விடியும் காத்திரு! - VN

வணக்கம் நண்பர்களே..

என்னதான் சட்டம் கொண்டுவந்தார்கள் என்றாலும், அதனை எப்படி ஏமாற்றி விட்டு அப்பாவிகளை அடிமைப்படுத்துவது என்றே யோசிக்கும் வெறிபிடித்த பணக்காரர்களின் செயல்களை என் செய்வது....

இந்தியாவில் இருந்து இருவர் வர வேண்டி இருந்தது...அவர்களின் கடவுச்சீட்டுக்கு கிட்ட தட்ட ஒரு வாரம் எடுத்துக் கொண்டார்கள்...என்னடான்னு விசாரிச்ச போது...இந்தியர்களுக்கான கடவுச்சீட்டை சிரமமாக்கி வைத்திருக்கிறார்கள்...காரணம் கிட்ட தட்ட 300 பேர்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்து உரிய ஆவணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்...இதன் காரணமாக குறிப்பிட்ட கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனமும் தடை செய்யப்பட்டு இருக்கிறது...

சில நாட்களுக்கு முன் தாங்க்வா எனும் இடத்துக்கு வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்தது...அங்கு கிடைத்த சிறிய இடை வெளியில் ஊர் சுற்ற கிளம்பினேன்....சில மைல் தூரத்தில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது...சிறிய அளவிலான ஒரு குடிசை போன்ற ஒன்றில் வைத்து சில குளிர் பானங்கள் விற்கப்பட்டுக்கொண்டு இருந்தன...அதற்கு பக்கத்தில் சில தொழிலாளர்கள் குவாரியில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்...அவர்களை கண்ட போது இந்தியர்களாகப் பட்டார்கள்(!)....காரணம் இங்கு யாவரும் மஞ்சள் நிறத்தில் தான் இருப்பார்கள்...அருகில் சென்று விசாரித்த போது...அவர்கள் பல காலமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும்(!)...எந்த வித ஆவணமும் அவர்கள் வசம் இல்லாமல் பிடுங்கப்பட்டு இருப்பதும் எனக்கு புரிந்தது...!


அங்கிருந்து கிளம்பும் போது அந்த மனிதர்களில் ஒருவர்...அவர்தம் மொழியில் கதறினார்..அவர் சொல்வது சரியாக புரியவில்லை எனினும்...ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தேன்...ஒரு நிமிடம் என்னையும் மீறி கோபம் பீறிட்டாலும்(!) அதை அடக்கிக் கொண்டு...அமைதியாக திரும்பினேன்...

அடுத்த நாளே துறை சம்பந்தப்பட்ட அமைச்சக நண்பருக்கு அழைப்பு விடுத்தேன்...அதிரடியாக செயலில் இறங்கிய நண்பர்கள்...அந்த இடத்துக்கு சென்று உண்மைகளை கண்டறிந்து 14 பேர்களை மீட்டனர்...அவர்களை திருமப அவர்தம் ஊருக்கு அனுப்பி வைத்தனர்...அந்த சம்பந்தப்பட்ட நிறுவன அதிபரின் லைசென்ஸ் முடக்கப்பட்டது...இது வெளிவராமல் அழுத்தி விட்டார்(!)...மேலும் இது ”கம்யூ” ஊர் என்பதால் செய்திகளில் வரவில்லை...

இதன் காரணமாக பல இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு...பல நல்ல விஷயங்கள் நடந்ததாக செய்திகள் வந்தது...இது தவிர நிர்வாகத்தின் திடீர் முடிவால் பல தொந்திகள்(!) இங்கிருந்து மூட்டையை கட்டி கொண்டு இருக்கின்றன...


இது நடந்து சில நாட்களில்...வேலை நிமித்தமாக பக்கத்தில் இருக்கும் ஒரு கம்யூனுக்கு(!) போய் வந்து கொண்டு இருந்தேன்...நான் வந்து கொண்டு இருந்த வாகனத்தை முந்திய பெரிய வாகனம் என் வாகனத்தை இடித்தது...ஓட்டுனரின் சரியான கவனத்தால்..அருகில் இருந்த வயல் வரப்பில் வாகனம் இறங்கி விட்டதால் தப்பினேன்...

ஹஹா....என்னதான் குறி வச்சாலும் ஆண்டவன் ஒருத்தன் இருக்கான் டோய்!

கொசுறு: எதிரிகள் உருவாகுவதில்லை...நாம் தான் உருவாக்குகிறோம்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. ஐயோ என்ன சார் ,இவ்வளவு இலகுவாக சொல்றிங்க??கேட்கவே பயமாக இருக்கு.இருப்பினும் உங்களுடைய பொதுநலன்..சல்யூட் சார்!எல்லோரும் இப்படி ரிஸ்க் எடுக்க முன்வரமாட்டாங்க,வாய் கிழிய பேசுவாங்க?

  ReplyDelete
 2. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் தல

  ReplyDelete
 3. கடவுள் எதுக்கு தல இருக்காரு ..? அவ்வளவு சுலபத்துல விட்டுருவாரா என்ன ..?

  ReplyDelete
 4. பாராட்டுகள் மாப்ளே! ரொம்ப ரொம்ப மீறுன வேலைய்யா நீ செஞ்சது! நிஜமா புல்லரிக்குது!

  நீடூழி வாழ்க விக்கி பாண்ட் 007!

  ReplyDelete
 5. யோவ் மாப்ள, நல்லது செஞ்சிருக்கீங்க, ஆனா கொஞ்சம் கவனமாவும் இரும்யா.............

  ReplyDelete
 6. வணக்கம் மாம்ஸ்,
  தலைப்புல சரியா சொல்லிட்டேங்க...
  விடிதலின் தருணம் நோக்கி இருப்போம்.....
  உங்களின் உள்ள உறுதிக்கு
  என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....

  கவனம் கைகொண்டிருங்கள்....

  ReplyDelete
 7. நல்லது நடந்தால் சரி தான் !

  ReplyDelete
 8. உனக்கே சாவே கிடையாதுலேய் மக்கா....!!!

  ReplyDelete
 9. எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு, சப்பை மூஞ்சிகாரனுக கொஞ்சம் டேஞ்சர்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி