பில்லா - 2 - நான் வில்லனாகினேன்!~

வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவு என் பார்வையில் எனக்கு தோன்றிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அன்றி விமர்சனம் எனும் வடிவம் அல்ல...அந்த அளவுக்கு தகுதி எனக்கில்லை...


”என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா”


இது தான் பலரின் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது...இது தான் வாழ்க்கை என்று செக்கு மாடு சுற்றி வருவது போல வருபவர்கள் மத்தியில்(!)...ரிஸ்க் மட்டுமே வாழ்க்கை....அதை வைத்து தான் உலகம் இயங்குகிறது என்பதை கருவாக கொண்ட படம்...


இணையத்தில் பல இடங்களில் இந்தப்படத்தின் கதையை கடித்து எறிந்திருந்தனர்...அதனால் உங்களுக்கு கதை சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன்...இந்த படத்தில் என்னை பாதித்த விசயங்களை மட்டும் சொல்லி விட்டு செல்லவே இந்த பதிவு...


எனக்கு இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதையே தான் நானும் திருப்பி கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்...அப்படிப்பட்ட சமூகத்தில் அகதியாக்கப்பட்டது என் குற்றமா...சிறுவயதில் சூழ்நிலை காரணமாக தவறான(!) பாதையில் அடி எடுத்து வைத்தது தவறு என்று நான் நினைக்கவில்லை...மாறாக அந்த தவறை சரியாக செய்வது எப்படி என்று மட்டுமே நினைத்திருக்கிறேன்...!


பில்லாவை விசாரிக்கும் போது ஆங்கிலத்தில் எந்த அளவுக்கு தெனாவட்டா அல்பசீனோ பதில் சொல்வாரோ அதை ரத்தின சுருக்கமாக தமிழில் கொடுத்தது..சிறப்பு..
மனதை பாதித்த வரிகள்... 


தீவரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்...போராடிட்டு இருக்குறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதி...ஜெயிச்சிட்டா போராளி...


நாங்க அகதிங்கதான் அனாதைங்க இல்ல...


நல்லவங்கள கண்டு பிடிக்கறது தான் கஷ்டம்...!


மத்தவங்களோட பயம் நம்ம பலம்...மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்...


”அடியாள் கிட்ட மறைச்சி பேச வேண்டிய அவசியம் இல்ல...


டிமிட்ரியோட கன்சைன்மண்ட காப்பாத்தி கொடுத்த போது நண்பனா தெரிஞ்ச நான் இப்ப அடியாளா தெரியிறனா...”


பில்லா பழகுனா உயிர கொடுப்பான்...


உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்...உயிரை பணயம் வச்சி வேலை செய்றவனுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு...


எமோசனலா இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதே.... - உண்மையான நண்பன் இவன்...


இப்பதான் நாம சரியான முடிவு எடுத்து இருக்கோம்(!)...எவ்ளோ சம்பாதிச்சி கொடுத்து இருப்போம் அவனுக்கு - துரோகியின் வார்த்தைகள்...


இது ஆசை இல்ல பசி.......


இதுவரை காட்டிக்கொடுத்தவங்க எல்லாமே கூட இருந்தவங்க தான்...!


என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் தெனாவட்டா நடிச்சா பொத்திக்கிட்டு பாத்திட்டு சூப்பருன்னு சொல்லும் மக்கள் அதே நம்ம ஆளுங்க நடிச்சா குறை கண்டு பிடிப்பது தான் வாடிக்கை...(நான் உட்பட...200 வருட காலனி ஆதிக்கம்!)


பில்லா - நகைச்சுவை படம் அல்ல...பலரின் வாழ்வில் மறைந்திருக்கும் கதை!


கொசுறு: மீண்டும் சொல்கிறேன் இது விமர்சனம் அல்ல...தனி மனிதனின் பார்வை மட்டுமே...இவை என் கருத்துக்கள் மட்டுமே எல்லோரும் இப்படிப்பட்ட பார்வையில் தான்(!) பார்க்க வேண்டும் என்பது தேவையில்லாதது...
Last but not least - எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவையில்ல...எதிரியா இருக்க தகுதி வேணும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. அடங்கப்பா செம உள் குத்தோடதான் போஸ்ட் போட்டிருக்காரு மாம்ஸ் .ஹி ஹி ஹி

  ReplyDelete
 2. எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவையில்ல...எதிரியா இருக்க தகுதி வேணும்!
  ///////////////
  ஒரு ஆப்பாவது ராவா குடிக்கனும்....அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. ////என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் தெனாவட்டா நடிச்சா பொத்திக்கிட்டு பாத்திட்டு சூப்பருன்னு சொல்லும் மக்கள் அதே நம்ம ஆளுங்க நடிச்சா குறை கண்டு பிடிப்பது தான் வாடிக்கை...(நான் உட்பட...200 வருட காலனி ஆதிக்கம்!)/////


  :)

  ReplyDelete
 4. கிட்ட தட்ட உங்கள் பார்வை மாதிரிதான் என் ரசனையும் பில்லா-2

  ReplyDelete
 5. உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
  பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க ஓட்டளிப்புப் பட்டையை இணைக்க மறவாதீர்கள் .


  http://www.tamil10.com/  ஒட்டுப்பட்டை பெற  நன்றி

  ReplyDelete
 6. வித்யாசமான பார்வை. நல்லாருக்கு.

  ReplyDelete
 7. இது விமர்சனம் அல்ல என்று தாங்கள் கூறினாலும் ஒரு நல்ல விமர்சனத்திற்குரிய தகுதியை உள்ளடக்கிய பதிவு....அருமை மாம்ஸ் !

  ReplyDelete
 8. மாப்ள அதெல்லாம் தெரியாது. எனக்கு படம்னா அதுல மாமியாருக்கு சோப் போடுற சீன், கிணத்துல தண்ணி இறைக்கிற சீன், ட்ரெஸ்ஸிங் ரூம்ல கதாநாயகி டிக்கில தட்டுற சீன் எல்லாம் வேணும். அட்லீட்ஸ்ட் 50 லோக்கல் ரவுடிகளை பார்த்து சவுண்டு விடுற சீனாவது வேணும். இல்லைனா மொத நாளே திருட்டு தனமா பார்த்துட்டு பிரச்சாரம் பண்ண கிளம்பிடுவோம். என்னா நாங்கல்லாம் நாளைய முதல்வரின் இன்றைய தொண்டர்கள்.

  ReplyDelete
 9. மாம்ஸ் சேம் பீலிங் :-) நிறைய பேருக்கு எரிச்சலை கொடுக்கும்கறது உண்மை :-)

  ReplyDelete
 10. யோவ் விமர்சனதிலேயும் உள்குத்தா..........

  ReplyDelete
 11. அழகான உள்குத்து பார்வை... மாமு...

  தலை ஓடிடுச்சாமே...

  ReplyDelete
 12. மாம்ஸ் - உங்க பார்வை.....ம்

  ReplyDelete
 13. சிறப்பான வசனப் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 14. எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் தேவையில்ல...எதிரியா இருக்க தகுதி வேணும்!
  :):):) ....பகிர்வு புடிச்சிருக்கு .

  ReplyDelete
 15. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 16. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி