நான் தான்டா வாரிசு! - If you kill one....!

வணக்கம் நண்பர்களே.....
இது ஒரு படத்தின் பன்ச் வசனம்...


If you kill one..you are a murderer...kill more you are a con-carer///


இந்த லைனுக்கான கதை(!) இது...


அந்த ஊர பல ராசாக்கள்(!) ஆண்டு வந்தாங்க...வந்தவன் போனவன்லாம் ராசான்னு சொல்லி கொள்ளை அடிச்சிட்டு போயிட்டு இருந்தான்...திடுதிப்புன்னு வந்த ஒரு கூட்டம் சரியா பிளான் பண்ணி ஆட்டய போட்டுது...ரொம்ப காலம் அந்த ஊர அடிச்சி காயப்போட்டுது...


அந்தூரு மக்களும் என்னவெல்லாமோ செய்ஞ்சி பாத்துட்டாங்க..அந்த கூட்டத்து கிட்ட இருந்து விடுபட முடியல...ஒரு மனுசனும் தன்னோட சேர்ந்த நண்பர்களை வச்சி சண்டையும் போட்டு பாத்துட்டாரு...அவரோட போறாத காலம் கூட இருந்துவங்களே அவரு கிட்ட இருந்து கழண்டு கிட்டாங்க...இந்த நேரத்துல...எவ்ளொ அடிச்சாலும் தாங்குற மக்களை கொண்டு அடிவாங்கியாவது ஊர காப்பாத்தி(!) புடனும்னு முயற்ச்சி பண்ணாரு...
அநியாயத்து அடிவாங்கி சாகும் மனுசங்கள(!) பாத்த அந்த கொள்ள கூட்டம்...ச்சே இவனுங்க ரொம்ப நல்லவங்கடா(!)ன்னு சொல்லி இந்தா புடிச்சிக்க உன் ஊரன்னு சொல்லி தூக்கி கொடுத்துட்டு போயிட்டாங்கே...திடுதிப்புன்னு கைல ஊரு கெடைச்ச மகிழ்ச்சிய கொண்டாடுறதா(!)...இல்ல எபப்டி இந்த ஊர நல்லூரு(!) ஆக்குறதான்னு யோசிச்ச நாட்டாமை(!)...யாராவது விவரம் தெரிஞ்ச விவசாயி கிட்ட தான் கொடுக்கனும்னு ஆசப்பட்டாரு...


ஆனா, ஏன்யா பெரிய மனுசா...நான் எம்புட்டு கஷ்டப்பட்டு இருக்கேன்...அதுவும் இல்லாம கூட்டத்த கூட்டி வந்து அடிவாங்க வச்சி இருக்கேன்னு சொல்லி புலம்பிய மன்சன்(!) கிட்ட ஊர ஒப்படைச்சாரு நாட்டாமை...இதுக்கு இடையில புலம்பிய மன்சனோட பொண்ணு வேற ஊரு ஆள விரும்ப...அதை ஏற்க இந்தாளு மறுக்க...இருக்கவே இருக்கு எம் பேரு...வேனும்னா நான் அந்த புள்ளய தத்து எடுத்துக்கறேன்னு நாட்டாம சொல்ல...அந்த புள்ள, புலம்பல் மன்சனோட மாப்பிள்ள ஆயிரிச்சி...


நாட்டாமையோட செயல்கள் புடிக்காத(!) ஒரு ஆளு அவரை கொன்னு புட்டாரு(!)....அடுத்து யாரும் தடை இல்லங்கற சந்தோஷத்தோட ஊர ஆட்சி பண்ண ஆரம்பிச்ச புது ராசா(!)...தனக்கு பின்னாடி நீ தான் இந்த ஊருக்கு நாட்டாமைன்னு சொல்லி சொம்ப கொடுத்திட்டு பூட்டாரு...(இயற்க்கையா செத்து பூட்டாருபா!)


சொம்பு வாங்குனவங்க ஆண்டாங்க....ஆண்டாங்க...திடுதிப்புன்னு அவங்க வாரிசு ஒரு விபத்துல பலியாக...சோகமாகிய அவங்கள தேத்துனாரு அவங்களோட இன்னோரு புள்ள...எதோ, தான் உண்டு தன் பயணம்!(!) உண்டுன்னு இருந்த அவருக்கு திடீர் சோதனை வந்துச்சி...தன் தாயை பலி கொடுத்தாரு(!)....இந்த நிலைமைல...நீதான் சாமி எங்களுக்கு வேணும்...ஏன்னா...உனக்கு ஒன்னும் தெரியாது...நீ பாட்டுக்கு உக்காந்துட்டு இருந்தா போதும் நாங்க பாட்டுக்கு கொள்ளை அடிச்சிப்போம்னு(!) சொன்ன அடிப்பொடிகள் அவரை ராசாவா ஆக்குச்சிங்க...


அடிப்படையே தெரியாத அவரு...அவரோட அடிபொடிகள் எது சொன்னாலும்...சர்தாம்பா அப்படியே செஞ்சிப்புடுவோம்னு(!) எல்லாத்தயும் செய்ய ஆரம்பிச்சாரு...அதன் விளைவா ஒரு பக்கத்து மக்கள் பலர் கொல்லப்பட்டாங்க...அதன் எதிர்விளைவா(!)..இவரும் பலியானாரு...
அடுத்து வர்றதுக்கு பயந்த அவரோட துணை(!)...மறைஞ்சி நின்னுகிட்டு பழி வாங்குற படலத்தை ஆரம்பிச்சாங்க...இது தொடர்ந்து கிட்டே இருக்கு...இந்த லட்சணத்துல...அடுத்த வாரிசுன்னு ஒரு கூழுக்கு அலையும் வெண்ண வெட்டிய பிளான் பண்ணிப்புட்டாங்க....இதுக்கு முடிவு தான் என்ன...!


கொசுறு: ஆனா ஒன்னு, தப்பி தவறி கூட கொள்ளகாரங்க(!) கிட்ட அடிவாங்குனவங்களோ(!)...இல்ல அவங்க வழியில வந்தவங்களோ..யாரும் ராசா(!) ஆகிடக்கூடாதுங்கறதுல குறியா இருந்தாங்க...இருக்காங்க...இருப்பாங்க...!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. ஒரு நாட்டோட சரித்திரத்தை உள்குத்தா எழுதிய நீவீர் வாழ்க! இதுல நம்ம(பிளாக்) நுண்ணரசியல் இருக்குதோ? லேசா டவுட்டு!

  ReplyDelete
 2. செம குத்து மாம்ஸ்

  ReplyDelete
 3. முடியல மாம்ஸ்! :-))

  ReplyDelete
 4. சரி நீ இப்போ என்னதாம்டா சொல்ல வாறே...?? ராசா, நாட்டாமை எல்லாரும் வாராங்களே, வாரிசும் வந்து சாகுது என்னய்யா மேட்டர்..?

  ReplyDelete
 5. ராமாயணம் மாதிரி ஒரே கதையை பல வடிவங்களில் படிக்கிற மாதிரி இருக்கு. இதுக்கு என்னதான் முடிவு மாப்ள?

  ReplyDelete
 6. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 7. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
  தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
  சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

  தள முகவரி: http://www.saaral.in

  ReplyDelete
 8. நடத்துங்க உங்க ராசாங்கத்தை...-:)

  ReplyDelete
 9. ராஜா அவர்களே ! என்ன சொல்ல வர்றீங்க ?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி