சுயநல விக்கி - சென்னை lesson 3

வணக்கம் நண்பர்களே...


முந்தய தலைவலிகளுக்கு இங்கு

ஒரு வழியாக பிசினஸ் விஷயங்களை முடித்துக்கொண்டு...கிடைத்த சில நாட்களில் ஆத்மாவை தரிசிக்க சென்னையை நோக்கி கிளம்பினேன்...கடைசி நேரத்தில் எடுத்த இந்த முடிவால் அதிகமாக அவதியுற்றது என் நண்பர்களே..அப்படியும் எனக்கு டிக்கட் போட்டு கொடுத்து விட்டார்கள்...


இரவு எட்டு மணிக்கு விமானத்தில் ஏறி உக்காந்தாயிற்று...அதுவும் ஜெட் ஏர் வேஸ்...பய புள்ளைங்க ஸ்பைஸ் ஜெட்ல போடுறேன்னு சொல்லிச்சிங்க...வேணாம்யா..அவனுங்களுக்கும் நமக்கும் ஏற்கனவே ஏழரன்னு வலுக்கட்டாயமா இந்த டிக்கட்ட போடா சொல்லி இருந்தேன்...நல்லாத்தான் இருந்தது பயணம் - சிற்றுணவுடன்...சாப்பிட்டு முடிச்சதும் சென்னைய தொட்டுட்டேன்...

வெளிய வந்து டாக்ஸிய பிடிச்சதும் தான் சுதந்திர காற்றை சுவாசிச்சது கணக்கா இருந்துச்சி...டாக்சி ட்ரைவரும் என்னைய போல லொட லொடான்னு பேசிட்டே வந்தாரு...நிகழ்கால சென்னைய நச்சின்னு எனக்கு புரிய வச்சாரு...அதுவும்...வாலு போச்சி கத்தி வந்த கதைய விவரிச்சிட்டு வந்தாரு...என்னமா கட்டிக்கிட்டு வர்றாங்க புதிய விமான தளம்...மற்றும் மெட்ரோ ரயில் பாலங்களை(!)...இனி தான் இருக்கு மக்களுக்கு இன்னும் வேட்டுன்னு புரிஞ்சது...சீக்கிரத்துல சொந்த வீட்டுக்காரங்க இன்னும் வாடகைய ஏத்திப்புடுவாங்கன்னு உள் மனசுல பட்சி கத்திச்சி!

எப்படியோ நடு இரவுல வீடு வந்து சேந்துட்டேன்...அடுத்த நாள் காலையில நண்பர் ஓடோடி வந்து சிம் கார்டை கொடுத்து வணக்கம் வச்சாரு விடிய காலையில(நண்பன்டா!)...வீட்ல இருக்க பெரியவங்களுக்கு ஒரே அதிர்ச்சி...இவரு பெரிய விஐபி(!)...வீட்டுக்கு தேடிவந்து பாக்குறாங்கன்னு நெனச்சிகிட்டாங்க...ஹேஹே..!


ஹனோயில இருந்து கிளம்பும் போதே எந்த ஒரு தலை வலி மிகுந்த பொருளையும் கொண்டு வரல..உதாரணமா லேப் டாப்பு, விலை உயர்ந்த போன்(!) என்பன...எனவே, இருந்த ஒரே நம்பரு நம்ம உணவு அண்ணன் நம்பரு மட்டுமே...

போனில் அவரை அழைத்து...நான் வந்துட்டதை சொன்னேன்...அவரும் சந்தோஷமாக எப்போ நெல்லை வறீங்கன்னு கேக்க எனக்கு தர்ம சங்கடமா பூடிச்சி...ஏற்கனவே ஒரு முக்கிய(முக்காத!) புள்ளி சென்னையில எல்லா ரிசர்வேஷனையும் செய்து விட்டதாகவும்...அடுத்த நாள் சென்னையில் என்னை சந்திப்பதாகவும் கூறி இருந்தார்...இந்த விஷயத்தை அண்ணன் அவர்களுக்கு சொன்னதும்...

நோ பிராப்ளம் அவருக்கு நான் புரிய வைக்கிறேன்னு சொன்னாரு...

எனக்கு எப்படி அந்த நண்பருக்கு புரிய வைப்பதுன்னு தெரியல...

நான் போன் பண்ணதுக்கு...எடுத்ததும் முதல் வார்த்தை..

நீ ஒரு நம்பிக்கை துரோகி(!)...அரசியல்வாதின்னு நிரூபிச்சிட்டேன்னு...நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா...இப்படி, பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொன்னாரு...


அப்பவே மனசு சொல்லிச்சி...இப்பேர் பட்ட நாதாரி நட்பு நமக்கு தேவையில்லைன்னு..என்னடா எவ்ளோ வேலைப்பளு இடையில் ஊருக்கு வந்து இருக்கான்னு கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல...(கதம் கதம்!)

அடுத்து நான் எதற்க்காக சென்னை வந்தேனோ அந்த சுய விஷயத்தை நோக்கி நகரலானேன்..

கேன்சர் எனும் புற்று நோய் எவ்வளவு கொடுமையானது..என்பதை எனதருமை ஆத்மாவை பார்த்தபோது என்னையும் அறியாமல் கண்ணீர் விழ ஆரம்பித்தது...

பேச முடியாமல் இருந்த அவர்கள்...எழுதிக்காட்டியவைகளில் முக்கியமானது..

"எனக்கு எப்படி இது வந்ததுன்னு தெரியல...ஆனா நீ சிகரட்டு குடிப்பேன்னு தெரியும்...இனியாவது நிறுத்திக்கடா...உன்னோட பிடிவாத குணத்தை குறைசிக்க...எனக்கு ஒன்னும் இல்ல நான் பொழைசிப்பேன் கவலைப்படாதே..."


கடவுளே...ஒரு சிறு எறும்பு கடித்தாலும் தாங்க முடியாத இந்த ஆத்மாவுக்கு ஏன் இவ்வளவு சோதனைகள்...வலிகளை எனக்கு கொடு...என்று நெஞ்சுருக வேண்டிக்கொண்டு வெளியே வந்தேன்..

சென்னை பதிவர்களை சந்திக்க முடிவு செய்தேன்...

தொடரும்...

கொசுறு: போங்கய்யா நீங்களும்.....! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. வணக்கம் மாம்ஸ்
  அது என்ன கொசுறு சரி மேல படிப்போம்

  ReplyDelete
 2. //பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொன்னாரு...

  அப்பவே மனசு சொல்லிச்சி...இப்பேர் பட்ட நாதாரி நட்பு//

  போங்கய்யா நீங்களும்.....!சர்தான்

  அப்புறம் நடந்தது என்ன? நிஜம் அறிய வைட்டிங்.

  ReplyDelete
 3. எனக்கு எப்படி இது வந்ததுன்னு தெரியல...ஆனா நீ சிகரட்டு குடிப்பேன்னு தெரியும்...இனியாவது நிறுத்திக்கடா...உன்னோட பிடிவாத குணத்தை குறைசிக்க...எனக்கு ஒன்னும் இல்ல நான் பொழைசிப்பேன் கவலைப்படாதே...//
  மனதை கனமாக்கிய வார்த்தைகள்....ஆனால் பயபுள்ள எங்கே கேட்கப்போகுது.

  ReplyDelete
 4. கான்சர்இல் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறோம்

  ReplyDelete
 5. வணக்கம் வெங்கட் சார்!நல்லா எழுதுறீங்க!ஆபத்துல நண்பனைத் தெரியும்பாங்க!இங்க............................ஹும்!

  ReplyDelete
 6. இதுவரைக்கும் ஒண்ணும் புரியல.........

  ReplyDelete
 7. அப்பவே மனசு சொல்லிச்சி...இப்பேர் பட்ட நாதாரி நட்பு நமக்கு தேவையில்லைன்னு..
  ///////////////////////////////////////////

  சார் இஞ்சி போட்டு டீ குடிச்சா பித்தம் தெளியுமாம் என்னவோ போங்க!

  ReplyDelete
 8. இனியாவது நிறுத்திக்கடா..//
  Kick that butt...the whole thing...

  ReplyDelete
 9. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுவரைக்கும் ஒண்ணும் புரியல.//


  அப்பாடா..இந்த கமன்ட் ஒண்ணு போதும். கரண்ட் கடல கூட விக்கி ப்ளாக்தான் படிக்கறோம்னு நம்பலாம் :)))

  ReplyDelete
 10. அன்னை பூரண உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 11. //அப்பவே மனசு சொல்லிச்சி...இப்பேர் பட்ட நாதாரி நட்பு நமக்கு தேவையில்லைன்னு..//
  உங்கள் மீது அவர் வைத்திருக்கும் அதீத அன்பே, உங்களுடன் சண்டை போட காரணம். அதனால், அவரை தவறாக எடை போட வேண்டாம் என்பது என் அன்பு வேண்டுகோள்.

  ReplyDelete
 12. //எனக்கு எப்படி இது வந்ததுன்னு தெரியல...ஆனா நீ சிகரட்டு குடிப்பேன்னு தெரியும்...இனியாவது நிறுத்திக்கடா...உன்னோட பிடிவாத குணத்தை குறைசிக்க...எனக்கு ஒன்னும் இல்ல நான் பொழைசிப்பேன் கவலைப்படாதே...//
  அன்னை அவதிப்படும்போதும், தங்கள் நலனையே முன்னிலைப்படுத்தியுள்ளார். எனவே, இந்த நொடியிலிருந்தாவது, புகைப்பதை பகைக்கலாமே.

  ReplyDelete
 13. அம்மா விரைவில் குணம் அடைய எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்...

  ReplyDelete
 14. தங்கள் ஆத்மா, கொடிய நோயிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி