போலீஸ் ஸ்டேஷனில் பெண்!

வணக்கம் நண்பர்களே...


இது ஒரு உண்மை நிகழ்ச்சி...தொடருங்கள்!


காவல் நிலையம் இரவு 7 மணி...


உள்ளே நுழைந்தேன்...சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற ஒரு உணர்வு..(முதல் முறையாக காவல் நிலையம் வருகிறேன் என்பதாலோ!)


ஏம்மா உங்க பேரு...


சார் என் பேரு சந்தியா..


நீங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க...மேடம்..


இல்ல சார் என் கொழுந்தனார்தான் இங்க வர சொன்னாரு...எதோ கம்பளைண்ட் கொடுக்கனும்னு...இன்னும் அவரையும் அவரோட சம்சாரத்தையும் காணோம்...


ம்ம்...அப்படியா...நீங்க இந்த சேர்ல உக்காருங்க...


சரி சார்...


(போன் மணி அடித்தது...)


சார்..யெஸ் ஸார்...


(அந்த கான்ஸ்டபிள் பல யெஸ்களை போட்டு கொண்டே சென்றார்!)


ஏம்மா நீங்க அய்யா குமரேசனுக்கு சொந்தக்காரங்கன்னு முன்னமே சொல்லக்கூடாதா...என்னம்மா சாப்பிடுறீங்க!


எனக்கு ஒன்னும் வேண்டாம் சார்...


(கொழுந்தனார் மனைவியுடன் உள் நுழைந்தார்!)


சாரி சார் கொஞ்சம் லேட்டாயிடிச்சி...இந்தாங்க சார் கம்ளைண்ட் லெட்டர்...இதில என் அண்ணியும் சைன் பண்ணிடுவாங்க சார்!


என்ன தம்பி எழுதி இருக்கீங்க...


என்ன அண்ணி இப்படி..இங்க வந்து கேக்குறீங்க...


(அந்த ரைட்டரிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்ட கொழுந்தன்...என்னை கொஞ்சம் வெளியில் கூட்டி சென்றார்...கூடவே அவரின் மனைவியும் வந்தாள்!)


அண்ணி இந்த கம்ளைண்ட் பேப்பர பாருங்க...


(நான் படிக்கலானேன்!...என்ன கொடுமை!)


என்ன தம்பி இது...உங்க அப்பா உங்க மனைவிய கைய புடிச்சி இழுத்ததாக எழுதி இருக்கீங்க...அதுவும் இல்லாம இப்படித்தான் எங்கிட்டயும் தவறா நடந்துக்க ஏற்கனவே முயற்சி பண்ணி இருக்காருன்னும் எழுதி இருக்கீங்க...தப்பு தம்பி...


இங்க பாருங்க..நான் சொல்றதை கேளுங்க...அந்தாள தூக்கி உள்ள போடுறதுக்கு வேற வழி இல்லை...


நான் பொய் சொல்ல மாட்டேன் தம்பி...அதுவும் என் வீட்டுகாரருக்கு தெரிஞ்சா என்னைய வெட்டி போட்ருவாரு...மாட்டேன்..!


அண்ணன் கிட்ட நான் பேசிக்கரேன்..நீங்க அந்த கவலைய விடுங்க...


இல்லை..நான் ஒரு வார்த்தை அவரு கிட்ட பேசிட்டு வர்ரேன்..


(போனில் மிஸ்டு கால் கொடுத்தேன்..வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு...அவர் கூப்பிட அந்த கடிதத்தின் விஷயத்தை சொன்னேன்!)


வேண்டாம்..அப்படியெல்லாம் பொய் சொல்ல தேவையில்லே...அவங்கிட்ட போனை கொடு...


(போன் கொடுக்கப்பட்டது!)


ஏண்டா...என்னடா இது...என்ன இப்படியெல்லாமா பண்றது...தப்புடா...


ஏய் உனக்கு சொன்னா புரியாதா...நான் சொல்ரதுபடி உன் பொண்டாட்டிய செய்ய சொல்லு..இல்லன்னா நடக்குறதே வேற!
என்னாது நடக்குறது வேறயா...எலேய் அந்த மாதிரியெல்லாம் அவள் சைன் பண்ண மாட்டா...உன்னால முடிஞ்சத பாத்துக்க...


அப்பிடியா...


(கேட்டுக்கொண்டே அந்த போனை தரையில் வீசி எறிந்தான் அந்த நல்லவன்!..போன் உடைந்து போனது!)


இப்போ என்னடி பண்ணுவ...


(அடித்து பிடித்து காவல் நிலையம் உள்ளே ஓடினேன்...!)


சார்...எனக்கு இந்த விசயத்துல விருப்பம் இல்ல...நான் சைன் பண்ண மாட்டேன்..என்னை சைன் பண்ண சொல்லி மிரட்டுறாரு..என்னோட போனை உடைச்சிட்டாரு...என் கணவரிடம் நான் இப்போ எப்படி பேசுவது...


(ட்ரிங்...அந்த காவல் நிலைய போன் அடித்தது)


இருங்கம்மா...அலோ சார் நான் பாத்துக்கறேன்...நீங்க கவலைப்படாதீங்க..மேடத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் சார்!
(பக்கத்தில் இருந்த லேடி போலிஸிடம்!)


ஏம்மா...இவங்களை கொண்டு போய் பஸ் ஏத்திட்டு வந்துடுங்க...


(வெளியில் வந்த என்னை கொலை வெறியுடன் பார்த்து கொண்டு நின்றான் அந்த கொழுந்தன்!...)


ஒரு ஃப்ளாஷ் பேக்..


ஏம்பா தம்பி..இதான் வீட்டுக்கு வர்ற நேரமா...என்னப்பா குடிச்சிட்டு வந்து இருக்க...டேய் என்னடா உன் பொண்டாட்டியும் குடிச்சி இருக்கா...


யோவ் இப்போ இன்னாங்கர...இதான் இப்போ ஸ்டைல்...ஆணும் பெண்ணும் சமம்யா...


டேய் இருக்கலாம்டா..அதுக்காக குடும்ப பொண்ணை குடிக்க வச்சி கூட்டி வந்து இருக்க...


யோவ் பெருசு...மூடிட்டு இருய்யா...மணி 1 ஆகுது...கத்தாத..பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் பாக்குறாங்க பாரு...


அவ்ளோ இங்கிதம் தெரிஞ்சவன் இப்படியெல்லாம் நடந்துக்கலாமா..வீட்ல பெரியவங்க இருந்தா கேக்க தான் செய்வான்...


யோவ் நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு...
நான் எங்க போவேன்டா...உன்னைய நம்பி தானே மூத்தவன விட்டுட்டேன்!...நீ தான் என்னை காப்பாத்தனும்..இல்லன்னா நான் கோர்ட்டுக்கு போவேன்...


அப்படியா நீ நாளைக்கு எங்க போறேன்னு பார்ப்போம்...


நிஜ உலகத்துக்கு திரும்பினேன்...


இப்போ சொல்லுங்க உங்க கருத்துக்களை...


கொசுறு: இன்னும் சோதனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு அந்த பெரியவருக்கு!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. மாப்ள என்ன கொடுமை இது?

  படிப்பும் பணமும் மட்டுமே மனிதனுக்கு பண்பு அளித்து விடாது. செருப்புதான் இதற்கு பதில்.

  ReplyDelete
 2. இப்படி எல்லாம் ஒரு பொழப்பு - பெத்தவங்களை நோகடித்து, தக்காளி இவனுங்களை.......@%$###

  ReplyDelete
 3. ///கேட்டுக்கொண்டே அந்த போனை தரையில் வீசி எறிந்தான் அந்த நல்லவன்!..போன் உடைந்து போனது!/////

  அங்கே மட்டம் தானே இதைக் காட்ட முடியும்.... இதால் எதுவும் வராதே..

  ReplyDelete
 4. பாவப்பட்ட அந்த பெரிய மனிதர் மகனை எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்.....அன்பில்லாத உலகம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது....என்பதற்கு சாட்சி!

  ReplyDelete
 5. என்னவென்று தெரியவில்லை.., தற்போது உலகின் அனைத்து மூலைகளிலும் மனிதத்துவம் மங்கிக்கொண்டே வருகிறது,

  சுய-கட்டுப்பாடும், சுய-ஒழுக்கமும் மனிதனுக்கு எப்போதும் மன அமைதியை தரவல்லது, எப்போது நாம் அதை தொலைக்கிறோமோ அதன் பின் அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவது கடினமாகிவிடும் ..!

  ReplyDelete
 6. தலைப்ப பாத்ததும் ஏதோ கில்மா கதைன்னு நெனச்சுட்டேன்... ஆனா மாம்ஸ் இங்க part-2 தவமாய் தவமிருந்து ஓட்டிட்டு இருக்கீங்க... :))

  ReplyDelete
 7. வெட்கப்படவேண்டிய விஷயம்...

  ReplyDelete
 8. படிக்கவே மனசு கனக்குது :( இவர்களை எல்லாம் என்ன செய்தாலும் சரியே..... :(((((

  ReplyDelete
 9. ஆனாலும் நம்ப முடியாமலும் இருக்கு இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்..... :(

  ReplyDelete
 10. இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி