ரோல் மாடல் - life...start once again!

வணக்கம் நண்பர்களே...

இது ஒரு மனிதனின் வாழ்க்கை பயணம்...இதில் நீங்கள் அனுபவ ரீதியாக கண்டவைகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்...


முன் பகுதிக்குசெல்ல


எப்போ அவனுக்கு ஒரு வேலைன்னு ஒன்னு கெடச்சிடிச்சோ அப்பவே உள்ளுக்குள் ஒரு வெறி வந்துடுச்சி...


ஆனால், அவனுக்கு வேறு வகையில் துன்பங்கள் வர ஆரம்பித்தன...அவனுடைய நண்பர்களுடன் சில நாட்கள் மட்டுமே தங்க முடிந்தது...வாடகை பிரச்சினையில அவர்களும் சிதறினார்கள்..


ஒரு பையுடன் சென்னை - வியாசர்பாடி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு பென்ச்சில் தூங்கிக்கொண்டு இருந்த அவனின் நினைவுகளில் சில..


நாளைக்கு எப்படியும் சைக்கிள் கொண்டு வந்துடறேன்னு சொல்லிட்டு வந்துட்டமே...இப்போ இருக்க வேலையும் போயிடுமோ...என்ன கொடுமைடா இது...எப்படி இங்கிருந்து தினமும் பாலவாக்கம் வரைக்கும் போயி வர்றது...!...அந்த மேலாளர் வேற...தம்பி ஒரு மாசம் ஆனாத்தான் முன்பணம்லாம் தருவாங்கன்னுட்டாரு...பஸ்ஸுல போக காசில்ல...என்ன வாழ்க்கைடா இது..!


அவனை...ஒரு கை தட்டி எழுப்பியது....


தம்பி யாருப்பா நீ....இங்கல்லாம் தூங்கக்கூடாது..!~....எழுந்திரு!


சார்...பிளீஸ் சார்...காலையில போயிடுவேன்..


டேய் சொன்னா புரியாது...கெளம்பு...


இப்போதைக்கு எனக்கு எங்கும் சொந்தங்கள் இல்ல...அதான் இப்படி!


ஏன்யா படிச்ச புள்ள போல தெரியிது...ஏன் இப்படி...வீட்ல இருந்து ஓடி வந்துட்டியா...


சார் அப்படி யெல்லாம் இல்ல சார்...எனக்கு ஊரு ரொம்ப தூரம்..இங்க ஒரு வேலையில சேந்து இருக்கேன்..தங்க வீடு கொடுத்த நண்பர்கள் இப்போ இல்லைன்னுட்டாங்க்...அதேன்!..


ஓ..எங்க காட்டு உன்னோட பைய...


செக் செய்த ரயில்வே கான்ஸ்டபிள்...அந்த இளைஞனின் பையில் இருந்த சர்டிஃபிகேட்டுகளை பார்த்து அதிர்ந்தார்...


ஏன்யா ஏன் நீயெல்லாம் இப்படி...


ஹெஹெ...சார்...இப்போ இப்படித்தான் என் வாழ்க்கை இருக்கு..அது போக்குல வாழ பழகிக்கறேன்...


யோவ்...எழுந்திருய்யா...நீ வா என் வீட்டுக்கு நான் உனக்கு ஹெல்ப பண்றேன்...


வேணாம் சார்...நாளைக்கு வேலைக்கு போக சைக்கிள் வேணும் சார்...இப்போ அது தான் என்னோட முதல் டார்கெட்...


ஹாஹா...அவ்ளோ தானே...கவலைய விடு நான் தர்றேன்...இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீ என் வீட்டில் தங்கலாம்...


என்ன சார்...நான் யாருன்னே தெரியாது....எனக்கு போய் நீங்க உதவுறது நெனச்சா ஆச்சரியமா இருக்கு சார்...


ஏன்யா...இப்படி கஷ்டப்படனும்...உனக்கு தான் கைல அரசாங்க உதவின்னு இருக்குமே...


ஹெஹெ..விடுங்க சார்...நான் என் முன்னாள் வாழ்க்கைய யாரிடத்திலும் சொல்லிக்காட்டி இன்னாள் வாழ்க்கை வாழ விரும்பல...


(அந்தப்பையில் இருந்தவைகள் - கல்வி சான்றிதழ், சிப்பாயாக(!) வேலை செய்து கிடைக்கப்பெற்ற நற்சான்றிதழ் மற்றும் சில...!)


அப்படி இல்ல கேட்டேன்...


என்ன சார்..இப்பவும் என்னோட முன்னாள் வாழ்க்கைய பாத்துட்டு தானே ஹெல்ப் பண்றீங்க..இதுவே சாதாரண ஒருவன் வயித்துப்பொழப்புக்கு கேட்டு இருந்தா...
அப்படியெல்லாம் இல்லய்யா...உங்கூட பிறந்த சகோதரனா கூப்பிடுறேன் வா...தப்பா எடுத்துக்காம வா!


(கடவுள் நேரில் வருவதில்லை...மனிதரில் பலர் கடவுளாகிறார்கள் அடுத்தவருக்கு உதவும்போது!)


கொசுறு: தொடரும்...


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. கரெக்ட் மாப்ள. கடவுள் எப்போதுமே நேரில் வருவதில்லை. மனிதர்களுக்கு கடவுளாகும் வாய்ப்பை வழங்கி விடுகிறார்

  ReplyDelete
 2. உண்மைதான் கடவுள் நேரில் வர முடியாது என்பதால் தான் நண்பர்களையும் , தாயையும் படைத்தார்

  ReplyDelete
 3. அண்ணே உங்க அனுபவம் தொடரட்டும்....

  ReplyDelete
 4. (கடவுள் நேரில் வருவதில்லை...மனிதரில் பலர் கடவுளாகிறார்கள் அடுத்தவருக்கு உதவும்போது!)//

  நெஞ்சை தொட்ட வரிகள் மக்கா...!!!

  ReplyDelete
 5. உருக்கம் அனுபவம் நெகிழ்வு நல்ல மனிதர்கள் - தொடருங்கள் மாம்ஸ் தெரிந்து கொள்கிறேன்

  ReplyDelete
 6. கான்ஸ்டபிள் கடவுள்.

  ReplyDelete
 7. அண்ணே உங்க அனுபவம் தொடரட்டும்....
  //////////////////////
  போலீஸ் தெரியும் என்றால் அண்ணேவா!....நீர் சரியான பல்டி மன்னன்! எப்பவும் போலஅண்ணே! நாதாரி அண்ணே! உருளை! ராஸ்கல் இதெல்லாம் சேருங்க மனோ அப்பத்தான் உங்க கமெண்ட்டுன்னு நம்புவோம்! இல்லையினா வேற எவனாவது ஹோக் பன்னி போடுறான்னு நினைச்சுக்குவோம்.......

  ReplyDelete
 8. ////////கடவுள் நேரில் வருவதில்லை...மனிதரில் பலர் கடவுளாகிறார்கள் அடுத்தவருக்கு உதவும்போது//////////

  மறுக்க முடியாத உண்மை ..!

  ReplyDelete
 9. மிகவும் சிறப்பான ஆக்கம் தொடர்க பயனுள்ள பகிர்வாகட்டும்

  ReplyDelete
 10. தெளிவு தரும் அருமையான தொடர்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி