நீங்கள்லாம் மனிதர்களா!

வணக்கம் நண்பர்களே...


கடவுள் ஏன் கல்லானான் சில கல்லாய் போன மனிதர்களாலே!

மருத்துவர் என்பவர் - என்னைப்பொறுத்தவரை கண்களால் காணக்கிடைத்த கடவுள் என்பேன்...பல நோய்களுக்கு மருந்தாக இவர்களின் வார்த்தைகளே அதிகம் பயன்படுகின்றன!...ஆனால் சிலர்...!

கொஞ்ச நாள் முன்பு சென்னையில் இருந்த போது ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது...அப்போது ஒரு பெண் அலறலை கேட்டு நானும் நண்பரும் என்ன வென்று விசாரித்தோம்...

அப்பெண்ணின் வயிற்றில் பிரச்சினை என்றும்...அதனால் தான் அடிக்கடி தாங்க முடியாத வலி ஏற்பட்டு இப்படி வீலிட்டு கத்துவதாக கூறினார்கள்...

இரவு பல முறை இப்படி அந்தப்பெண் கத்துவதை கேட்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை...அந்த அறைக்கு சென்று பார்த்தேன்...

அந்த பெண்ணுடன் ஒரு சிறிய பெண் குழந்தை வயது பத்து இருக்கும்...அவள் மட்டும் தான் அந்தப்பெண்ணுக்கு துணையாக இருப்பதாக கூறினாள்...வலியால் அவதிப்பட்டு கொண்டு இருந்த பெண்ணிடம் மருத்துவரை அழைக்கட்டுமா என்று கேட்டதற்க்கு...

அய்யா உங்களுக்கு புண்ணியமா போகும் ...என்னை இங்கிருந்து காப்பாத்த முடியுமா...என்றாள்...

எனக்கு புரிய வில்லை...என்ன என்று விசாரித்த போது...ஏற்கனவே அவளுக்கு இங்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும்...இரண்டு நாள் முன்பு மீண்டும் வலி ஏற்பட்டதால் அங்கு வந்து அட்மிட் ஆனதாகவும் கூறினாள்...ஏனோ, மருத்துவர்கள் சரியாக கவனிக்க வில்லை என்றும்...என்ன பிரச்சினை என்று சரிவர புரியாமல் தவிப்பதாக கூறினாள்...

அவள் கணவனுக்கு நைட் ஷிப்ட் என்பதால்...வர இயலவில்லை...மிகுந்த பயமாக இருப்பதாக கூறினாள்...

இரவு நேர டாக்டரிடம் கேட்டதற்க்கு...இப்போ ஒன்னும் முடியாது...காலையில தான் எதுவும் பார்க்க முடியுனுட்டாங்க!..

திடீரென்று எனக்குள் எதோ தவறாக நடப்பதாக தோன்றியது..நண்பனுக்கு போனில் அழைத்து அவர் இருக்கும் மருத்துவமனை வண்டியய் அனுப்ப சொல்லினேன்...

அந்த நேரத்தில் இருந்த சீப்()! இடம் அனுமதி கேட்டு...எனக்கு சொந்தம் தான் எனச்சொல்லி சமாளித்து(!) டிஸ்சார்ஜ் செய்து வந்திருந்த வண்டியில் ஏற்றி...இன்னொரு நண்பன் மருத்துவனாக இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தோம்...


உடனே ஸ்கேன் எடுத்து...அறுவை சிகிச்சை செய்து பார்த்தார்கள்...உள்ளே...பாதி உடைந்த மருத்துவ கத்திரி இருந்தது...

இன்னும் சில நாட்கள் இருந்து இருந்தால்...அந்தப்பெண் இறந்து இருப்பாள் என்று சொன்னார்கள்...

அடுத்த நாள்...காலையில் முதல் வேலையாக என் உறவை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து இன்னொரு மருத்துவ மனையில் சேர்த்து விட்டு....

அந்த தவறு செய்த மருத்துவமனைக்கு பேசினோம்..

முதலில் கறாராக பேசிய நபர்கள்...என்னிடம்...

தம்பி அவங்க இங்க தான் அறுவை சிகிச்சை பண்ணாங்க என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்ல..என்று கொக்கரித்தார்கள்...!

அட முட்டாள்களா...எல்லாம் இருக்குது என்றேன்..

எப்படி..

மஞ்சப்பையில சுருட்டி வச்சிருந்திருக்காங்க...!

(அவர்கள் யோசித்திருப்பார்கள்...நாம் தான் முன்னமே அந்த ரிப்போர்ட்களை ஆட்டய போட்டுட்டமேன்னு...டேய் இங்க தாண்டா கடவுள் உங்கள சோதிச்சி இருக்கான்...அதாவது ரிப்போர்ட் தவறுதலா இரண்டு முறை கொடுத்து இருக்காங்க...ஒன்னு மஞ்சள் பையில் அந்த சிறுகுழந்தையிடம் எப்போதுமே இருந்திருக்கிறது)

அதிகார வர்க்கம் மூலம்(!) பேசியதால் நிவாரண பணமாக ஐந்து லட்சம் தர ஒத்துக்கொண்டார்கள்...

சட்டப்படி போனால்...அந்த ஏழை குடும்பத்துக்கு பின்னால் பெரிய ஆபத்து இருக்கும் என்பதால் செல்லவில்லை...

இன்னும் எத்தனை ஏழைகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த சமுதாயத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை..

கொசுறு: வாழ்க்கையில் பல நேரங்களில் நடப்பது சினிமா போல உள்ளது!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. மருத்துவம் வியாபாரமாகிவிட்ட சூழலில் பயனாளிகளுக்கு அதற்கு தகுந்த சிகிச்சை ஏனைய இடங்களில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை!

  ReplyDelete
 2. மாம்ஸ் நீங்கள் சொல்வது உண்மைதான்.இன்று மருத்துவர்கள் தாங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள்.

  ReplyDelete
 3. வயித்து பிழைப்புக்காக இன்று மருத்துவம் தொழிலாக போனதால் வந்த வினை அது ..!

  ReplyDelete
 4. எலேய் கூப்புடுலே நம்ம ரமணாவை....ரமணாவெல்லாம் வெறும் சினிமாவில் மட்டும் தானோ
  அந்த தகிரியம் தான் மாம்ஸ்.

  ReplyDelete
 5. மனிதம் மரத்த சில மருத்துவர்கள்.

  ReplyDelete
 6. சரியான நேரத்தில் செய்த உதவி.உற்ற சகோதரனாய் செய்த காரியம் பாராட்டிற்குரியது.

  ReplyDelete
 7. அடப்பாவீங்களா? எப்பிடியெல்லாம்....
  நல்ல வேலை செய்தீங்க..வாழ்த்துக்கள் மாம்ஸ்!

  ReplyDelete
 8. மருத்துவனாக இருந்தும் சொல்கிறேன்.. இது medical negligence என்ற சாதாரண வார்த்தையில் அடைக்கப்படும் ஒரு பெருங்குற்றம்.. ஆனால் இங்கே உண்மையில் negligence என்பது பிழையாய் நடந்த முதல் சிகிச்சையில்தான்.. அந்த புள்ளி வரையில் மட்டுமே அந்த அயோக்கியர்கள் மருத்துவ போர்வையில் வருகின்றனர்..அந்த பெரும்பிழையை மறைக்க முயன்று ஓர் உயிரை பணயம் வைக்க முனைந்து பொருளீட்ட நினைத்தது தாயோளித்தனம்... உங்களின் சரியான நேர உதவி அந்த உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி..

  இங்கு food nellai யை தவிர மற்ற கருத்துரையாளர்களும், உங்களின் படத் தேர்வும் அபத்தம்... ஒரு பெரிய வெள்ளை தாளில் இருக்கும் ஒரு சிறு கரும்புள்ளியைக் கொண்டு அதனை கருப்பு தாள் என்று சொல்லாதீர்கள்... என் அன்றாட வாழ்க்கையில் வெகு ஜனங்களை விட மருத்துவர்களை அதிகம் சந்திக்கிறேன்.. பழகுகிறேன்.. வெகு சிலர் மட்டுமே எப்போதும் பொருளீட்டுவதை பற்றியே பேசுவார்கள்... மற்றவர்கள் தங்களின் நோயாளிகள் மிக கடினமான நோயில் இருந்து குணமடைந்த திருப்தியை வெகு சில சொற்களில் சொல்லி மகிழ்வார்கள்... ஆனால் அந்த வெகு சிலரை பற்றிதான் செய்திகள் வருகிறது... அனைவரின் வெறும் வாய்க்கு அவுல் கிடைக்கிறது.. இரமணா போன்ற அபத்தங்களை சாடி என்னுடைய வலையில் ஒரு தனி பதிவே உள்ளது...

  ReplyDelete
 9. ”கேப்டன் ”விக்கி வாழ்க!

  ReplyDelete
 10. ரமணா சினிமா போல கலக்கியிருக்கீங்க...

  ReplyDelete
 11. @வீடு சுரேஸ்குமார்
  வீடு சுரேஸ்குமார் said...
  மருத்துவம் வியாபாரமாகிவிட்ட சூழலில் பயனாளிகளுக்கு அதற்கு தகுந்த சிகிச்சை ஏனைய இடங்களில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை!

  >>>>>>

  சத்தியமான வார்த்தை மாப்ள!

  ReplyDelete
 12. @Vairai Sathish
  Vairai Sathish said...
  மாம்ஸ் நீங்கள் சொல்வது உண்மைதான்.இன்று மருத்துவர்கள் தாங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள்.

  >>>>>>>>>

  நல்லவங்களும் இருக்கத்தான் செய்றாங்க மாப்ள!

  ReplyDelete
 13. @வரலாற்று சுவடுகள்

  வரலாற்று சுவடுகள் said...
  வயித்து பிழைப்புக்காக இன்று மருத்துவம் தொழிலாக போனதால் வந்த வினை அது ..!

  >>>>>>>

  பல நேரங்களில இப்படித்தான் போல!

  ReplyDelete
 14. @மனசாட்சி™

  மனசாட்சி™ said...
  எலேய் கூப்புடுலே நம்ம ரமணாவை....ரமணாவெல்லாம் வெறும் சினிமாவில் மட்டும் தானோ
  அந்த தகிரியம் தான் மாம்ஸ்.

  >>>>>>>>

  மாப்ள நண்பர்கள் உதவியில்லாம் ஏதும் செய்து இருக்க முடியாது...இது படம் அல்ல நெசம்!

  ReplyDelete
 15. @FOOD NELLAI
  FOOD NELLAI said...
  மனிதம் மரத்த சில மருத்துவர்கள்.

  >>>>>>>>>>>>

  சரியா சொன்னீங்கன்னே!
  ...............................

  FOOD NELLAI said...
  சரியான நேரத்தில் செய்த உதவி.உற்ற சகோதரனாய் செய்த காரியம் பாராட்டிற்குரியது.

  >>>>>>>>>>>>>>>>>>>

  கடமை என்பது இதுதான்னு நெனக்கிறேன்!

  ReplyDelete
 16. @ஜீ...
  ஜீ... said...
  அடப்பாவீங்களா? எப்பிடியெல்லாம்....
  நல்ல வேலை செய்தீங்க..வாழ்த்துக்கள் மாம்ஸ்!

  >>>>>>>

  வருகைக்கு நன்றி ஜீ...வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 17. @மயிலன்

  மயிலன் said...
  மருத்துவனாக இருந்தும் சொல்கிறேன்.. இது medical negligence என்ற சாதாரண வார்த்தையில் அடைக்கப்படும் ஒரு பெருங்குற்றம்.. ஆனால் இங்கே உண்மையில் negligence என்பது பிழையாய் நடந்த முதல் சிகிச்சையில்தான்.. அந்த புள்ளி வரையில் மட்டுமே அந்த அயோக்கியர்கள் மருத்துவ போர்வையில் வருகின்றனர்..அந்த பெரும்பிழையை மறைக்க முயன்று ஓர் உயிரை பணயம் வைக்க முனைந்து பொருளீட்ட நினைத்தது தாயோளித்தனம்... உங்களின் சரியான நேர உதவி அந்த உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி..

  >>>>>>>>>

  புரிதலுக்கு நன்றி மாப்ள!
  ..............................

  இங்கு food nellai யை தவிர மற்ற கருத்துரையாளர்களும், உங்களின் படத் தேர்வும் அபத்தம்... ஒரு பெரிய வெள்ளை தாளில் இருக்கும் ஒரு சிறு கரும்புள்ளியைக் கொண்டு அதனை கருப்பு தாள் என்று சொல்லாதீர்கள்... என் அன்றாட வாழ்க்கையில் வெகு ஜனங்களை விட மருத்துவர்களை அதிகம் சந்திக்கிறேன்.. பழகுகிறேன்.. வெகு சிலர் மட்டுமே எப்போதும் பொருளீட்டுவதை பற்றியே பேசுவார்கள்... மற்றவர்கள் தங்களின் நோயாளிகள் மிக கடினமான நோயில் இருந்து குணமடைந்த திருப்தியை வெகு சில சொற்களில் சொல்லி மகிழ்வார்கள்... ஆனால் அந்த வெகு சிலரை பற்றிதான் செய்திகள் வருகிறது... அனைவரின் வெறும் வாய்க்கு அவுல் கிடைக்கிறது.. இரமணா போன்ற அபத்தங்களை சாடி என்னுடைய வலையில் ஒரு தனி பதிவே உள்ளது...

  >>>>>>

  நீங்கள் நல்ல மருத்துவராக இருப்பது சந்தோழத்தை கொடுக்கிறது மாப்ள..

  மறுபடியும் கவனிக்கவும்...நான் எல்லோரையும் சொல்லவில்லை...மாறாக நடந்த நிகழ்ச்சியை தான் சொல்லி இருக்கிறேன்..

  நிற்க...

  இன்றைய கால கட்டத்தில் ஒரு மருத்துவர் ஆவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கும் தெரியும்...உமக்கும் தெரியும்...சாதாரண குடிமகனால் ஆக முடியாது...சிலர் மெரிட்டில் ஆகலாம்...ஆனால் பலர் பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாக டாக்டர் சீட்டுக்கு கட்டி தான் உள்ளயே நுழைகிறார்கள்...அப்படி நுழைந்து வெளியில வருபவர்கள் எப்படி அந்த பணத்தை திரும்ப வட்டியுடன் எடுப்பது என்று தான் பார்ப்பார்களே அன்றி(!)...சேவை மனப்பான்மையுடன் எப்படி பணி புரிவார்கள்...இது அடிப்படையிலேயே தவறு இருக்கிறது...மருத்துவம் என்பது உயிர் சம்பந்தப்பட்ட மற்றும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டிய விஷயம்...மாற்றம் நிர்வாகத்திடம் தேவை!

  ReplyDelete
 18. @சென்னை பித்தன்

  சென்னை பித்தன் said...
  ”கேப்டன் ”விக்கி வாழ்க!

  >>>>>>>

  அண்ணே உங்க மாதிரி பெரியவங்க ஆசி இருந்தா போதும்னே....நமக்கு மேலே இருப்பவன் அளிக்கும் வாய்ப்புகள் மூலம் நல்லது நடந்தால் போதும்னே!

  ReplyDelete
 19. @koodal bala

  koodal bala said...
  ரமணா சினிமா போல கலக்கியிருக்கீங்க...

  >>>>>>>>>>

  மாப்ள நிஜ மேட்டரு...அதுவும் நம்ம நண்பர்கள் இல்லன்னா விஷ ஊசி போட்டு கொன்னாலும் கொன்னுட்டு இருப்பானுங்க போல ஹெஹெ...வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 20. மனித நேயம் உள்ள உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை !

  ReplyDelete
 21. நெஞ்சில் மனோ பதிவில் உங்களை பார்க்க ஆர்வம்............... ! ஏமாந்தேன் !

  ReplyDelete
 22. சரியான நேரத்தில் செய்யப்பட்ட உதவி, உனக்கும் புண்ணியம், வாழ்க வாழ்க....!!!

  ReplyDelete
 23. திண்டுக்கல் தனபாலன் said...
  நெஞ்சில் மனோ பதிவில் உங்களை பார்க்க ஆர்வம்............... ! ஏமாந்தேன் !//

  ஆஹா ஒரு மார்க்கமா வாராப்ல இருக்கே....

  ReplyDelete
 24. நல்ல காரியம் பண்ணி இருக்கிறீர்கள் மாம்ஸ், நன்றியும் வாழ்த்துக்களும்..!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி