டான்ஸு பாப்பா..repeat & கொஞ்சம் நில்லு!

வணக்கம் நண்பர்களே...


ஓவரா கல்ச்சர் பேசுற ஆளும், ராவாவா சரக்கடிக்கிற வவுறும் உருப்பட்டதா சரித்திரம், பூகோளம் இல்லன்னு சொல்றாங்கோ(யாரோ!)...

கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது நேற்று நான் பார்த்த விஷயம்...அதைப்பற்றிய பதிவு...

இங்க(ஹனோயில்!) வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு அன்று மாலையில் West Lake எனப்படும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்கு போயிருந்தேன்...அடடடா...என்னமா டான்ஸ் ஆடுறாங்கப்பா....

அதுவும் இளமங்கையர்கள்(!) மட்டும் ஜோடியாக ஆடாமல், முதிய மங்கையர்களும் ஜோடியுடன் பழைய இசைக்கு ஆடியது கண்கொள்ளா காட்சி...

நானும் குடும்பத்துடன் சென்று இருந்தேன்..எங்க வீட்டுக்காரம்மா என்னுடன் ஆட வரவில்லை(!)...சர்தான் நாமளாவது பையனுடன் ஆடுவோமேன்னு ஆட ஆரம்பித்தால்...என் பையனுக்கு இணையாக ஒரு குட்டி தேவதையும் ஆட வந்து விட்டது(அவ்வ்!)...


நான் மட்டும் தனித்து ஆட பேக்கா..ரிபீட்ட்ட்ட்ட்(எக்கோ!)...தனியாக ஷேக்(அந்த ஷேக் இல்லீங்க!) ஆகிக்கொண்டு இருந்த போது ஒரு யுவதி என்னுடன் ஆட ஓடோடி வந்தாள்(மயக்கமா...கலக்கமா!) என் உருவம் பெரிது எனினும்(!) அதற்கு ஈடு கொடுத்து ஆடிய அவளை உண்மையில் மெச்ச வேண்டும்...

யாராவது நமக்கு கம்பனி கொடுத்து கூட ஆடும்போது வயது குறைந்து தான் போகிறது..அதுவும் அழகு பெண்(!) கூட ஆடும்போது தூரத்தில் பார்த்து கொண்டு இருந்த மனைவி ஞாபகம் மறந்து போச்சி(ஹெஹெ!)...!

இப்படி மனதை லேசாக்கும் வண்ணம் நம் ஊரிலும் அடிக்கடி பூங்காக்களில் முயன்றால்(!) மன அழுத்தமாவது குறையும்..உடனே மக்கள் கொதித்தெழுந்து எதாவது சொல்லாம இருந்தா சர்தான்...(!)

சிறுவர் முதல் பெரியோர் வரை கட்டணம் ஏதுமின்றி ஒவ்வொரு ஐந்து நிமிட பாடலுக்கும் மாறி மாறி ஆடி வருவது ஆனந்தமாக இருந்தது...

முடிந்தால் வீட்லயாவது மனைவியுடன் டான்ஸ் ஆடுங்கப்பா(யோவ் அவங்கவங்க மனைவியுடன் தான் சொன்னேன்..!~)

கொசுறு: இந்த டான்ஸ் முடிந்து வந்த எனக்கு அமைதி உருவான மனைவி..இன்று உங்களுக்கு உணவு தேவையில்லை என்று சொல்லி விட்டார்...கர்ர்ர்(ஆனா எதோ கருகுற ஸ்மெல் மட்டும் வந்தது!)...உங்குத்தமா...எங்குத்தமா..யார...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. அட...இப்படி வேற நடக்குதா அங்க...அப்புறம் அந்த யுவதி கிட்ட போன் நம்பர் வாங்கிடீங்களா..?

  ReplyDelete
 2. @கோவை நேரம்

  யோவ் மாப்ள...இதெல்லாமா சொல்லமுடியும் ஹெஹெ..பயபுள்ள நம்மல போட்டுக்கொடுக்கறதுலயே குறியா இருக்கே!

  ReplyDelete
 3. ஆட்டம் ஜாஸ்தியா ஆயிடுத்தே!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. //இன்று உங்களுக்கு உணவு தேவையில்லை என்று சொல்லி விட்டார்..//
  இன்னைக்காவது கிடைச்சுதா?

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு
  ஆட்டம் போட்ட முதல் வீரத்தமிழன் நீதான் மாப்ள...

  ReplyDelete
 8. /////நம் ஊரிலும் அடிக்கடி பூங்காக்களில் முயன்றால்(!) மன அழுத்தமாவது குறையும்./////

  போட்டோவுல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் பாருங்க எல்லாம் மான்குட்டி மாதிரி இருக்கு..!

  நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் 'சாக்கு மூட்டை' மாதிரி இருக்கும், இவுகளை கூப்பிட்டுகிட்டு என்னத்த ஆடி என்னத்த செய்யுறது மாம்ஸ் ஹி ஹி ஹி ..!

  ReplyDelete
 9. இங்கே கொண்டு வந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா நம்மாளுக சும்மா இருக்கணுமே?

  ReplyDelete
 10. மாம்ஸ், முறையாத்தான் இருக்கு.....ஷ் யபா

  ReplyDelete
 11. ஆட்டமா தேரோட்டமா.....!சம்பா..சம்பா சம்பாரா.......

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி