கட்சி நடத்துவதுன்னா சும்மாவா...!

வணக்கம் நண்பர்களே...
எந்தப்பக்கம் திரும்பினாலும் நொச்சு நொச்சுன்னுகிட்டு(!)...எப்ப பாரு தலீவர்களை குறை சொல்வதே நம்ம பொழப்பா பூடிச்சி...சரி அவிங்க இதை பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு நாம யோசிச்சதுண்டா...அதன் விளைவே இந்த பதிவு...


அறிக்கைகளிலேயே வாழும்(!) பல தலீவர்களில் ஒருவரான இவர் கூறுவது..


கடந்த 60 வருட என்னோட அரசியல் வாழ்க்கைல...எவ்வளவு தடைகளை(!) தாண்டி வந்து இருப்பேன்...இதெல்லாம் இப்போதிருக்கும் தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை...என்னைய பாத்து பொற்ற்ற்ற்றாமை(!)...அதான் இவ்வளவுக்கும் காரணம்...அந்த காலத்துல சோத்துக்கு கஷ்டப்படும் போது கூட நாட்ட பத்தி(!) மட்டுமே யோசிச்சவன் நான்...என்னோட கடுமையான(!) போராட்ட பங்களிப்ப பாத்து புட்டு...மேலிட தலீவரு என்னய வாங்க தம்பின்னு கைய புடிச்சி இழுத்து தான் இங்கன வர சொன்னாரு(!)...என்னமோ நான் தான் ஓடியாந்து உக்காந்து கிட்டதாத்தான் நீங்கள்லாம் நெனச்சிட்டு இருக்கீங்க...அது தவறு...உங்களுக்காக...உங்களில் ஒருவனான நான் பணிசெய்யவே என் உடல் பொருள்(!) ஆவி அனைத்தையும் கொடுத்திட்டு நிராயுத பாணியா நிக்குறேன்...
என்னை பார்த்து பல கேள்விகளை கேக்குறீங்களே...என் மனசுல இருக்கறத கொட்டுறேன் கேளுங்க...


ஒரு கட்சி நடத்த தொண்டர்கள்(!) வேணும்...அவிங்கள எவ்ளோ கஷ்டப்பட்டு மெயிண்டெயின் பண்ணோனும் தெரியுமா...அவிங்கள்ல பலர் வேளை வெட்டிக்கு எதுவும் போக மாட்டாய்ங்க...அவிங்களுக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தந்து கிட்டே(!) இருக்கோனும்...இல்லன்னா தலீவரு மோசம்னு சொல்லிப்புடுவாங்கே...


இதுக்கு காசு எப்பிடி வரும்...நாங்க எப்ப பாரு உண்டி குலுக்கி மக்கள் கிட்ட வசூலிச்சி கிட்டே இருக்கனும்...சில நேரங்கள்ல கத்தி காட்டி வசூலிக்கும் அன்பு தொண்டர்களும் இருக்காங்கே...என்ன பண்றது கேட்டா உடனே குடுத்துடனும்...அதை விட்டுட்டு..எதுக்கு ஏன்னு கேட்டா கோவம் வராம என்ன பண்ணும்...


இப்படி கஷ்டப்பட்டு மெயிண்டயின் பண்ண தொண்டர்களை போராட்டம்னு(!) வரும்போது இறக்கி விடுவோம்...அதுல உசிரு போனா(!) நாங்கதான்யா நஷ்ட ஈடு கொடுக்கப்போறோம்...இதுக்கெல்லாம் துட்டு வேணாம்...அதுக்காக தான் நாங்க அரியணை(!) ஏறும் போது கஜானால இருக்கறத எல்லாம் சேப்டியா(!) இருக்கட்டும்னு எங்களுக்கு தெரிஞ்ச இடத்தில கொண்டு போயி வச்சிப்போம்...இது தப்பாய்யா...


ஒரு நாளைக்கு 10,000 ஓவாவ ஒரு குடிமகன்(!) கிட்ட கொடுத்து செலவு பண்ணுய்யான்னா எப்பிடின்னு தெரியாத முழிக்குற மக்கள் வாழும்(!) பூமிய்யா இது...பணத்த வேஸ்டு பண்ணலாமா...அதான் கொண்டு போயி வச்சிக்கறோம்...இதயெல்லாம் புரிஞ்சிக்காம கண்ட மேனிக்கு நீங்க திட்டுனா அத யெல்லாம் தாங்குறதுக்கின்னே...உடம்புல யாருக்கும் தெரியாம இன்னோரு சட்ட போட்டுக்கினு சுத்துறோம் தெரியுமா...


கேக்குறாங்க கேள்வி...ஒரு நாளைக்கு 10 பேப்பரு படிக்க வேண்டி இருக்கு...அதுல எங்க பேரு வரலன்னா..இந்த மக்கள் எங்கள மறந்திட மாட்டாங்கே...அதுக்கு தான் தினம் ஒரு அறிக்க உட்டுகிட்டே இருப்போம்...அத எல்லாம் ஏன் எதுக்குன்னு ஆராயக்கூடாது...இது தான்யா அரசியலு..


தனக்கு மிஞ்சினாத்தான் தானம் தருமம்...இது புரியலியே உங்களுக்கு....எங்க குடும்பங்களுக்கு(!) போக எதாவது மிச்சம் மீதி இருந்தா...இந்த பொது மக்கள்னு இருக்காங்களே அவிங்களுக்கு கொடுப்போம்....அதுவும் கன்ஃபார்மா சொல்ல முடியாது...


நாங்க நிர்வாகத்தில இருக்கும் போது அத பண்ணலியே...இத பண்ணலியேன்னு சொல்லிட்டு இருக்கீங்களே...ஒரு குடும்பத்த அமைதியா நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...அதுவும் துட்டு வந்துட்டா(!)...ஆளாலுக்கு ஒவ்வொரு பக்கமா திரும்பி நின்னுகிட்டு சவுண்டு விடுவாங்கே...அவிங்கள அமைதிப்படுத்தவே 5 வருசம் ஓடிப்பூடிச்சி...இதுல நான் எங்க உங்க பிரச்சினை பாக்குறது...


யாரு வந்தாலும்(!) பிரச்சினைய தீக்கப்போறது இல்ல....அதுனால எத பத்தியும் கவலப்படாம...அடுத்த முறை எங்க சின்னத்துல குத்து...அதான் உங்களுக்கு நல்லது...யாரு செத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல...சரக்கு சரியா கெடைக்கறாப்ல பாத்துக்கறோம்...


அடுத்து நாங்க சொன்னவரு வந்து இருக்காரு...அவரு ரப்பர் ஸ்டாம்பு இல்ல...நீங்க வேணா பாருங்க...அந்த மூன்று அப்பாவிகளையும் ரிலீஸ் பண்ண சொல்லி இருக்கோம்...பண்ணிடுவாரு...அதை வச்சி நாங்க அரசியல் பண்ணிப்போம்...
கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்....அலைக்கற்றைல போன பணமும்(!)....வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணமும்...ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ!


கொசுறு: நல்லவிங்கள வாழ விடுவோம்...களைகளை எடுப்போம்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்....அலைக்கற்றைல போன பணமும்(!)....வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணமும்...ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ!
  ////////////////////////
  அப்ப அந்தப் பணம் அப்புட்டுதானா...?தலீவரே!

  ReplyDelete
 2. போனது போனது தான்...திரும்ப வர சான்ஸே இல்ல சார்...

  ReplyDelete
 3. மாமு அவரு குந்த வைச்சி உட்கார்ந்திருக்கார்... கால்ல விழச் சொல்லுங்கோ....

  ReplyDelete
 4. யாரு வந்தாலும்(!) பிரச்சினைய தீக்கப்போறது இல்ல....அதுனால எத பத்தியும் கவலப்படாம...அடுத்த முறை எங்க சின்னத்துல குத்து...அதான் உங்களுக்கு நல்லது...யாரு செத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல...சரக்கு சரியா கெடைக்கறாப்ல பாத்துக்கறோம்.//.

  மனசை ஆத்திக்க வேற வழி தெரியாதப்ப
  ஊத்திக்கிறது தானே செய்ய முடியும்
  அதுக்கு ஏற்பாடு செஞ்சா சரிதான்

  ReplyDelete
 5. என்னவோ சொல்றீக என்னான்னு புரியல.....

  குவாட்டரும் பிரியாணியும் தர்ராங்கலம் வர்ட்டா மாம்ஸ்

  ReplyDelete
 6. //நல்லவிங்கள வாழ விடுவோம்...களைகளை எடுப்போம்...
  //

  கண்டிப்பா

  ReplyDelete
 7. நானும் உங்கள் இனம்தான்

  ReplyDelete
 8. விக்கி கெளம்பிட்டாப்ல.... தலிவர பத்தி இனி சொல்ல என்ன இருக்கு...?

  ReplyDelete
 9. கடைசி சொல்லி இருக்கீங்க பாருங்க வடக்குபட்டி மேட்டர் நூற்றுக்கு நூறு உண்மை. அதென்ன கொசுறு?

  ReplyDelete
 10. நல்ல நக்கல் பதிவு! அருமை!

  ReplyDelete
 11. அன்பு விக்கிக்கு,

  தாங்கள் விவரித்திருக்கும் பொருளும், நடையும் அருமை!!!

  தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!

  #எல்லாரும் நாசமாப் போயிருங்கய்யா... இனிமே எல்லாத்தையும் என் மனைவி, துணைவி மற்றும் அவர்தம் மக்கள் பார்த்துக் கொ(ல்)ள்வார்கள்!
  -தலீவரு...

  ReplyDelete
 12. சரியான போஸ்ட்மார்டம்.

  ஆனா...நண்பா,இன்னும் கணிசமான கூட்டத்தை தனது மந்தைக்குள் வச்சிருக்காரே!

  ReplyDelete
 13. யாரு வந்தாலும்(!) பிரச்சினைய தீக்கப்போறது இல்ல....அதுனால எத பத்தியும் கவலப்படாம...அடுத்த முறை எங்க சின்னத்துல குத்து...அதான் உங்களுக்கு நல்லது...யாரு செத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல...சரக்கு சரியா கெடைக்கறாப்ல பாத்துக்கறோம்...//நல்ல நக்கல் பதிவு! அருமை!

  ReplyDelete
 14. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி