சுயநல விக்கி - மும்பை - Lesson 2!

வணக்கம் நண்பர்களே...
இதன் முந்தய கொடுமைகளுக்கு இங்கு செல்லவும்..


சேர்ந்த இடம் : மும்பை

நேரம் 11.35 இரவு...

வரவேற்ப்பு - பலே பலே..(கொசுக்கடி!)


அதாவதுங்கோ..நாங்க லேட்டா வருவோம்னு நெனச்சி வர வேண்டிய பக்கிக சரியான நேரத்துல வரல...அதனால ஏர்போர்ட்ட விட்டு வெளிய வந்து அங்கன, இங்கன பாத்துட்டு இருந்தோம்..


எடுரா போனன்னு...அந்த குறிப்பிட்ட நபருக்கு போன் போட்டோம்..பய புள்ள ட்ராபிக்ல இருக்குறதாகவும் சீக்கிரத்துல(!) வந்துடறதாகவும் சொல்லிச்சி..ஸ்ஸ் அபா...அந்த நைட்ல மும்பை விமான நிலைய வாயில்ல பலமான கொசுக்கடியோட நின்னுட்டு இருந்தோம்..நாதாரி அரை மணி நேரம் கழிச்சி வந்து சேந்துது!~


சாரிபா நேரம் ஆயிடிச்சி...


ஹிஹி...அதான் தெரியிதே...


வாங்க பழகலாம்...ச்சே வாங்க போகலாம்...


ஏதாவது சாப்பிடுறீங்களா...


கேட்டதே போதும்..நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வேனாம்யா...விட்ரு!

இந்தப்பக்கம் பாலம் கட்டுறாங்க அதான் ட்ராபிக்..
ஓஹோ..

வந்திருந்த பணக்கார வியாபாரி அலைஸ் விவசாயி(!)..கேட்டாரு பாருங்க கேள்வி..?

ஏன்யா என்னய்யா இது ரோட்டுல மக்கள் படுத்து தூங்குறாங்க...

ங்கே...(நான்!)

ஏன் உங்க அரசாங்கம் இவங்களுக்கு எதுவும் செய்யாதா...

இல்லீங்க்ணா...அவங்க ரொம்ப ஏழைங்கோ..அரசாங்கம் முயற்சிகள் எடுத்துகிட்டு தான் இருக்கு...இன்னும் மாத்த முடியல...

அது சரி..என்னாது இது பிச்சைக்காரங்க இப்படி சுத்துறாங்க...இவங்கள சரியான முறையில வைக்காம இருக்காங்களே...உங்க நாட்டோட மதிப்பு(!)...மரியாதை என்னய்யா ஆகுறது...

சாமி கேள்வி அதிகமா கேக்காதீங்கோ...இங்க நடக்குறது மக்கள் ஆட்சி..சமயத்துல நாங்க மாக்கள் மாதிரியும் திரிவோம்..வந்தமா வேலைய முடிச்சமா போனமான்னு இருக்கோணும்..புரிஞ்சிதா...(நாங்கல்லாம் யாரு ஹேஹே!)

சரி விடுங்க...(அரைமணியில் ஹோட்டலுக்குள் நுழைந்தோம்!)


ஏம்பா ரூம் ரெடியா இருக்கா...


சார் அட்வான்ஸ் கொடுக்கணும் முதல்ல..


அடப்பாவிகளா ஏன் இவனுங்க கம்பனி பேர்ல புக்கிங் இல்லையா...


இல்லீங்களே..அவங்க பேர்ல புக் பண்ணல...


ம்ம் ஒகே..எம்புட்டு தரனும்..


இப்போதைக்கு $1000 கொடுங்க..மீதிய அப்புறம் பாத்துக்கலாம்..

ரைட்டு...

(பணத்தை கொடுத்திட்டு ரூமுக்கு கிளம்பினோம் நித்திரைக்கு...)

தங்குமிடம் - சூப்பரு


பய புள்ளைங்க 4 ஸ்டார் ஹோட்டல்னு சொல்லிட்டு எல்லாம் 2 ஸ்டார விட சுமாராக இருந்தது தான் கொடும...


டமால்னு போய் விழுந்ததுதான் ஞாபகம்...காலையில உசுப்பி விட்டாங்க தொலைபேசி மூலமா...

காலை - மீட்டிங்...!


பேசுறாங்க பேசுறாங்க பேசிகிட்டே இருக்காங்க..முடிவு வரல...கொஞ்சம் டென்சனான தருணத்தில்...அவர்களில் ஒருவர்..


எலேய் இது எங்க ஊருலே..மறந்திடாதன்னு என்னை பார்த்து சொன்னாரு...


ஹேஹே...டவுசரோட உக்கார வச்சது மறந்து போச்சான்னு நான் கேக்க...ஒரே களேபரம்..


அதெல்லாம் விடுங்கப்பா இப்போ விஷயத்துக்கு வாங்கப்பான்னு...பெரிய மனுசனுங்க(!) சமரசம் பேசியதால் விட்டோம்..


ஒரு சின்ன பிளாஷ் பேக்..
இந்த குழுமத்துல இருந்து வந்த ஒரு பய புள்ள ஹனோயில இருந்து கொஞ்ச தூரத்துல இருந்த அந்த செடி விளையிற பூமிக்கு என்னோட வந்திச்சி...அப்போ, இப்போ ராமசாமிக்கணக்கா டென்சன் மேல டென்சனாகி என்னை கண்டபடிக்கு பேசப்போக...அங்கிருந்த அந்த பெரியமனுசன் அதாங்க அப்பாடக்கரு விவசாயிக்கு(!) இந்த மலையாளி பேசுற இங்கிலீசு புரியாம எதோ விக்கிய(!) அசிங்கமா திட்றார் போலன்னு ஆளுங்கள வச்சி தூக்கி கொண்டு போய் ஒரு ரூமுல குத்த வச்சி உக்கார வச்சிட்டாரு...


பய புள்ள ஒரே கத்தல்(!)..நானும் எனக்கு தெரிஞ்ச ஆங்கிலத்துல அவருக்கு புரிய வைக்க...என் உதவியாளினி(!) மொழி பெயர்த்து சொல்ல..ஸ்ஸ் அபா...கிட்ட தட்ட அரை மணி நேரத்துக்கு பய புள்ள உள்ளார கெடந்துது..அப்புறம் வேர்க்க விறு விறுவிறுக்க அந்த பனில வெளிய வந்து எனக்கு தேங்க்ஸ் சொல்லிச்சி...


என்னய்யா இந்தாளு இப்படி பண்ணி புட்டாருன்னு அவரு கேக்க...இங்க இருக்க மக்கள் நண்பர்களுக்கு சின்ன அவமானம்னாலும் தாங்க மாட்டாங்கன்னு சொல்லி வச்சேன்..(!?)


மீண்டும் நிகழ்காலத்துக்கு...


தொடரும்...


கொசுறு: கொஞ்சம் பெருசா பூடிச்சி...பொறுத்துக்கங்கப்பா!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

8 comments :

 1. இப்போதைக்கு $1000 கொடுங்க..மீதிய அப்புறம் பாத்துக்கலாம்..////

  மாம்ஸ் ஆயிரம் டாலரா? ரூம் வாடகை?

  ReplyDelete
 2. வணக்கம் வெங்கட் சார்!கொசு எங்க தான் இல்ல?ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 3. கொசு தொல்லை தாங்கலையோ? ம் ம் தொடருங்கள்

  ReplyDelete
 4. படிப்பதற்கு நன்றாக உள்ளது தொடருங்கள் ..
  பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
 5. ரெண்டு வரிக்கு மேல ஒரு பாராக்ராப் தாண்டுனா உங்க ப்ளாக்கான்னு சந்தேகம் வந்துரும். பாத்துக்கங்க மாம்ஸ்!!

  ReplyDelete
 6. அங்க இருக்கிற மக்கள் நண்பர்களுக்கு எதாவது ஒன்னுன்னா தாங்க மாட்டாங்களா.....?மேன் மக்கள் மேன் மக்கள்தான்....

  ReplyDelete
 7. கொசுறு: கொஞ்சம் பெருசா பூடிச்சி...பொறுத்துக்கங்கப்பா!//

  FONT ஆ?

  ReplyDelete
 8. கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி