சுயநல விக்கி - பயணத்தொடர் (Rich Fear!) -1

வணக்கம் நண்பர்களே...


இது வெறும் காக்ரி பூக்ரி தொடர் அல்ல...காவியம்(ஹிஹி!)..ஏன்னா என்னை நல்லவன் என்று நம்பிய பலருக்கு நான் எவ்வளவு நல்லவன்(!) என்று உணரவைத்த சம்பவங்கள் அதிகம்...இந்த கோர்வையான சம்பவங்களை தொகுத்து உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்...

முதல்லையே சொல்லிடுறேன்..இந்த தொடர் விழிப்புணர்வோ அல்லது மக்களுக்கு ஏதாவது உபயோகமான விஷயங்களையோ அளிப்பதாக இருக்காது...எனவே, அவ்வாறு யாரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் தொடருங்கள்..(முதல் பால்லையே சிக்சர்!)

வவுத்துக்கு உணவு அளிக்கும் அலுவலகத்துக்கு புதிய (விவசாயிவிஷயம் ஒன்று வற்புறுத்தலுடன் வந்தது...அதை ஏற்கனவே நான் வியாபாரமாக செய்யாமல் ஒரு சேவையாக செய்து இருந்தேன்...ஆனால், இப்போது அந்த குறிப்பிட்ட நபர் மிகப்பெருவாரியான அளவுக்கு இந்தியாவுக்கு அளிக்க வந்ததால்(!) இந்தியா சென்று நடைமுறைப்படுத்த என்னை அணுகினார்கள்..புறப்பட தயார் ஆனேன்!

ஹலோ குமாரா...

ஆமாம்யா...

என்ன டிக்கட்எல்லாம் எடுத்தாச்சா...

ஆச்சிங்க...

எந்த ஏர் லைன்ஸ்ல போட்டு இருக்காங்க...

சிங்கைல தான்...

அது பிசினெஸ் கிளாஸ் தானே..

ஏன்னே எகானமிலேயே போலாமே..

வேணாம் எனக்கு பாதுகாப்பு முக்கியம்..

(அட அரமண்டயா..சாகனம்னு முடிவானா எதுல போனாலும் போய் சேரப்போவது உறுதியாச்சே...சரி விடு..துட்டு பேசுது!)

ஒகே மாத்திபுடறேன்..

சில பல வார்த்தை ஜாலங்களுக்கு பிறகு முடிவானது!...

(நான் இந்தியா கிளம்பறேன்னு சொன்னதும் சென்னையில நிலா ச்சே நில நடுக்கம்னு சொன்னாங்க...என்னே ஒரு கொலைவெறி!)

ப்ளைட்டில்...


என்னய்யா இது டேக் ஆப் இம்புட்டு ஜர்க்காகுது..இதுவே வியட்நாம் ஏர் லைன்னா இப்படி கிடையாது தெரியுமா..(இவன் இந்தியனா பொறந்து இருக்க வேண்டியவன்!)

அப்படிங்களா...ரைட்டுங்க...


(பய புள்ள ப்ளைட்ல ஒன்லி ஜூசு குடிக்குது...நாங்கல்லாம் யாரு எகானமில போனாலே ரெண்டு முறை விஸ்கி வாங்குவோம்..)


ஏம்மா பொண்ணு...இன்னும் ரெண்டு லோட்டா கொண்டா..


சார் வந்து...


போம்மா..கூட வந்த ரெண்டு பய புள்ளைங்களும் ஜூசு குடிக்குதுங்க...ப்ளைட்ல போகரதுக்கே கேவலம்..!
சரிங்க கொண்டார்றேன்...(குடிகாரப்பய!)


(பொண்ணு இந்திய ஜாடையில இருந்தது,அதான் சட்டுன்னு புரிஞ்சிகிடிச்சி!)


சிங்கைல இறங்கி மூணு மணி நேரம் கழிச்சி தான் அடுத்த ப்ளைட்டுன்னு சொல்லிட்டாய்ங்க...அப்படியே தாக சாந்திக்கு அங்க இருக்க பாருக்கு போனோம் மூணு பேரும்(!)...கூட வந்த வியட்நாமிய பொண்ணு வெறும் ஜூஸோட நிறுதிக்கிச்சி...ஆனா அந்த பணக்கார வியாபாரி பீரு கேட்டாரு...ஒரு கிளாஸ் பீரு $13 (ரூ 650)...என்னைய கேட்டாரு..சாமி எனக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு விட்டு புட்டேன்..பய நாலு லோட்டா உள்ளார இறக்குனாறு...


மீண்டும் அடுத்த பயணம் சிங்கையில் இருந்து மும்பைக்கு கிளம்பினோம்..

இந்த முறை சுவாரசியமா எதுவும் இல்லாம...மும்பையை அடைந்தோம்!

(தொடரும்...ஸ்ஸ் அபா!)

கொசுறு: மும்பையில் நடந்த குத்து வெட்டுக்கள் வேண்டாம்னா நெக்ஸ்டு சென்னை விஜயம் பற்றியது தானுங்கோ...ஏன்னா பலர் இதை எதிர் பார்த்து காத்துகிட்டு இருக்காங்கோ..ஹேஹே!...முடிந்தவரை கருத்துக்கள் தெளிச்சிட்டு போங்கோ!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

36 comments :

 1. உங்கள் அழகான பயணதொடரை "மனோ" பானியில் தாங்கள் எடுத்த புகைப்படங்களுடன் மிக அழகாக நேர்த்தியாக தொகுத்து இருக்கறீர்கள்...ஜேம்ஸ் கேமரூன் உலகிலேயே ஆழமான பகுதிக்கு போனார் தாங்களோ உலகிலேயே ஆழமான மனமுடைய பெண்கள் இருக்கும் இந்தியா வந்தீர்கள்.இங்கு நடந்த சம்பவங்களை அழகாக தொகுத்து எங்களை மகிழ்ச்சியுற செய்வீர்கள் என்றே நம்புகிறோம் ஒரு வாசகனாக உங்கள் பதிவை எதிர்பார்த்தது காத்து கொண்டிருக்கும்  வீனாப்போன வீடு சுரேஸ்குமார்

  ReplyDelete
 2. @வீடு சுரேஸ்குமார்

  சார் கமண்டு போடுறதா நெனச்சி இன்னொரு பதிவே போட்டு புட்டீங்களா..மேன் மக்கள் மேன் மக்கள் தான் ஹெஹெ!

  ReplyDelete
 3. புறப்பட்டு விட்டது அடுத்த புயல்

  நடத்துங்க மாம்ஸ்

  ReplyDelete
 4. புகைப்படமும், பயண கட்டுரையும் நடத்துங்க மாம்ஸ்,

  படிச்சி கமென்ட் போடறேன்.....

  ReplyDelete
 5. முதல் படம் வியட்நாமா?

  ReplyDelete
 6. இரண்டாவது படம் ஏன் இந்த ஓரவஞ்சனையா?

  ReplyDelete
 7. //சாமி எனக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு விட்டு புட்டேன்//

  ப்ளைட்ல போட்டது தெளியல போல ம்.

  ReplyDelete
 8. .ஒரு கிளாஸ் பீரு $13 (ரூ 650)...என்னைய கேட்டாரு..சாமி எனக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு விட்டு புட்டேன்..பய நாலு லோட்டா உள்ளார இறக்குனாறு...///

  இதுக்குத்தான் நான் சிங்கப்பூரே வேண்டாம்னு ஒரே மாசத்துல ஓடியாந்தேன் ....

  ReplyDelete
 9. (பய புள்ள ப்ளைட்ல ஒன்லி ஜூசு குடிக்குது...நாங்கல்லாம் யாரு எகானமில போனாலே ரெண்டு முறை விஸ்கி வாங்குவோம்..)///

  நாங்கல்லாம் நான்கு முறை வாங்குவோம் + ஒரு பீர்

  ReplyDelete
 10. //ஒரு கிளாஸ் பீரு $13 (ரூ 650)...//

  அது என்னமோ தெரியல எல்லா ஏர்போர்ட்லும் அநியாய விலை சொல்றனுங்கோ

  ReplyDelete
 11. மும்பையில் நடந்தது என்ன? நிஜம் ஆவலுடன்

  ReplyDelete
 12. தொடர் பதிவு முடியதுக்குள்ள முறுக்கிக்கிட்ட மூணு பேரும் இறுக்க அணச்சி ஒரு (ஏழெட்டு) உம்மா தருவீர்கள் எனும் நம்பிக்கையுடன்...

  ReplyDelete
 13. குத்துவெட்டு என்ன என்று கொஞ்சம் சொல்லலாமே!

  ReplyDelete
 14. @ siva.....

  Yaar antha.....3 per
  siva....???????

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட் சார்!ஒரு இந்தியனாக,தமிழனாக மும்பையில் "நடந்தது என்ன"?என்று விஜய் டி.வி பாணியில் எடுத்து விட்டீர்கள் என்றால் பலர் ஜென்ம சாபல்யம் அடைவார்கள் போல் தெரிகிறது!யார் கிட்ட?எடுத்து விடுங்க,கோமணத்த?!/டவுசர?! உருவுங்க!

  ReplyDelete
 16. நல்ல பிளைட் அனுபவம்

  நண்பா காத்துக்கொண்டிருக்கிறோம்.


  மாம்ஸ் அதில் உங்களுடைய Facebook-Page URL கொடுக்க வேண்டும்.

  Facebook-Page இன்னும் உருவாக்கவில்லை என்றால் கீழே உள்ள Link-ல் சென்று உருவாக்குங்கள்
  http://www.facebook.com/pages/create.php/

  உருவாக்குவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள Link-ல் சென்று பாருங்கள்

  http://www.bloggernanban.com/2011/06/facebook-fan-page.html

  ஏற்கனவே Page உருவாக்கிவிட்டேன்.Page URL-ஐ எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் எனது mail Id-க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

  Mail:sathishkrish20@gmail.com

  எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை படம்(IMAGE) வாரியாக விளக்குகிறேன்.

  அப்படி இல்லையென்றால் கீழே உள்ள Link-ல் சென்று பாருங்கள்

  http://sathishdemo.blogspot.in/2012/04/how-to-find-facebook-page-url.html


  என்ன மாம்ஸ்.

  ReplyDelete
 17. சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி

  ReplyDelete
 18. //////பட்டாபட்டி.... said...
  சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி////////

  ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........

  ReplyDelete
 19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////பட்டாபட்டி.... said...
  சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி////////

  ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........
  ////

  ஒரு ஓரமாவா சார்?

  ReplyDelete
 20. @மனசாட்சி™

  புறப்பட்டு விட்டது அடுத்த புயல்

  நடத்துங்க மாம்ஸ்

  >>>>>

  எது புயலா..எங்க எங்க!

  >>>>>>>>>>>>

  முதல் படம் வியட்நாமா?

  >>>>

  யெஸ்ஸுங்கோ!
  ....................

  இரண்டாவது படம் ஏன் இந்த ஓரவஞ்சனையா?

  >>>>>>>>>

  வாவ் நீர் அறிவாளிய்யா!...
  .............................

  //சாமி எனக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு விட்டு புட்டேன்//

  ப்ளைட்ல போட்டது தெளியல போல ம்.
  >>>>>>>>>>>>>>

  நோ...ஒன்லி ஹாட்...ஹெஹெ!

  ReplyDelete
 21. @தமிழ்வாசி பிரகாஷ்

  “புகைப்படமும், பயண கட்டுரையும் நடத்துங்க மாம்ஸ்,

  படிச்சி கமென்ட் போடறேன்.....”

  >>>>>>>

  வருகைக்கு நன்றி...எப்பதான் படிச்சி முடிப்பய்யா!

  ReplyDelete
 22. @தினேஷ்குமார்
  ஒரு கிளாஸ் பீரு $13 (ரூ 650)...என்னைய கேட்டாரு..சாமி எனக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு விட்டு புட்டேன்..பய நாலு லோட்டா உள்ளார இறக்குனாறு...///

  இதுக்குத்தான் நான் சிங்கப்பூரே வேண்டாம்னு ஒரே மாசத்துல ஓடியாந்தேன் ....

  >>>>>>>>

  ஏன்யா ஏர்போர்ட்ல தான் இம்புட்டு காஸ்ட்லி..ஊர்லயுமா!...
  ....................

  (பய புள்ள ப்ளைட்ல ஒன்லி ஜூசு குடிக்குது...நாங்கல்லாம் யாரு எகானமில போனாலே ரெண்டு முறை விஸ்கி வாங்குவோம்..)///

  நாங்கல்லாம் நான்கு முறை வாங்குவோம் + ஒரு பீர்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  எனக்கு சாமர்த்தியம் பத்தாது போல ஹெஹெ!

  ReplyDelete
 23. @! சிவகுமார் !

  தொடர் பதிவு முடியதுக்குள்ள முறுக்கிக்கிட்ட மூணு பேரும் இறுக்க அணச்சி ஒரு (ஏழெட்டு) உம்மா தருவீர்கள் எனும் நம்பிக்கையுடன்...

  >>>>>>>>>>>

  யோவ் யாரு அந்த மூணு பேரு சொல்லவே இல்ல!

  ReplyDelete
 24. @Yoga.S.FR

  வணக்கம் வெங்கட் சார்!ஒரு இந்தியனாக,தமிழனாக மும்பையில் "நடந்தது என்ன"?என்று விஜய் டி.வி பாணியில் எடுத்து விட்டீர்கள் என்றால் பலர் ஜென்ம சாபல்யம் அடைவார்கள் போல் தெரிகிறது!யார் கிட்ட?எடுத்து விடுங்க,கோமணத்த?!/டவுசர?! உருவுங்க!

  >>>>>>>

  சார், பிசினஸ் மேட்டர்ல ஒரு சின்ன உரசல்..அம்புட்டு தான்...மலையாளிக்கே அம்புட்டு இருந்தா...நமக்கு எம்புட்டு ஹிஹி...தொடருங்கள்!

  ReplyDelete
 25. @சென்னை பித்தன்

  குத்துவெட்டு என்ன என்று கொஞ்சம் சொல்லலாமே!

  >>>>>>>

  அண்ணே உங்க கிட்ட சொல்லாமலா..கண்டிப்பா சொல்லுறேன்!

  ReplyDelete
 26. @Vairai Sathish

  மாப்ள் உங்க விளக்கமான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிய்யா...இப்போ சரியா வேலை செய்யுதுன்னு நெனக்கிறேன்!

  ReplyDelete
 27. @பட்டாபட்டி....
  சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி

  >>>>>>

  ஹஹா..யோவ் நான் தான் வெட்டிப்பய...உன்னய ஏன் தொந்தரவு பண்றதுன்னு தான் கூப்பிடல...!

  ReplyDelete
 28. @பன்னிக்குட்டி ராம்சாமி

  //////பட்டாபட்டி.... said...
  சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி////////

  ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........

  >>>>>>>>.

  இருந்திருக்கலாம் போலயே!.......!

  ReplyDelete
 29. @வெளங்காதவன்™

  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////பட்டாபட்டி.... said...
  சிங்கப்பூர் வந்து மூணு மணி நேரம் வெட்டியா இருந்ததுக்கு, என்னைய கூப்பிட்டு இருந்திருக்கலாம் சார்..

  ஹிஹி////////

  ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........
  ////

  ஒரு ஓரமாவா சார்?

  >>>>>>>>..

  எது ஓரமாவா..யோவ்!

  ReplyDelete
 30. //ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........
  ////

  ஒரு ஓரமாவா சார்?

  >>>>>>>>..

  எது ஓரமாவா..யோவ்!////

  ரைட்டு ரைட்டு...
  #அங்க ரீச் ஆயிட்டீங்களா மாம்சு?

  ReplyDelete
 31. @வெளங்காதவன்™

  //ஆமா ரெண்டு பேரும் சேந்து வெட்டியா இருந்திருக்கலாம்........
  ////

  ஒரு ஓரமாவா சார்?

  >>>>>>>>..

  எது ஓரமாவா..யோவ்!////

  ரைட்டு ரைட்டு...
  #அங்க ரீச் ஆயிட்டீங்களா மாம்சு?

  >>>>>>>

  வந்து சேந்தாச்சிய்யா...விசாரிப்புக்கு நன்றி!

  ReplyDelete
 32. உங்கள் அழகான பயணதொடரை... தாங்கள் எடுத்த புகைப்படங்களுடன்... மிக அழகாக....நன்றி...

  ReplyDelete
 33. மாம்ஸ் அந்த கடைசி பிகரு சூப்பரு :-)

  ReplyDelete
 34. பயணம் முடியறதுக்கு முன்னாடி என்னவோ கில்பான்ஸ் வேலை பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...இல்லாட்டி இப்படி பீடிகை இருக்காது..

  சிங்கைல முஸ்தபால போய் ரெண்டு சென்ட் பாட்டில் வாங்கி வந்திருக்கலாம்...ம்ம்ம்ம்....

  தொடருங்கள்...

  படங்களை மறக்காம போடுங்க...
  எதுவும் எழுதாம இருந்தா கூட பரவாயில்லை...-:)

  ReplyDelete
 35. hii.. Nice Post Great job.

  Thanks for sharing.

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி