அது...இது...எது! - ஒரு பிளேடு!

வணக்கம் நண்பர்களே..
சமீபத்தில் நான் சந்தித்த நண்பர்களே...இந்தப்பதிவுக்கு காரண கர்த்தாக்கள்(!)...

எப்பவும் போல(!) வார இறுதியில் எனக்கு அளிக்கப்பட்ட சுதந்திர(!) காற்றை சந்திக்க கிளம்பினேன்...

குழந்தையய் கொண்டு போய் கிட்ஸ் லேண்டில் விளையாட விட்டு விட்டு...என் விசயமாக கிளம்பினேன்...

நான் எப்போதும் போகும் இடம் நிரம்பி வழிந்தது...அடப்போங்கடான்னு இரண்டாவது மாடியில் இருக்கும் ஹைலேண்டு கபே எனும் இடத்துக்கு நகர்ந்தேன்...

அதுக்கு முன்னர் ஒரு சூப்பர் மார்கெட்டில் நண்பர்கள் சொன்ன ரஷ்ய வோட்காவை வாங்கிக் கொண்டு(!) அந்த கபேயில் நுழைந்தேன்...

காலியாக இருந்த நால்வர் உட்காரும் நாற்காலியில்...எப்பவும் போல மடிக்கணினியை வைத்துக்கொண்டு உட்காற்ந்தேன்.. 

சில நொறுக்ஸ் மட்டும் ஆர்டர் செய்து கொண்டு...கணிப்பொறியை கிண்டிக்கொண்டு இருந்தேன்...கொஞ்ச நேரம் போனது...

பல நாட்டு வஞ்சிகளும் என்னை ரசித்துக்கொண்டே(பார்ரா..ஹெஹெ!) என்னை கடந்து வருவதும் போவதுமா இருந்தனர்(பய புள்ள கருப்பா டெரரா இருக்குதேன்னு நெனசிருப்பாங்க போல!)...

அனைத்து நாற்காலிகளும் நிறைந்து விட்டதால் நான் உற்காந்து இருந்த இடத்துக்கு வந்த மூன்று அமெரிக்கர்கள்(இரு ஆண் ஒரு பெண்!)...

நாங்க இங்க உட்காரலாமா...

பிளீஸ்...ஒன்னும் பிரச்சினையில்ல...

பீர் குடிக்க ஆரம்பித்த மூவரும் என்னை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டு இருந்தனர்...அதில் ஒருவன் பேச்சை ஆரம்பித்தான்...

நீங்க எந்த நாடு...

இந்தியா...

ஓ நல்லது...எந்த பக்கம்...?

தென்னாடு...

ஓ அப்படியா....உங்க ஊரு பயங்கர ஹாட்டாமே...

(எலேய் ஒரு ஃபிகர டிரஸ் போட்டு இருக்கா இல்லயான்னு தெரியாம கூட்டி வந்து இருக்கீங்க...இப்போ இங்க தான்யா ஹாட்டு!)

ஆமாமுங்கோ...நீங்க எந்த நாடு...

அமெரிக்கா...

(மவனே என்னைய தேடி வந்து இருக்கானுங்க போல!)

ம்ம்..இங்க என்ன ஊர் சுத்தி பாக்க வந்தீர்களோ...

இல்ல..நாங்க மூவரும் இங்க கிண்டர் கார்டன் ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சர்ஸ்...

ஓ அப்படியா...நல்ல வருமானமோ(!)...

என்ன ஒரு $2000 கிடைக்குது...

ஓஹோ...இங்க பக்கத்துல இருக்கீங்களோ...

ஆமாம்...அது சரி நீங்க இந்த ஃபிங்கர் சிப்ஸ் மட்டும் தின்னுட்டு இருக்கீங்க....அது என்ன கூல்டிரிங்ஸா...இங்க கூல்டிரிங்ஸ் கிடையாதே...வாட்டர் கூட பெரிய பாட்டில் தானே...எங்க வாங்கினீங்க...

(வாட்டர் பாட்டில் காலியாகி இருந்தது கபேயில்!)

ஹெஹெ...அஞ்சாவது மாடில...

நான் ரொம்ப தாகமா இருக்கேன்...கொஞ்சம் எடுத்துக்கட்டுமா...

ஹிஹி...சாரி அது வந்து...

ஹே மேன்..என்ன இப்படி சங்கோஜப்படுறீங்க...

(அடியேய் வேணாம்டின்னு சொல்லிட்டு இருக்கும் போதே...அந்த நாதாரி...கப்புன்னு ஒரு கல்பு அடிச்சிடிச்சி...!)

ஓ மை காட்...என்னாது இது...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

என்ன ஆச்சி!

இந்த டிரிங் ரொம்ப ஸ்ட்ராங்...

அலோ கொஞ்சம் பொத்துனாப்ல இருங்க...இது வெறும் டிரிங்க் அல்ல வோட்காவுடன் மிக்ஸ் செய்தது...இது என்னோட ஸ்டைல் ஹெஹெ!


அடப்பாவிகளா சொல்றதில்லயா...


குடிக்கறதுக்கு முன்னாடி கேக்குறதில்லயா!...


(இப்படியாக ஆரம்பித்த பேச்சு படலம்...யதார்த்ததுக்கு சென்றது...!)


நான் அறிந்து கொண்ட விஷயங்கள்...


ஆங்கில ஆசிரியர் தேவைப்படும் வெளிநாட்டு பள்ளிகள்...பெரும்பாலும் தாய்மொழி ஆங்கிலம்(!) இருப்பவர்களையே ஆசிரியர்களாக அனுமதிக்கின்றன...


உண்மையில் இந்தியர்களின் ஆங்கிலம்(!) வெகு எளிதாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பினும்...வெகுவாக வரவேற்ப்பு பெறவில்லை...நான் சொல்வது இன்னாட்டில் மட்டுமே...


மிகச்செலவாலிகளான அமெரிக்கர்களுக்கு(!)....எப்படி இந்த வருமானம் போதுமானது என்பது கேள்விக்குறி!


ரோட்டோர பீர் கடைகளில்தான் நாங்கள் எப்போதும் பீர் குடிப்போம்...காரணம் அது தான் குறைந்த விலை என்கிறார்கள் அந்த நண்பர்கள்....அமெரிக்கனையும் சிக்கன வாதியாக மாற வைத்திருக்கிறது உலக பொருளாதார வீழ்ச்சி...
வெளி நாடுகளில் இப்படி வேலை தேடிப்போவது இப்போது மிக அதிகமாக இருக்கிறதாம் இவர்கள் நாட்டில்...


(நான் அறிந்து கொண்ட இவையாவும் செவி வழிச்செய்திகளே...!)


கொசுறு: சரக்கடிக்கிற நேரத்துல கூட உலக விஷயங்களை அள்ளிப்பருகும் ஒரு இயல்பான தமிழனாகிய(!) நான்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. தக்காளி தண்ணியடிச்சாலும் அதுல ஒரு யூஸ் இருக்குய்யா.......... (ஆமா அதென்னய்யா 2:1...?)

  ReplyDelete
 2. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தக்காளி தண்ணியடிச்சாலும் அதுல ஒரு யூஸ் இருக்குய்யா.......... (ஆமா அதென்னய்யா 2:1...?)

  >>>>>>

  ஒவ்வொரு மனுசனுக்கு ஒரு ஃபீலிங்கு ஹெஹெ!

  ReplyDelete
 3. பொருளாதாரா வீழ்ச்சி இம்புட்டு தூரம்...

  ReplyDelete
 4. போனமா கழுத்து வரைக்கும் குடிச்சமா, வாந்தி எடுத்தோமா, குப்புற விழுந்தோமான்ன்னு இல்லாம அங்கென்ன தலீவா ஆராய்ச்சி ஹி ஹி ஹி ..!

  ReplyDelete
 5. தண்ணீர் பாட்டிலும் தத்துவம் சொல்லுதே! ஹா ஹா ஹா

  ReplyDelete
 6. அந்த இடத்திலயும் ஆதங்கப்படுறீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்கறீங்க!

  ReplyDelete
 7. மாம்ஸ் என்ன அழகாக எழதி உள்ளிர்கள் ரசித்து படித்தேன்

  ReplyDelete
 8. மாம்ஸ் என்ன அழகாக எழதி உள்ளிர்கள் ரசித்து படித்தேன்

  ReplyDelete
 9. தலைப்பை பாத்ததும் நேற்று facebook ல நடந்த கதையை போடா போறிங்கனு நினைத்தேன்

  ReplyDelete
 10. குழந்தையய் கொண்டு போய் கிட்ஸ் லேண்டில் விளையாட விட்டு விட்டு...என் விசயமாக கிளம்பினேன்...
  /////////////////////////////////////
  நீங்க Bar Land க்கு போயிட்டிங்க.......ok....ok....!

  ReplyDelete
 11. @பன்னிக்குட்டி ராம்சாமி
  தக்காளி தண்ணியடிச்சாலும் அதுல ஒரு யூஸ் இருக்குய்யா.......... (ஆமா அதென்னய்யா 2:1...?)
  /////////////////////////////
  அது Drinker's மொழி குயந்தை உங்களுக்கு புரியாது.......

  ReplyDelete
 12. ஒரு பாட்டில் வோட்கால எவ்வளவு விஷயம் தெரிஞ்சது!

  ReplyDelete
 13. ஒரு கோப்பை வாட்கால தான் உலகமே குடியிருக்கு போல..

  ReplyDelete
 14. இதுதான் மாம்ஸ் அரசியல் உள்குத்துப் போட்டு இருக்கிறார் சூப்பர் !:))

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி