குப்பையிலிருந்து சக்தி! - வியட்னாம்!

வணக்கம் நண்பர்களே...
அதிகப்படியான வேலைப்பளு மற்றும் பயணத்தின் காரணமாக பதிவுகள் எதுவும் கொஞ்ச காலமாக வலையேற்றவில்லைன்னு சொன்னா நம்பிடாதீங்க...எல்லாம் கொஞ்சம் கொழுப்பு, கொஞ்சம் திமுரு, சோம்பேறித்தனம் உடம்பில் ஏறிடிச்சிங்க...இருங்க அதை கொஞ்ச கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன் ஹிஹி!...


கடந்த வாரம் ஒரு பயணம் சென்று இருந்தேன்...அதன் முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் அப்போதைக்கு எனக்கு தெரியாது....போகப்போக அந்த விசயத்தை அறிய ஆரம்பித்ததும்...என்னுள் இருக்கும் தேடல் வலுப்பெற ஆரம்பித்தது..


அதாவது சுருக்கமாக சொல்வோமாயின்...குப்பைகளை வீணாக்காமல்(!) அதிலிருந்து ரீசைக்கிளிங்க் முறையில் பொருள்களை தயாரிப்பது மற்றும்...எரிக்கப்படும் தீயின் சக்தியை உந்து சக்தியாக மாற்றுவது என்பவை...எனக்கு அறிவியல் சம்பந்தப்பட்ட அறிவு(!) குறைவு என்றாலும் ஆர்வம் உண்டு...
எங்கள் பயணம் கிட்ட தட்ட 150 கிமீட்டருக்கு சென்றது ஹனோயில் இருந்து...சென்றடைந்த இடத்தின் பெயர்...தாங்க்வா


சக்தி வாய்ந்த நகரம் ஏன் எனில், Le Loy எனும் மிகச்சிறப்பு வாய்ந்த வீரரை தருவித்த பூமி....பொதுவாக சொல்லப்போனால்...அடுத்த மாவட்ட மக்கள் இந்த  பூமியின் புதல்வர்களை கண்டு சிறிது மிரள்வார்கள்...சிறந்த அறிவாளிகள்...சிறந்த வியாபாரிகள் என்பதும் ஒரு காரணம்...ஒரு யு டர்ன்...!
இந்த நகரத்தின் குப்பைகள் ஒரு இடத்தில் சேமிக்கப்படுகின்றன...பின்பு எரிக்கப்படுகின்றன(!)...இப்போது செய்யப்படும் செயல் மூலம் தரம் பிரிக்கப்படும் இயந்திரத்தின் மூலமாக...குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டும் என்றால்...பிளாஸ்டிக், உலோகம் மற்றும் பல...
இப்படிச்செய்யப்படுவதால்...ரீசைக்கிளிங் எனப்படும் விசயம் சாத்தியப்படுகிறது...பிரிக்கப்பட்ட பொருள்களில் தேவையில்லாதவைகள்... எரிகலனால் எரிக்கப்பட்டு மீண்டும் சக்தியாக மாற்றப்படுகின்றன...இவை எளிதில் உபயோகப்படுத்தப்படும் விதமாக சேமிக்கப்படுகின்றன...இவைதான் எளிதான ...மற்றும் நான் அறிந்தவகையான விசயம்...


எப்பவும் போல இல்லாமல் சிலுக்கு சிக்கான் சிக்கான்னு பயணம் பற்றிய பதிவை சீக்கிரத்தில் இடுகிறேன்...


கொசுறு: உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. குப்பையில் இருந்து மின்சாரம் இங்க தமிழகத்தில் சில இடங்களில் எடுக்கின்றார்கள் பெரிய அளவில் இல்லை....

  ReplyDelete
 2. நெல்லையிலும் இத்தகைய பிளாண்ட் அமைய உள்ளதால், உங்கள் பதிவின் லிங்கை என்னுடைய மாநகராட்சி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி.

  ReplyDelete
 3. உபயோகமான பதிவு மாம்ஸ்!

  எங்கள் கிராமத்தில் இப்படி ஒரு கழிவு மின்நிலையம் அமைக்க ஆவண செய்யனும்!

  ReplyDelete
 4. எங்கும் குப்பைகள் நிரம்பி கிடக்கிறது, இது போன்ற மறுசுழற்சி/மாற்று ஏற்பாடுகள் பெரிய அளவில் பரவலாக கொண்டு வரப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும். செய்யணுமே ??!!


  //நெல்லையிலும் இத்தகைய பிளாண்ட் அமைய உள்ளதால், உங்கள் பதிவின் லிங்கை என்னுடைய மாநகராட்சி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்//

  அண்ணா களத்துல இறங்கிட்டார் !! இந்த லிங்க் அனுப்புறது ஒரு ஆரம்பம் தான்... :))

  அருமையாக தகவல். நன்றிகள்.

  ReplyDelete
 5. மாம்ஸ் ரீ என்ட்ரி அதிரடி தான் உபயோகமான தகவலுடன்

  ReplyDelete
 6. //அதிகப்படியான வேலைப்பளு மற்றும் பயணத்தின் காரணமாக பதிவுகள் எதுவும் கொஞ்ச காலமாக வலையேற்றவில்லைன்னு சொன்னா நம்பிடாதீங்க...எல்லாம் கொஞ்சம் கொழுப்பு, கொஞ்சம் திமுரு, சோம்பேறித்தனம் உடம்பில் ஏறிடிச்சிங்க
  //

  அப்பாடி உண்மைய ஒத்துகிட்டிங்க

  ReplyDelete
 7. நல்ல தகவல் .. நம்ம அரசுக்கு தெரிய வேண்டிய தகவல்

  ReplyDelete
 8. எங்க மேயருக்கு இந்தப்பதிவை பிரிண்ட் அவுட் எடுத்து சேர்க்கப்போறேன்.

  ReplyDelete
 9. நல்ல தகவல் பரிமாற்றம், நன்றி விக்கி .

  ReplyDelete
 10. அசத்துடா மக்கா உன் சேவை நம் இந்தியாவிலும் தொடர வாழ்த்துகிறேன்....!!!

  ReplyDelete
 11. தாங்க்வா உன்னை என்றும் தாங்கட்டும் நன்றியுடன்.....!

  ReplyDelete
 12. நல்ல தகவல் மாம்ஸ்!

  ReplyDelete
 13. திடீர்னு உங்கள நாடு கடத்திடாங்கலோனு நெனச்சுட்டேன்.. வந்துடீங்களா.. ரைட். நானும் கேள்வி பட்டிருக்கிறேன் குப்பையிலுருந்து மின்சாரம் தயாரிப்பதை..

  ReplyDelete
 14. நல்ல தகவல்!

  ReplyDelete
 15. சலாம் சகோ.விக்கி,
  கொஞ்ச நாளா காணோமே.. வெக்கேஷன் போலன்னு நெனச்சேன்.!

  இப்படி ஒரு சூப்பர் பதிவு போட்டு அசத்திட்டீங்க..!

  குப்பைகளில் முக்கியமா பிளாஸ்டிக் இருக்கும். அவற்றை எரிக்கும் பொழுது 'டை ஆக்சின்' வெளியாகும். இது கேன்சர் உண்டாக்கும். இதுதான் விஞ்ஞானிகள் அஞ்சும் பகுதி. இதில் எந்த லீக்கும் இல்லாமல் அந்த ரெண்டம் நம்பர் கலனில் சரியாக பிரித்துவிட்டால்... முழுமையான பாதுகாப்பான மின் நிலையம்தான இது..!

  தெளிவான விளக்கத்துடன் அமைந்த பதிவுக்கு நன்றி சகோ..!

  ReplyDelete
 16. யோவ் மாப்பு, நீ விஞ்ஞானியாப்பா? அட தெரியாமப் போச்சுலே, இருலே நம்ம பிரனாப்பு ஜி ஜனாதிபதியானதும் அவார்டு கொடுக்க சொல்லிடுவோம்.

  ReplyDelete
 17. அதிகப்படியான வேலைப்பளு = FACEBOOK ....ஹிஹிஹிஹி...

  ReplyDelete
 18. வீண்குப்பையையும் மறுசுழற்ச்சி செய்யும் வளமான நாடு வியாட்னாம் என்று சொல்லுங்க மாம்ஸ்!

  ReplyDelete
 19. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி