இதுக்கு நீங்க அப்பாவா இருக்கோனும்!~

வணக்கம் நண்பர்களே....
தகப்பன் ஸ்தானம்(!) என்று சொல்லுவார்களே...அதைப்பற்றி தான் இந்தப்பதிவு!


திருமணத்துக்கும் முன் நம்மை மொட்ட பசங்க எனும் லோக்கல் பாஷையில் தான் அழைப்பார்கள்(!)....கொஞ்சம் டீசண்டா சொல்லனும்னா...அறியாத பசங்க  என்று சொல்லுவார்கள்...அதே திருமணம் முடித்த பின் நாலு பேருக்கு(!) இடையில் அவனும் பெரிய மனுசன் எனும் மதிப்பை அடைகிறான்..அதற்கு மேல் அவன் கையில் தான் இருக்கிறது அதை தக்க வைத்துக்கொள்வது...


எதுக்கு இம்புட்டு சொல்றேன்னா...நம்முடைய அறியாதவயதில்(!) நாம் நம் தாய் தந்தையரை தவிக்க விட்டு இருப்போமானால்(!)...அவர்களுக்கு அப்போது ஏற்படும் வலி நமக்கு புரிய வாய்ப்பில்லை..அது புரியனும்னா நாம பெற்றோர் எனும் ஸ்தானத்துக்கு வரும்போது தான் அது புரியும்...


(அலுவலக தொலைபேசி ஒலித்தது...!)


அலோ என்னங்க...


சொல்லுங்க....


ஸ்கூல்ல குழந்தைய காணோம்...


எது காணோமா....அங்கன தான் எங்கயாவது விளையாடிட்டு இருப்பான்...


இல்லை...எல்லா இடத்திலும் தேடிட்டேன்...


என்ன சொல்ற...இதோ வர்றேன்...


(சிறிது நேரத்தில் அங்கு இருந்தேன்!...அங்கிருந்த காப்பாளரை விசாரித்த போது...அவர் பேசுவது புரியாமல் தவித்தோம்...அவர் வியட்நாமிய மொழியில் தான் பேசுவார் என்பதால்!)
எங்கடா போனே...கோவம், இயலாமை அனைத்தும் ஓட்டுனர் மேல் திரும்பியது...


எத்தனை மணிக்கு வந்தீங்க இங்க...


சார் சரியா 4 மணிக்கு வந்துட்டேன் சார்...


சரி அவரு என்ன பேசுறாருன்னு கேட்டு சொல்லு...


அவர் மிஸ்டர் துங் வந்து கூட்டி போனதாக கூறுகிறார்...


(துங் என் நண்பர்...வியட்நாமிய கூசி(குங்பு!) கலை நிபுணர்!)


என்னாது அவன் எதுக்கு கூட்டி போனான்...(என் போன் தன் பேட்டரியை இழந்திருந்ததால்...என் மனைவி போன் மூலம் அவனுக்கு போட்டால் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது)...


என் மனைவியின் கதறல் என்னையும் அசைத்தது...


விட்றா வண்டிய துங் வீட்டுக்குன்னு...அங்கன போனா...அவன் வீடு பூட்டி இருக்கு...அடங்கொய்யால என்று மூச்சி வாங்கியது தான் மிச்சம்...


என்ன செய்வது என்று புரியாமல் நீண்ட நேரம் என் மனைவியின் புலம்பல்களை கேக்க வேண்டி இருந்தது(!)...


ஏன் புலம்பற...கொஞ்ச நேரம் சும்மா இரு...


யோவ் போய்யா உனக்கென்ன...புள்ளய பெத்தவளுக்கு தான் தெரியும்..


(சில நேரங்களில் எனக்கு தோண்றுவது...நானா வேணாம்னே...இந்த இயற்கை தானே பெண்ணுக்கு மட்டும் அந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கு!)


கிட்ட தட்ட சில மணி நேரம் கழித்து மீண்டும் துங்குக்கு போனில் அழைத்த போது...அவர் வந்து கொண்டு இருப்பதாக கூறினார்...சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்....
விஷயம் என்னன்னா...அவரும் நானும் கடந்த ஞாயிறு அன்று பேசிக்கொண்டு இருக்கும் போது...கால்பந்து பயிற்சிக்கு குழந்தையய் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்...நானும் சரிப்பா என்றேன்...அப்படியே மறந்து போனேன்...இதற்கும் அவர் எனக்கு குழந்தையை கூட்டி செல்லும் போது போன் செய்து இருக்கிறார்...என் போனில் பேட்டரி அவுட் என்பதால் எடுக்கவில்லை...குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்...அதையும் என்னால் பார்க்க முடியவில்லை..விளையாடும்போது போனை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார்...எல்லாம் ஒரு நேரம் தான்..


இப்படியாக வீடு வந்து சேர்ந்தார் மகன்...


எப்படி என் தாய் தவித்தாலோ...அப்படி என்னையும் தவிக்க விட்டான் என் மகன்...ஹஹா...என்ன செய்வது வாழ்க்கை என்பது வட்டம் அல்லவா!


கொசுறு: இந்த அளவுக்கு வருந்த காரணமான விஷயம் இந்த பதிவு...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. முதல் தவிப்பு.

  ReplyDelete
 2. எத்தனை நாளா எண்ணியிருந்தாரோ என் மருமகன்!

  ReplyDelete
 3. //யோவ் போய்யா உனக்கென்ன...புள்ளய பெத்தவளுக்கு தான் தெரியும்..//
  நெசந்தானே!

  ReplyDelete
 4. நம் பாசங்களை இறைவன் வெளிக்கொணரும் தருணங்கள். அவரு யாரு பிள்ளை, பத்திரமா இருக்கமாட்டாரு!

  ReplyDelete
 5. // சில நேரங்களில் எனக்கு தோண்றுவது...நானா வேணாம்னே...இந்த இயற்கை தானே பெண்ணுக்கு மட்டும் அந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கு! //

  மிகவும் ரசித்தேன்...

  இதுபோன்ற சம்பவங்கள் ஒரு படிப்பினை தானே...

  ReplyDelete
 6. அன்பான அப்பவின் தவிப்பு!இதுபோன்ற ‘மறந்து’போகும் விசய்ங்கள் ,உலகில் உள்ள எல்லா அப்பாக்களும் இப்படித்தான் செய்வாங்கபோல(கோபம் வராமல்)தாயின் புலம்பல் அதிகம் ,அதேப்போல அர்ஜெண்டில் நிறைய ஐடியாக்களும் அவளே சொல்லுவாள்!

  ReplyDelete
 7. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் வீடு வந்து செரலைன்னா பெத்தவளின் தவிப்பு சொல்ல முடியாது, நானும் இதை அனுபவித்து இருக்கிறேன்...!

  ReplyDelete
 8. பேட்டரி இல்லாத போனை எதுக்குடா கையில வச்சிருக்கே..?

  ReplyDelete
 9. இந்த அனுபம் அனைவருக்கும் உண்டு! ஆனால் சில சமயம் ஆபத்தாய் முடிந்து விடுகின்றது.......

  ReplyDelete
 10. எல்லாவற்றிற்கும் உமது மறதியே காரணம் என்றாலும் ஒரு பதிவு எழுத மேட்டர் கிடைத்ததே என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

  ReplyDelete
 11. மறதியால வந்த வினை......... மொபைல் பேட்டரி கவனக்குறைவு........ பட் டிஸ்கிய பாத்தா........ கொஞ்சம் முன் எச்சரிக்கையாவே இருங்க மாப்ள..........

  ReplyDelete
 12. //MANO நாஞ்சில் மனோ said...
  பேட்டரி இல்லாத போனை எதுக்குடா கையில வச்சிருக்கே..?
  //

  பதிவே போடாம போட்டோ மட்டுமே போடற உங்கள மாதிரிதான்..:))))

  ReplyDelete
 13. FACEBOOK la PREVIEW கொடுத்திருவீங்க போல...சுபம்...

  ReplyDelete
 14. வாழ்க்கை என்பது வட்டம் என்பது
  நிதர்சனமான உண்மை மாம்ஸ்..
  அன்று நாம் செய்ததெல்லாம் இன்று
  நமக்கே திருப்பி விடப்படுகிறதே..

  வினைக்கு எதிர்வினை சற்றும் மாறாமல்
  கூடுதல் வினைவேகத்துடன்...

  ReplyDelete
 15. அப்பாடா... நிம்மதி ! உங்கள் பதிவில் தெரிகிறது !

  ReplyDelete
 16. தவிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும் ஆனால் ஆண்கள் வெளிக்காண்பப்பதில்லை என்பதுதான் உண்மை

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி