து இருக்கிறார்...ஆனாலும், பிரச்னை முடிந்த பாடில்லை...இதில் ஒரு பெண் மருத்துவர் நண்பிக்கு கருப்பையில் புண் இருப்பதாகவும் அதை சரி செய்வதாக கூறி பணம் பிடுங்கி இருக்கிறார்..


என்னிடம் இந்த பிரச்னை வந்த போது...என் மனைவிக்கு தெரிந்த பெண் மருத்துவரை அணுக சொன்னோம்...நண்பியின் கணவருக்கு நம்பிக்கை இல்லாததால் வரவில்லை..நானே நண்பியை அழைத்து சென்று இருந்தேன்...டோக்கனை வாங்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்தோம்...கொஞ்ச நேரத்தில் அழைப்பு வந்தது..

உள்ளே சென்றதும்...எதிரே 70 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர் உட்காந்து இருந்தார்...அந்த மருத்துவரிடம் நடந்த விஷயங்களை கூறிய பொழுது...யாரந்த தவறான விஷயத்தை கூறிய டாக்டர் என்று கேட்டார்...அதுவும் எளிதான ஒரு விஷயத்தை அந்த பழைய மருத்துவர் ஒரு வருட காலம் பணம் வாங்கிகொண்டு காலம் தாழ்த்தி வந்திருப்பதாகவும் விளக்கினார்..

முதல் முறை பத்து நிமிட பரிசோதனையில் அந்த மருத்துவர் பிரச்சனைக்கான தீர்வை அளித்து விட்டார்...அதாவது கருப்பையின் வாய் அமைப்பு சிறிதாக இருப்பதாகவும் மூன்று மாதம் மருந்து உட்கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறினார்..அன்றைய நிலையில் ரூவாய் நூறு மட்டுமே கட்டணம் வாங்கினார்...தொடர்ந்து மாதம் ஒரு முறை வந்து பரிசோதனை செய்து செல்லும்படியும் கூறினார்...

நண்பியும் தொடரலானாள்.... 

சரியாக மூன்றே மாதத்தில் அந்த பெண் கருத்தரித்தாள்...இப்படி ஒரு மருத்துவரை நான் அது வரை கண்டதில்லை...என் நன்றிகளை கூறி வந்தேன்...


அந்த பெண் மருத்துவர் மூலம் குழந்தைப்பேறு பெற்றவர்கள் ஏராள மானவர்கள், சரியான படி மருத்துவமும் வருபவர்களின் மனதில் முதலில் நம்பிக்கையையும் ஏற்படுத்தி ஒரு சேவையாக செய்து வந்த அந்த மருத்துவர் இருந்தது சென்னை நட்சத்திர சோழா ஹோட்டல் எதிர்புறத்தில்..இன்று அவர் மறைந்த தினம்...அவர் மறைந்தாலும் அவரால் குழந்தைபேறு பெற்றவர்கள் அவரை மறக்க வாய்ப்பில்லை..(என் நண்பியின் ஆண் குழந்தைக்கு நாலு வயது ஆகிறது)

கொசுறு: பல நூறு தம்பதிகளுக்கு மருத்துவ சேவை செய்து குழந்தை செல்வம் பெற காரணமான அந்த மருத்துவருக்கு குழந்தை செல்வம் இல்லை...அந்த பெண் மருத்துவரின் துணைவரும் ஒரு மருத்துவரே..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. மாம் குழந்தைபேறு என்பது இன்றை காலகட்டத்தில் எளிதாக இல்லை...நாங்கள் பொருளாதார காரணங்களுக்காக ஒரு வருடம் குழந்தை பெறுதலை தள்ளி வைத்தோம். ஆனால் உறவினர்களின் சொல் தாங்க முடியாமல் ஆறு மாதம் கூட தாங்க முடியவில்லை. குழந்தை இல்லாதவர்களை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது....இதில் மருத்தவர்களின் கொடுமை வேறு!

  ReplyDelete
 2. இன்று குழந்தை பேறுக்கு என்ன பிரச்சனை என்பது மருத்துவர்கள் சொல்லியே தெரிய வருகிறது. இதனாலேயே பணம் செலவானாலும் பிரச்சனை சரியானால் போதும் என்ற மனபோக்கு வருகிறது.

  ஆனாலும் குழந்தை பிறப்பில் அனுபவ மருத்துவர்களின் உதவி பெரும் மதிப்புமிக்கது.

  ReplyDelete
 3. நிதர்சமான உண்மை.

  நெகிழ்ச்சியான பதிவு.


  திருடனா பார்த்து திருந்தா விட்டால் மருத்துவராகினும்.....

  ReplyDelete
 4. மருத்துவம் ஒரு மகத்தான சேவை...அதிலும் இது போன்ற ஒரு சில கபட தாரிகள் அந்த புனிதத்தை கெடுத்து விடுகிறார்கள்

  ReplyDelete
 5. வணக்கம் வெங்கட்!இந்தப் பிரச்சினை உலகெங்கும் இருக்கவே செய்கிறது.பலர்,மருத்துவர்களை நாடுவதேயில்லை!காரணம்,வெட்கம் அல்லது கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வாழாவிருப்பது !கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருந்தால் எப்படி?நாங்களும் முயற்சிக்க வேண்டுமில்லையா?அதிஷ்ட லாபச் சீட்டிழுப்பில் லட்ச ரூபா கிடைக்கும் என்றால் சீட்டு வாங்கினால் தானே கிடைக்கும்?அந்த நல் நெஞ்ச மருத்துவர் ஆன்மா நல்நிலை அடைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

  ReplyDelete
 6. பணங்களை எண்ணும்போது, மனித மனங்களை மறந்திடும் மரு(ர)த்துவர்களால், மருத்துவ சேவைக்கே இழுக்கு.

  ReplyDelete
 7. இன்னும் இதேபோல போல பல மருத்துவர்கள் வெளி உலகத்திற்கு தெரியாம சேவை செய்துகிட்டு இருக்காங்க... அவங்கல்லாம் கடவுள் மாதிரி...

  ReplyDelete
 8. இது மிகவும் உணர்வு மற்றும் மனவலிமையை பாதிக்கும் விஷயம் என்பதால் இதனை பயன்படுத்தி பணம் பிடுக்கும் மனிதர்கள், மருத்துவமனைகள் அதிகரித்து விட்டதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

  ReplyDelete
 9. நீங்கள் குறிப்பிடும் மருத்துவருக்கு எம் வந்தனங்களும், பாராட்டுகளும்,

  ReplyDelete
 10. அருமையான மருத்துவர். போற்றுதலுக்குரியவர்.

  ReplyDelete
 11. பல நூறு தம்பதிகளுக்கு மருத்துவ சேவை செய்து குழந்தை செல்வம் பெற காரணமான அந்த மருத்துவருக்கு குழந்தை செல்வம் இல்லை...
  >>>
  இறைவனை திருவிளையாட்டை யார் அறிவார். ஒருவேளை அவருக்கு குழந்தை செல்வம் இருந்திருந்தால் அவர்களுக்கு பொருளீட்ட வேண்டி மருத்துவத்தை சேவையாய் அணுகாமல் வியாபாரமாய் அணுகியிருப்பார் என எண்ணி ஆண்டவன் இப்படி அம்மருத்துவரை படைத்தாரோ என்னவோ?!

  ReplyDelete
 12. சிறப்பான பதிவு ! அந்த மருத்துவருக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 13. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி