பொய்யை வைத்து பிழைப்பு தேடுவோர் கவனிக்க!

வணக்கம் நண்பர்களே...

பொய் - இது எங்கும் வியாபித்து இருக்கு...அதுக்காக...!


நட்பு என்பது வெறும் தேவைக்காக மட்டுமே இருக்க கூடாது என்பதே எமது அவா...அது தெளிவான நீரோடை போல இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்...பதிவுக்குள் செல்வோமா...


நெடு நாள் கழித்து நேற்று ஒருத்தர் எனக்கு மெயில் பண்ணி இருந்தார்...ஆன்லைனுக்கு வரவும் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொன்னாரு...நானும் போயி என்னதான் கேப்போமோன்னு போனேன்(கரண்டும், நெட்டும் தானே செலவு!)


என்னண்ணே எப்டி இருக்கீங்க...


நல்லா இருக்கேன் சொல்லுப்பா...


சும்மாதான் கூப்டேன்...


நீ காரணம் இல்லாம கூப்ட மாட்டியே சொல்லு...


இல்லண்ணே கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சி...இப்போ வேலை போயிடிச்சி...அதான் உங்க காதுல போட்டு வச்சா எதாவது கெடைக்குமேன்னு சொன்னேன்...


கண்டிப்பா சொல்றேன்...அதுக்கு முன்னாடி சில விசயங்கள் சொல்லிடுறேன்....யாருக்காவது உன்னய சிபாரிசு செய்யனும்னா என்னன்னு செய்றது...போலி சர்டிஃபிகேட்ட வச்சி உதவி மேலாளர் ஆயிருக்க....அத வச்சி பொண்ணு கட்டி இருக்க....இதெல்லாம் தப்புன்னு சொன்னதுக்கு என்னய வேற என் நண்பர்கிட்ட கேவலமா...பொழைக்க தெரியாத ஆளுன்னு சொல்லி இருக்க...ஹஹா...நான் அப்படியே இருந்திட்டு போறேன்...ஒன்னு சொல்றேன் கேட்டுக்க...பொய் சொல்லி வேலை வாங்குவது சுலபம்...ஆனா தக்க வைப்பது ரொம்ப கஷ்டம்...பின்னாடி ரொம்ப வருந்த வேண்டி இருக்கும்...


அதெல்லாம் விடுங்கண்ணே....மன்னிச்சிடுங்க எப்பிடியாவது ஒரு நல்ல வேலை வாங்கி கொடுங்க...


யோவ் என்ன போஸ்டிங்குக்குன்னு சொல்லவே இல்ல...


அதே உதவி மேலாளர் வேறு நல்ல கம்பனில...


அடேய் நாதாறி...இப்ப தானே சொன்னேன்....பொய் சொல்லி சேரக்கூடாதுன்னு...வேணும்னா சீனியர் ரெப் போஸ்டிங்க் வேணா வாங்கித்தாரேன்..


ஏண்ணே...மேனஜரா இருந்து புட்டு எப்படிண்ணே படி இறங்கி அந்த போஸ்டிங் போறது...இது உங்களுக்கே நல்லா இருக்கா...


ஏண்டா டேய்...பத்தாவது பாஸ் பண்ணாம எம் ஏ ன்னு திறந்த வெளி பல்கலைக்கழகத்துல காசு கொடுத்து சான்றிதழ் வாங்கினவனாச்சே நீ...இதெல்லாம் தெரிஞ்சி தானே அந்த கம்பெனில இருந்து வெளிய அனுப்பிட்டாங்க...
ஒத்துக்கறேன் நான் பண்ணது தப்பு தான்...இப்போ என் மனைவியும் என் நிலைமை தெரிஞ்சி பிரிஞ்சி போயிட்டா...விவாகரத்து கேட்டு இருக்கா...என்ன பண்றதுன்னு தெரியல...இப்ப எனக்கு நல்ல உத்தியோகம் வேணும்....உங்களால முடியுமா....முடியாதான்னு சொல்லுங்க..


இப்பவும் சொல்றேன்...சீனியர் வேலைக்கு வேணா சொல்லி விடுறேன்..போய் பொழச்சிக்க...


முடியாது...என்னைய அவமானப்படுத்தி பேசிட்டீங்க இல்ல...நான் கண்டிப்பா அசிஸ்டெண்ட் மேனேஜர் இன்னொரு கம்பனில ஆகிட்டு உங்க மூஞ்சில கரிய பூசிக்காட்டுறேன்...


ஹாஹா....தம்பி இப்பவும் நீ உன் நிலை அறியாம பேசிட்டு இருக்கியே...உன்னை அந்த கடவுள் தான் காப்பாத்தனும்...வாழ்க்கை போச்சி...மரியாதை போச்சி...இதெல்லாம் உன்னோட தவறான அனுகுமுறையால தான்...


டொக்...


அந்தப்பக்கமுனை மழுங்கிடிச்சி....


கொசுறு: இப்படி எத்தன பேரு சுத்துறாய்ங்களோ....


உங்க கருத்துக்களை..முடிந்தால் சொல்லிட்டு போங்க..


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. மாப்ள...சமயத்துல ஹேராம் கூட லேசா விளங்குன மாதிரி இருக்கு...
  இந்த பதிவு சுத்தம்.
  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 2. மன்னார் அண்ட் கம்பெனி ஆளுங்களோட எல்லாம் சம்பந்தமே கூடாது..சிக்கல் தான்!
  நலமா மாம்ஸ்!?

  ReplyDelete
 3. இப்படி நிறைய பேர் இருக்காங்க...

  தம் தகுதி மீறி ஆசைப்பட்டால் என்ன செய்வது...?

  நன்றி...

  ReplyDelete
 4. என்ன கருத்தைச்சொல்ல? இப்படியும் சில மனிதர்கள்!!!

  ReplyDelete
 5. யாரையாவது குத்தாவிட்டால் உமக்கு தூக்கம் வராதா ............?
  (நான் உள்குத்தை மட்டும் சொன்னேன் )

  ReplyDelete
 6. @உலக சினிமா ரசிகன்

  உலக சினிமா ரசிகன் said...
  மாப்ள...சமயத்துல ஹேராம் கூட லேசா விளங்குன மாதிரி இருக்கு...
  இந்த பதிவு சுத்தம்.
  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  >>>>>>>>>>

  ஏன் மாப்ள...அம்புட்டு உலக மகா ச்சே மெகா படமா எடுத்திருக்கேன்...ஒரு போன் உரையாடல பதிவா போட்டு இருக்கேன்...இதுக்கு போயி ஏன்யா குறியீடுகளோட(!)...இந்தியாவையே உலுக்கி போட்ட(!) படத்தோட கம்பேர் பண்ணிட்டீங்க ஹிஹி!

  ReplyDelete
 7. @ரமேஷ் வெங்கடபதி

  ரமேஷ் வெங்கடபதி said...
  மன்னார் அண்ட் கம்பெனி ஆளுங்களோட எல்லாம் சம்பந்தமே கூடாது..சிக்கல் தான்!
  நலமா மாம்ஸ்!?

  >>>>>>>>>>

  அது என்னவோ சர்தாங்க மாப்ளே...நான் நலம் தங்கள் நலமறிய ஆவல்...

  ReplyDelete
 8. @திண்டுக்கல் தனபாலன்

  திண்டுக்கல் தனபாலன் said...
  இப்படி நிறைய பேர் இருக்காங்க...

  தம் தகுதி மீறி ஆசைப்பட்டால் என்ன செய்வது...?

  நன்றி...

  >>>>>>>>

  தகுதியே பொய் சொல்வதுன்னு வச்சிட்டாய்ங்க போல...வருகைக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 9. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  என்ன கருத்தைச்சொல்ல? இப்படியும் சில மனிதர்கள்!!!

  >>>>

  ஒன்னும் சொல்றதுக்கு இல்லண்ணே...உசிரு போகும்போதும் இப்படித்தான் நிப்பானுங்க போல...

  ReplyDelete
 10. @அஞ்சா சிங்கம்

  அஞ்சா சிங்கம் said...
  யாரையாவது குத்தாவிட்டால் உமக்கு தூக்கம் வராதா ............?
  (நான் உள்குத்தை மட்டும் சொன்னேன் )

  >>>>>>>>>

  அடப்பாவமே...உண்மைய சொல்லப்படாதாய்யா!

  ReplyDelete
 11. பொய் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை மாமா...

  ReplyDelete
 12. இப்படியும்இருக்கிறார்களா!!!!.......
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 13. இப்படியும் சிலர் பொழைப்பு நடத்துவது வெட்கக் கேடு!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
 14. இப்படி பட்டவங்கதான் ஹாயா சுத்துறானுக..

  ReplyDelete
 15. ...இப்போ வேலை போயிடிச்சி...அதான் உங்க காதுல போட்டு வச்சா எதாவது கெடைக்குமேன்னு சொன்னேன்...

  இங்கை தினமும் கேக்கிற வார்த்தைகள் அண்ணா,ஆனால் அர்த்தங்கள் வேறு .........................................நல்ல கத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஹா ஹ ஹா ஹா இன்னைக்கு இவனா கிடைச்சான் உனக்கு, போயும் போயும் உன்கிட்டே வந்துருக்கான் பாரு ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி