ஓசி சீட்டும் ஒடிசி டான்சும்! - Vietnam

வணக்கம் நண்பர்களே...
நேற்று எனக்கு கிடைக்கப்பெற்ற அறிய வாய்ப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...நம் நாட்டில் நடக்கும் பண்பாட்டு நிகழ்சிகளை நாம் சரிவர கண்டு ரசிக்கிறோமோ தெரியவில்லை...ஆனால், வேலை நிமித்தமாக வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இப்படிப்பட்ட வாய்ப்புகளை நழுவ விட மாட்டார்கள்..ஏனெனில், நம் கலையை மலைத்து பார்க்கும் அடுத்த நாட்டு முகங்களை காணுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி..

அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் இது...


ஒடிசி நடனத்துக்கான இலவச அழைப்பை அளித்து இருந்தார்கள் நம்ம நண்பர்கள்..அதை எடுத்து கொண்டு குடும்பத்துடன் சென்று இருந்தேன்..


இந்தியாவில் இருந்து வந்து இருந்த குழுவினர்...நமது நாட்டு கலையான ஒடிசி நடனத்தை அரங்கேற்றி காட்டினார்கள்...இந்த ஒடிசி நடனம் ஒரிசாவை சார்ந்தது...
ரபீந்தரநாத்தாகூர் - 1913 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும்..இந்திய தேசிய கீதம் இயற்றியவர், கீதாஞ்சலிக்கு சொந்தக்காரர் போன்ற பல விஷயங்கள் தெரிந்து இருந்தாலும்(!)...இவரின் குடும்பம் ஆடை வடிவமைப்பில் மிகப்பெரிய புலமை பெற்றது என்பது நேற்றைய நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன்..சரி நம்ம ஸ்டைல்ல வர்றேன்(இதுவரைக்கும்!)


26 நபர்கள் கொண்ட குழு ஒன்று ஹனோயிக்கு வருகை தந்து இருந்தது...அவர்களின் நடன அரங்கேற்றம் நிகழ்ந்தது..முதலில் ஆடை வடிவமைப்பில் தாகூரின் குடும்பத்தின் பின்னணி பற்றிய குறும்படத்துடன் கூடிய அழகிய பழைய ஸ்டில்கள் காமித்தார்கள்...மிடி எனப்படும் பிரெஞ்சு பாணி உடையை மாற்றி எப்படி இந்திய ஸ்டைலில் அமைத்தார்கள் என்பதும் காட்டப்பட்டது...


பிறகு தாகூரின் வாழ்கை வரலாறு குறும்படம்...


அடுத்து ஒடிசி, கதக் மற்றும் பாரத நாட்டியம் மூன்றையும் இணைத்து ஆடிய ஆட்டம் தான் ஹைலைட்...


என்ன ஒரு கம்பீரமான ஆட்டம்..கிட்ட தட்ட தரையில் இருந்து 3 அடி பந்து போல எழும்பி ஆடிய பெண்கள்..இந்த நடனத்துக்காக தன்னை அர்பணித்து இருக்கிறார்கள் என்பது அவர்களின் பாவனைகளிலேயே தெரிந்தது..


பாரம்பரிய உடையில் இவர்களின் ஆட்டம் காணக்கிடைத்தது அதிர்ஷ்டம்தான்...பார்க்க வந்து இருந்த வியட்நாமியர்களும், பல நாட்டை சேர்ந்தவர்களும் அதிசயித்து போனார்கள் என்றால் மிகையாகாது...


குறிப்பிடும் படியான விஷயங்கள்:
வந்து இருந்த குழுவில்..26 நபர்களில் 2 மட்டுமே ஆண்கள்...


பெண்களில் பலர் வில்லாய் வளைந்து ஆடியதை மறக்க முடியாது...


தாகூரை பற்றி பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்..


80 வயது மதிக்கத்தக்க பிரெஞ்சு முதிய இளைஞ்சி, உதவியாளர் துணையுடன் கொம்பை ஊன்றி வந்து இருந்தது நெகிழ்ச்சி...


நெருடல்கள்


இப்படிப்பட்ட மேடை நிகழ்சிகளில் வெளிநாட்டவரை முதல் வரிசைகளில் அமரச்செய்து...இந்திய அப்பாடக்கர்கள் பின் வரிசையில் அமர்ந்து இருந்தால் இன்னும் நம் கலையையும் பண்பாடையும் உயர்த்தியதாக இருந்து இருக்கும்(!)..


வீட்டிலேயே இருப்பா என்றாலும் கேளாமல் என்னுடன் வந்து தனக்கு பிடிக்கவில்லை என்று முதலில் இருந்து என்னை(பொறுமையை!) வாட்டி எடுத்த என் மகன்(ஹிஹி!)...இதெல்லாம் ஒரு டான்சா..இதை வீட்ல டீவில பாத்தா நீ என்ன குறைஞ்சா போயிடுவே என்ற கொடுமையான கேள்விகளை தாங்கிக்கொண்டு..நிகழ்ச்சியை பார்த்த நான்..


எந்த டென்சனும் இல்லாமல்...ஹாயாக நிகழ்ச்சியை ரசித்த மனைவி(எந்த தொல்லையும் இல்லாமல்!)


கொசுறு: இது போல வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை சரிவர கண்டுவிடவேண்டும்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. ஒடிசி டான்ஸ்னா என்ன? ஹி ஹி

  ReplyDelete
 2. நேரம் ஒதுக்கி, இந்த நிகழ்ச்சியை பார்க்க தயாரானதேற்கே உம்மை பாராட்ட வேண்டும்..

  ReplyDelete
 3. அடுத்தது தமிழகம் சார்பில் பதிவர்களை வைத்து
  ஏதேனும் நிகழ்ச்சியைநடத்தி விட வேண்டியது தானே..

  ReplyDelete
 4. மாம்ஸ் ஜொள்ள தொடைங்க....
  இரண்டு பக்கெட் நோம்பிடுசி.....

  ReplyDelete
 5. என்னது 24 பேரா....நான் நாய் நக்ஸ் சொன்னதை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 6. என்ன மாப்ள இருபத்திநாலா இப்பவே கண்ணை கட்டுதே.

  ReplyDelete
 7. //எந்த டென்சனும் இல்லாமல்...ஹாயாக நிகழ்ச்சியை ரசித்த மனைவி(எந்த தொல்லையும் இல்லாமல்!)//
  வீட்டைவிட்டு வெளிய வந்துட்டாங்கள்ல!அப்ப தொல்லை குறைவுதான்!:))

  ReplyDelete
 8. \\\வீட்டிலேயே இருப்பா என்றாலும் கேளாமல் என்னுடன் வந்து தனக்கு பிடிக்கவில்லை என்று முதலில் இருந்து என்னை(பொறுமையை!) வாட்டி எடுத்த என் மகன்(ஹிஹி!)...\\\ ஒரு வேளை இந்தியாவிலிருந்து வருகிறார்கள் என்றதும் த்ரிஷாவை எதிர் பார்த்திருந்திருப்பான் ...ஹி...ஹி...

  ReplyDelete
 9. koodal bala said...
  \\\வீட்டிலேயே இருப்பா என்றாலும் கேளாமல் என்னுடன் வந்து தனக்கு பிடிக்கவில்லை என்று முதலில் இருந்து என்னை(பொறுமையை!) வாட்டி எடுத்த என் மகன்(ஹிஹி!)...\\\ ஒரு வேளை இந்தியாவிலிருந்து வருகிறார்கள் என்றதும் த்ரிஷாவை எதிர் பார்த்திருந்திருப்பான் ...ஹி...ஹி...///////

  பாலா சார்! வாகைசூடவா படத்தில் தம்பி ராமையா சொல்லுவாரு

  ”சுரைக்கா விதை போட்டா சுரைக்காதான் முளைக்கும்”

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said...
  ஒடிசி டான்ஸ்னா என்ன? ஹி ஹி
  ///////////////////////////////////

  காலு ரண்டையும் தூக்கி தலையில வச்சிக்கனும்...அப்ப கை தட்டனும்....பிம்பிளிக்கி பிளாக்கின்னு வேற சொல்லனும் இதானே ஒடிசி....

  ரொம்ம கடுசுதான்....

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் said...

  ஒடிசி டான்ஸ்னா என்ன? ஹி ஹி!!////"ஒடி"சி டான்சுன்னா "ஒடி"ஞ்சி போறாப்புல வளைஞ்சி நெளிஞ்சு ஆடுறது,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 12. வணக்கம் மாம்ஸ்,
  பொதுவாக வெளிநாட்டினர் நம் கலைகளை
  விழிவிரியப் பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
  நீங்கள் ஒடிசி நடனத்தை பற்றி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக
  இருந்தது...

  என்னிடமிருந்து தங்களிடம் ஒரு வேண்டுகோள்,,,
  அப்படி அந்த விழாவினை நடத்துபவர்கள் தங்கள் நண்பர்கள் ஆயின்
  நமது நாட்டுப்புறக் கலைகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாமே..
  இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.. வாய்ப்புகள்
  இருக்குமாயின் முயற்சி செய்யுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 13. அருமையான பதிவு விக்கி சார்

  ReplyDelete
 14. ஆஹா...மாப்ள...ஒடிஸி டான்ஸ் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சு...!
  இனி இந்துஸ்தானி சங்கீதமா?

  ReplyDelete
 15. நண்பரே,

  உங்களது இந்த நல்ல பதிவை
  எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

  பார்க்க
  தமிழ்.DailyLib

  Hope we can get more traffic, exposure hits for you


  To get the Cute Vote Button

  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி