விளையாட்டுக்காக...கொடுமைய்யா!

வணக்கம் நண்பர்களே...
நமது இளம்(!) வயதில் நம்மை ஆட்கொள்ளும் முக்கியமான விஷயங்களில் விளையாட்டு என்பது மிக முக்கியமானது...அதுவும் அவை எப்படியெல்லாம் நம் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதையும் தான் இங்கு சொல்ல வந்தேன்!


போன வாரம் நம் நண்பர்களுடன் மட்டைப்பந்து விளையாடிட்டு முடித்ததும்...ஒரு நண்பர் 5 வருட பணி முடித்து தாய்நாடு திரும்புவதாக கூறி எல்லோரையும் ஏங்க வைத்தார்....அவருடன் உரையாடும்போது...அவரின் வாழ்க்கை கஷ்டங்களையும்...கிரிக்கட் தடுக்கப்பட்டதையும் கூறினார்...என்னை நான் அசை போட்டேன்...


10 வயதில் பக்கத்து வீட்டில் பார்த்த டெஸ்ட் கிரிக்கெட் ஞாபகம் வந்து தொலைக்கிறது...எப்படியோ என்னுள் புகுந்த இந்த ஆட்ட வெறி...எப்படியெல்லாம் என்னை திருப்பியது...


அடிக்கடி கிரவுண்டில் கிடக்கும் என்னை விரட்டிய அம்மா ஞாபகத்துக்கு வருகிறாள்...


”டேய் நீ நல்லா படிச்சி முன்னேறனும்டா...எப்ப வேணா இந்த விளையாட்ட விளையாடிக்கலாம்டா...”


டீச்சருக்கு படித்திருந்த அம்மா...ஏழ்மையின் காரணமாக 5 வது வரை படித்தவரை பெரியவர்களின் அழுத்ததால் திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை இழந்ததாக அடிக்கடி கூறுவாள்...


”கண்ணு நீயாவது நல்லா படிச்சி....நல்லா வரனும்டா...விளையாட்டு கெடக்குது கண்ணு...”


அப்போதும் என்னையும் அறியாமல் கால் கிரிக்கெட் கிரவுண்டு நோக்கியே ஓடிய காலம் அது...


நான் ஆடிய அதிரடி(!) ஆட்டத்துக்காக பரிசாக கிடைத்த பேட்டை(Bat!) அடுப்பில் வைத்தார் தந்தை...அப்போது எரிந்தது அந்த கட்டை அல்ல...என் உள்ளமும்தான்...!
எப்படிப்பட்ட ஆட்டம் அது...Guard(அதுக்கு இன்னொரு பேரு God!) எனப்படும் பொருள் இல்லையெனில் பந்து பட்டு உயிர் நிலை எகிறிவிடும்....அப்படிப்பட்ட கிரிக்கெட் பந்தை(!) எதிர்கொள்ள...அப்போதைய ஆங்கில நாளிதழை குறுக்கால மடிச்சி பேண்டுக்குள் சொருகி வைத்துக்கொண்டு ஆடிய ஆட்டமைய்யா...


போகப்போக வெறி(!) ஏறிக்கொண்டே வந்ததே தவிற குறையவில்லை....


தந்தைக்கு பிடிக்காத காரணத்தால்(!)....இரவு 500 முதல் 1000 தோப்புக்கரணங்களை கண்டிருக்கிறேன்...அப்பவும்...நாளைக்கு எப்படியாவது இவங்கள ஏமாத்திபுட்டு அங்க போய் ஆடோனும்(!)...என்ற வெறி இருந்திருக்கிறது...இரவு முழுதும் கண் விழித்தாலும்...அடுத்த நாள்...வெறித்தனமான ஆட்டத்துடன் ஆடி இருக்கிறேன்...இப்போ நினைத்தாளும் சிரிப்புதான் வருகிறது...


6 அரை அடி ஆம்புரூஸ்களின்(!) பந்தை ஹெல்மெட் இல்லாமல் கடந்த காலம்...இன்னும் பசுமையாக இருக்கிறது...ஹஹா..என்ன செய்து என்ன பயன்...சில பல காரணங்களுக்காக...கல்லூரி அணியிலிருந்து கழட்டி விடப்பட்டதால் எல்லாத்தையும் இழந்தேன்...!....எல்லாம் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளும் அமைதியான குணம் இல்லாததால்...என்னை வெளியேற்றிய கோச்சை அடித்து துவைத்தது தான் மிச்சம்...


டாபிக் மாறி போயிட்டேன் பாருங்க...ஒரு யு டர்ன்...


அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது ரொம்ப சுலபம்...அப்படி நடந்துக்கறது ரொம்ப கஷ்டம்...!


விளையாட்டை அறவே வெறுக்கும் தந்தைக்கு மகனாக பிறந்தவர் இப்பூமியில் நிறைய பேர் இருக்கிறார்கள்...நான் சொல்ல வருவது ஒன்று தான்...நமக்குதான் வாய்ப்பு வழங்கப்படல...அடுத்துவரும் தலைமுறைக்காவது வழி விடுங்க...அவங்களே முட்டி மோதி எழுந்துப்பாங்க...
உடலில், மனதில் காயம் படாமல் வளரும் குழந்தை...உடலாலும் மனதாலும் கொஞ்சம் தளர்ந்தே இருக்கும் என்பது உலக நடப்பு...


ஃப்ரீயா உடு மாமே...என்ன புடிக்குமோ விளையாடட்டும்...அதுக்காக அவரு போல வர முடியுமா...இவரு போல வரமுடியுமான்னு குழந்தைகள் கிட்ட மொக்க போடாம...அவன் அவனாக வர முயற்சிப்போம்...அவ்வளவே!


வாழ்வில் மூன்று எப்பவும் வேண்டும் - உழைப்பு, திறமை, அதிர்ஷ்டம்(அது இஷ்டம்!)..இவை அனைவருக்கும் ஒன்று கூடி வருவதில்ல...முயற்சிகளாவது இருக்கட்டுமே...


கொசுறு: யாருக்கு எப்படியோ...எனக்கு வாழும் வாழ்க்கை மேல் அவ்வளவு பிடிப்பு உண்டு...அதை எப்போதும் என் குழந்தை மீது திணிக்காமல் இருப்பேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்!...அப்ப நீங்க...........
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. நான் ஆடிய அதிரடி(!) ஆட்டத்துக்காக பரிசாக கிடைத்த பேட்டை(Bat!) அடுப்பில் வைத்தார் தந்தை...அப்போது எரிந்தது அந்த கட்டை அல்ல...என் உள்ளமும்தான்...!
  //////////////////
  அடடடடா....ஒரு சச்சினை நாடு இழந்திருச்சே!

  ReplyDelete
 2. @வீடு சுரேஸ்குமார்
  வீடு சுரேஸ்குமார் said...
  நான் ஆடிய அதிரடி(!) ஆட்டத்துக்காக பரிசாக கிடைத்த பேட்டை(Bat!) அடுப்பில் வைத்தார் தந்தை...அப்போது எரிந்தது அந்த கட்டை அல்ல...என் உள்ளமும்தான்...!
  //////////////////
  அடடடடா....ஒரு சச்சினை நாடு இழந்திருச்சே!

  >>>

  யோவ் நக்கலா...!

  ReplyDelete
 3. உண்மைதான் மாம்ஸ்....! படிப்பே வராத என்னை படி...படின்னு சொன்னதாலதான் படிப்பு மேல வெறுப்பு வந்தது!

  ReplyDelete
 4. விக்கியுலகம் said...
  @வீடு சுரேஸ்குமார்
  வீடு சுரேஸ்குமார் said...
  நான் ஆடிய அதிரடி(!) ஆட்டத்துக்காக பரிசாக கிடைத்த பேட்டை(Bat!) அடுப்பில் வைத்தார் தந்தை...அப்போது எரிந்தது அந்த கட்டை அல்ல...என் உள்ளமும்தான்...!
  //////////////////
  அடடடடா....ஒரு சச்சினை நாடு இழந்திருச்சே!

  >>>

  யோவ் நக்கலா...!
  /////////////////////
  இல்லை விக்கலு..!

  ReplyDelete
 5. @வீடு சுரேஸ்குமார்

  வீடு சுரேஸ்குமார் said...
  உண்மைதான் மாம்ஸ்....! படிப்பே வராத என்னை படி...படின்னு சொன்னதாலதான் படிப்பு மேல வெறுப்பு வந்தது!

  >>>>>>>>>

  ம்ம்ம் இவனும் பாதிக்கப்பட்டு இருக்கான்...இன்னும் எவ்வளவு பேரோ!
  ................

  விக்கலா...ஹாஹா..தண்ணி குடிய்யா!

  ReplyDelete
 6. உண்மைதான், நாம் நம் கருத்துக்க்ளை சந்ததிக்குத் திணிக்கிறோம்.அது ஒருபோதும் நல்லதல்ல.

  ReplyDelete
 7. //விக்கியுலகம் said...
  @வீடு சுரேஸ்குமார்

  வீடு சுரேஸ்குமார் said...
  உண்மைதான் மாம்ஸ்....! படிப்பே வராத என்னை படி...படின்னு சொன்னதாலதான் படிப்பு மேல வெறுப்பு வந்தது!

  >>>>>>>>>

  ம்ம்ம் இவனும் பாதிக்கப்பட்டு இருக்கான்...இன்னும் எவ்வளவு பேரோ!
  ................

  விக்கலா...ஹாஹா..தண்ணி குடிய்யா!//
  எந்த தண்ணின்னும் சொல்லிப்புடுங்க!

  ReplyDelete
 8. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  உண்மைதான், நாம் நம் கருத்துக்க்ளை சந்ததிக்குத் திணிக்கிறோம்.அது ஒருபோதும் நல்லதல்ல.

  >>>>>>>>>

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அண்ணே...
  ..........

  விக்கலா...ஹாஹா..தண்ணி குடிய்யா!//
  எந்த தண்ணின்னும் சொல்லிப்புடுங்க!

  >>>>>>>>

  வெய்யில காலமாச்சே...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்ணே!

  ReplyDelete
 9. தெளிவா சொன்னீங்க மாம்ஸ் புரியுது வலி - திணிக்க வேண்டாம் என்பதே எனது கருத்தும்.

  ReplyDelete
 10. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டாலே போதும்.. நிச்சயம் சாதிப்பார்கள்..

  ReplyDelete
 11. அருமையாச் சொன்னீங்க ! அவர்கள் விருப்பப்படி வளர்க்க வேண்டும் + கண்காணிப்புடன். அதுவும் இப்ப உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தரவா வேண்டும். அவர்களிடமிருந்து நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் !

  ReplyDelete
 12. கொஞ்சம் சோகம்....

  கொஞ்சம் வீரம்.....

  நெறைய பேரோட கிரிக்கெட் வரலாறு இதுவாதான் இருக்கும்........

  நீங்க தோணி படம் பாருங்கள்

  ReplyDelete
 13. விளையாட்டை விளையாடவிடணும் படிப்பை வைத்து  தினிக்கக்கூடாது சூப்பர் அட்வைஸ் மாம்ஸ்!

  ReplyDelete
 14. உங்கள் பதிவுகளில் இது மார்ஷல்...ஹோல்டிங்...ராபர்ட்ஸ்...கார்னருக்கு எதிரில் ஆடி அடித்த இரட்டை சதம்...தொடர்ந்து இப்படியே எழுதுங்கள்...

  பத்தாவதில் அம்மா விளையாட விடாத நாட்களில் பசங்க ரோட்டில் ஸ்டம்பை இழுத்திட்டு போகும் சத்தம் கேட்டு கதறிய நினைவுகள்...

  மாவட்ட தேர்வுக்கு அனுப்பாததால் மூக்கில் ரத்தம் வரும் வரை தொடர்ந்து அழுத நினைவுகள்...

  கூட ஆடினவங்கல்லாம் அண்டர் 16 தமிழ்நாடு ஆடினப்போ துடித்த நினைவுகள்...

  எல்லாம் உங்களைப்போல் என்னையும் மாற்றித்தான் விட்டன..

  என் மகளின் வெற்றிகள் கொஞ்ச கொஞ்சமாய் அந்த ரணங்களை மறக்கடித்து விட்டன...

  இருந்தாலும் ALL IS WELL...-:)

  ReplyDelete
 15. எனக்கு பிடித்த வலையுலகின் பிளாக்குகள் - http://ideasofharrypotter.blogspot.com/2012/06/01_18.html

  ReplyDelete
 16. அருமையான பதிவு

  ReplyDelete
 17. மாப்ள சரியா சொல்லியிருக்க? அப்படியே நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வந்துபோ.

  ReplyDelete
 18. இளம் அகவையில் இப்படி நடந்த கொடுமைகள் உண்மையில் உள்ளத்தை பதிக்கவே செய்கிறது . பசுமையான நினைவுகள் ....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி