ரோல் மாடல்! - Not a Story..but one life!

வணக்கம் நண்பர்களே...
ரோல் மாடல்...இந்த சொல்லை சொல்லாதவர்கள் மிகச்சிலரே எனலாம்...


உடனே..நாம தான் நம்ம புள்ளைங்களுக்கு முதல் ரோல் மாடல்ன்னு ஆரம்பிச்சிடுவேன்னு நெனைக்க வேண்டாம்(!)...


தொழிலில்...நம் வாழ்க்கையில்...நாம் எதிர்கொள்ளும் பல விசயங்களில் நாம் சிந்தித்து செயல் பட இந்த “வார்த்தை”க்குரிய நபரின் பங்கு தான் அதிகம்...அதே நேரத்தில் அதிகமான நேரங்களில் நம் செயல் அவரை ஒத்ததாக இருப்பதும் உண்டு..


இதுவும் அதை சார்ந்த ஒரு பதிவு தான்...


அது ஒரு வறட்சியான காலம்... 


ஒருவனுக்கு...அப்படித்தான் ரெண்டு பேர் ரோல் மாடலா தொழிலில் தெரிந்தார்கள்...


ஒருவர் மிக நல்லவர்...ஆனால், அவரை உலகம் பொழைக்க தெரியாதவர் என்று கூறி ஒதுக்கி விட்டது...(எதிர்காலத்தில்!)


இவர் தான் அவனுக்கு உழைப்பு என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்தார்...ஒரு டிகிரி வாங்கிட்டா...நம்மல கூப்டு வேலை கொடுப்பாங்க என்ற அந்த இளைஞனின் மேம்போக்கான கருத்து தவிடு பொடி ஆன காலம் அது...


பல இன்னலுக்கு இடையே...மீள் வாழ்க்கையை தொடங்கிய போது...வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறான் என்பது மட்டுமே அவனுக்கு தெரிந்தது...எப்படி நல்ல உத்தியோகத்தில் அமரப்போகிறோம்...எப்படி நாமும் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்க போகிறோம் என்று நினைத்தாலே...தலை சுற்றல் வந்த நேரம் அது...


அப்போது அவன் தேர்ந்தெடுத்த வயத்துக்கு உடனே சோறு கிடைக்க சரியான பொழப்பாக...


விற்பனைப்பிரதி என்ற எவ்ளோ அடி கொடுத்தாலும் தாங்குற வேலையத்தான்...


முதல் நேர்முகத்தேர்வில்...


ஓகே மிஸ்டர்...உங்களுக்கு இந்த தொழிலில் எவ்ளவு முன் அனுபவம் இருக்கு...


சார்...நான் ஓபனா சொல்லிடுறேன்...எனக்கு நீங்க எதிர்பாக்குற எந்த வித முன் அனுபவமும் கிடையாது...நண்பர் ஒருவர் சொன்னார்னு வந்தேன்..நான் எந்த வித வாய்ப்பும் இப்போதைக்கு கிடைக்காத ஓர் சாதாரண டிகிரி ஓல்டர்...அவ்வளவே...நீங்க கொடுக்குற வேலைய நீங்க சொல்றது போல செய்யவேன்...எனக்கு தேவை என்னை காப்பாற்றிக்கொள்ள மாத வருமானம் மட்டுமே...


அப்படியா சரி நீங்க வெளிய உட்காருங்க அப்புறம் பாப்போம்...


கிட்ட தட்ட அந்த நேர் முகத்தேர்வு மாலை வரை தொடர்ந்து கொண்டு இருந்தது...அடுத்து பல மணி நேரம் நடந்திருக்கும்...


அந்த இளைஞன் அந்த வராண்டாவில் காத்திருந்தான்...காலையில் ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு வந்தவனுக்கு..பசியில் மயக்கம் வருவது போல் இருந்தது!


மாலை 5 மணியளவில்...கண்கள் சொருகி அந்த சேரில் சாய்ந்து இருந்த அவனை ஒருவர் தட்டி எழுப்பினார்...


என்னப்பா...இங்க உக்காந்து தூங்கற...உனக்கெல்லாம் வேலை கொடுத்தா கம்பனி எப்படி உருப்படும்..


சார் தவறா நினைக்காதீங்க...கடந்த வாரம் முழுதும் அதிகப்படியான நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்தேன்..இன்று காலையில் இருந்து...நீங்கள் வைட் பண்ண சொன்னதால தான் இங்கனவே உக்காந்து இருந்தேன்..அதான்!
உன்னைப்பார்த்தா...சாப்பிட்டது போலவே தெரியலியே..ஏன் மதியம் ஏதும் சாப்பிடலியா..


சார் அத விடுங்க...என்னை இங்க வைட் பண்ண சொன்னீங்களே...அதுக்கான பதிலுக்கு தான் நான் இன்னும் இங்க இருக்கேன்!


அடேய்..என்னயா கண்ணு எல்லாம் சொருகிட்டு இருக்கு...வா என்கூட..என்று வலுக்கட்டாயமாக இழுத்து சென்று..அந்த கம்பனி பக்கத்தில் இருக்கும் உணவகத்தில் டிபன் வாங்கி கொடுத்தார்...அந்த மேலாளர்...அப்பவும் சாப்பிட இடம் கொடுக்க வில்லை அந்த இளைஞனின் தன் மானம்...


வேண்டாம் சார்..


யோவ் முதல்ல சாப்பிடுய்யா...அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்..


(வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார் அவனை!)


உனக்கு நான் வேலை தர்றேன்...ஆனா, நான் சொல்ற ஊருக்கு எல்லாம் போய் விற்பனை பண்ணிட்டு வருவியா...அதே நேரத்துல இந்த கம்பனி இப்போ நல்ல நெலமைல இல்ல...நாம் தான் தூக்கி நிறுத்தனும்..முடிந்த வரை பதினைந்து தேதிக்குள் சம்பளம் கொடுத்திடுவேன்...சரியா...


இப்போதைக்கு இந்த முன்பணம் ரூவா 200 வச்சிக்க...உன்னைய நான் நம்பறேன் என்றார்...
அந்த மேலாளரின் நம்பிக்கை அவனை தூக்கி நிறுத்தியது...நண்பர்களுடன் போய் தங்கிக்கொண்டான்....


தொடரும்!


கொசுறு: வாழ்க்கைன்னா அப்படித்தான்...வளைக்கும் ஸ்டியரிங் நம் கைகளில் இல்லை...நம்பிக்கையே மூலதனம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. உழைப்பே உயர்வு தரும்....என்பது உன்னதமான வார்த்தை!

  ReplyDelete
 2. நம்பிக்கைதான் வாழ்க்கை இல்லையா...?

  ReplyDelete
 3. உண்ணாதிருந்தாலும், ஓசி சோறு சாப்பிட அவர் மனம் ஒப்பவில்லை. என்ன ஒரு தன்னம்பிக்கை. நிச்சயம் வாழ்வில் ஏற்றம் பெறுவார்.

  ReplyDelete
 4. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன் தல ..!

  ReplyDelete
 5. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

  வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

  ReplyDelete
 6. செகண்ட் பார்ட் ப்ளீஸ்

  ReplyDelete
 7. அடுத்த பதிவிற்கு காத்துள்ளேன் !

  ReplyDelete
 8. மாம்ஸ்  நம்ம பழைய தொழிலை சூப்பராக எழுதுகின்றார். உண்மையில் மண்ணைக்கட்டிக் கொடுத்தாலும் விற்பனை செய்யத் தெரிந்தவன் தான் இந்த வேலைக்கு வேண்டும் உண்மையில் கல்லில் நார் உரிப்பது போல இந்த வேலை ஆனால் நல்ல உத்தியோகம் .

  ReplyDelete
 9. அடுத்த பதிவில் பின் தொடர்கின்றேன் விக்கியண்ணா!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி