கசாப் எனும் அப்பாவி!

வணக்கம் நண்பர்களே...


இந்த அப்பாவியின் கதைய கேளுங்கோ...

கசாப்புன்னு ஒரு அப்பாவி தன் மேலே கக்கா போன கோழிகள் கிட்ட அன்பா உணவு கொடுத்துகிட்டு வாழ்ந்து வந்திட்டு இருந்தாரு...அந்த நேரம் பாத்து பண்டிக ஒன்னு வந்திடுச்சி...

யப்பே எனக்கு புச்சா சட்ட வாங்கி குடுப்பேன்னு கேட்டாரு அப்பாவ...

கண்ணு துட்டு இல்ல கண்ணு...நம்ம நாட்ல இருக்க பல ஏழைகள்ல நாமும் ஒருத்தரு...அதுனால இதையெல்லாம் நம்மளால நெனைச்ச போது எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிப்புட்டாரு...அப்பாரு!

கசாப்பு யோசிச்சாப்ல...என்ன பண்ணலாம்...அந்தா போறாரே அண்ணன் அவருகிட்ட பேசிப்பாப்போம்...

அண்ணே...

சொல்லு தம்பி...

எங்கூட்டுக்கும் எனக்கும்....ட்ரஸ் வாங்கோனும்...பணம் வேணும்..

நீ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே வர்றியா...நான் ஒரு இடத்துல வேலைக்கு சேத்து உடுறேன்...அவிக சொல்றத செய்ஞ்சா உங்கஷ்டம்லாம் பறந்து பூடும்...

அப்பிடியா எங்க சொல்லுங்க போவோம்...

இப்படி போன புள்ள கொஞ்ச வருடத்துல ட்ரைனிங்லாம்(!) எடுத்து ஜம்முன்னு இன்னொரு நாட்டுக்கு போச்சி...அங்கன சும்மாத்தானே போறோம்(!)...கொஞ்சம் குண்டுகள வீசிட்டு போவோம்னு அந்த ஊருல இருக்க இடத்துல வீசிட்டு போச்சி...

தன்கூட வந்த பாசக்கார(!) பய புள்ளிங்க எல்லாம் செத்துபோயிட்டதுனால....அப்பாவியா(!) அந்த பாதுகாவலருங்க கிட்ட மாட்டிகிச்சி...அதுக்கு முன்னாடி வரைக்கும் சரமாரியா தீவாளி பட்டாசு கணக்கா சுட்டுகிட்டே இருந்திச்சி...என்னா பண்றது...பல பேரு செத்தும் போனாய்ங்க...அது அவிங்க தலையெழுத்து தானே(!)....இதுக்கு கசாப்பு என்னா பண்ண முடியும்...ஏம்பா சுட்டு பழகும் போது ஏன் எதிர்ல வந்தீங்கன்னு(!) கேட்டுகினே இன்னும் சுட்டாரு...

பிடிபட்டதும்....அந்த அப்பாவிப்பார்வைய எல்லாப்பக்கமும் வீசினாரு...

ஜெயில்ல போனதுக்கு பின்னே...அய்யா நான் அப்பாவி எனக்கு குஸ்கா மட்டும் கொடுக்காதீங்க லெக் பீசோட பிரியாணி கொடுத்தாத்தான் சாப்பிடுவேன் அப்பிடின்னு சொல்லிட்டாப்ல...

இது வரைக்கும் நாடு நல்லா இருக்கோனும்னு போராட்டம் பண்ணி ஜெயிலுக்கு உள்ள வந்து சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன பலர பாத்த ஜெயில் காவலர்கள்(!)...இவர பாத்து பரிதாபப்பட்டாய்ங்க....

இதுக்கு நடுவே நாடு முழுதும்...ஒரு அப்பாவிய ஏன் கொடும படுத்துறீங்க(!)...உங்களுக்கு தில்லு இருந்தா...அந்தா அனுப்பி வச்சானே..அந்த நாட்டுக்காரன கொன்னு போடுறது தானேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க..

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்...இந்த மாதிரி எதாவது சம்பவம் நடந்தா...கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட் அவிங்க கூட ஆடமாட்டோம் என்று சொல்லி அவங்கள “நரக வேதனை” அனுபவிக்க செய்வோம்....என்று சொல்லி புட்டாங்க....வந்த பிடாரி(!) கிட்ட மாட்டி கிட்டு முழிக்கும் நிர்வாக டக்கருங்க(!)....

இதையெல்லாம் தாண்டி அப்பாவிய கொன்னுபோடனும்னு தீர்ப்ப சொல்லி புடிச்சி நடுமையம்...

இம்புட்டு அப்பாவிய போயி கொல்ல நெனைக்கிறீங்களே...ஏம்பா உங்களுக்கு கொஞ்சமாவது...உசிருன்னா என்னான்னு தெரியுமா...அது அவ்வளவு சல்லிசா போயிடிச்சா...நாங்கள்லாம் இன்னும் உசிரோட இருக்கோம்ல(!)...ஒரு கொலைக்கு இன்னொரு கொலை ஞாயமாகாது(!)...எங்கூட்ல எழவு உழுந்தாலும் இப்படித்தான் சொல்லுவோமாக்கும்!

அப்பாவி(!)க்காக அனுதாபப்படும் சங்கத்தின் வேண்டுகோளை நிர்வாகம் காது கொடுத்து கேக்கவும்...அதோ போல ரப்பர்ஸ்டாம்பு கிட்ட மனு போகும் போது அத அப்பிடியே சைடு வாக்குல வச்சி...குறைஞ்சது 25 வருசமாவது(!) கெடப்புல போடும்படியும் இந்த சங்கம் நிர்வாகத்த கேட்டுக்குது...

அல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க...

கொசுறு: கொலை....1....2....3...மாமா பிஸ்கோத்து...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. அந்த அப்பாவி பத்தி இப்போ கொஞ்ச நாட்களாக "நிறைய"தெரிந்து கொண்டேன்!!

  ReplyDelete
 2. அவனோடு சேர்த்து உண்மைகளும் செத்துடக் கூடாதுங்குறதுக்காகத்தான் இந்தப் போராட்டமாம்..
  யாரோ இப்டி புலம்பிகிட்டிருந்தத நேத்து தொலைக்காட்சில கேட்டேன்.
  தனிப்பட்டு யாரும் பிரபலமாகுறதில்லை. இந்த மாதிரி அறிக்கைவிடுறவங்களால பிரபலமாக்கப்படுறாங்க.

  ReplyDelete
 3. கோச்சேவை உயிரோடு கொண்டு வந்து கொடுத்திட்டு மட்டும் போயிருங்க..!கசாப்பை தூக்குல போடவேண்டாம்..!உயிரோடு விட்டுவிடலாம்! என்ன ஜி! நான் சொல்வது சரிதானே..?

  ReplyDelete
 4. அருமை மாம்ஸ்!

  ReplyDelete
 5. மாப்பிள அங்கனதான் இந்த மனிதநேயம் உள்ளே வாங்கு ஊடாடும்.

  ReplyDelete
 6. சொல்வதற்கு ஒன்றுமில்லை, செத்த மனித உயிர்கள் எத்தனை, எத்தனை?

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ருத்திராட்சம் சில தகவல்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

  ReplyDelete
 8. நல்ல வேளை..கசாபின் ஆக்ஷன் மூவி கிடைத்தது..இல்லையெனில் கசாபை சேர்ந்தவர்கள் அவரை "மத அல்லது இனத் தியாகி" ஆக்கி,யாரையாவது இளகிய மனம் படைத்தவர்களை தீக்குளிக்க வைத்திருப்பார்கள்!

  ReplyDelete
 9. எதுக்காக சாகிறோம் என்று தெரியாமலையே வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அப்பாவிகள் சாவிற்கும், அவர்களை தடுத்து நிருத்துவதக்காக தங்கள் உயிர்களை நீத்த காவல்துறையினரின் மரணத்திற்கும் என்ன சொல்லப்போகிறார்கள் இன்று கசாப் என்னும் "மாமனிதனின்" தூக்கிற்க்கு எதிராக கிளம்புவோர்?

  கசாப்பு உயிர்தான் உயிர் செத்துப்போனவன் உயிரெல்லாம் ...?

  என்னை பொருத்தவரை மனுசனைத்தான் தூக்குல போடக்கூடாது! பல மனித உயிர்களை சிட்டுகுருவியை சுடுவது போல் சுட்டு கொன்ற மிருகத்தையல்ல!

  எவனெல்லாம் கசாப்புக்கு ஆதரவா கிளம்புரானோ அவனையெல்லாம் பாகிஸ்தான் பார்டர்ல கொண்டுபோய் விட்டா அப்ப தெரியும் இவனுகளுக்கு!


  (கருத்தில் ஒருமையை புகுத்தியதிற்க்கு மிகவும் வருந்துகிறேன்)

  ReplyDelete
 10. கசாப்பிற்கு ஒட்டகம் பிரியாணி கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.....!

  போங்கடா நீங்களும் உங்க சனநாயகமும்...!

  ReplyDelete
 11. எல்லாத்தையும் சொல்லிப்புட்டு கடைசீல கொசுறில் வைத்து ஏனண்ணே இந்த கொசுறு..ஹ..ஹ...

  ReplyDelete
 12. புரிகிறது,வெங்கட்!என்ன பண்ணலாம்,ஜனநாயக?! நாடாச்சே?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி