ஸ்கூலிசம்...நானும் பள்ளிக்கு போறேன்!

வணக்கம் நண்பர்களே....
பள்ளி - இது ஒரு காலத்தில் கசந்தது...நம் வாழ்வை மாற்றி அமைக்கப்போகும் பல விஷயங்களை அங்குலம் அங்குலமாக கற்பது இங்குதான்...அது வெறும் கடமை போல அல்லாமல்...பல உரிமைகளை நமக்கு கற்று தரும் இடம்...சரி விஷயத்துக்கு வர்றேன்...


இந்தியாவில் எப்படி பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் படாத பாடு(!) படுகிறார்களோ...அதே போலத்தான் வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் நிலையும்...அதுவும் இந்த இண்டர்நேஷனல் பள்ளிகள் என்று வைத்து அடிக்கிறாங்க பாருங்க கொள்ளை...ஸ்ஸ் அபா நம்ம ஆளுங்கள்லாம் தண்ணி குடிக்கனும்...இதைப்பற்றிய என் கருத்துக்களே இந்தப் பதிவு...


இண்டர்நேஷனல் ஸ்கூல்...
இது எந்த மாதிரிப்பள்ளி என்று எனக்கு புரிந்தது என்றால்...வெளிநாடுகளில் அரசு நிமித்தமாக செல்லும் அலுவலர்களுக்கு அரசால் வழங்கப்படும் மிக முக்கிய சலுகை...அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி...அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் இதில் வேறுபாடு உண்டு...இங்கு குறைந்தது $600 (ரூ30000) முதல் $2000(ரூ 1லட்சம்!) வரை அளிக்கப்படுகிறது...இதில் எத்தனை நாடுகளில் இந்திய (இண்டர்நேஷனல்!) பள்ளிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை...இவ்வளவு கொடுக்கும் அரசு அதே அவர்களின் கல்வித்தகுதி எப்படி இருக்கிறது என்பதை ஆராய்கிறதா என்றால்..ப்ப்பூ..


ஏனெனில், இங்கிருந்து ஒரு குழந்தை தன் 9 வது படிப்பை முடித்து விட்டு சென்றால்...இந்தியாவில் வைக்கப்படும் நுழைவுத்தேர்வில் தேற முடியாமல் 7 வதில் சென்று சேரும் கொடுமைகள்(!) நடந்து வருகின்றன...இப்போது இருக்கும் நவீன கணிப்பொறி காலத்துக்கு ஏற்றாற்போல இணைய வழி கற்பிக்கலாம் போல...!....அதுவும் இவ்வளவு பணமும் யாருடைய பணம் என்கிறீர்களா...எல்லாம் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் பட்ஜெட் தான் இவை...


விளையாட்டு மூலம் கல்வி என்பதை கொண்டு போகும் பள்ளிகள்...அதற்க்கு கொடுக்க வைக்கும் பணம் மிக அதிகம் என்பதை மறுக்கின்றன(!)


இங்கிருக்கும் பலரும் தம் குழந்தைகளை இப்படிப்பட்ட ஸ்கூல்களில் தான் சேர்க்கின்றனர்...இந்தியா திரும்பிய போது மிக கடினமானதாக இருக்கிறது குழந்தைகளுக்கு கல்வி...
இதையெல்லாம் பார்த்த எனக்கு...என் ஆரம்பம் ஞாபகம் வந்தது...அரசு மாநகராட்சி பள்ளியில் ஆரம்பித்த வாழ்க்கை...ம்ம்...இப்போ என்னடான்னா இப்படி யோசிக்கிறோம்...என்று!


என் மகனை..ஆறு வயது வரை குழந்தைக்கல்விக்காக வியட்னாமிய மற்றும் ஃப்ரெஞ்சு கலந்த கல்வியில் இணைத்து இருந்தேன்...ஆறு வயதுக்கு மேல் அரசு அனுமதிப்பதில்லை என்பதால் தேட நேர்ந்தது...


மீண்டும்..மகனை நான் கொண்டு சேர்த்தது வியட்னாமிய அரசு பள்ளியில்...இதற்க்கும் இந்தியா போலவே 4 பாடங்கள் வியட்னாமிய மொழியில்...1 பாடம் ஆங்கிலத்தில்...அதே நேரத்தில் அடிப்படை தற்க்காப்பு கலையில் இருந்து...உலக பொது அறிவு பற்றிய பாடங்களை ஆங்கிலத்தில் எடுத்துரைக்கிறார்கள்....
வெட்டி பந்தாவை விலக்கி வைத்துவிட்டு தேடினால்...எங்கு படிக்கிறோம் என்பதை விட என்ன படிக்கிறோம்..என்ன அறிவைப்பெறுகிறோம் என்பது மிக முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து..


கொசுறு: இது என் பார்வை மட்டுமே...இது அனைவருக்கும் பார்வையாக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லை...!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. //அரசு மாநகராட்சி பள்ளியில் ஆரம்பித்த வாழ்க்கை...////

  நானும்தானுங்க....

  ReplyDelete
 2. என்ன மாப்ள...
  கார்ப்பரேஷன் ஸ்கூல் என சொல்லக்கூடாது.அது கவர்ன்மெண்ட் கான்வெண்ட் ஸ்கூல்.

  ReplyDelete
 3. @Avargal Unmaigal

  அரசு மாநகராட்சி பள்ளியில் ஆரம்பித்த வாழ்க்கை...////

  நானும்தானுங்க....

  >>>>>>>>

  சேம் பிளட்!

  ReplyDelete
 4. @உலக சினிமா ரசிகன்

  உலக சினிமா ரசிகன் said...
  என்ன மாப்ள...
  கார்ப்பரேஷன் ஸ்கூல் என சொல்லக்கூடாது.அது கவர்ன்மெண்ட் கான்வெண்ட் ஸ்கூல்.

  >>>>>>

  சர்தான் மாப்ளே!

  ReplyDelete
 5. ம்

  மாம்ஸ் ரெண்டு கட்டிங்கை போட்டு பொலம்புவோம் நிறைய இருக்கு இது பத்தி பேச

  ReplyDelete
 6. அட ராம அங்கெல்லாம் கல்வியின் தரம்
  நம்மை விட மிகச் சிறப்பாக இருக்கும் என்றல்ல்வா
  நான் எண்ணி இருந்தேன்
  கீத மஞ்சரி அவர்களின் பதிவு
  அந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது
  தெளிவூட்டிப் போகும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பேருதான் இண்டர்நேசனல் ஸ்கூலு, மத்தபடி எல்லாம் அப்படி இப்படிதான்........!

  ReplyDelete
 8. @மனசாட்சி™

  மனசாட்சி™ said...
  ம்

  மாம்ஸ் ரெண்டு கட்டிங்கை போட்டு பொலம்புவோம் நிறைய இருக்கு இது பத்தி பேச

  >>>>>>>>>

  பணம் வாங்கிகிட்டும் சரியான கல்வி இல்லை...என்னத்த சொல்றதுய்யா!

  ReplyDelete
 9. @Ramani
  Ramani said...
  அட ராம அங்கெல்லாம் கல்வியின் தரம்
  நம்மை விட மிகச் சிறப்பாக இருக்கும் என்றல்ல்வா
  நான் எண்ணி இருந்தேன்
  கீத மஞ்சரி அவர்களின் பதிவு
  அந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது
  தெளிவூட்டிப் போகும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  >>>>>>>>

  துட்டு தான்னே மேட்டரு...மத்தது எல்லாம் பீட்டரு!

  ReplyDelete
 10. @பன்னிக்குட்டி ராம்சாமி
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பேருதான் இண்டர்நேசனல் ஸ்கூலு, மத்தபடி எல்லாம் அப்படி இப்படிதான்........!

  >>>>>>

  இதுல படிச்சி புட்டு தாய்நாடு திரும்புற புள்ளிங்க நெலமைதான் மோசம்!

  ReplyDelete
 11. கல்வி கூடங்கள் காசு பிடுங்கும் கடைகளாயிற்று.

  ReplyDelete
 12. ஆங்கில அறிவை தவிர வெளிநாடுகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வேறெந்த தரமும் கிடையாது என்பதே என் கருத்து

  ReplyDelete
 13. எல்லாமே பணம் தான் சார் !

  ReplyDelete
 14. சில பள்ளிகள் தன் மதத்தை பரப்பும் களமாக இருப்பதை கண்டு! நான் இந்த ஸ்கூல்..அந்த ஸ்கூல் என்று குழம்பி...கடைசியில் ஒரு ஹிந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பள்ளியில் சேர்த்திருக்கிறேன்....பார்க்கலாம்!எனக்கு பெரிதாக மதப்பற்று இல்லையென்றாலும் யோகா, தியானம், இசையறிவு,தற்காற்பு பயிற்சி என இருக்கின்றது அதனால் சேர்த்தேன்!

  ReplyDelete
 15. காசைக் கறக்கும் கந்துவட்டிக் கடை மாம்ஸ்...

  ReplyDelete
 16. இங்கே [[பஹ்ரைன்]] இந்தியன் ஸ்கூல்ல பாத்ரூம்ல காண்டம் கிடைக்குறதா அடிக்கடி நண்பர்கள் சொல்ல கேட்டுருக்கேன்....!

  ReplyDelete
 17. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி