படிக்கட்டு பயணங்களில் - மீளேஜ்!(பேத்தது-1)

வணக்கம் நண்பர்களே....கொஞ்ச காலமா பதிவுகள் தொடர்ந்து எழுதுதில்லைங்கறது மனதை அரித்துகொண்டே இருந்ததின் விளைவு இந்த தொடர்...இது ஜவ்வு மிட்டாய் தொடர் அல்ல...கல்லூரி பருவத்தில்(!) யாம் சந்தித்த மற்றும் நண்பர்களின் நிகழ்ச்சிகளின் தொகுப்பு...இப்படிப்பட்ட சம்பவங்களை நீங்களும் நிறைய சந்தித்து இருப்பீர்கள்...அந்த ஞாபகங்களை சற்று தட்டி எழுப்பவே...நெறைய ஜாலி...எஞ்சாய்...நண்பர்ஸ்...

என் இனிய தமிழ்மக்களே..

டேய் டேய் விசயத்துக்கு வா எதுக்கு இந்த மானங்கெட்ட பில்டப்பு....

ரைட்டுங்க்...

அது ஒரு இனிய சிறு தூரல் துள்ளிக்கொண்டு இருந்த காலை நேரம்...சைக்கிளை பயல்(!) அதிவேகமா மிதிச்சிட்டு இருந்தான்....எப்படியும் இன்னிக்கு அவகிட்ட பேசிப்புடனும்...இன்னும் வேகமா வேகமான்னு மனது துடிக்க...அடிச்சி ஓட்டிகிட்டு வந்து சேர்ந்தான் சைக்கிள் நிறுத்தும் இடத்துக்கு...சைக்கிளை விட்டு இறங்கி அடிச்சி பிடிச்சி ஓட ஆரம்பித்தான்...அந்த ரயில் நிலையத்தை கடக்கும் மேடையில் ஓடிக்கொண்டு இருந்தான்...எதிரே...

டேய் தம்பி எப்படி இருக்க...

பாலாஜி: ஸ்ஸ்ஸ்...என்னக்கா இந்த நேரத்துல...மாமா வரல...

அவரு நேரா ஆபீஸ் போயிட்டாரு...என்ன இப்படி ஓடுற...

பாலாஜி: காலேஜுக்கு நேரமாச்சி..(ஓடிக்கொண்டு இருந்தான்....>>>>>>)

பய புள்ள யார பாக்க இந்த ஓட்டம் ஓடுது...

பேருந்து நிறுத்தம்...

அவள் நின்று கொண்டு இருந்தாள்...

(நல்ல வேளை நேரத்துக்கு வந்துட்டேன்...!)

சர்ரென்று "மகளிர் மட்டும்" பேருந்து வந்து நின்றது...இருக்கைகளில் உட்கார்ந்து இருந்தார்கள்...பேருந்தில் நிற்கும் இடம் காலியாக இருந்தது...மனதுக்குள் அந்த ஓட்டுனரை வசமாறி பொழிந்து கொண்டு இருந்தான் பாலாஜி...

(ச்சே நாதாறிப்பய...சரியான நேரத்துல வந்து நிக்குறானே...ஏறிப்போயிடுவாளோ...!)

அவள் பாலாஜியை ஓரக்கண்ணில் பார்த்தாள்...ஒரு சின்ன புன்னகையை தவழ விட்டு விட்டு அங்கேயே நின்றாள்...அந்த பேருந்து நடத்துனர் படியில் நின்று கொண்டே...

ஏம்மா...காலியா போகுற பஸ்ஸுல ஏற மாட்டீங்களா...அடுத்து வர்ற பஸ்ஸெல்லாம் கூட்டமாத்தான் இருக்கும்...ஏன் இப்படி நின்னுட்டு இருக்கீங்க...

பாலாஜி: யோவ் முதல்ல நீ உள்ள போ....ஸ்லிப்பானே சிதறிடுவ...(எல்லோரும் சிரித்ததைப்பார்த்த அந்த நடத்துனர்...திட்டிகொண்டே ரைட் கொடுத்தார் பஸ்ஸுக்கு...)

ஏண்டா மாப்ள...இப்பதான் வந்தியா என்று கேட்டுக்கொண்டே எண்டர் ஆனான் அஜய்...

பாலாஜி: ஆமாம் மாப்ள...என் ஆளு இன்னும் நின்னுட்டு தான் இருக்கு...

அஜய்:அதானே பாத்தேன்...உரக்க கத்திகிட்டு இருந்தியே...எதுக்கு உனக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு...ஒன்னு அவகிட்ட போயி பேசனும்...இல்ல பொத்திகிட்டு விட்ருனும்...ஏண்டா உனக்கெல்லாம் லவ்வு...

பாலாஜி: டேய் இன்னிக்கி பேசிடுறேன்...

அஜய்: கிழிச்சே....இதையேத்தான் ரெண்டு வருசமா சொல்லிட்டு திரியிறே...

ட்ராய்லர் பஸ் வந்து நின்றது...அவள் ஏறுவதை கவனித்த அஜயும், நண்பனும் ஏறினார்கள்...

கூட்டத்தில் உள்ளே எளிதாக புகுந்து சென்று விட்டாள் அவள்...

(பாவிப்பசங்க நமக்கு மட்டும் வழி விட மாட்டானுங்களே...எல்லாம் 50 வயசுல கல்லுளி மங்கனுங்களா நிக்குதே -மனதுக்குள்)

அஜய்: ஏண்டா மாப்ளே...நம்க்கு இந்த புட் போடுதான் நிரந்தரம் போல...

பாலாஜி: ஏண்டா அப்படி சொல்றே...

அஜய்: பாரேன்...இவனுங்க உள்ள இருக்க எடத்துல நகந்து போக மாட்டேங்குறானுங்க...நம்மள மட்டும் திட்டிகிட்டே வர்றானுங்க..புட் போடுல தொங்குறோம்னு...

பாலாஜி: விடுறா...இரு பேக் அவகிட்ட கொடுக்கறேன்...

(சன்னல் வழியே அவளிடம் பேக் கொடுக்க அவள் ஒரு வித ஏளனத்துடன் அதை வாங்கிக்கொண்டாள்)

பாலாஜி: ஏண்டா நீ பேக் கொண்டு வரல...

அஜய்: அத எல்லாம் பேக்குங்கதான் கொண்டு வரும்...நான் ஒரே ஒரு நோட்...அதுவும் வவுத்துல சொருவி வச்சிப்பேன்...அது போதும்டா...நீ கொடுக்கும் போது அவ முகத்த பாத்தியா...

பாலாஜி: ஹிஹி...

அஜய்: அட மானங்கெட்டவனே உனக்கெல்லாம் பேக் ஒரு கேடான்னு பாத்தாப்ல இருந்துது...

பாலாஜி: அடேய் பொத்து...அவ பாக்கறாளேன்னு உன்ன விடுறேன்...

(பஸ் கிளம்பியதும் ஓடி வந்து தொற்றிக்கொண்டார்கள்...ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்குவதும் ஏறுவதுமாக அவர்கள் இறங்க வேண்டிய SIET பஸ் நிறுத்தமும் வந்தது!....ஓடி வந்து அவளிடம் இருந்து பையய் வாங்க பார்த்த போது அவளைக்காணவில்லை!)

இந்தாங்க...

பாலாஜி: ஓ தேங்க்ஸ்...

நோ மென்ட்சன்( இவன் காதில் நோ மெடிசன் என்று கேட்டது!....அவள் நகர்ந்து சென்று விட்டாள்!)

மச்சி அவ பேசிட்டாடா...

அஜய்: அட நாயே அவ போனாப்போகுதுன்னு பைய தூர வீசாம கொடுத்திட்டு போறா...போயி பேசு...மவனே இன்னிக்கி நீ பேசல...நான் பேசிடுவேன்...

பாலாஜி: இல்ல மச்சி இதோட இன்னிக்கி போதும்...

அஜய்: போடாங்க...

(அவளைத்துரத்தி கொண்டு ஓடிய அஜய்....அவளைப்பார்த்து...)

அஜய்: அலோ...அலோ உங்களத்தான்..

யெஸ் என்ன சொல்லுங்க....

அஜய்: என் ஃப்ரெண்டு உங்ககிட்ட கொஞ்சம் பேசனுமாம்...

என்ன பேசனும்...

அஜய்: ஏம்பா தம்பி பேசு...

அது ஒன்னும் இல்லீங்க தேங்க்ஸ்ன்னு சொல்ல வந்தேன்...

அஜய்: அட நாயே...நீ ரெண்டு வருசமா இவிங்க பின்னாடி சுத்துறியே தடிமாடு கணக்கா...அத சொல்ல மாட்டியா...இதையும் நான் தான் சொல்லனுமா...

ஸ்ஸ்ஸ்ஸ்...

அஜய்: என்ன பஞ்சர் ஆயிடிச்சா....

மிஸ்டர் உங்களுக்கு என்ன வேணும்..

அஜய்: மிஸ் என்ன மிஸ் தெரியாதது போலயே பேசிறீங்க...

என்ன தெரியாதது போல பேசிறேன்...

அஜய்: அதவாதுங்க...இந்த ரோமியோ உங்களை லவ் பண்றாரு...உங்க பதில் என்னன்னு தான் வெயிட்டிங்க்...

எனக்கு அப்படி எதுவும் இல்ல...நான் படிக்க தான் வந்து இருக்கேன்..

அஜய்: கேட்டுக்கு தம்பி...நாமல்லாம் பொறுக்க வந்து இருக்கோம்னு அர்த்தம்...

அலோ நான் கெளம்பறேன்...

பாலாஜி: பிளீஸ்...உங்களைப்பார்த்த நாள்ல இருந்து நான் உங்களை லவ் பண்றேன்...பிளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க...உங்க பதிலை நல்லா யோசிச்சி சொல்லுங்க...

இதுல யோசிக்க ஒன்னும் இல்லை...சாரி...எனக்கு விருப்பம் இல்லை...

அஜய்: அதான் சொல்லிட்டாங்க இல்ல...கெளம்புடா லூசுப்பயலே...

பிளீஸ் பிளீஸ் அப்படி சொல்லாதீங்க...நான் உங்களை சின்சியரா லவ் பண்றேன்...

அஜய்: அடேய் நாயே இந்த சின்சியர ஒழுங்கா பாடத்துல காட்டி இருந்தா மூணு அரியர்ஸ் வந்து இருக்காதே...

இல்ல பாலாஜி சாரி...

அஜய்: பார்ரா...அடேய் உன்ன நல்லா தெரியும் போல...

இல்ல... என் ஃப்ரெண்டு சொன்னா உங்க பேரை....நீங்க வேற வேலையப்பாருங்க....எனக்கு விருப்பம் இல்ல...

பாலாஜி: நான் மாலை உங்களை மீட் பண்றேன் - என்றான் பாலாஜி!

(அவள் சென்று விட்டாள்!)

பாலாஜி: ஏண்டா அவகூட சீரியசா பேசிட்டு இருக்கேன்...எதுக்கு கலாச்சிட்டு இருக்க...

 அஜய்: ரிசல்டு எனக்கு தெரியும் அதான்...

பாலாஜி: ச்சீ உன்னயெல்லாம் ஃப்ரெண்டா வச்சி இருக்கேன் பாரு என்ன சொல்லனும்...

அஜய்: அடேய் அதுக்காக உனக்கு நான் தூது போயி ரோட்ல அடிவாங்குவேன்னு எதிர் பாத்தியா...நடக்காது மச்சி...

(இன்னொரு பெண் அவர்களை கடந்தவாறே பேசினாள்!)

அலோ அஜய்...உங்க கிட்ட் கொஞ்சம் பேசனும்..

அஜய்: எது எங்கிட்டயா...என்ன சொல்லு..


நான் உங்கள லவ் பண்றேன்...உங்க கிட்ட இருந்து நல்ல பதிலை எதிர்பாக்குறேன்...சொல்லிவிட்டு அவள் ஓடிக்கொண்டு இருந்தாள்...

பாத்தியா மாப்ள...என்னைய கிண்டல் பண்ணியே....இப்ப நீதான் அவுட்டு...

அஜய்: அட நாராயணா....நாந்தான் அவுட்டா...

கொசுறு: இது காவியமோ ஓவியமோ இல்லீங்க...நடந்தது மட்டுமே...நாம பெரிய கதை ஆசிரியர் இல்லீங்க...கலர் கலரா ரீல் விடுறான்னு நெனச்சிடாதீங்கோ...முடிஞ்சா சொல்றத சொல்லிட்டு போங்க!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. ஹி ஹி ஹி ....கலர் கலரா பேர வச்சி இருக்கறீர்

  ReplyDelete
 2. மாப்ள ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கேன், இப்ப எக்ஸாம் டைம் அதனால ப்ரீயா இருக்கேன்.. இப்பவும் உங்கப் பதிவுல அதே கெத்..

  ReplyDelete
 3. ///கேட்டுக்கு தம்பி...நாமல்லாம் பொறுக்க வந்து இருக்கோம்னு அர்த்தம்...///

  hi hi no comments...

  ReplyDelete
 4. பொதுவா ஃப்லாஷ்பேக் னா கறுப்புவெள்ளைல காட்டுவாங்க...நீர் கலர்ல ஓட்டியிருக்கிறீர்......நல்லாவே இருக்கு.....

  ReplyDelete
 5. மாமு நடந்தது உங்களுக்கு தானே,,, டவுட்டு....

  ReplyDelete
 6. என்ன மாம்ஸ்.....!கவிதை எதுவும் இல்லை...!ஞாபகங்கள் வருதே....!ஞாபகங்கள் வருதே....!

  ReplyDelete
 7. மாம்ஸ் என்னவோ சொல்றீக ரசித்தேன்.

  (ஸ்மால் டவுட்டு இது உள்குத்து தானே)

  ReplyDelete
 8. வந்துட்டேன் விக்கி!
  படிக்க நல்லாவே இருக்கு!

  ReplyDelete
 9. நல்லா இருக்கு... தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 10. ஆளாளுக்கு கதை எழுத ஆரம்பிச்சுட்டாங்கப்பா !!

  ReplyDelete
 11. அட கலக்கிட்டீங்க! சூப்பர்!
  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

  ReplyDelete
 12. கதை நல்லா இருக்கு தொடர வாழ்த்துக்கள் சார் .
  (இது காவியமோ ஓவியமோ இல்லீங்க...நடந்தது மட்டுமே...
  நாம பெரிய கதை ஆசிரியர் இல்லீங்க...கலர் கலரா ரீல் விடுறான்னு நெனச்சிடாதீங்கோ... )

  ReplyDelete
 13. கல்லூரி நாட்கள்
  கவிதையாய் நகர்ந்ததோ!

  ReplyDelete
 14. அனுபவமோ, ஆக்கலோ- எழுத்தில் ஈர்ப்பு அதிகம். சூப்பர் விக்கி.

  ReplyDelete
 15. மாம்ஸ்..
  நலமா?
  நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவு..
  கொஞ்சமும் உங்களின் நடைமாறாது

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி