வணக்கம் நண்பர்களே...

கடந்த சில நாட்களாக சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து பல வேறு வகையாக அது நிலை கொண்டது யாவரும்(!) அறிந்ததே...

என்னைப்பொறுத்தவரை திரட்டி பற்றி கூற எனக்கு தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்த்தேன்...சத்தியமாக இல்லை...நான் அங்கு இல்லாத போது கருத்து கூறுதல் தவறு என்பதால்(!)...நிற்க எல்லா சகோதரர்களின் பதிவையும் நான் படிப்பதுண்டு...அதனால் எனக்கு ஓரளவுக்கு நிதர்சனம் புரிந்தது...

நேற்று எனக்கு வைக்கப்பட்ட கேள்வி...

Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா..///===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!

>>>>>>>>

நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர் பாக்குறீங்க நண்பா!>>>>>>>>>>>>>>>>

Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?

>>>>>>>>>>>>>>இதில் இருந்து சகோதரர் புரிந்து கொண்டது சர்தான்னு நான் சொல்ல வந்தேன்...ஆனா, அவரின் முன் கேள்வி இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருந்தார்...

தன்னைப்போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே....அந்த தன்மை வரும் நெஞ்சத்திலே கருணை வேண்டுமே...

நான் இங்கு அடுத்தவர் பற்றி கூற விரும்பவில்லை...ஒரு பெண்ணுடன் நடனம் ஆடினாலும் என் விரல் நுனி அவள் மேல் படாமல் ஆடியதே அவளுக்கு என் மேல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது என்பதை மறுக்க இயலாது...இது ஒரு சுய தம்பட்டமே!...

இப்படி இருக்க...ஒரு பெண்ணை மணந்து கொண்டால் ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பெறுவது இப்போது பொதுவாகிப்போய் விட்டது(!)...அப்படி பின்பற்றாதவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த வித சலுகையும் அளிக்கப்படக்கூடாது...இதை சரியாக பின்பற்றினாலே...நம் நாட்டு மக்கள் தொகை கட்டுக்குள் வரும் என்று நினைத்தே அந்த கருத்தை முன் வைத்தேன்...

எப்படி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என நம் சமுதாயம் நினைக்கிறதோ(!)...அதே போல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் அவா!...தன் மனைவி கண்ணகியா இருக்கனும்னு நினைக்கிற ஆண் மகன்களும் தானும் அப்படியே ஒரு பொண்ணு, ஒரு வாழ்க்கைன்னு வாழனும் என்பதன் பொருள் இது...

தவிற...என் தனிப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

இந்த நாட்டில் பிறந்த அனைவரும் ஓர் மதம்..அது இந்தியன் என்கிற பெருமை மிக்க மதம்..இதில் நான் இந்த பிரிவு, அவன் அந்தப்பிரிவு என்று கோருவது அறிவீனம்..

எப்போது எல்லோரையும் போல வாழ ஆசைப்படுகிறோமோ...அப்போது அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை...

இதில் மதம் என்ற போர்வையை விலக்கி வைத்து...ஒரு ஆணுக்கு ஒரு மனைவி மட்டுமே என்று இயற்றப்படவேண்டும்..இது எல்லோருக்கும் பொதுவானதாகும்..

நாளைய பாரதம் நம் குழந்தைகள் கைகளில் என்று சொல்லும் நமக்கே இன்னும் தெளிவான சிந்தனை வரவில்லை என்றால்(!)..அடுத்து வரும் சந்ததிக்கு நாம் என்ன விட்டு செல்வோம்...

யாரும் யாரையும் தாழ்த்த தகுதி இல்லை...இது எம் மேலே யாமே எச்சில் துப்புவதற்க்கு சமம்..

கொசுறு:ஆரோக்கியமான விவாததுக்கு நான் தயார்...பத்தி, பத்தியா பின்னூட்டம் போடுறது...அப்புறம் அந்த நூல்ல இருந்து மேற்கோள் காட்டி போய் படின்னு சொல்றது என்பது சிரமத்துக்கு உகந்ததாக கருதப்படும்...நன்றி...உங்க கருத்தை சொல்லுங்க...என் தவறை திருத்திக்க உதவும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

43 comments :

 1. வணக்கம்..என்னமோ நடந்து இருக்கு..இருங்க.போன பதிவ படிச்சிட்டு வாறேன்

  ReplyDelete
 2. ரைட்டு! நீங்க சொன்னது!

  ReplyDelete
 3. மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 4. எப்படி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என நம் சமுதாயம் நினைக்கிறதோ(!)...அதே போல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் அவா!...தன் மனைவி கண்ணகியா இருக்கனும்னு நினைக்கிற ஆண் மகன்களும் தானும் அப்படியே ஒரு பொண்ணு, ஒரு வாழ்க்கைன்னு வாழனும் என்பதன் பொருள் இது...//////

  செம பாயிண்ட் மாம்ஸ்.....
  யாரும் அசைசிக்க முடியாது.....
  அசைசிக்க முடியாது......

  ReplyDelete
 5. ஸலாம் சகோ.விக்கி,
  நீங்கள் முன்வைக்கும் 'ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது' என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இஸ்லாம் வலியுறுத்தி 'சிறந்தது' என சொல்வதும் இதைத்தான்.

  (ஆனால், சில சூழல்களின் அடிப்படியில், ஒன்றுக்கு மேலே நான்குவரை திருமணம் செய்ய ஆணை அனுமதிக்கிறது இஸ்லாம். காரணம் ஆண்... பெண்ணுக்கு வேண்டிய உணவு/உடை/உறைவிடம்/பாதுகாப்பு/ஆரோக்கியம் இவற்றுக்கு பொறுப்பு சாற்றப்பட்டதால்... மற்றும் நடைமுறையில் இதுதான் சாத்தியம் என்பதால்..! சரி, இது இங்கே பேசுபொருள் இல்லை சகோ விக்கி.)

  எனது கேள்வி என்னவென்றால்....
  இப்படி ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவதால் ஒரு நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்கும் என்றும்... அல்லது, ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் என்றால் மக்கள் தொகை குறையும் என்றும் சொல்வீர்களேயானால்... 'அது எப்படி சாத்தியம்..?' என்று கேட்டு இருந்தேன்.

  நீங்கள் இந்த பதிவில் கூட அது பற்றி சொல்லவில்லை. நீங்கள் சொன்னது சரியா..? தவறா..?

  ReplyDelete
 6. ஸலாம் சகோ.விக்கி,

 7. நடத்துங்க மாம்ஸ்... ம்ம்

  ReplyDelete
 8. நான் இங்கு அடுத்தவர் பற்றி கூற விரும்பவில்லை...ஒரு பெண்ணுடன் நடனம் ஆடினாலும் என் விரல் நுனி அவள் மேல் படாமல் ஆடியதே அவளுக்கு என் மேல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது என்பதை மறுக்க இயலாது...இது ஒரு சுய தம்பட்டமே!...//

  யாரு நீயி...? டேய் அடங்குடா கொய்யால அந்த நான்கு ஸ்டெனோ கதை என்னாச்சு?

  ReplyDelete
 9. NAAI-NAKKS said...
  எப்படி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என நம் சமுதாயம் நினைக்கிறதோ(!)...அதே போல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் அவா!...தன் மனைவி கண்ணகியா இருக்கனும்னு நினைக்கிற ஆண் மகன்களும் தானும் அப்படியே ஒரு பொண்ணு, ஒரு வாழ்க்கைன்னு வாழனும் என்பதன் பொருள் இது...//////

  செம பாயிண்ட் மாம்ஸ்.....
  யாரும் அசைசிக்க முடியாது.....
  அசைசிக்க முடியாது......//

  நெல்லை விஜயத்தின் போது கூடவே வந்த அந்த கில்மா கதை தெரியாம நக்ஸ் புலம்பல்ஸ்.....

  ReplyDelete
 10. அன்பு சகோ விக்கி.,

  ஒரு பிரச்சனக்கு தீர்வென்பது ., தீர்க்கமாக சொல்லப்படவேண்டும். அதே நேரத்தில் பின்பற்றக்கூடியதாகவும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம் நினைக்கும் ஒன்று தீர்வாக அமையும் என்றால் அது அவரது சொந்த எண்ணங்கள் மட்டுமே..

  ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மையப்படுத்தும் நீங்கள் அதற்கு மாற்றமான நிலையில் ஏற்படும் பிரச்சனைகளை இங்கே குறிப்பிடவில்லையே சகோ..

  நம் தாய்நாடாம் பாரதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தியதால்., அதை மட்டுமே முற்படுத்தி என்னின் சில கருத்துக்கள்

  ஜனத்தொகை குறைப்புக்கு ஒருவனுக்கு ஓருத்தி என்ற நிலை முழுவதும் சாத்தியமில்லை சகோ., சரி உங்கள் வாதத்தோடு ஒரு பேச்சுக்கு உடன்படுகிறேன். தொடர்கிறேன்...

  இங்கே (தாய்நாட்டில்) எத்தனை முஸ்லிம்கள் 4 மனைவிவரை திருமணம் முடித்து இருக்கிறார்கள் என்ற பட்டியல் தர முடியுமா...? ஏன்னா எனக்கு தெரிஞ்சி ஒருவரும் இல்லை .,

  உங்களின் பொதுவாகி போன விதிகளை தாண்டியும் ஒருவருக்கு ஒருத்தியே மணம் புரிந்தவரும் அது முஸ்லிமோ, அஃதில்லாதவரோ மூன்று,நான்கு குழந்தைகள் பெறத்தான் செய்கிறார்கள், பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

  சரி, ஜனத்தொகை கட்டுப்பாடு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழுக்க நன்மை ஏற்படுத்தாது சகோ, எந்த ஒரு நாட்டின் முக்கியவளங்களில் ஒன்று மனிதவளம்..!

  எந்த ஒரு நாடும் தம்மிடம் இருக்கும் மனிதவளங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டால் அந்த நாட்டின் வளர்ச்சியின் விகிதம் அதிகரிக்கவே செய்யும். ஆக இங்கே பிரச்சனை அந்த மனித வளங்களை நம் நாடு முறையாக பயன்படுத்திக்கொள்ளாதே.. மாறாக ஜனத்தொகை அதிகரிப்பில் இல்லை பிரச்சனை.

  == நாளைய பாரதம் நம் குழந்தைகள் கைகளில் என்று சொல்லும் நமக்கே இன்னும் தெளிவான சிந்தனை வரவில்லை என்றால்(!)..அடுத்து வரும் சந்ததிக்கு ==

  இப்படி சொல்லும் நீங்கள்

  == ஒரு பெண்ணுடன் நடனம் ஆடினாலும் என் விரல் நுனி அவள் மேல் படாமல் ஆடியதே அவளுக்கு என் மேல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது ==

  அந்த ஆச்சரியத்தைதான் அவர்களுக்கும் கற்றுக்கொடுக்க போகிறீர்களா... சகோ

  முன்ன்மே பத்தி, பத்தியா பின்னூட்டம் போடுறது வேண்டாம்னு சொல்லி இருக்கிங்க., சோ போதுமானவரை குறைத்து சொல்லவே முற்பட்டு இருக்கிறேன்.

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 11. யோவ் மாம்சு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ......
  அவங்க பாட்டுக்கு அடிசிகிட்டு மண்டைய ஒடச்சிகிறாங்க.
  அமைதியாக வேடிக்கை பார்த்தமான்னு இருக்கானும் அதை விட்டு உம்மை யாரு பின்னூட்டம் எல்லாம் போட சொன்னது.
  நாங்க எல்லாம் வேடிக்கை தானே பாக்குறோம் ... எதுக்கும் சூதனமா இருந்துக்க கும்பலா வந்து கடிச்சி வச்சிருவாங்க ஜாக்கிரதை ..........

  ReplyDelete
 12. @கோவை நேரம்

  கோவை நேரம் said...
  வணக்கம்..என்னமோ நடந்து இருக்கு..இருங்க.போன பதிவ படிச்சிட்டு வாறேன்

  >>>>>>>

  ஒன்னுமே நடக்கல...இனிதான் நடக்கனும்!

  ReplyDelete
 13. @வீடு சுரேஸ்குமார்

  வீடு சுரேஸ்குமார் said...
  ரைட்டு! நீங்க சொன்னது!

  >>>>>>>>>

  நன்றிங்கோ!

  ReplyDelete
 14. @NAAI-NAKKS

  NAAI-NAKKS said...
  எப்படி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என நம் சமுதாயம் நினைக்கிறதோ(!)...அதே போல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் அவா!...தன் மனைவி கண்ணகியா இருக்கனும்னு நினைக்கிற ஆண் மகன்களும் தானும் அப்படியே ஒரு பொண்ணு, ஒரு வாழ்க்கைன்னு வாழனும் என்பதன் பொருள் இது...//////

  செம பாயிண்ட் மாம்ஸ்.....
  யாரும் அசைசிக்க முடியாது.....
  அசைசிக்க முடியாது......

  >>>>>>>>>

  சார் எந்த அடிப்படையில் இப்படி கருத்து போட்டு இருக்கீங்க தெரியல...இருந்தாலும் ஒரு உண்மை சொல்றேன்...உங்களுக்கு அளிக்கப்பட்டது கதை மட்டுமே...நீங்கள் நினைத்தது உண்மை அதுவல்ல!

  ReplyDelete
 15. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

  ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
  ஸலாம் சகோ.விக்கி,
  நீங்கள் முன்வைக்கும் 'ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது' என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இஸ்லாம் வலியுறுத்தி 'சிறந்தது' என சொல்வதும் இதைத்தான்.

  (ஆனால், சில சூழல்களின் அடிப்படியில், ஒன்றுக்கு மேலே நான்குவரை திருமணம் செய்ய ஆணை அனுமதிக்கிறது இஸ்லாம். காரணம் ஆண்... பெண்ணுக்கு வேண்டிய உணவு/உடை/உறைவிடம்/பாதுகாப்பு/ஆரோக்கியம் இவற்றுக்கு பொறுப்பு சாற்றப்பட்டதால்... மற்றும் நடைமுறையில் இதுதான் சாத்தியம் என்பதால்..! சரி, இது இங்கே பேசுபொருள் இல்லை சகோ விக்கி.)

  >>>>>>

  இங்கே நீங்கள் சொல்வது என்ன சூழல்...பொருளாதார அடிப்படையயை கொண்டதா...என்னப்பா எனக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் பலர் ஒரு மனைவியுடன் தான்யா வாழ்கிறார்கள்...இதற்க்கும் வசதியானவர்கள் தான்...அதுவும் குழந்தைப்பேறு இல்லாமல் பல வருடம் கழிந்தும் அன்பு குறையாமல் வாழ்கிறார்கள்...
  ..................................
  எனது கேள்வி என்னவென்றால்....
  இப்படி ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவதால் ஒரு நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்கும் என்றும்... அல்லது, ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் என்றால் மக்கள் தொகை குறையும் என்றும் சொல்வீர்களேயானால்... 'அது எப்படி சாத்தியம்..?' என்று கேட்டு இருந்தேன்.

  நீங்கள் இந்த பதிவில் கூட அது பற்றி சொல்லவில்லை. நீங்கள் சொன்னது சரியா..? தவறா..?
  >>>>>>>>>

  சகோதரா...நீங்க பதிவ சரியா கவனிங்க...

  “ஒரு பெண்ணை மணந்து கொண்டால் ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பெறுவது இப்போது பொதுவாகிப்போய் விட்டது(!)...அப்படி பின்பற்றாதவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த வித சலுகையும் அளிக்கப்படக்கூடாது...இதை சரியாக பின்பற்றினாலே...நம் நாட்டு மக்கள் தொகை கட்டுக்குள் வரும்”

  >>>>>>>>>>

  இது தான் அதற்க்கான பதில்...!

  ReplyDelete
 16. @மனசாட்சி™

  மனசாட்சி™ said...
  நடத்துங்க மாம்ஸ்... ம்ம்

  >>>>>>>>

  யோவ் நான் என்ன கடையா நடத்துறேன்!

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  நான் இங்கு அடுத்தவர் பற்றி கூற விரும்பவில்லை...ஒரு பெண்ணுடன் நடனம் ஆடினாலும் என் விரல் நுனி அவள் மேல் படாமல் ஆடியதே அவளுக்கு என் மேல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது என்பதை மறுக்க இயலாது...இது ஒரு சுய தம்பட்டமே!...//

  யாரு நீயி...? டேய் அடங்குடா கொய்யால அந்த நான்கு ஸ்டெனோ கதை என்னாச்சு?

  >>>>>>>>

  டேய் நாதாறி...சீரியஸா பேசிட்டு இருக்கேன்..கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருக்க..ராஸ்கல் பிச்சி புடுவேன் பிச்சி....உண்மைன்னு நெனச்சிக்க போறாங்கடா கொய்யால!

  ReplyDelete
 18. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  எப்படி ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என நம் சமுதாயம் நினைக்கிறதோ(!)...அதே போல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் அவா!...தன் மனைவி கண்ணகியா இருக்கனும்னு நினைக்கிற ஆண் மகன்களும் தானும் அப்படியே ஒரு பொண்ணு, ஒரு வாழ்க்கைன்னு வாழனும் என்பதன் பொருள் இது...//////

  செம பாயிண்ட் மாம்ஸ்.....
  யாரும் அசைசிக்க முடியாது.....
  அசைசிக்க முடியாது......//

  நெல்லை விஜயத்தின் போது கூடவே வந்த அந்த கில்மா கதை தெரியாம நக்ஸ் புலம்பல்ஸ்.....

  >>>>>>>>>

  அடப்பாவி அந்தாளுக்கு என்னய்யா கதை சொல்லி வச்சீங்க...இப்படி பொலம்புறாரு!

  ReplyDelete
 19. @வரலாற்று சுவடுகள்

  வரலாற்று சுவடுகள் said...
  ஆஹா மறுபடியுமா ..?

  >>>>>>>

  என்னாது மறுபடியுமாவா...இல்லயே இது புத்சாச்சே!

  ReplyDelete
 20. வணக்கம் வெங்கட் சார்!வாதத்துக்கும்,விதண்டா வாதத்துக்கும் வேறுபாடு புரிந்தாலே திருந்தி விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!

  ReplyDelete
 21. ஆரோக்கியமான விவாதமாகத் தொடர்ந்தால்,அனைவருக்கும் பலனளிக்கும்.

  ReplyDelete
 22. G u l a m said...

  அன்பு சகோ விக்கி.,

  ஒரு பிரச்சனக்கு தீர்வென்பது ., தீர்க்கமாக சொல்லப்படவேண்டும். அதே நேரத்தில் பின்பற்றக்கூடியதாகவும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம் நினைக்கும் ஒன்று தீர்வாக அமையும் என்றால் அது அவரது சொந்த எண்ணங்கள் மட்டுமே..

  >>>>>>>>>

  சகோதரா..பல நல்ல மனிதர்களின் எண்ணங்களே வலிமை மிகுந்த என் நாடு இந்தியா!...ஞாபகம் இருக்கட்டும்!
  ................

  ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மையப்படுத்தும் நீங்கள் அதற்கு மாற்றமான நிலையில் ஏற்படும் பிரச்சனைகளை இங்கே குறிப்பிடவில்லையே சகோ..

  >>>>>>>>>>

  அது என்னப்பா மாற்றமான நிலை..அப்படியே இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டாலும்...விவாகரத்து செய்து கொண்டு வேறு வாழ்க்கை தொடங்கலாமே...அப்போதும் ஒருவனுக்கு ஒருத்தியே!..
  ...............................

  நம் தாய்நாடாம் பாரதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தியதால்., அதை மட்டுமே முற்படுத்தி என்னின் சில கருத்துக்கள்

  ஜனத்தொகை குறைப்புக்கு ஒருவனுக்கு ஓருத்தி என்ற நிலை முழுவதும் சாத்தியமில்லை சகோ., சரி உங்கள் வாதத்தோடு ஒரு பேச்சுக்கு உடன்படுகிறேன். தொடர்கிறேன்...

  >>>>>>>>>

  ஏனப்பா சாத்தியமில்ல..அப்போ வாழுரவன்லாம்....!
  .............................

  இங்கே (தாய்நாட்டில்) எத்தனை முஸ்லிம்கள் 4 மனைவிவரை திருமணம் முடித்து இருக்கிறார்கள் என்ற பட்டியல் தர முடியுமா...? ஏன்னா எனக்கு தெரிஞ்சி ஒருவரும் இல்லை .,

  >>>>>>>>

  சகோதரா...நானும் 4 மனைவிகள்ன்னு சொல்லலியே...அதான் சொல்றது பதிவ படிக்கனும்..அடுத்து வரும் பின்னூட்டத்த மட்டுமே படித்து பதில் போடறது சரியானதல்லன்னு!

  ...நானும் அத தான் சொல்றேன்..இப்போ இருக்க பொருளாதார சூழ்நிலையில் யாரும் அப்படி இருக்க முடியாதுன்னுட்டு!
  .............................

  உங்களின் பொதுவாகி போன விதிகளை தாண்டியும் ஒருவருக்கு ஒருத்தியே மணம் புரிந்தவரும் அது முஸ்லிமோ, அஃதில்லாதவரோ மூன்று,நான்கு குழந்தைகள் பெறத்தான் செய்கிறார்கள், பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

  >>>>>>>>>>>>>

  நோட் திஸ் பாயிண்டு சகோதரா...
  “ஒரு பெண்ணை மணந்து கொண்டால் ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பெறுவது இப்போது பொதுவாகிப்போய் விட்டது(!)...அப்படி பின்பற்றாதவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த வித சலுகையும் அளிக்கப்படக்கூடாது...இதை சரியாக பின்பற்றினாலே...நம் நாட்டு மக்கள் தொகை கட்டுக்குள் வரும்”

  ...................................
  சரி, ஜனத்தொகை கட்டுப்பாடு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழுக்க நன்மை ஏற்படுத்தாது சகோ, எந்த ஒரு நாட்டின் முக்கியவளங்களில் ஒன்று மனிதவளம்..!

  >>>>>>>>>

  இது சரியான புரிதல் அல்ல...ஒரு நாட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் தான் தாக்குதலுக்குள்ளாகிறது...இது தெரியாம இருக்கீங்களா..ஸ்ஸ் அபா!
  ................................

  எந்த ஒரு நாடும் தம்மிடம் இருக்கும் மனிதவளங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டால் அந்த நாட்டின் வளர்ச்சியின் விகிதம் அதிகரிக்கவே செய்யும். ஆக இங்கே பிரச்சனை அந்த மனித வளங்களை நம் நாடு முறையாக பயன்படுத்திக்கொள்ளாதே.. மாறாக ஜனத்தொகை அதிகரிப்பில் இல்லை பிரச்சனை.
  >>>>>>>>>>>>>>>>

  ஹாஹா சூப்பரப்பு...வீட்ல பல புள்ளைங்கல பெத்து புட்டு அரசாங்கம் காப்பத்தனும்னு நெனைக்கிறது எவ்வளவு தவறானது சகோதரா!...மனித வளங்களை பெருக்குதல் மட்டுமே ஒரு குடிமகனின் வளர்ச்சி ஆகிடாது...அரசாங்கத்தை குற்றம் சொல்லும் நாம்..இம்புட்டு தடவை கெஞ்சிதே அத கொஞ்சமாவது காது கொடுத்து கேட்கிறோமா...இங்க என்ன போரா நடக்குது..டெய்லி பல உயிர்பலி நிகழ்வதால்...பல குழந்தைகள் இருந்தா தான் நாட்டை காப்பாற்ற முடியுங்கறதுக்கு...!
  ..............................
  == நாளைய பாரதம் நம் குழந்தைகள் கைகளில் என்று சொல்லும் நமக்கே இன்னும் தெளிவான சிந்தனை வரவில்லை என்றால்(!)..அடுத்து வரும் சந்ததிக்கு ==

  இப்படி சொல்லும் நீங்கள்

  == ஒரு பெண்ணுடன் நடனம் ஆடினாலும் என் விரல் நுனி அவள் மேல் படாமல் ஆடியதே அவளுக்கு என் மேல் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது ==

  அந்த ஆச்சரியத்தைதான் அவர்களுக்கும் கற்றுக்கொடுக்க போகிறீர்களா... சகோ

  >>>>>>>>>>

  எங்கப்பாரு குடிச்சி புட்டு நாளு கூத்தியா வச்சி இருந்தாருடான்னு என் பையன் எந்த காலத்துலயும் சொல்லக்கூடாது இல்லயா...அவரு பெரிய அப்பாடக்கரு இல்ல...ஆனா எங்கம்மாவ மட்டும் தான் நேசிச்சாருன்னு வரலாறு இருக்கனும்னு நெனப்பு எனக்கு அம்புட்டுதான்!
  ...............................pto

  ReplyDelete
 23. முன்ன்மே பத்தி, பத்தியா பின்னூட்டம் போடுறது வேண்டாம்னு சொல்லி இருக்கிங்க., சோ போதுமானவரை குறைத்து சொல்லவே முற்பட்டு இருக்கிறேன்.

  உங்கள் சகோதரன்
  குலாம்.
  >>>>>>>>>>>>>>>>>

  இப்படி சொல்லியே என்னய பத்தி பத்தியா பதில் போட வச்சிட்டீங்களே..இருக்கட்டும் என் சகோதரனுக்காகத்தானே கை வலிக்க பின்னூட்டம் போட்டேன்..வாழ்க!

  ReplyDelete
 24. @அஞ்சா சிங்கம்

  அஞ்சா சிங்கம் said...

  யோவ் மாம்சு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ......
  அவங்க பாட்டுக்கு அடிசிகிட்டு மண்டைய ஒடச்சிகிறாங்க.
  அமைதியாக வேடிக்கை பார்த்தமான்னு இருக்கானும் அதை விட்டு உம்மை யாரு பின்னூட்டம் எல்லாம் போட சொன்னது.
  நாங்க எல்லாம் வேடிக்கை தானே பாக்குறோம் ... எதுக்கும் சூதனமா இருந்துக்க கும்பலா வந்து கடிச்சி வச்சிருவாங்க ஜாக்கிரதை ..........

  >>>>>>>>

  ஹாஹா இது வேடிக்கை பார்க்கும் விஷயமல்ல மாப்ள...நம் நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது...வெற்றுகூச்சல் போடும் மாக்கள் அல்ல நாம்!...ச்சே தொடர்ந்து சுத்ததமிழ் வரமாட்டேங்குது...யாரு கடிக்கிறான்னு பாக்குறேன்...All is well!

  ReplyDelete
 25. @Yoga.S.FR

  Yoga.S.FR said...

  வணக்கம் வெங்கட் சார்!வாதத்துக்கும்,விதண்டா வாதத்துக்கும் வேறுபாடு புரிந்தாலே திருந்தி விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!

  >>>>>>>>

  அடுத்தவரை திருத்துவது என் நோக்கமல்ல சார்...நான் சரியாத்தான் பேசுறான்னு செக்கிங் பண்ணிக்கிரேன்...இதுவரைக்கும் சரியாத்தான் போயிட்டு இருக்கு...வருகைக்கு நன்றி சார்!

  ReplyDelete
 26. @FOOD NELLAI

  FOOD NELLAI said...

  ஆரோக்கியமான விவாதமாகத் தொடர்ந்தால்,அனைவருக்கும் பலனளிக்கும்.

  >>>>>>

  என்னன்னே வர்றவங்கள்லாம் பய முறுத்துறீங்க...நான் ஆரோக்கியத்துடன் தான்னே இருக்கேன்...இது வரைக்கும் ஹெஹெ!

  ReplyDelete
 27. நல்ல பதிவு மாப்ள..
  அத்தோட இந்தியாவிற்கு மனித வளம் போதுமான அளவு இருக்கின்றது என்றே நினைக்கிறேன்.. என்னை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்த தீர்வு அப்படியே ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகள் போதும் என்பதும் எனது தனிப்பட்ட கருத்து..!!!!

  ReplyDelete
 28. நண்பா...
  நல்லதொரு விவாதத்தை தொடங்கி உள்ளாய்.
  நல்லபடியா முடிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. விக்கி அண்ணே..

  இதெற்க்கெல்லாம் ஒரே தீர்வு.. கருத்தடை சாதனம் உபயோகிப்பதே!!!..

  இதற்கு உங்கள் மதமோ.. இல்லை சாதியோ.. தடை விதிக்கிறதா என மட்டும் பாருங்கள்...

  அம்பூட்டுத்தான்...

  ReplyDelete
 30. பக்கம் பக்கமா பதிவு எழுதுறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு கமெண்ட போட்டுட்டு நீங்க படுற பாடு அய்யோயோய்யோ. விட்டு தள்ளுங்க மாப்ள

  ReplyDelete
 31. சகோ.விக்கி,
  ஓர் அடிப்படையான விஷயம் இங்கே பலருக்கு புரியவில்லை. இன்னும் அதனை அறிந்து கொள்ளும் ஆவல் கூட இல்லை. மேலும் இங்கே அதிகமான வரிகளில் பின்னூட்டம் இட்டு அதனை விளக்கவும் தடை உள்ளதால், இறைநாடினால் எனது அடுத்த பதிவில் ஓரளவு சுருக்கமாக நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளக்குகிறேன்.
  நன்றி சகோ.

  ReplyDelete
 32. //மதம் என்ற போர்வையை விலக்கி வைத்து...ஒரு ஆணுக்கு ஒரு மனைவி மட்டுமே என்று இயற்றப்படவேண்டும்..இது எல்லோருக்கும் பொதுவானதாகும்//
  இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!நன்று சொன்னீர்கள்.

  ReplyDelete
 33. அன்பு சகோ விக்கி

  இன்னும் உங்களோடு கருத்துரையாட ஆசைதான்.

  என்ன செய்ய

  == இப்படி சொல்லியே என்னய பத்தி பத்தியா பதில் போட வச்சிட்டீங்களே..இருக்கட்டும் என் சகோதரனுக்காகத்தானே கை வலிக்க பின்னூட்டம் போட்டேன்..வாழ்க! ==

  எனது சகோதரின் கைவலிக்கு நான் காரணமாக விரும்பவில்லை.

  ஒரு நாட்டின் மனித வள பெருக்கத்தால் அந்நாடு வீழ்ச்சியடையாது என்பதை ஒரு வரிகளில் என்னால் விளக்க முடியாது.

  வாய்ப்பிருந்தால் உங்கள் தரப்பு சாத்தியக்கூற்றை எனது தளத்தில் ஒரிரு வரிகளில் இடுங்கள்

  இன்ஷா அல்லாஹ் முடிந்தால் பதில் தருகிறேன்.

  உங்கள் சகோதரன்
  குலாம்

  ReplyDelete
 34. ~முஹம்மத் ஆஷிக் citizen.... said
  //(ஆனால், சில சூழல்களின் அடிப்படியில், ஒன்றுக்கு மேலே நான்குவரை திருமணம் செய்ய ஆணை அனுமதிக்கிறது இஸ்லாம். காரணம் ஆண்... பெண்ணுக்கு வேண்டிய உணவு/உடை/உறைவிடம்/பாதுகாப்பு/ஆரோக்கியம் இவற்றுக்கு பொறுப்பு சாற்றப்பட்டதால்... மற்றும் நடைமுறையில் இதுதான் சாத்தியம் என்பதால்..! சரி, இது இங்கே பேசுபொருள் இல்லை சகோ விக்கி.)//
  எதுக்கு சார் தேவையில்லாமல் நீங்க கஸ்டப்பட்டு அந்த பொறுப்பை சுமக்கிறிங்க. பெண்களுக்கு போதிய கல்வி அறிவை கொடுங்கோ! தொழில் வாய்ப்புக்களை கொடுங்கோ! அவங்க தங்க சொந்தக்காலில் நிற்க வழிபண்ணிக்கொடுங்கோ! இதையெல்லாம் செய்யாமல் விட்டிட்டு எதுக்கு ஆண்கள் நாலு பெண்களை கல்யாணம் கட்டினாலதான் பொறுப்பு தீரும் என்கிறீங்க. பெண்கள் முன்னேறினால் உங்களமாதிரி நாலு ஆண்களை வைத்து அவங்க காப்பாற்றுவாங்க கவலைப்படாதையுங்கோ

  ReplyDelete
 35. ரொம்ப நல்லதொரு பதிவிட்டதற்கு நன்றி விக்கி

  ReplyDelete
 36. @காட்டான்

  காட்டான் said...
  நல்ல பதிவு மாப்ள..
  அத்தோட இந்தியாவிற்கு மனித வளம் போதுமான அளவு இருக்கின்றது என்றே நினைக்கிறேன்.. என்னை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்த தீர்வு அப்படியே ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகள் போதும் என்பதும் எனது தனிப்பட்ட கருத்து..!!!!

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள...சரியா சொன்னீங்க!

  ReplyDelete
 37. @உலக சினிமா ரசிகன்

  உலக சினிமா ரசிகன் said...
  நண்பா...
  நல்லதொரு விவாதத்தை தொடங்கி உள்ளாய்.
  நல்லபடியா முடிய வாழ்த்துக்கள்.

  >>>>>>>

  மாப்ள நல்லதுக்குன்னு தானே ஆரம்பிச்சோம்...நல்லதே நடக்கும்..நன்றி!

  ReplyDelete
 38. @பட்டாபட்டி....
  பட்டாபட்டி.... said...
  விக்கி அண்ணே..

  இதெற்க்கெல்லாம் ஒரே தீர்வு.. கருத்தடை சாதனம் உபயோகிப்பதே!!!..

  இதற்கு உங்கள் மதமோ.. இல்லை சாதியோ.. தடை விதிக்கிறதா என மட்டும் பாருங்கள்...

  அம்பூட்டுத்தான்...

  >>>>>>>>>>>>>

  உண்மையான விஷயம் மாப்ள...இதைதான் பல வருசமா அரசாங்கம் கூவிட்டு இருக்கு...கேட்டா சரித்தான்!

  ReplyDelete
 39. @பாலா
  பாலா said...
  பக்கம் பக்கமா பதிவு எழுதுறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு கமெண்ட போட்டுட்டு நீங்க படுற பாடு அய்யோயோய்யோ. விட்டு தள்ளுங்க மாப்ள

  >>>>>>>>>>>

  எல்லாம் நம்ம சகோதர்கள் தானே மாப்ள...எல்லாம் சரியாகிடும்...நம்பிக்கை தானே வாழ்க்கை!

  ReplyDelete
 40. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~
  ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
  சகோ.விக்கி,
  ஓர் அடிப்படையான விஷயம் இங்கே பலருக்கு புரியவில்லை. இன்னும் அதனை அறிந்து கொள்ளும் ஆவல் கூட இல்லை. மேலும் இங்கே அதிகமான வரிகளில் பின்னூட்டம் இட்டு அதனை விளக்கவும் தடை உள்ளதால், இறைநாடினால் எனது அடுத்த பதிவில் ஓரளவு சுருக்கமாக நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளக்குகிறேன்.
  நன்றி சகோ.

  >>>>>>>

  சகோதரா...தங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 41. @G u l a m
  G u l a m said...
  அன்பு சகோ விக்கி

  இன்னும் உங்களோடு கருத்துரையாட ஆசைதான்.

  என்ன செய்ய

  == இப்படி சொல்லியே என்னய பத்தி பத்தியா பதில் போட வச்சிட்டீங்களே..இருக்கட்டும் என் சகோதரனுக்காகத்தானே கை வலிக்க பின்னூட்டம் போட்டேன்..வாழ்க! ==

  எனது சகோதரின் கைவலிக்கு நான் காரணமாக விரும்பவில்லை.

  ஒரு நாட்டின் மனித வள பெருக்கத்தால் அந்நாடு வீழ்ச்சியடையாது என்பதை ஒரு வரிகளில் என்னால் விளக்க முடியாது.

  வாய்ப்பிருந்தால் உங்கள் தரப்பு சாத்தியக்கூற்றை எனது தளத்தில் ஒரிரு வரிகளில் இடுங்கள்

  இன்ஷா அல்லாஹ் முடிந்தால் பதில் தருகிறேன்.

  உங்கள் சகோதரன்
  குலாம்

  >>>>>>>>>>

  சகோதரா நிச்சயமாக சொல்கிறேன்...நன்றி!

  ReplyDelete
 42. @அம்பலத்தார்

  அம்பலத்தார் said...
  ரொம்ப நல்லதொரு பதிவிட்டதற்கு நன்றி விக்கி

  >>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி அம்பலத்தார் அவர்களே!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி