தாங்க்வா - வியட்நாம்!(VN)

வணக்கம் நண்பர்களே...துறை சம்மந்தமாக திடீரென்று இங்கிருந்து 153கிமி தூரத்தில் இருக்கும் ரம்மியமான இடத்துக்கு செல்ல வேண்டி வந்தது....


இந்த பயணத்தை பற்றி சொல்வதற்க்கு முன்...இங்கு நிலவும் யதார்த்தத்தை உங்களுக்கு விளக்க முற்படுகிறேன்...

இந்த நாட்டைப்பொறுத்தவரை எங்கு சென்றாலும் உடன் உதவியாளர்கள் அலைஸ் மொழி பெயர்ப்பாளர்கள் கூடவே இருக்க வேண்டும். ஏனெனில், எல்லாமே அவர்தம் நாட்டு மொழியில் மட்டுமே என்பதால்...


பெண்களின் படிப்பு தேர்ச்சி இந்தியாவில் மட்டும் அல்ல...இங்கேயும் மிக அதிகம்...அதே நேரத்தில் கடின உழைப்பாளிகள் பெண்கள். சில நேரங்களில் நினைத்துகொள்வேன்...காதலிக்கும் போது மட்டும் தான் இந்த பெண்களுக்கு மரியாதை கிடைக்கிறது(!)....குழந்தைப்பேறு கிடைத்தவுடன்...பெரும்பாண்மையான ஆண்கள்(!) வண்டுகள் போல பூக்களை தேடி சைடு பை சைடு போயிட்டே இருக்காங்க...


இப்படிப்பட்ட சமூகத்தை உடைய இடம்...அதே நேரத்தில என்ன சொல்லனுமோ அதை நேரிடையாக நெஞ்சுரத்துடன் வெளிப்படுத்துவதில் பெண்கள் தைரியசாலிகள்..


மெக்கானிக்கல் ஷாப்பில் வண்டியை பிரித்து பழுது பார்ப்பதில் இருந்து...பெரிய அலுவலகங்களில் ஃபைலை பிரித்து சரி பார்ப்பது வரை பெண்கள் உழைப்பு அதிகம்..


ஆணாதிக்க(!) சமுதாயத்தில் இருந்து வந்த நான்...முதலில் எல்லாவற்றையும் பார்த்து மிரட்சி அடைந்தேன்...


ஒரு கேள்வி கேட்டா...உடனே எதிர் மறையான விஷயங்கள் தோன்றினாலும் அதை வெளிக்காட்டாமல் மறைக்கும்...உழைப்பாளி, வர்க்கத்தை கண்டு வந்த எனக்கு பல நேரங்களில் பல விஷயங்கள் வியப்பை கொடுக்கிறது!


தாங்வா...


இந்த இடம் ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 153கிமீ தூரத்தில் உள்ள அழகிய இடம்...விரைவு சாலைப்பணி நடந்து கொண்டு இருப்பதால்...4 மணிநேரம் ஆகிறது பயணம்(!)...


இந்த இடம் கிட்டதட்ட 1,76,000 மக்கள் தொகையய் கொண்ட மிகப்பெரிய மாவட்டம்...சமீப காலமா சுற்றுலா பயணிகள் அதிகமா வர ஆரம்பித்து இருப்பதாக சொன்னார்கள்...


வேலையய் முடித்து கொண்டு அருகில்(15 கிமீ) தூரத்தில் இருக்கும் பிம்சன் கடற்கரைக்கு சென்றோம்...என்ன ஒரு அழகு...
கோடைக்காலத்தில்...அதுவும் மாலை நேரங்களில் இப்படி இயற்க்கையய் காண்பது அரிய ஒரு தருணம்...
இன்னொரு இடத்துக்கு அழைத்து சென்றார்கள்...அந்த இடத்துக்கு பெயர்..சுங் சிங்....இங்கிருக்கும் மீன்களுக்கு பெயர் ”கடவுளின் மீன்கள்”....ஏனெனில், இந்த மீன்களை உண்டால் இறப்பு நிச்சயம் என்கிறார்கள்...இது இவர்களின் நம்பிக்கை!
இங்கு எனக்கு ஒரு நண்பர் உண்டு...அவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்...வியட்நாமிய பெண்ணை திருமணம் புரிந்தவர்...இங்கு இவரின் வியாபாரம் பேம்பு எனப்படும் மூங்கில் மூலமாக செய்யப்படும் வகையறாக்கள்...
வழிகாட்டிகளிலும்(கைடுகள்) பெண்களே அதிகம்!...


குறைந்த நேரமே கிடைத்ததால் பயணம் குறுகியதாக அமைந்து விட்டது!


கொசுறு: உங்களின் கருத்துகளை முடிந்தால் பதிவு செய்யுங்கள்!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. அந்த கடற்கரை புகைப்படம் அருமை

  ReplyDelete
 2. //குழந்தைப்பேறு கிடைத்தவுடன்...பெரும்பாண்மையான ஆண்கள்(!) வண்டுகள் போல பூக்களை தேடி சைடு பை சைடு போயிட்டே இருக்காங்க.
  //

  மிக பெரிய கொடுமையான உண்மை

  ReplyDelete
 3. செம பயணம் போல நடத்துங்க....நடத்துங்க.......

  ReplyDelete
 4. Aaha kuduththu vachavanga boss neenga:)

  aama appuramaa Assistants pathi onnum sollala:)

  ReplyDelete
 5. வேலையய் முடித்து கொண்டு//

  இதை கொஞ்சம் அழுத்தி சொல்லப்புடாதாம், உஷாரா இருக்கானாம் கொய்யால.

  ReplyDelete
 6. படங்கள் எல்லாம் அருமையா இருக்குடா செல்லம்...!!!

  ReplyDelete
 7. மாம்ஸ் போட்டோவெல்லாம் நீங்க எடுத்ததா? மனோ சாருக்கு டஃப் காம்படீசன் கொடுக்கறீங்க போல, நடத்துங்க

  ReplyDelete
 8. வியட்நாமிய பெண்களை பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க மாப்ள, போட்டோஸ் கலக்கல்..........

  ReplyDelete
 9. அடுத்து இதுக்கு போட்டியா மனோ எங்க போக போறார்னு தெரியலையே?

  ReplyDelete
 10. வணக்கம் மாம்ஸ், இப்போதே வியட்னாமிற்கு வரனும் போல இருக்கே..
  அம்புட்டு அருமையான கடற்கரை. அழகிய மீன்களின் காட்சிகள் என கொள்ளை கொள்ளும் படங்களைப் பிரசுரித்தது மட்டுமல்லாது
  அந்த ஊரின் சிறப்பினையும் சொல்லியிருக்கிறீங்க.

  நன்றி.

  ReplyDelete
 11. படமும், இடமும் அருமையா இருக்கு.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி