டாஸ்மார்க்கும்...வெளங்காத பயபுள்ளயும்! ...

வணக்கம் நண்பர்களே...

சுய நம்பிக்கை என்றால் என்ன...அல்லது டாஸ்மாக் கொடுத்த பாஸ் மார்க்!

ஒரு நண்பர் தான் உண்டு தன் பொழப்புண்டுன்னு வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்தாரு...தன் கஷ்ட காலத்தை எப்படியோ உருட்டி ஓட்டிகிட்டு இருந்தாரு...

அவரோட இன்னொரு நண்பர் ஒரு நாளு சரக்கடிக்க பாருக்கு(Bar!) கூப்டு போயி இருந்தாரு...அங்கு வந்த ஒரு நக்கல் புடிச்ச பய புள்ள...இவரோட பேசிகிட்டே இந்தாளு ஜாதகத்த அலசுச்சி...

ஏன்ணே உங்க குவாலிஃபிகேஷன் என்ன...

தம்பி நான் டிகிரி வரைக்கும் படிச்சி இருக்கேன்...இப்ப MBA பிரைவேட்டா பண்ணிட்டு இருக்கேன்...இன்னும் 6 மாசத்துல முடிச்சிடுவேன்...

ஓ நானும் வந்ததுல இருந்து பாக்குறேன்...என்னமோ நீங்க மட்டும்தான் வாழ்க்கைல கஷ்டப்ப்டுறாப்ல பேசுறீங்களே...இல்லீங்க...என் சொந்தக்காரங்க என்னிடம் பத்திரமா வச்சிக்க சொல்லி கொடுத்த பணத்தை...பிசினஸ்ல போட்டு வச்சி(!) ....மாசம் மாசம் காசு கொடுத்துட்டு வந்துகிட்டு இருந்தேன்..திடு திப்புன்னு...என்னோடு வேலை செய்ஞ்ச என் நண்பன் பணத்தை எடுத்துகிட்டு ஓடிட்டாப்ல...அதான் இப்ப என்ன பண்றதுன்னு புரியாம திணறிட்டு இருக்கேன்...

ஓ...அதெப்படி ரெண்டு பேரும் தானே பணம் போட்டு இருப்பீங்க...

இல்லீங்க...அவரு ஒர்க்கிங்க் பார்ட்னரா...வேலை செய்ஞ்சிகிட்டு இருந்தாரு...

உங்கள பாத்தா படிச்ச ஆளு போல இல்லயே...பரதேசிப்போல இருக்கீங்களே..

என்னதம்பி பண்றது காலம் மனுசன இப்படி மாத்திடுது...

இப்ப என்ன பண்றதா உத்தேசம்..

என் நண்பர்கள் வெளிநாட்டு வேலை கெடைக்க முயற்சிக்கறதா சொல்லி இருக்காங்க...

தோ பார்ரா...

நீங்க என்ன தம்பி பண்றீங்க...

நான் இப்பதான் அபுதாபில இருந்து வந்து இருக்கேன்..அடுத்து சிட்னி போகப்போறேன்...ஐ யேம் ம பிசி மேன்...

அப்ப பாத்து அந்த பரதேசிப்போல இருந்த ஆளை பாருக்கு கூட்டிட்டு போன ஆளு...

யோவ் இம்புட்டு குசலம் விசாரிக்கிறியே நீ...இந்தாளுக்கும் உன்னய போல ஃபாரின்ல வேலை வாங்கி கொடுன்னு கேட்டாரு...

அதுக்கு சரக்கடிக்க வந்த வெள்ளக்கார துரை கணக்கா பேசுன பய புள்ள...ஹிஹி...இந்தாளுக்கு இங்கி பீசே வரல...இவனெல்லாம் வெளி நாடு போயி சம்பாதிச்சி...அய்யோ அய்யோன்னு சிரிச்சிதே பாக்கலாம்...

நம்மாளுக்கு பொசுக்குன்னு கோவம் வந்துரிச்சி...ஏண்டா டேய் உன்னய மாதிரி கேப்மாரிக்கெல்லாம் வேலை கெடைக்கும் போது...எங்குடும்பத்த காப்பாத்த போராடுற எனக்கு வேலை கிடைக்காதான்னு கேட்டாரே...பாக்கலாம்...!

பாரே ஹாஹான்னு சிரிக்க....

அவமானமா கருதுன அந்த இங்கிபீசு துரை தம்பி...சேலஞ்சு பண்ணுச்சு...படிக்கிற காலத்துல ஒழுங்கா கத்துக்காத இங்கிபீசு இனிமே...உமக்கு வர வாய்ப்பே இல்லன்னும்...அத வச்சி உன்னையால வேலை வாங்க முடியாதுன்னும் சொல்லி புடிச்சி...

அன்னிக்கு புடிச்சாரு அந்தாளு ஓட்டத்த...இன்னிக்கு வரை பல அப்பாடக்கர்களை அசால்டா ஓவர் டேக் பண்ணிட்டு இருக்காரு....

அன்னிக்கி ஓவரா பேசுன கணிணி(!) வல்லுனரு இன்னிக்கி வேலை இல்லாம மாமியார் வீட்டு சொத்துல....அசிங்கப்பட்டுகொண்டே காலம் தள்ளிட்டு இருக்காரு...மக்களே ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே...அதை தன்னோட மூலதனமா பயன்படுத்தி ஜெயிக்குறவனும் இருக்கான்...அத வச்சி கேவலமா அடி வாங்கி சந்தி சிரிக்கறவனும் இருக்கான்...அதனால யாரையும் சாதாரணமா எடை போட்றாதீங்கோ...பின்னாடி ஏற்படும் அவமானங்களை தாங்கிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு வந்துடும்ங்கோ!

கொசுறு: திமிர் படைச்சவன்லாம் படைப்பாளியும் இல்ல(!)....சரக்கடிச்சவன்லாம் ரெகுலர் குடிகாரனும் அல்ல(!)...தன்னை உணர் தாகம் தீரும்!...முடிந்தவரை நல்லோர்க்கு உதவு...வெறும் தன்னுடைய சொந்த விசயங்களுக்காக யாரிடமும் நட்பு பாராட்டாதே...அப்படி பட்ட நட்பு நிலைக்காது...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. நீண்ட நாள் கழித்து பதிவு...
  கொசுறு அருமை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  ReplyDelete
 2. பஞ்ச் பாலா..கருத்துக் கந்தசாமி ரேஞ்சுக்கு..போய்ட்டீங்க மாம்ஸ்!
  ரொம்ப நாளாயிடுச்சு..அதற்கு ஒரு விளக்கப்பதிவு போடுங்க!

  ReplyDelete
 3. கற்கவேண்டுமென்ற உத்வேகம் வந்துவிட்டால் ஆங்கிலமென்ன, அடுத்த நாட்டு மொழியென்ன, அனைத்துமே ஈஸிதான்.

  ReplyDelete
 4. வாழ்வில் ஜெயிக்கப்போராடியவன் தோற்பதில்லை விக்கி.

  ReplyDelete
 5. @கேரளாக்காரன்

  வருகைக்கு நன்றி திரு. கேரளாக்காரன் அவர்களே..

  ReplyDelete
 6. @திண்டுக்கல் தனபாலன்

  நீண்ட நாள் கழித்து பதிவு...
  கொசுறு அருமை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

  >>>>

  நன்றி திரு. தனபாலன் அவர்களே...

  ReplyDelete
 7. ஆமாம் மாம்ஸ்! ஆங்கிலம் தெரிஞ்சவன் அறிவாளியும் இல்லை! தமிழ் மட்டும் தெரிஞ்சவன் முட்டாளும் இல்லை...!

  ReplyDelete
 8. @ரமேஷ் வெங்கடபதி

  ரமேஷ் வெங்கடபதி said...
  பஞ்ச் பாலா..கருத்துக் கந்தசாமி ரேஞ்சுக்கு..போய்ட்டீங்க மாம்ஸ்!
  ரொம்ப நாளாயிடுச்சு..அதற்கு ஒரு விளக்கப்பதிவு போடுங்க!

  >>>>>>>>>>>>>

  ஹாஹா வருகைக்கு நன்றி மாப்ளே. போட்ருவோம்!

  ReplyDelete
 9. @FOOD NELLAI

  FOOD NELLAI said...
  கற்கவேண்டுமென்ற உத்வேகம் வந்துவிட்டால் ஆங்கிலமென்ன, அடுத்த நாட்டு மொழியென்ன, அனைத்துமே ஈஸிதான்.

  >>>>>>>>>>

  சரியா சொன்னீங்க..
  .........
  FOOD NELLAI said...
  வாழ்வில் ஜெயிக்கப்போராடியவன் தோற்பதில்லை விக்கி.

  >>>>>>>>>>>>>

  சத்தியமான வார்த்தைன்ணே...

  ReplyDelete
 10. @வீடு சுரேஸ்குமார்
  வீடு சுரேஸ்குமார் said...
  ஆமாம் மாம்ஸ்! ஆங்கிலம் தெரிஞ்சவன் அறிவாளியும் இல்லை! தமிழ் மட்டும் தெரிஞ்சவன் முட்டாளும் இல்லை...!

  >>>>>>>>>>

  அப்படிப்போடு அருவாள...நச்சுன்னு சொன்னய்யா!

  ReplyDelete
 11. நான் என்று திரும்பி வந்தாலும்(!)...என்னை ஞாபகம் வச்சி இருக்கும் என் பதிவுலக நண்பர்களே......முகமற்ற(!) என்னிடம் இம்புட்டு அன்பை பொழிகிறீர்களே...என்ன தவம் செய்தேன் இப்படிப்பட்ட நண்பர்களைப்பெற! - சொல்லடி சிவசக்தி...தசையினை தீச்சுடினும்...!

  ReplyDelete
 12. மாப்ள...பதிவை படிச்சுட்டேன்.
  எனக்கு ஒண்ணும் விளங்கல...
  சரக்கடிச்சாத்தான் விளங்கும் போல இருக்கு.

  மதுபானக்கடை ஸ்டில்ஸ் சூப்பர்.
  படத்தின் இயக்குனர் எனது நண்பர் கமலக்கண்ணன்.

  ReplyDelete
 13. உலக சினிமா ரசிகன் said...
  மாப்ள...பதிவை படிச்சுட்டேன்.
  எனக்கு ஒண்ணும் விளங்கல...
  சரக்கடிச்சாத்தான் விளங்கும் போல இருக்கு.

  மதுபானக்கடை ஸ்டில்ஸ் சூப்பர்.
  படத்தின் இயக்குனர் எனது நண்பர் கமலக்கண்ணன்.

  >>>>

  மாப்ள...இது ஒரு உண்மை நிகழ்ச்சி...ஒரு மனிதனின் ஆரம்பமே டாஸ்மாக்கில் இருந்து ஆரம்பிச்சதுய்யா...அவ்வ்...

  மதுபானக்கடை படம் அருமையா வந்திருக்குய்யா...நன்றி சொல்லுங்க தங்கள் நண்பரிடம்!

  ReplyDelete
 14. பதிவும், குறிப்பா கொசுறும் நல்லாயிருந்துச்சு சகோ..

  ReplyDelete
 15. ஆக்கமும் விளக்கமும் அருமையாக இருந்தது .அதிலும் இந்தப் பொன்மொழி
  மனதைக் கவர்ந்தது !!!.......:)
  திமிர் படைச்சவன்லாம் படைப்பாளியும் இல்ல(!)....சரக்கடிச்சவன்லாம் ரெகுலர் குடிகாரனும் அல்ல(!)...
  தன்னை உணர் தாகம் தீரும்!...முடிந்தவரை நல்லோர்க்கு உதவு...வெறும் தன்னுடைய சொந்த
  விசயங்களுக்காக யாரிடமும் நட்பு பாராட்டாதே...அப்படி பட்ட நட்பு நிலைக்காது...!

  தொடர வாழ்த்துக்கள் !....

  ReplyDelete
 16. மாப்ள ரொம்ப சரி. வெகுநாட்களுக்கு பிறகு வந்து கலக்குறே.

  ReplyDelete
 17. சிறப்பா சொன்னீங்க! அருமையான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
  http://thalirssb.blogspot.in/2012/08/6.html
  மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

  ReplyDelete
 18. @"என் ராஜபாட்டை"- ராஜா

  last punch super

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றிங்கோ ராஜா..

  ReplyDelete
 19. @இந்திரா

  பதிவும், குறிப்பா கொசுறும் நல்லாயிருந்துச்சு சகோ..

  >>>>>>>>

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ...

  ReplyDelete
 20. @அம்பாளடியாள்

  அம்பாளடியாள் said...
  ஆக்கமும் விளக்கமும் அருமையாக இருந்தது .அதிலும் இந்தப் பொன்மொழி
  மனதைக் கவர்ந்தது !!!.......:)
  திமிர் படைச்சவன்லாம் படைப்பாளியும் இல்ல(!)....சரக்கடிச்சவன்லாம் ரெகுலர் குடிகாரனும் அல்ல(!)...
  தன்னை உணர் தாகம் தீரும்!...முடிந்தவரை நல்லோர்க்கு உதவு...வெறும் தன்னுடைய சொந்த
  விசயங்களுக்காக யாரிடமும் நட்பு பாராட்டாதே...அப்படி பட்ட நட்பு நிலைக்காது...!

  தொடர வாழ்த்துக்கள் !....

  >>>>>>>

  வருமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

  ReplyDelete
 21. @கும்மாச்சி

  மாப்ள ரொம்ப சரி. வெகுநாட்களுக்கு பிறகு வந்து கலக்குறே.

  >>>>

  மாப்ள நன்றிய்யா...பூஸ்டு குடிச்சாப்ல இருக்கு...அட நெஜ பூஸ்டுய்யா...

  ReplyDelete
 22. @s suresh

  s suresh said...
  சிறப்பா சொன்னீங்க! அருமையான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
  http://thalirssb.blogspot.in/2012/08/6.html
  மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா...கண்டிப்பா வர்றேன்...

  ReplyDelete
 23. நீங்க தானே "அது?/அவர்?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி