டோங்க் சாய் - ஒரு பயணம்! - வியட்னாம்!

வணக்கம் நண்பர்களே...
கடந்த ஒரு மாதமாக பயணங்கள் அதிகரித்து விட்டன....நண்பர்களின் தளங்களையும் சரிவர திறக்க இயலவில்லை....என்னவென பார்த்தால்...இங்கு டாட் காம் மற்றும் பிளாக் ஸ்பாட்கள் பல தடைசெய்யப்பட்டு இருக்கின்றன...மீண்டும் என் கண்வழியே நீங்கள் பார்க்கப்போகும் இன்னொரு பயணம் உங்களுக்காக....


டோங்க் சாய் - http://en.wikipedia.org/wiki/Battle_of_Dong_Xoai - இங்கு சென்றால் போர்கால விசயங்களை நீங்கள் கண்டு கொள்ளலாம்...நிற்க நான் சந்தித்த விஷயங்கள் வருமாறு...


ஹோசிமிங் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் ஹனோயிலிருந்து 1750 கிமீ தூரம் இருக்கிறது...மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கும் நகரம் இது...நமது மும்பையய் போல(!)...அதே நேரத்தில்...ஹனோயய் போல பொறுமையானவர்களை இங்கு காண்பது அறிதாக இருந்தாலும்(!)...சொல்லும் வேலையய் சட்டென புரிந்து கொள்வதில் வல்லவர்கள் இவர்கள்...


தினமும் மாலை மழை வந்து சென்று கொண்டு இருக்கிறது...ஹோசிமிங்க் நகரத்தில் உயர்ந்த கட்டிடம் இது...இங்கு வர்த்தக மையம் அமைந்திருக்கிறது...
 


மிக அதிகமான வாகன போக்குவரத்து இருக்கிறது...எங்கு சென்றாலும் ஏமாற்றல் என்பது உண்டு..அதே போல இங்கும் சில உண்டு(!)...


இங்கு ஒருவர் மூன்று வேலைகளை செய்வதை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது...தங்கள் நேரங்களை பிரித்துக் கொண்டு வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள்(!)...8 மணிநேரம் என்பது இருந்தாலும்...பகுதி வேலைகள் அதிகமாக தென்பட்டன...
அங்கிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கும் டோங்க்சாய் எனும் இடத்துக்கு சென்றோம்...குட்டி ஊர் என்று சொல்லலாம்...மக்களின் அன்றாட வாழ்க்கை விளைநிலங்களில் பெரும்பாலும் அமைந்திருந்தது....புராதன விசயங்களை கொண்டிருந்தாலும்...உடை பழக்க வழக்கங்களில் மேற்கத்தியம் புகுந்தி விளையாடுகிறது...மொழியில் மட்டும் இன்னும் சொந்த மண்ணின் பிடி இருக்கிறது எனலாம்...


உணவு பழக்க விசயத்தில் இவர்களை மிஞ்ச முடியாது....ஏனெனில் வறுவல்கள் குறைவு...பொதுவாக அனைத்தும் நீரில் கொதிக்கவைத்ததாக இருப்பதால்...உடலில் எளிதில் செரிமானம் ஆகின்றன...யாரும் அதிக பட்சம் 60 கிலோவுக்கு மேல் காண முடிவதில்லை...
இரவில் அருகில் இருந்த காட்டுக்குள் சென்று பார்த்து வர ஆசைப்பட்டு சென்றோம்...அழகிய காடு...இரவு சப்தங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...பல வருடங்கள் கழித்து இரவில் காட்டுக்குள் பயணம் செய்தது மனமகிழ்ச்சியை கொடுத்தது...
திரும்பி வரும்போது...தங்குமிடம் எங்கும் கயித்து கட்டில்கள்(!)...மற்றும் அயர்ச்சியை போக்க சிறிய அளவிலான கயித்து தொங்கல்கள்(!)...எம்முடைய எடை காரணமாக இரண்டாமதை தவிர்க்க வேண்டியதாயிற்று(!)...


மன நிறைவுடன் அமைந்த பயணம்...


கொசுறு: விரைவில்..மீண்டும் சந்திக்கிறேன் நண்பர்களே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. வியாழக்கிழமை வணக்கம்!

  ReplyDelete
 2. நல்ல பயணம் போல...!நம்ம ஆட்கள் பொறித்த ஐட்டங்களை ஸ்வோகா பண்ணுவதால்தான் உங்க மாதிரி என்னை மாதிரி நிறைய நபர்கள் இருக்கிறார்கள், நமது பாரம்பரிய உணவு கேப்பை, சோளம், கம்பு, தினை இட்லி இதையெல்லாம் எப்பொழுது தமிழன் மறந்தானோ அன்றே தமிழன் ஊதிப் பெருத்துட்டான்....

  ReplyDelete
 3. மாம்ஸ் டோங்க் சாய் பயணம் அருமை, நீங்க ஒரு ஏழாம் அறிவு டாங்லீ மாம்ஸ் வெயிட்டுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க :-)

  ReplyDelete
 4. மாப்ள என்சாய், பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 5. நல்ல பயணம், நல்லதொரு அனுபவம்....!

  ReplyDelete
 6. எம்முடைய எடை காரணமாக இரண்டாமதை தவிர்க்க வேண்டியதாயிற்று(!)...//

  ஹா ஹா ஹா ஹா டேய் அண்ணே, உண்மையை ஒத்துகொண்டமைக்கு வாழ்த்துகள், ஆமா "எம்முடைய"ன்னு சொல்றியே, நீங்க எத்தனை பேருடா அண்ணே...?

  ReplyDelete
 7. அனுபவம் புதுமை அனுபவித்தால் அருமை

  ReplyDelete
 8. அருமையான பயண அனுபவம்! நன்றி!

  ReplyDelete
 9. ////இங்கு ஒருவர் மூன்று வேலைகளை செய்வதை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது////

  அண்ணே 2 வேலை செய்வதே பெரும்பாடு அதுக்குள்ள 3 வேலையா....

  ReplyDelete
 10. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 11. கிழக்காசிய நாடுகளுக்கு பயணிக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை.
  இன்னும் இன்னும் அதிகரிக்கிறது வாசிக்க ..........
  வாழ்த்துக்கள் ஜி .............

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி