குழந்தைகள் தற்கொலை விரும்பிகளா!

வணக்கம் நண்பர்களே...
பொதுவாக எல்லோரும் தன் சுயத்தை வைத்து சொல்வதை அஜீரணமாக கருதுவதால்...நண்பரின் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று சொல்லிச்செல்வது இயல்பு(!)...நானும் முதலில் யோசித்தேன்...பின் என்ன இருக்கு பெரிசா சொல்லிப்புட என்பதால் இந்த நிகழ்ச்சிகளின் உருவத்துக்கு சொந்தக்காரன் நானே என்று சொல்லிக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை...


சிறுவயதில் எத்தனை பேர் தன் தாய், தந்தை அன்பு கிடைக்காமல் வருந்தி இருக்கிறார்களோ தெரியாது...நான் மிகுதியாக வருந்தி இருக்கிறேன்(கூடவே இருந்தும்!)...நிற்க..


சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில்...அலைபேசியில் நண்பர் ஒருவர் தன் 10 வயது குழந்தையிடம் அளவளாவிக்கொண்டு இருந்தார்....


”ஏம்மா அழற...இதெல்லாம் உன் நன்மைக்கு தான்...நீ படிச்சி பெரிய ஆளா வரணும்னு தான் எங்களோட ஆசை...”


பேச்சை முடித்து திரும்பிய அந்த நண்பர் என்னை பார்த்து பேச ஆரம்பித்தார்....


என்னய்யா உன் குழந்தையை இன்னும் போர்டிங்ல சேக்கலயா...


எலேய் அவனுக்கு 6 வயசுதான்லே ஆகுது...
உனக்கு தெரியாதா...5 வயசுல இருந்தே பாத்துக்கறாங்களாம்...என் மகளை இந்தியா போய் சேத்துட்டு வந்துட்டேன்...அவளுக்கு இப்போ 10 வயசு...வருடத்துக்கு 2.5 லட்சம் தான்(!) செலவு...எல்லா வித விளையாட்டுகளும்...படிப்பும் இருக்கு...அவள் பெரிய ஆளா வருவா...அதுவும் இல்லாம நாம் இருக்க வேலை பிசில அவள எங்க கவனிக்கறது..!


ஓஹோ...


என்ன பதிலையே காணோம்..


இல்ல நண்பா...எனக்கு அதில் விருப்பம் இல்லை...எதோ குழந்தைக்கு நன்கு புத்தி தெரிந்த பிறகு சேர்ந்தாலாவது பரவாயில்லை..அன்புக்கு ஏங்கிடுங்கய்யா...


எந்த உலகத்துல இருக்க...இப்பல்லாம் குழந்தைங்க ரொம்ப சின்ன வயசுலயே...அறிவுல ஜொலிக்கிறாங்கே...


(நான் எப்படி என் கருத்தை இவனுக்கு சொல்லி புரிய வைப்பது...ஏற்கனவே மாடர்ன் உலகம் என்று இங்கிருக்கும் பலர் தங்கள் குழந்தைகளை இப்படி இந்தியாவில் சேர்ந்து வந்து விட்டு இருக்கிறார்கள்...!)


ஒரு சின்ன பின்னோக்கி போதல் -


சரியா படிக்கலன்னா(!)...மலத்தை கொண்டுவந்து சாப்பிடும் தட்டில வச்சிப்புடுவேன் என்ற மனிதரை(!) ஏறிட்டு பார்க்க தைரியம் இல்லாத 10 வயது குழந்தையாகிய நான்...!


எத்தனை முறை மூச்சை இழுத்து பிடித்து இறக்க முடியாமல் தவித்த ஞாபகங்கள்....
பெற்றோரிடம் இருந்த போதே பல நேரங்களில் தோல்விகள்...தம்மை தழுவும்போது எளிதில் உணர்ச்சி வசப்படும் குழந்தைகள்...எதாவது செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது...அதுவும் பெற்றோர் இல்லாத தனி உலகத்தில்(!) குறைந்தது 16 (இது இன்னும் சிரமம்!) வயதுக்கு மேல் என்றால் கூட பரவாயில்லை என்பது என் கருத்து!...


எனக்கு தெரிந்து பல நண்பிகளின்(!) தற்கொலைகள் காதல் என்ற விஷயத்துக்காகவே இருந்திருக்கிறது...ஆனால்...இவர்களின் குழந்தைப்பருவத்தில் மிகுதியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பது அவர்களுடன் நான் அளவாளாவிய போது கண்டு கொண்டவைகள்...!


இந்த இரு வேறு விதமான கோணங்களும் சரியான முடிவை பல நேரங்களில் கொடுக்க தவறுகின்றன...


வெளியில் வெட்டி ஞாயம் பேசும நம்மில் பலர் குழந்தைகளின் முயற்சிகளை வரவேற்பதில்லை...அதிலும் தங்களின் சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே காரணத்தாலேயே(!) பலர் குழந்தைகளை ஹாஸ்டல் எனும் இடம் நோக்கி நகர்ந்துவதாகவும் தோன்றுகிறது...


தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டிய வாழ்க்கை...சகதியாக மாறிப்போவது யாரால்...?


இது என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே...உங்களின் கருத்துக்கள் முடிந்தால் சொல்லிட்டு போங்க...


குழந்தைகளை நாமே அழுத்தி தள்ளிவிட்டு...கெட்டு போயிட்டான்(ள்) என்பது என்ன விதமான மனோ பாவம்...புரியவில்லை...


கொசுறு: அஞ்சலி அஞ்சலி அஞ்சலி...சின்ன கண்மணி கண்மணி கண்மணி....(இது ஓல்டு பாட்டுப்பா!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. நன்றாக சொன்னீர்கள் விக்கி ,குழந்தைகள் மன அழுத்தம் காரணமாக செய்யும் செயல்கள் எல்லாவற்றிக்கும் காரணம் பெற்றோர்களே .

  ReplyDelete
 2. குழந்தைகளின் உலகம் தெளிந்த நீரோடையாக இப்பொழுது இல்லை காட்டாறாக உள்ளது.....நம் காலத்தில் பயங்கர கனவுகளாக இருந்த செயல்கள் இன்று கேம்ஸ் வடிவில் இருக்கின்றது...தொலைக்காட்சி கார்டூன்கள் கனிசமான நேரத்தை குழந்தைகளின் உலகத்தில் புகுந்து விடுகின்றது...அவர்களின் மனம் கண்ணாடி போல எளிதில் பிரதிபலிக்கும்!

  ReplyDelete
 3. குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் அரவணைப்பில்தான்
  இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாகப் பெண் பிள்ளைகள்
  ஆனாலும் நவீன உலகில் பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில்
  காட்டும் அக்கறைபோல் அவர்களுக்குக் கிட்டவேண்டிய அரவணைப்பை
  சரியான நேரத்தில் கொடுக்கத் தவறிவிடுகின்றார்கள் இதனால் வரும்
  பாதிப்புகளுக்கு நீங்கள் சொல்வதுபோல் பெற்றோரே காரணம் என்பது
  எனது கருத்தும்கூட.காலத்திற்கு ஏற்ற நல்லதோர் பகிர்வு .மிக்க நன்றி
  சகோதரரே பகிர்வுக்கு

  ReplyDelete
 4. உண்மைதான் .. இரண்டு வயதில் பாசம் தேவைப்படும் நேரத்தில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரை என்ன சொல்ல்வது

  ReplyDelete
 5. நீங்க சொல்வது 100% உண்மை மாப்ள...

  ReplyDelete
 6. நானும் சின்னவயதில் இருந்து ஹாஸ்டலில் படித்தவன்தான் ....
  நீங்க சொன்னது எல்லாம் உண்மை .............

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு சகோ.4 வயது முதலே குழந்தைகளுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது.பெற்றோர்களின் பராமரிப்பில்தான் குழந்தைகள் இருக்கனும்,அதுவும் அம்மாவின் அரவணைப்பில் இருந்தால் கூடுதல் சிறப்பு.ஒருநாள் விடுமுறை கொடுத்தால் ,மறுநாளே வந்து,’டீச்சர் எப்படி நீங்கள் 35 பிள்ளைகளையும் தினமும் பார்த்துக்கொள்(ல்)கிறீர்கள்னு??எங்களால் ஒருநாள்கூட தாக்குப்பிடிக்கமுடியலையேன்னு’பெற்றோர்களே கேட்பது ,என் புருவங்களை உயர்த்தவே செய்யும்!

  ReplyDelete
 8. படிக்கும்போது வேதனையா இருக்கு .தன் பிள்ளைகள் என்னவாக வரணும்னு ஆசைபடும் பெற்றோர் அந்த பிள்ளையின் நியாயமான ஆசைகளை கூட நிறைவேற்றுவதில்லை (
  அளவுக்கதிகமா அடக்கியாள்வதே பின்னாளில் அவர்களை முரட்டு சுபாவத்துக்கு வழி வகுக்கும் .
  குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரையிலும் தாயின் தகப்பனின் அரவணைப்பில் இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது .
  பணத்தால் சிலவற்றை பெற முடியாது என்பதை சிலபெற்றோர் உணரனும்

  ReplyDelete
 9. உன் தாழ்மையான கருத்து மிகவும் நியாயமானதே மக்கா...!!!

  ReplyDelete
 10. மிகவும் உண்மை தான் நண்பரே...
  சுதந்திரமாய் உலாவும் குழந்தைகளுக்குள் மன அழுத்தம் என்பதை உள்ளிடுவதே பெற்றோரும், ஆசிரியர்களும் தான்!!

  நான் LKG படித்த போது எழுத்துகளை மட்டுமே எழுதியதாக ஞாபகம்.. இன்றோ அவர்களுக்கு பொது அறிவு எல்லாம் வைக்கிறார்களாம்!!! அவர்களுக்கு பொது அறிவு வைப்பவர்களின் உலக அறிவு தான் எல்லாவற்றிற்கும் காரணம்!

  ReplyDelete
 11. மிக அருமையான பதிவு! அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை ஹாஸ்டலில் அடைப்பது பாவம்!

  ReplyDelete
 12. தன்பிள்ளை எல்லாவற்றிலும் முதலாவதாய் வரவேண்டும்,அதுவும் தான் கஷ்டப்படாமலே!

  ReplyDelete
 13. நண்பரின் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று சொல்லிச்செல்வது இயல்பு//

  யோவ்...உங்க பாதி போஸ்ட் அப்படித்தான் இருக்குய்யா...

  நல்ல அலசல்...சில மறுமொழிகளும் அதை Comple(i)ment செய்தன...

  ReplyDelete
 14. குழந்தைகள் தானாக ஏதும் செய்வதில்லை ...பெற்றோர்களின் வளர்ப்பும் ,நடத்தையுமே காரணமாக அமைகின்றது....குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் எதையும் நாம் செய்யக் கூடாது...

  அப்படி பாதிக்கும் வகையில் செய்த செயலை இங்கே பாருங்கள் பிஞ்சு உள்ளம் துடிப்பதை பாருங்கள் -http://tvpmuslim.blogspot.in/2012/06/blog-post_30.html

  புதிய வரவுகள்:
  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
  ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி