பால் ஊற்றும் நல்லவர்களே...Who!

வணக்கம் நண்பர்களே...


இன்றைய செய்தி...நாளைய வரலாறு...அதுக்காக இப்படியா....

தனிஈழம் - கையிலெடுத்தார் நிதி!...அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது...

அய்யா தன்வான்களே(!)...மனுஷன் சாகும்போது தண்ணி கொடுங்கய்யான்னா அதுக்கு துப்பு இல்ல...அத  விட்டு புட்டு இப்போ யாருக்கு பால் ஊத்துறீங்க...

அநியாத்துக்கு கொத்து கொத்தா மக்கள் செத்துட்டு இருக்கும் போது...மந்திரி பதவிக்காக அமுக்குனியா இருந்துகிட்டு உண்ணாவிரதம்கிற பேர்ல கியாஸ் ட்ரபுள் கிளியர் பண்டரவங்கலள்லாம் இன்னைக்கு திடு திப்புன்னு யு டர்ன் போடுறத பாத்தா எதுக்குன்னு  எல்லோருக்கும் ஒரு டவுட்டு வரும்...


நம்ம ஆளுங்களுக்கு எப்பவுமே ரெண்டு ஊறுகா வேணும் அதுவும் முக்கியமா தன்மானம் இல்லாத தலைவருக்கு...அதில ஒன்னு தனித்தமிழ் நாடு, ரெண்டாவது ஈழம்.... 

முதல் மேட்டரு இப்போ பேச முடியாது..இந்திக்காரேன் வாயில குத்துவான்..ஏன்யா எங்க கூட கூட்டணில இருந்து கிட்டே பேசுறியான்னுட்டு...

ரெண்டாவது விஷயம்தான் இப்போ பேசலாம்...ஏன்னா முடிஞ்ச வரைக்கும் கொன்னு போட்டாச்சே....எலேய் ஆளாளுக்கு சுற்றுப்பயணம் போறாங்களே இலங்கைக்கு...நீங்களும் போய் பாத்துட்டு வர்றது தானே....ஏன் டெல்லிக்கு போகுற நேரம் கூட ஆகாதேய்யா...ஏன்யா இப்படி பம்முறீங்க...

இங்க ஒருத்தன் உசுர விட்ட போது...இதை எப்படி அணைக்கனும்னு எங்களுக்கு தெரியும்னு அங்க மகுடி வாசிச்சீங்களே மறந்து போகலய்யா...

தலைவர் எவ்வழி குண்டர்கள் சாரிபா..தொண்டர்கள் அவ்வழின்னு அரசியல் செய்ய கிளம்பிட்டீங்க போல...பாத்துய்யா இதான் சாக்குன்னு உள்ளார போட்டுற போறாய்ங்க...(அதுக்குதானே இந்த ஸ்டண்ட்!)


என்னமா கேம் ஆடுறீங்கய்யா...அதுவும் மதுரைக்கும் சென்னைக்கும் நடக்குற காந்தி மார்க்க(!) சண்டைய மக்கள் கவனிக்க கூடாதுங்கரதுக்காக என்னவெல்லாம் பண்றாங்கய்யா...

முதல்ல சாப்பிட்ட கை காயரதுக்குள்ள அதுல இருக்க நாலு பருக்க சோறையாவது உங்கள சுத்துற காக்காய்களுக்கு போட்டு புண்ணியம் தேடிக்கங்கப்பா...அதையும் சுவிஸ்ல போட ட்ரை பண்ணாதீங்கப்பா நாறிடும்..

கொசுறு: எப்பவும் ஊருக்கு உபதேசம் செய்ஞ்சிட்டு ஊட்டுக்குள்ள நாலு சம்சார பிரச்சினைய சமாளிக்கும் எம் மான தலைவரின் அடிவரிடிகளுக்காக...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. பெரிசு தான் போற காலத்தில பிள்ளைகூட்டிங்களுக்கு ஆட்சிய பிடிச்சு கொடுக்க ப்ளான் போடுது

  ReplyDelete
 2. பெருசுகள் அப்படித்தான் உளரும். அதெல்லாம் சிறுசுகள் சீரியஸா எடுக்கப்படாது. அவர் சுற்றி எமன் நடமாடுவது அவர் கண்ணுக்கே தெரிய ஆரம்பித்துவிட்டது. மரணபயம் தான் இப்படி பிதற்ற வைக்கிறது. ஈழம் மலர்ந்ததோ இல்லையோ விரைவில் பலூன் வெடிக்கும்.

  ReplyDelete
 3. ஹய்யோ... இந்த முகா கொசுவை யாராவது நுளம்பு வலை போட்டாவது புடிச்சு நாலு மீட்டர் துணியை அப்படியே அந்தாள் வாயில தினியுங்கப்பா.... அப்பாவது இந்த கொசுத்தொல்லை அடங்குதா என்று பார்ப்போம் :)))

  தேர்தல் வரும் போதெல்லாம் இந்தாள் ஈழத்தை தொட்டுக்கிறது என்ன புதுசா...... இந்தாளுக்கு ஈழ தமிழன் ஊறுகாயா இருந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு... இப்போ நாங்க எல்லாம் சுதாரிச்சுட்டோமாம் என்று இந்த முகா ஜென்மத்திட்ட சொல்லுங்கோ :((

  ReplyDelete
 4. //சண்டைய மக்கள் கவனிக்க கூடாதுங்கரதுக்காக என்னவெல்லாம் பண்றாங்கய்யா//

  கத்தரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தான் ஆகணும் மாம்ஸ்,

  ReplyDelete
 5. ///////////முதல்ல சாப்பிட்ட கை காயரதுக்குள்ள அதுல இருக்க நாலு பருக்க சோறையாவது உங்கள சுத்துற காக்காய்களுக்கு போட்டு புண்ணியம் தேடிக்கங்கப்பா/////////////////

  ஆமா புண்ணியம்ணா என்ன ..? உண்மையிலேயே எனக்கு தெரியலை அதான் கேட்டேன்...?

  இப்படிக்கு கருணாநிதி,
  முன்னால் தமிழக முதல்வர்,
  தமிழின தலைவர்.

  ReplyDelete
 6. அன்பு உடன்பிறப்பே விக்கி...
  என்னை மாதிரி... நாலு கல்யாணம் பண்ணுனவங்களுக்கு என் கஷ்டம் தெரியும்.
  குடும்பத்துக்காக தமிழ்நாட்டையே
  விற்று விடுவேன்.
  ஈழம் எல்லாம் எம்மாத்திரம்.
  அன்புடன்
  மு.க

  ReplyDelete
 7. மாப்ள, பெரியவர் செய்யும் காமெடிகளை விட அவரது தொண்டரடிகள் செய்யும் காமெடிகள்தான் இப்போ களை கட்டுது.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி