படிக்கட்டு பயணங்களில் - மீளேஜ் (பேத்தது 2)

வணக்கம் நண்பர்களே...
சென்னை வாழ் மக்களுக்கு தெரிந்த கல்லூரிகள் சில முக்கியமானவைகள்.. உங்களுக்காக...

என்றும் அமைதியை(!) மட்டுமே மூச்சாக கொண்ட - மெளண்ட் ரோடு(!)...

எங்கு பிரச்சினை நடந்தாலும் வம்புக்கே போகாத - பூந்தமல்லி ஹைரோடு!

எப்பவுமே துட்டு இருந்தாலும்...யாரையும் சீண்டாத(!) - அமைந்த கரை(!)..

யாரு வந்து உள்ள பூந்து அடிச்சாலும் அசராத - மயிலாப்பூர்(!)

பல பெருமக்களை உருவாக்கிய - ராயப்பேட்டை(!)..

ஆண்களை கிண்டல் செய்வது என்பதை சுத்தமாக நினைத்துக்கூட பார்க்க எண்ணாத(!) - தேனாம்பேட்டை(!)...ஸ்பென்சர் பிளாசா வளாகம் அருகே(!)...

இவையெல்லாம் இல்லாமல் சென்னை கல்லூரி வாழ்க்கைய நினைச்சி கூட பாக்க முடியலங்க....

இன்று பார்க்கப்போவது கலாட்டா கபே ஆன சென்னை கல்லூரி...

டேய் மாப்ள...இன்னிக்கு என்ன ஹாட் நியூஸ் போறதா பிளான்..

அடுத்த வாரம் கல்சுரல் புரோக்ராம்....அந்த ($$$) கல்லூரில....

ஓ ஆனா அங்க நம்மல உள்ளே விட மாட்டாங்களே...

அடேய் பேச்சுப்போட்டிக்கு அழைப்பு வந்து இருக்குன்னு அன்னிக்கே சொன்னனே...நம்மள நல்லவிங்கன்னு(!) நம்பி நம்ம காலேஜுக்கு மட்டும் அழைப்பு வந்து இருக்கு....

பார்ரா....ரைட்டு விடு...இன்னிக்கி எக்ஸாம் எப்பிடி எழுதப்போறேன்னு தெரியலடா...

ஏன் படிக்கலயா....

இல்ல மச்சி அந்த புக்கயே இன்னும் ஒரு தரம்கூட பாக்கல...

அடங்கோ..

(தேர்வு நடந்து கொண்டு இருக்கும் போது...சர் சர்ன்னு செங்கல் வந்து ஜன்னலில் அடித்தது!....மாணவர்கள்(!) விழுந்தடிச்சி கிட்டு ஓட ஆயத்தம் ஆனாங்க!)

டேய் என்னடா நடக்குது...

தெரியல மச்சி...அதோ சேர்மன் வர்றான்(!)...அவங்கிட்ட கேப்போம்...

என்ன மாம்ஸ் என்ன ஆச்சி...

இரு மாப்ள நான் போயி என்னான்னு பாத்துட்டு வர்றேன்...

வேணாம்யா செங்கலா வந்துட்டு இருக்கு...

அட இருடா வர்றேன்...

(சேர்மன் கல்லூரி முகப்புக்கு முன் போய் ஏன்டா செங்கல் அடிக்கிறீங்க...என்ன தாண்டா உங்க பிரச்சினைன்னு கேக்க...பறந்து வந்த செங்கல்(!) மண்டைய குறிப்பாக்க...ரத்தம் பீறிட்டு கிளம்ப...அவன் அப்படியே சரிய...அடிச்சவனுங்க ஓட்டம் பிடிக்க...நாங்கள்லாம் அவன தூக்கிட்டு பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு ஓட...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அபா!)

மாப்ள...நம்ம மாம்ஸயே மண்டய உடைச்சிட்டாய்ங்களே...நம்ம பயலுக்கும்...அவனுங்களுக்கும் ஒரு ஃபிகர் மேட்டர்ல தகராறாம்....அங்க நடந்த சண்டையில நம்ம பய அந்த பையன பின்னிட்டானாம்...அதுக்கு தான் இந்த கொடுமை...

அதுக்கு அவன மட்டும் கூப்டு கேட்டு இருக்கனும்....இல்ல போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி இருக்கனும்...அத விட்டுட்டு...எக்ஸாம் டைம்ல வந்து அடிச்சிருக்கானுங்க...

விடுறா மாப்ள...அதான் பிரின்சிபால் வந்து இதோட பிரச்சினைய விடுங்க..நாமெல்லாம் அமைதி காக்கனும்னு சொல்லிட்டு போனாரு இல்ல...மறந்து போச்சா...

டேய் நம்மல அவனுங்க அமைதியா வர்ற மொக்க பசங்கன்னு நென்ச்சிட்டாய்ங்க் போல...இதை இப்படியே விடக்கூடாது யாருடா அந்த நாதாரிப்பய இந்த பிரச்சினைக்கு காரணம் ஆனவன்...

(அந்த குறிப்பிட்ட பையனை கண்டு பிடித்து(!) உண்மை என்னன்னு கேக்க...அவனை இழுத்துக்கொண்டு....அந்த பஸ் பிடிச்சி வந்து செங்கல் அடித்து விட்டுப்போன(!) கல்லூரிக்கு போனார்கள்!)

இங்க எங்க இருக்கு எகனாமிக்ஸ் 2 nd year ரூம்...

அதோ அங்க...யாரு நீங்கள்லாம்...

வந்து சொல்றோம்...

நீதான் ### அவனா...

உனக்கு தில் இருந்தா இவனை மட்டும் அடிச்சி இருக்கனும்...அத விட்டு புட்டு அங்கன வந்து உங்க வீரத்த காட்டி இருக்கீங்க...

அது வந்து...

என்னடா வந்து போயி...எங்க என்னய அடி பாப்போம்...

(அந்த காலேஜ் பிரின்சிபால் போலீஸுடன் வந்து சேர!)

இப்போ வருவீங்களே...ஏன்யா அப்போ எங்க போனீங்க...

தம்பி(!) நீங்க கெளம்புங்க...இதோட இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வச்சிடுறதா...ரெண்டு காலேஜ் பிரின்சி பாலும் இணங்கிட்டாஙக...

அடி வாங்குனது பிரின்சியா...இல்ல...அப்புறம் ஏன் இணங்க மாட்டாங்க...

(அவனை அமைதிப்படுத்தி திரும்ப கூட்டிப்போக அந்த கூட்டம் அரும்பாடு பட்டது!....அதன் பிறகு சில நாட்களுக்கு அந்த ஆட்களை கூட்டி வந்து செங்கல் அடித்து காலேஜை தாக்கிய குறிப்பிட்ட பையன் போகும் பாதை எங்கும் அடி வாங்க வேண்டி வந்தது தனிக்கதை!)

தொடரும்..

கொசுறு: எல்லாம் அந்த வயசுல செய்யிறது தான்...என்ன ஒன்னு...ஒருத்தனா செய்ஞ்சா தப்பு....கூட்டமா செய்ஞ்சா கலவரம்...என்னய்யா உங்க பஞ்சாயத்து!

மிச்சம்: கல்லூரிக்கு போவது படிக்க மட்டுமே...(எங்கப்பாரு உட்பட எல்லோரும் சொல்வதை நானும் சொல்லிக்கறேன்...!...இந்த நிகழ்சியின் நாயகன் இப்போ அரசியல்வாதியாயிட்டாருங்கோ!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. சென்னை இருப்பவர்களுக்கே கல்லூரிகளைப் பற்றி இவ்வளவு விஷயம் தெரியுமா ? என்பது சந்தேகம்...

  நல்ல கலாட்டா கபே - கலக்கல்...

  ReplyDelete
 2. மாமு கலக்கல் கலாட்டா....

  சேட்டைக்காரரா இருப்பீங்க போல...

  ReplyDelete
 3. நினைவுகள் இனிமை!

  இன்று என் தளத்தில்
  ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 4. வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத கல்லூரி வாழ்க்கை.

  ReplyDelete
 5. ஏண்டா பதிவு போட்டா சொல்லமாட்டியா...?

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா ஹா ஜாலியான மலரும் நினைவுகள்...!

  ReplyDelete
 7. மலரும் நினைவுகள்...!நினைவுகள் இனிமை!

  ReplyDelete

 8. நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி