ஹலோ நான் யூத்துங்க! - (youth!)

வணக்கம் நண்பர்களே...
இப்பல்லாம் இந்த வரிகளை கேக்காம இருக்க முடிவதில்லை...


”சார் சார் நான் யூத்துங்க!”...நீங்க உத்து பார்த்தாலும்(!) ப்ர்ர்வால்ல... உடனே நம்புங்க நான் உண்மையிலேயே யூத்து தாங்க!..என்பவர் பலர்...(!)


யூத் என்பது இளமை சம்பந்தப்பட்டதா என்றால்...ஹெஹெ...நான் எப்படி சொல்ல முடியும்...ஏன்னா, நானும் பலரைப்போல மனதால் யூத்து என்றே சொல்லி வருபவன் ஆச்சே...சரி விடுங்க மேட்டருக்கு வருவோம்..சாரிபா விசயத்துக்கு வருவோம்..


ஆபீஸுல இருக்க உதவியாளினி ஒருவருக்கு திடீரென்று விபத்து ஏற்பட்டு போனதால்...அவசரமாக இன்னொரு உதவியாளினி எடுக்க வேண்டிய நிர்பந்தம்(!) ஏற்பட்டது...


நேர்முகத்தேர்வுக்கு வந்த பெண்கள்(!) ரொம்பவே பாந்தமா உரையாடினாங்க...


அதில் ஒரு பெண்ணிடம் அவளின் வேலை பற்றிய பார்வை(View!) என்ன என்று கேட்டபோது...


நான் ஏற்கனவே HR(human resources) இல் ஆறுமாத காலம் வேலை செய்து இருக்கிறேன் ...என் வரும்படி $400(=20,000 - ரூவா!) என்றாள்..இது ஒரு சாதாரண மொழிமாற்று வேலை அவ்வளவே...இதில் ஒன்றும் பெரிய விசயம் இல்லை...


சரி...உங்க பே ஸ்லிப் கொண்டுவந்து காட்ட முடியுமா என்றேன்...
அது முடியாது...இங்கு பல கம்பனிகளில் அப்படி கொடுக்கப்படுவதில்லை...என்றாள்!


சரி உங்களின் வேலை நேரம் பற்றி சொல்லுங்கள் என்றேன்..


காலை 8.30 - 11.30....1.30 - 5 என்றாள்...


மொத்தம் ஆறுமணி முப்பது நிமிடங்கள் மட்டுமா..இங்கு எட்டு மணி நேர உழைப்பு தேவைப்படுகிறதே என்றேன்...


அவள் சொல்லிய விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தது...


நீங்கள் இங்கு வந்து எங்களின் உழைப்பை தேடுகிறீர்கள்...எனவே...நீங்கள் தான் எங்களை அனுசரித்து செல்ல வேண்டும்...இது தவிர சாட் செய்யக்கூடாது என்று சொல்லக்கூடாது...தனிப்பட்ட(personal!)போன் பேசக் கூடாதுன்னு சொல்லக்கூடாது..நாங்கள்லாம் யூத்து என்றாள்..


இப்படில்லாம் இருந்தா...எப்பதான் வேலைய பாப்பீங்க என்றேன்...


அதைப்பற்றி கவலைப்படாதீங்க..அது பாட்டுக்கு நடக்கும் என்றாள்..


இப்படி வேலைக்கு தேடி வந்த இடத்தில் தைரியமாக பேசிய ஆட்களை நான் முதல் முறையாக பார்க்கிறேன்..


நீ போயிட்டு வாம்மா...உனக்கு புண்ணியமா போகும்...முதல்லியே சொல்லிட்டியே...நன்றி...கெளம்பு காத்து வரட்டும் என்றேன்..!


அந்தப்பெண் நினைத்து இருந்தால்...இப்படி சொல்லாமல் வேலையில் இணைந்து கொண்டு...அவள் சொல்லியதை செய்தும் இருக்க முடியும்...தங்கள் தேவைகளை வெளிப்படியாக சொல்லிச் செல்பவர்கள் சிலரே...
இதுல முக்கியமான விசயம்...என்னைய கடைசி வரைக்கும் யாருமே...யூத்துன்னு ஒத்துக்கவே இல்லை..பேடு கேர்ள்ஸ்...அண்டு பேடு திங்கிங்!...நான் யூத்து தானுங்கோன்னு ஓங்கி கத்தனும் போல இருந்துது...(வயசு போன காலத்துல ஏன்யா உனக்கு இந்த கொல வெறி!)


ச்சே...என்ன வாழ்க்கைடா இது...இவங்களை எல்லாம் வச்சி வேலை வாங்குறவன் நிலைமை...!


மெசேஜ் சொல்றாராம்: அதாவது என் பார்வையில்... யூத் என்பது உலக மாற்றத்துக்கு ஏற்றாற்போல தம்மையும் தம் சிந்தனைகளையும் செதுக்கி கொள்வதை எப்போதும் கருப்பொருளாக கொண்டவர்களே,,,...இந்த விசயத்துக்கு தகுதியானார்கள் என்று நம்புகிறேன்...(ஒருவழியா சமாளிச்சிட்டேன் போல ஹெஹெ!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. இப்படி ஊருக்கு நாலு பேர் இருந்தா போதும்ல.... விக்கி வாழ்க...

  ReplyDelete
 2. நீங்க மனதளவிலும், உடலளவிலும் இளமையாத்தானே இருக்கீங்க, அவங்க பார்வை சரியில்லேன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. நல்லா நடத்துங்க ராசா, இன்னும் நாலு இண்டர்வியூ!

  ReplyDelete
 4. @சதீஷ் மாஸ்

  சதீஷ் மாஸ் said...
  இப்படி ஊருக்கு நாலு பேர் இருந்தா போதும்ல.... விக்கி வாழ்க...

  >>>>>>>>>>

  யோவ் மாப்ள...இப்படி இருந்தா விளங்கிடும்!

  ReplyDelete
 5. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  நீங்க மனதளவிலும், உடலளவிலும் இளமையாத்தானே இருக்கீங்க, அவங்க பார்வை சரியில்லேன்னு நினைக்கிறேன்.

  >>>>>>>>>>>

  ங்க்கும்னே...சேம் பீலிங்...சேம் பிளட்!
  ..........................

  FOOD NELLAI said...
  நல்லா நடத்துங்க ராசா, இன்னும் நாலு இண்டர்வியூ!

  >>>>>>>>>>

  ஹிஹி எல்லாம் உங்க ஆசீர்வாதம்னே!

  ReplyDelete
 6. மாம்ஸ் இது வேற நடக்குதா....ம் ம் ஆபிசர் சொன்னது போல் நடத்துங்க இன்னும்......

  ஹலோ எச் ஜூஸ் மீ நாங்களும் யூத் தான்.

  ReplyDelete
 7. உன்னை எவம்லேய் யூத்துன்னு சொன்னது...? உருளை'ன்னுல்லா சொல்லணும்.

  ReplyDelete
 8. சரி சரி அழாதே அழாதே நீ யூத்துன்னு உன் பி ஏ'ங்களுக்கு நல்லாவே தெரியுமே அது போதாதா உனக்கு...?

  ReplyDelete
 9. மாப்ள நான் சொல்லவந்ததை கடைசி பாராவில் நீங்களே கருத்தா சொல்லிட்டீங்க.

  ReplyDelete
 10. நடத்துங்க .., நாடகத்தை ..!

  ReplyDelete
 11. மனசுல இளமையிருந்தா எல்லாரும் இளைஞர்கள்தான்....ஓகே!ஓகே!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி