பட்டினி போட்ட மனைவி(!?) - life style!வணக்கம் நண்பர்களே...
இது திருமணமானவர்களுக்கான பதிவு...தொடருபவர்கள் தொடரலாம்...


சமீபத்தில் சந்தித்த தம்பதிகளின் உண்மை நிகழ்வே இந்த பதிவு...


அந்த தம்பதிகள் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இணைபிரியாத காதலர்களாக(!) தங்களை காட்டி வந்தனர்...எப்போதும், எங்கு பொது நிகழ்ச்சிக்கு வந்தாலும் தங்கள் வீட்டில் அழைக்கும் செல்லப்பெயர்களையே பயன்படுத்துவர்...கவனிப்பவர்கள் சில நேரம் கொஞ்சம் வெறுப்புடனே இவர்களை அனுகி வந்தனர்...


இதையெல்லாம் கொஞ்சம் கூட சட்டை செய்யாது வந்தனர் அந்த இணை...ஒரு நாள் வீட்டுக்கு எங்களை சந்திக்க வருகிறோம் என்று சொன்னார்கள்...வந்தார்கள்...எப்போதும் போல அரட்டை அடித்து நேரம் கடத்தினோம்...கொஞ்ச நேரத்தில் மருத்துவம்..அதாவது குழந்தைப்பேறு என்ற விஷயத்துக்கு வந்தனர்...தங்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது என்றும்...என்ன காரணத்தினாலோ இன்னும் குழந்தைப்பேறு கிடைக்கப்பெறவில்லை என்று வருத்தமுற்றனர்...
நாமும் இங்கே தெரிந்த மருத்துவ மனை சொன்னோம்(!)...அதனை அறிந்துகொண்டு நன்றி சொல்லிச்சென்றனர்...சில காலம் கழிந்தது...வீட்டம்மாவிடம் பேச ஆரம்பித்த(போனில்!) அந்த குடும்பத்தலைவி தன் குடும்ப அந்தரங்களை(!) சொல்ல ஆரம்பித்தார்கள்...தனக்கு வேண்டாத வேலை என்று என் வீட்டம்மா மறுத்தாலும்(!)...அவரின் அன்பு தொல்லையால்...அவருக்கு அடிக்கடி அன்பான ஆதரவு மிக்க விஷயங்களை சொல்லி ஆசுவாசப்படுத்தி வந்தார்...


பல காலமாக என்னிடம் இதைப்பற்றி சொல்லாமல் இருந்தார்...தவிர இது பெண்களின் பிரச்சினை என்பதாக இருந்ததால் என்று நினைத்திருக்கலாம்...கொஞ்ச காலம் கழித்து விவரங்கள் தெரிய ஆரம்பித்தது...


அதாவது கணவன் குழந்தைப்பேறு விரும்பாத வாறே நடந்து கொள்வதால்(!)...தான் மிக மனச்சோர்வு அடைந்து விட்டதாக வெளிப்படையாக பல முறை சொல்லி வந்து இருக்கிறார்...இதில் அந்த குடும்பத்தலைவியின் கணவர் நல்ல நண்பராக இருந்த போதும்...இது சென்சிடிவ்வான விஷயம் என்பதால்...அட்வைஸ் கொடுக்க நாம் யார்..என்று கேட்டு விடுவாரோ என்றும்...உலகத்தில் இலவசமாக கிடைப்பது ”அட்வைஸ்” என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் நான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை..


அவர்களின் 6 வது வருட திருமணநாள் என்பதற்காக சந்திக்கும்போது தங்களின் வேதனைகளை கொஞ்ச கொஞ்சமாக சொல்லி இருக்கிறார் அந்த கு.தலைவி...அப்போது தான் தனக்கு ஆண்கள் என்றால் பிடிக்காது என்றும் அதுவே ஒரு நிலையாக...உறுதியாக மாறி 32 வயதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததாகவும்...தாயின் வற்புறுத்தலாலும்(!)...அடுத்து இரு தங்கைகளின் வாழ்வுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற காரணத்துக்காக திருமணத்துக்கு ஒத்து கொண்டதாக கூறினாராம்...ஆனால், மணத்துக்கு பின் தன்னால் உண்மையான அன்பை காட்ட முடியாமல் இருந்திருக்கிறார்...


கிட்ட தட்ட 2 வருடம் கணவரை அருகிலேயே சேர்க்காமல்...எதேதோ காரணம் சொல்லி இருக்கிறார்...பின் இயந்திரத்தனமாக அன்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு இருக்கிறார்....சமீபத்தில் எடுத்த எல்லா டெஸ்டுகளிலும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் வந்திருக்கிறது...


இதற்கு இடையில் அவரின் மாதவிடாய் சுற்று பிரச்சினையாகி வருகிறதாம்...2 அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவதாகவும்...38 வயதை நெருங்கி விட்ட படியால் நின்று விட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர் அறிவுருத்தி இருக்கிறார்...
இப்போது மிகப்பெரிய மன அழுத்ததில் இருக்கிறார்...எங்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை...அதுவும் அவர் முது நிலை பட்டதாரி...எது சொன்னாலும் அதற்க்கு எதிர்ப்படையான பதில்களை எப்போதும் விடுவார்...இதன் காரணமாக இருவரின் உன்னத வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்துள்ளது...தன் கணவர் மேலேயே பொய்யான தகவல்களை சொல்லி வந்து இருக்கிறார்...இது அவர் தம் கணவருக்கு தெரியாது...


கணவரை ஒவ்வொரு மணிநேரமும் கண்காணித்து கொண்டே இருந்து வந்துள்ளார்...கணவர் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டுள்ளார்..


இப்படி தன் வாழ்வையும் கெடுத்துக்கொண்டு...துணையின் வாழ்வையும் இருட்டில் வைக்க எப்படி மனம் வருகிறது என்று புரியவில்லை..


கொசுறு: இதற்கு முடிந்தால் தங்களின் கருத்துக்களை பகிரவும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. மனரீதியான பிரச்சனையை யாரும் எளிதில் கண்டுபிடிக்கமுடிவதில்லை...பிரச்சனை பெரிதாகும் போதே வெளிப்படுகிறது!

  ReplyDelete
 2. எனது நண்பரின் நண்பர் இப்போது அவர்கள் எங்களுக்கும் வேண்டிய நணபர் ஆகிவிட்டார். அவர்களுக்குள்ளும் இதே போல பிரச்சனை நாங்கள் எந்த அளவிற்கு அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட்டு ,அட்வைஸ் எந்த விதத்தில் சொல்வது என்பது தெரியாமல் தவித்து நிற்கிறோம் அவர்களும் நம் நெல்லையை சார்ந்த தமிழர்கள் தான்

  ReplyDelete
 3. நல்ல பதிவு! அதுவும் பதியதாக
  மணம் செய்து கொண்டவர்கள்
  நிச்சியம் படிக்க வேண்டிய ஒன்று!

  நலமா! நண்பரே!!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. அவருக்கு ஆண்கள் என்றால் பிடிக்காததற்க்கு அடிமனதில் சிறுவயதில் ஏற்பட்ட சில பாதிப்புகள் ஒளிந்திருக்கும். முதலில் அதை கவுன்சிலிங்க் மூலம் சரிசெய்தாலே அவரால் இல்லற சுகத்தில் முழுமையான ஈடுபாட்டோடு ஈடுபட முடியும். ஆனால் அவருடைய மெனோபாஸ் காலமும் நெருங்கவிட்ட படியால் அதுவும் ஒருவகையான மனநோயை உண்டுபண்ண வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ லேட் மேரஜ் ஆகையால் இனி குழந்தை பிறந்து அதை வளர்த்து வரும் போது குழந்தைக்கு 20 வயது ஆகும் போது அம்மாவுக்கு 60 வயது ஆகிவிடும்....முதல் கோணல் முற்றும் கோணல்.

  ReplyDelete
 5. அவருக்கு உளவியல் கவுன்சலிங் அவசியம். மனோதத்துவ நிபுணரைப் பார்த்து தொடர்ந்து செய்தால் சரிசெய்து விடலாம்.

  ReplyDelete
 6. @வீடு சுரேஸ்குமார்

  “வீடு சுரேஸ்குமார் said...
  மனரீதியான பிரச்சனையை யாரும் எளிதில் கண்டுபிடிக்கமுடிவதில்லை...பிரச்சனை பெரிதாகும் போதே வெளிப்படுகிறது!”

  >>>>>>>>>>>>>>

  இதை தங்களின் கல்வி கொண்டே பார்க்கிறார்கள் அதுவே முதல் தடை!

  ReplyDelete
 7. @Avargal Unmaigal

  Avargal Unmaigal said...
  எனது நண்பரின் நண்பர் இப்போது அவர்கள் எங்களுக்கும் வேண்டிய நணபர் ஆகிவிட்டார். அவர்களுக்குள்ளும் இதே போல பிரச்சனை நாங்கள் எந்த அளவிற்கு அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட்டு ,அட்வைஸ் எந்த விதத்தில் சொல்வது என்பது தெரியாமல் தவித்து நிற்கிறோம் அவர்களும் நம் நெல்லையை சார்ந்த தமிழர்கள் தான்

  >>>>>>>>

  ஒரு நிலைக்கு மேல் பேசுவது மிக பிரச்சினையில் போய் முடிகிறது நண்பா!

  ReplyDelete
 8. @புலவர் சா இராமாநுசம்

  புலவர் சா இராமாநுசம் said...
  நல்ல பதிவு! அதுவும் பதியதாக
  மணம் செய்து கொண்டவர்கள்
  நிச்சியம் படிக்க வேண்டிய ஒன்று!

  நலமா! நண்பரே!!

  புலவர் சா இராமாநுசம்

  >>>>>>>

  அண்ணே நான் நலம் தங்கள் நலன் அறிய ஆவல்...நன்றி!

  ReplyDelete
 9. @Vijayan K.R

  Vijayan K.R said...
  அவருக்கு ஆண்கள் என்றால் பிடிக்காததற்க்கு அடிமனதில் சிறுவயதில் ஏற்பட்ட சில பாதிப்புகள் ஒளிந்திருக்கும். முதலில் அதை கவுன்சிலிங்க் மூலம் சரிசெய்தாலே அவரால் இல்லற சுகத்தில் முழுமையான ஈடுபாட்டோடு ஈடுபட முடியும். ஆனால் அவருடைய மெனோபாஸ் காலமும் நெருங்கவிட்ட படியால் அதுவும் ஒருவகையான மனநோயை உண்டுபண்ண வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ லேட் மேரஜ் ஆகையால் இனி குழந்தை பிறந்து அதை வளர்த்து வரும் போது குழந்தைக்கு 20 வயது ஆகும் போது அம்மாவுக்கு 60 வயது ஆகிவிடும்....முதல் கோணல் முற்றும் கோணல்.

  >>>>>>>>>

  எவ்வளவு தான் படித்திருந்தாலும்(!)...தனக்கு என்ன பிரச்சினைன்னு தெரியாமல் இருக்கிறார்கள்...இதில் உதவி செய்யப்போக...என்னை பைத்தியம் என்கிறீர்களா....எனக்கு அட்வைஸ் தேவையில்ல என்கிறார்...என்ன பண்ண !

  ReplyDelete
 10. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அவருக்கு உளவியல் கவுன்சலிங் அவசியம். மனோதத்துவ நிபுணரைப் பார்த்து தொடர்ந்து செய்தால் சரிசெய்து விடலாம்.

  >>>>>>>>>

  அதற்க்கு ஒத்து வந்தால் சந்தோஷமே...அதிலும் தான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று அடமண்டாக இருப்பவரை என்ன சொல்லி புரிய வைப்பது!

  ReplyDelete
 11. நீங்க எப்பவுமே இப்படித்தானா...???

  ReplyDelete
 12. ////இது திருமணமானவர்களுக்கான பதிவு...////இப்புடி கேட்டை போட்டால் எப்புடி மாம்ஸ் ஆகாத நாங்க என்ன பண்ணுறது(ஜய் பதிவை படிக்காம கமண்ட் போடக்கூடிய பதிவா இப்புடி தெனம் போட்டா ஜாலி.....)

  ReplyDelete
 13. இது திருமணமானவர்களுக்கான பதிவு..//

  இன்னும் யூத்துன்னு சொன்னா நம்ப மாட்டீங்க...

  புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுலே யாரும் நுழைஞ்சு எதையும்
  CURE பண்ண முடியாதுங்கறது...என்னோட அனுபவத்தில புரிஞ்சது...

  எல்லாம் அவங்க ரெண்டு பேர் கையில தான் இருக்கு....

  ReplyDelete
 14. இது போன்ற பெண்கள் அமெரிக்காவில் ..

  அதிகமாக காண படுகிறார்கள் ..தன்னை

  ஆண்கள் அணுக கூடாது என ஆண்களை போல்

  தன்னை தோற்றத்தில் மாற்றிகொல்வதுடன்

  ஒரு பெண்ணையே துணையாக்கி கொள்கிறார்கள்

  தனக்கு துணையாக வரும் பெண்ணின் உடலாசையை கூட

  செயற்கை தனமாய் தீர்த்து வைக்கிறார்கள் ..ஆணை கண்டாலே

  ஆகாது ..அது சரி ஆறு வருசமா மனுஷன் எப்படி பொறுமையா

  இருக்கிறாரு ..அவரை ரொம்ப நல்லவரு என்று சொல்வதா ..பாவம்

  ஆண் பாவம் பொல்லாதது ..?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி