ஒல்டு ஏஜ் கொலைக்களங்கள்!

வணக்கம் நண்பர்களே...இன்று நாம் பார்க்கப்போவது வயதான மூத்த குடி மக்களுக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமைகளின் ஒரு பகுதியை...

எல்லோரும் என்னதான் சொன்னாலும் வயதானவர்களை ஓல்டு ஏஜ் ஹோம் எனப்படும்...வயதானவர்களுக்கான காப்பகத்தில் விடுவது பெருகிக்கொண்டே வருகிறது...இதை தடுப்பது என்பது பேச்சளவில் மட்டுமே நிலைத்திருக்கிறது...

இரு வகையான பெற்றோர்கள் இந்த நிலையங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்...


முதல் வகை - யாருக்கும் தாம் தம் வயதான காலத்தில் தொந்தரவாக(!) இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து ஒதுங்கி விடுகிறார்கள...வாழ்நாளில் முக்கால் வாசி..பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக...தங்கள் வாழ்க்கையய் இழந்து..தமக்காக ஏதும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல்(!)...அவர்களின் கல்விக்காக தம் காலத்தையே இழந்து நிற்க்கிறார்கள்....அவர்களுக்கான வயதானவர் காப்பகங்கள் பெருகிவிட்டன...

இரண்டாம் வகை - பெற்ற பிள்ளைகளிடம் நித்தமும் சண்டை பிடித்துக்கொண்டு...வந்த மகளிடம்(மருமகள்!) வீண் பிடிவாதம் பிடித்து அதனால் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்...இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்...வீட்டில் நடைபெறும் சண்டையில் யார் ஜெயிப்பது எனும் ஈகோவினாலும்....சொந்தக்காரர்களின் தூண்டுகோளினாலும்...குடும்பங்கள் பிரிகின்றன..இந்த எதற்கெடுத்தாலும் யுத்தத்தின்(!) முடிவில்...வலுக்கட்டாயமாக காப்பகத்துக்கு அனுப்பப்படும் பெரியவர்களும்...பெருகிய வன்னம் உள்ளனர்...

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல்...இதற்காக நடத்தப்படும் காப்பகங்கள்...தங்கள் திருவிளையாடல்களை நித்தம் அரங்கேற்றி வருகின்றன....

அதிலும் பணம் வாங்காமல் சேவை செய்யும் அமைப்புகள்... சில சிறந்ததாக செயல்படுவதாக சொல்கிறார்கள்..

பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்யும் அமைப்புகள்...இதில் சில நல்ல இடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்...சில கழிவறைகளை கூட சரியாக பராமரிக்காதவைகளாகவும் இருப்பது வேதனை!

அப்படி ஒரு காப்பக உரிமையாளருடனான பேச்சு வார்த்தையின் சில துளிகள்...

அலோ வணக்கமுங்க...

அய்யா வணக்கமுங்க...என்ன அய்யா எதோ பேசனும்னு சொன்னீங்களாமே...

ஆமா...உடனடியா 30000 ஓவா என் அக்கவுண்ட்ல கட்டிடுங்க....

என்னய்யா திடீர்ன்னு சொல்றீங்க...

அந்தய்யா ரெம்ப முடியாம இருக்காருங்க...எப்ப வேணா...எது வேணா நடக்கலாம்...

அய்யா நான் வேணா அவருகிட்ட கொஞ்சம் பேசலாமா...ஃப்போன் கொடுக்கறீங்களா...

இங்க யாரையும் ஃப்போன் பேச அனுமதிப்பதில்லைங்க...

அய்யா...ஏற்கனவே மாசம் 7000 ரூவா தர்றேன்...அதுவுமில்லாம எதாவது ஏற்பட்டா உடனடித்தேவைக்கு 15000 ரூவா கொடுத்து இருக்கேன்...இன்னும் நீங்க கேக்குறது ஞாயம் இல்லீங்களே...இப்படி சேர்க்கும் போது நீங்க சொல்லலியே...

இதப்பாரப்பா...இதெல்லாம் வேலைக்காகாது...வேணும்னா பணம் அனுப்புங்க...இல்லன்னா நாளைக்கே கூட்டி போங்க...


அய்யா...அந்த வயதானவர் என் சொந்தம்...அதுக்காகத்தான் அவிக புள்ள பண்ணாததயும் நான் பண்ணிட்டு வர்றேன்...எங்கப்பாரோட ரொம்ப நெருங்கிய நண்பர்...அதுவுமில்லாம அவருக்கு அவர் குடும்பத்துல யாரும் கவனிச்சிக்க இல்லீங்க...எல்லாம் அவர் உழைப்ப எடுத்துகிட்டு சக்கயா போட்டு போயிட்டாங்க...என் அப்பா எங்கிட்ட கேட்டுகிட்டதால...நான் பராமரிச்சிட்டு வாரேன்...தயவு செய்து புரிஞ்சிக்கங்க...கடந்த முறை நான் வரும்போது கூட நல்லா இருந்தாரே...நானும் கொண்டு போய் செக்கிங்க் எல்லாம் பண்ணிட்டு தானே வந்தேன்...

இங்க பாரு தம்பி...இதெல்லாம் பேசிட்டு இருக்க முடியாது...திடுதிப்புன்னு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டா யாரு செலவு செய்யிறது...இப்பல்லாம் ரெம்ப செலவாகுது...

என்னய்யா இப்படி சொல்றீங்க...திடுதிப்புன்னு அவ்ளோ பணம்...அனுப்பறது கஷ்டமுங்க....வேணும்னா...ஒரு மாசம் டைம் கொடுங்க பாக்குறேன்...

அலோ...உங்களுக்கு சொன்னது புரியாதா...நாளைக்கே வந்து கூட்டிட்டு போங்க...இல்ல பணம் கட்டுங்க...

சார்...நான் வெளிநாட்ல இருக்கேன்னு உங்களுக்கு நல்லாத்தெரியும்....எப்படி உடனே எந்த முடிவும் எடுக்க முடியும்...

அது உங்க தலையெழுத்து...நான் என்ன பண்றது...

என்னசார் இப்படி சொல்றீங்க...

இனிப்பேசிப்பயன் இல்லை...நாளை வரை டைம்...(டொக் - இணைப்பு கட்!)

ஏன்யா புண்ணியவான்களே....துட்டு கொடுத்து காப்பகத்துல விடுறவன் எல்லாம் பணக்காரப்பயலுங்கன்னு அர்த்தமா...எப்படியெல்லாம் துட்டு புடுங்கறீங்கடா...ஆனா ஒன்னுடா....பணம் மட்டும் இல்லன்னா...செத்துரனும்...இப்படி அல்லாடிட்டி இருக்க கூடாது...!


கொசுறு: இன்று நீ...நாளை நான் எனும் உலகத்தில் வாழ்கிறோம்...எனவே...பெற்ற பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்று நம்பி விடாதீர்கள் மக்களே...உங்களுக்கான குழிக்கு காசு கூட நீங்கள் விட்டு சென்றால்தான் உண்டு...இல்லயேல் அனாதைப்பொணமாகத்தான் போகோனும்!..உலகில் யாரையும் நம்பாதே...உன் வயோதிகத்துக்கான உணவை(பணத்தை!) ஒரு பக்கம் சேமித்து வை...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. யோவ் ஏன்யா காலையிலேயே அழ வைக்கிற... இது போன்ற சம்பவங்களை கேட்கும் போதும் படிக்கும் போதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு மாப்ள. முடிந்த அளவுக்கு நாம நம்ம பெற்றோரை நல்லா கவனிச்சிக்குவேன்னு நம்புறேன்.

  ReplyDelete
 2. @காந்தி பனங்கூர்
  யோவ் ஏன்யா காலையிலேயே அழ வைக்கிற... இது போன்ற சம்பவங்களை கேட்கும் போதும் படிக்கும் போதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு மாப்ள. முடிந்த அளவுக்கு நாம நம்ம பெற்றோரை நல்லா கவனிச்சிக்குவேன்னு நம்புறேன்.

  >>>>>>>>>>

  உலகம் இப்படித்தான்யா போயிட்டு இருக்கு...அத நாலு பேருக்கு தெரியப்படுத்தவே பதிவிட்டேன்...

  ReplyDelete
 3. (சின்ன தவறு இருந்ததால் நான் Delete செய்தேன்... மன்னிக்கவும்...)

  எப்போது அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் வந்து விட்டதோ அப்போதே மனித நேயம் போயே போச்... இவ்வாறு செய்பவர்கள் ஒரு நாள் அங்கே செல்வார்கள்...

  மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

  தலைவரே... முகநூலிலே இருக்காமல் அப்பப்போ இந்த பிளாக் பக்கம் வாங்க...

  ReplyDelete
 4. அன்பு, பாசம், பரிவு குறைந்து வருவதே...இதற்கு காரணம்.மாம்ஸ் வேற காப்பகத்தை அனுகலாமே..?சேவை மனப்பான்மையோடு இருக்கும் காப்பகங்களை...!

  ReplyDelete
 5. @திண்டுக்கல் தனபாலன்

  (சின்ன தவறு இருந்ததால் நான் Delete செய்தேன்... மன்னிக்கவும்...)

  எப்போது அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் வந்து விட்டதோ அப்போதே மனித நேயம் போயே போச்... இவ்வாறு செய்பவர்கள் ஒரு நாள் அங்கே செல்வார்கள்...

  மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

  தலைவரே... முகநூலிலே இருக்காமல் அப்பப்போ இந்த பிளாக் பக்கம் வாங்க...

  >>>>>

  சரியா சொன்னீங்க தனபாலன் சார்...

  பிளாக் இங்க ஓபன் ஆகுறது இல்ல...இனி தொடர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது நண்பரே...நன்றி..தங்கள் பிரியத்துக்கு!

  ReplyDelete
 6. @வீடு சுரேஸ்குமார்

  அன்பு, பாசம், பரிவு குறைந்து வருவதே...இதற்கு காரணம்.மாம்ஸ் வேற காப்பகத்தை அனுகலாமே..?சேவை மனப்பான்மையோடு இருக்கும் காப்பகங்களை...!

  >>>>>

  தெரிந்தால் மெயிலில் சொல்லுய்யா...நம்மால முடிஞ்சத செய்வோம்...

  ReplyDelete
 7. முதியோர் விசயத்தில் அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்,அதன் கடமையும் அது தான்.

  ReplyDelete
 8. என்ன மாம்ஸ் பண்றது கஷ்டமா கீது.....கொசுருவில் சொன்னது போல் ம்...உசாரா இருக்கோணும்

  ReplyDelete
 9. இறுதியாகச் சொல்லியுள்ள பாடத்தை
  மனதில் ஏற்றுக் கொள்வதே யதார்த்தமானது
  மனம் சங்க்கடப்படுத்திப்போகும் பதிவாயினும்
  யதார்த்த நிலைமை இதுதான்

  ReplyDelete
 10. விக்கி தலைப்பை பாத்துட்டு நேரா கமெண்ட் பாக்ஸுக்கு வந்துட்டேன். எனக்கு ஹார்ட் கொஞ்சம் வீக் அதான்.

  :)

  ReplyDelete
 11. @நண்டு @நொரண்டு -ஈரோடு

  முதியோர் விசயத்தில் அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்,அதன் கடமையும் அது தான்.

  >>>>

  ஏன்சார் நீங்க வேற...இங்க அரசு யாரு...யாரு அரசு...அவிங்க பங்காளிங்களுக்கு வெட்டி கொடுக்கறதுக்கே பணம் இல்லயாமே!

  ReplyDelete
 12. @மனசாட்சி™
  என்ன மாம்ஸ் பண்றது கஷ்டமா கீது.....கொசுருவில் சொன்னது போல் ம்...உசாரா இருக்கோணும்

  >>>>>>>>

  இனி வரும் காலம் என்னவெல்லாம் நடக்குமோ...உசாரா இருந்தே ஆகோனும்யா!

  ReplyDelete
 13. @Ramani

  இறுதியாகச் சொல்லியுள்ள பாடத்தை
  மனதில் ஏற்றுக் கொள்வதே யதார்த்தமானது
  மனம் சங்க்கடப்படுத்திப்போகும் பதிவாயினும்
  யதார்த்த நிலைமை இதுதான்

  >>>>

  வருகைக்கு நன்றின்ணே...இப்ப இருக்க நெலமையில யதார்த்தம் புரியாம இன்னும் புள்ளிங்க காப்பாத்தும்னு தப்பு...நம்ம கடமைய செய்ஞ்சிட்டு போயிட்டே இருக்கோனும்ணே!

  ReplyDelete
 14. @பட்டிகாட்டான் Jey
  விக்கி தலைப்பை பாத்துட்டு நேரா கமெண்ட் பாக்ஸுக்கு வந்துட்டேன். எனக்கு ஹார்ட் கொஞ்சம் வீக் அதான்.

  :)

  >>>>

  நடைமுறை விசயங்கள் அப்பிடித்தான் இருக்கும் மாப்ளே...

  ReplyDelete
 15. நம்முடைய கடைசி காலம் எப்படி இருக்கும் என அரைமணி நேரம் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால் பெற்றோர்களை காப்பகங்களில் விட மனம் வராது....

  ReplyDelete
 16. @koodal bala

  நம்முடைய கடைசி காலம் எப்படி இருக்கும் என அரைமணி நேரம் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால் பெற்றோர்களை காப்பகங்களில் விட மனம் வராது....

  >>>

  பாவம் டைமில்லாம ஓடிட்டு இருக்காய்ங்க...என்ன பண்றது...!

  ReplyDelete
 17. நண்பா...சென்னையில் போரூர் ரமச்சந்திரா மருத்துவ கல்லூரி அருகில்
  ஒரு காப்பகம் உள்ளது.
  நான் அங்கே தொடர்ந்து சூட்டிங் செய்துள்ளேன்.
  அங்கு தங்கியிருந்த பெரியவர்களிடம் இடைவேளையில் உரையாடியதிலிருந்து
  அவர்கள் அனைவருமே அந்நிறுவனத்தை புகழ்ந்தே சொன்னார்கள்.
  மேலதிக விபரம் வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.
  09003917667

  ReplyDelete
 18. @உலக சினிமா ரசிகன்

  நண்பா...சென்னையில் போரூர் ரமச்சந்திரா மருத்துவ கல்லூரி அருகில்
  ஒரு காப்பகம் உள்ளது.
  நான் அங்கே தொடர்ந்து சூட்டிங் செய்துள்ளேன்.
  அங்கு தங்கியிருந்த பெரியவர்களிடம் இடைவேளையில் உரையாடியதிலிருந்து
  அவர்கள் அனைவருமே அந்நிறுவனத்தை புகழ்ந்தே சொன்னார்கள்.
  மேலதிக விபரம் வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.
  09003917667

  >>>>

  சீக்கிரத்தில் தொடர்பு கொள்கிறேன் நண்பா நன்றி..

  ReplyDelete
 19. //பணம் மட்டும் இல்லன்னா...செத்துரனும்...இப்படி அல்லாடிட்டி இருக்க கூடாது..//

  என்ன பண்றது??
  இப்பஇருக்குற காலம் அப்படி..

  கொசுறு மெசேஜ் யதார்த்தமுங்க.

  அலர்ட்டா இருப்போம்ம்ம்ம்ம்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி