நீச்சல் குளங்கள் - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே...
நீங்க பாக்காத விசயத்தையா சொல்லிடப்போறேன்...இருந்தாலும் விருப்பம் இருந்தால் தொடருங்கோ...

சின்ன ஃப்ளாஷ் பேக்...


அப்போ நீச்சல் தெரியாத நேரம் பள்ளிப்படிப்பில் இருந்த நாட்கள்...ஒரு சனியன்று பசங்களோட ஏரிக்கு சென்றேன்...ஆனா இடையிலேயே ஒரு பெரிய கிணற்றில் சில நண்பர்கள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்...கையசைத்து கூப்பிட்டதால் அங்கு சென்று பார்க்கலானேன்...அந்த பம்பு செட்டு மேலே சென்று ”தொபுக்கடீர்”ன்னு குதிச்சி...சாகசம் காட்டிட்டு இருந்தானுங்க...நானும் சீன் போடுவதாக நினைத்து(!) உடைகளை களைந்து...உள்ளாடையுடன் கிணற்றின் வட்டத்தின் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு உரையாடிக்கொண்டு இருக்க...”திடுதிப்பு”ன்னு ஒரு பாவிப்பயபுள்ள என்னய கிணத்துக்குள்ளார தள்ளிப்புடிச்சி...அடப்பாவி நான் அம்புட்டு ஒர்த் இல்லடான்னு சொல்ல முடியாம....தண்ணிக்குள்ளார போயிட்டே இருந்தேன்...

என்னை காப்பாற்ற உள்நீச்சலில் வந்த இருவரை என்னையறியாமல் எட்டி இடுப்பிலேயே உதைத்திருக்கிறேன் போலும்...போடா இவனேன்னுட்டு போயிட்டானுங்க....அங்கன வந்தான் கடவுள் போல “முனியன்” எனும் நண்பன்...என் தலைமுடியைய் கொத்தாக பிடிச்சி இழுத்துட்டு வந்து மேலே சேர்க்க நாலு பேரு தூக்கி கிணத்து வட்டத்தின் மேலே போட்டு...உசிரு திரும்பிச்சி...

எதுக்கு இந்த சீன் என்றால்...நீச்சல் கத்துக்க இதுவும் ஒரு காரணம்னுதான்...சரி விசயத்துக்கு போவோம்...(இம்புட்டு நேரம் சுய விளம்பரதாரர் நிகழ்ச்சிங்கோ!)


வியட்நாம் வந்ததில் இருந்து நீச்சல் குளம் தேடிக்கிட்டு இருந்தேன்...அப்புறம் தான் கெடைத்தது பல...

ரெம்ப விலையில்லீங்க...காலை முதல் மாலை 7 மணிவரை நீங்கள் நீச்சல் பழகலாம்- சுத்தமான தண்ணியில் - விலை இந்திய ரூபாயில் - 150...குழந்தைகளுக்கு - 100...வாரத்துக்கு ஒரு முறை நானும் என் மகனும் இங்கு அடிக்கும் கும்மி இருக்கு பாருங்க...வர்ற பொண்ணுகள்ல(!) இருந்து பெரியவங்க வரைக்கும் சேந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா பாத்துக்கங்களேன்...

இது தவிர இங்கு நிறைய நீச்சல் குளங்கள் இருக்கின்றன...1$ - 50 ரூபாய்க்கும் இருக்கிறது...என்ன தண்ணி கொஞ்சம் கலங்கலாக இருக்கும் அம்புட்டுதான்...


இந்த குளங்களின் தனித்துவமே...அருகிலேயே கிடைக்கும் உணவு வகைகள் தான்...வெளியிலிருந்து உணவு கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் சூப்பரான பச்சை காய்கறிகளுடன் உணவுகள் கிடைக்கும்...விலையும் மலிவு...குறிப்பாக ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் எனப்படும் உருளைக்கிழங்கு நீள வாக்கு உணவு - 1$ மட்டுமே...

இந்த தண்ணீரில் ஆடும் பந்து விளையாட்டும் அருமை...குழந்தைகள் ஒரு புறமும்..- 3 லிருந்து 4 அடிவரை இருக்கும் இடத்திலும்...பெரியவர்கள் 6 அடிவரை இருக்கும் இடத்திலும் ஆடி மகிழ்கின்றனர்...

இந்த நாட்டின் பல இடங்களிலும் மலிவானதாகவே நீச்சல் குளங்களின் அனுமதி பணம் இருக்கிறது என்பது சந்தோசமான செய்திதான்...

நம்ம சென்னையில் நான் பார்த்த ஒரே நீச்சல் குளம் - மெரினா மட்டுமே...ஊரில் இருந்த ஏரி மற்றும் குளங்களும் நீர் இல்லை என அழகிழந்து காணப்படுகின்றன....சென்னை புறநகரில் இருந்த ஏரிகள் இன்று ப்ளாட் ஆகி நிற்கின்றன...


இங்கே ஒரு ஏரி கூட கடந்த 50 வருடங்களில் முடக்கப்படவில்லையாம்...கிட்ட தட்ட 57 பெரிய..சிறிய மற்றும் குறு ஏரிகள் இருப்பதாக சொல்கிறார்கள்...ஆனாலும் மக்களை ஏரிக்குள் செல்வதை அனுமதிப்பதில்லை...அதற்க்கு பதிலாக குறு ஓடங்களில் பயணிக்கும் காதலர்கள் அதிகமாக தென்படுகிறார்கள்...


பாருங்க நீச்சல் குளங்கள் பத்தி சொல்ல வந்துட்டு ஏரி பக்கம் போயிட்டேன்...இப்படி பச்சை பசேல்னு இருக்கும் நகரத்தை பார்க்கும் போது பொறாமையாத்தான் இருக்கு..

கொசுறு: இன்றைய சமுதாயத்துக்கே தண்ணி இல்ல நம்மூர்ல...அடுத்த தலைமுறைய நெனச்சாலே திக்குங்குது...பச்சை பசேல் - இனி போட்டோல மட்டும் தானோ!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. அப்ப நீங்க நல்லா நீச்சல் அடிப்பிங்கதானே... அடுத்த தடவை இந்தியா போகும் போது தமிழகம் முழுவதும் திறந்து இருக்கும் நீச்சல் குளத்தில்(டாஸ்மாக்) உள்ள தண்ணியில் நீச்சல் அடித்து உங்கள் அனுபவத்தை எழுதவும். இந்த நீச்சல் குளத்திற்கு அருகேயும் தின்பதற்கும் பண்டங்கள் விற்க்கபடும்,

  ReplyDelete
 2. @Avargal Unmaigal

  அங்க அடிச்சி முடிச்சிட்டு(!) தான் இங்கன வந்து இருக்கேன் அய்யா!

  ReplyDelete
 3. மாம்ஸ் நாம பாக்காத தண்ணியா அடிக்காத நீச்சலா ஹே ஹே ஹே

  ReplyDelete
 4. தண்ணீர் பற்றிய தவிக்கும் சிந்தனை.

  ReplyDelete
 5. //இங்கு ஒரு ஏரி கூட கடந்த 50 வருடங்களில் முடக்கப்படவில்லை//
  உரத்த சிந்தனை.நம் ஒவ்வொருவருக்கும் இதில் அக்கறை வேண்டும்.

  ReplyDelete
 6. நல்லாத்தான் இருக்கு....... நம்மூர நெனச்சா ரொம்பக் கவலையா இருக்கு..... இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போயிடல..... ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரிட்டா 4-5 வருசத்து மழைல செட்டாகிடும்..... அதுக்கெல்லாம் இங்கே எவனுக்கு நேரம்?

  ReplyDelete
 7. @மனசாட்சி™

  “மாம்ஸ் நாம பாக்காத தண்ணியா அடிக்காத நீச்சலா ஹே ஹே ஹே”

  >>>>

  யோவ் மாப்பு...ஏன்யா நீ வேற ஞாபகப்படுத்துற...அவ்வ்!

  ReplyDelete
 8. @FOOD NELLAI

  "தண்ணீர் பற்றிய தவிக்கும் சிந்தனை"

  >>>

  அண்ணே இதில் எனி உள்குத்து..
  ......................

  “//இங்கு ஒரு ஏரி கூட கடந்த 50 வருடங்களில் முடக்கப்படவில்லை//
  உரத்த சிந்தனை.நம் ஒவ்வொருவருக்கும் இதில் அக்கறை வேண்டும்”

  >>>>>>>>>

  நிர்வாகமே கண்டுக்காமதான்ணே இருக்கு...என்னத்த சொல்ல..

  ReplyDelete
 9. @பன்னிக்குட்டி ராம்சாமி

  நல்லாத்தான் இருக்கு....... நம்மூர நெனச்சா ரொம்பக் கவலையா இருக்கு..... இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போயிடல..... ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரிட்டா 4-5 வருசத்து மழைல செட்டாகிடும்..... அதுக்கெல்லாம் இங்கே எவனுக்கு நேரம்?

  >>>>

  மாப்ள யாரு இத செய்யிறது...செய்ய வேண்டியவங்க தானே ஆக்கிரமிப்ப செய்ஞ்சிட்டு இருக்காங்கே!

  ReplyDelete
 10. உங்கள ஒருத்தன் தள்ளிவிட்டத போல நானும் என் நண்பரை விளையாட்டாக தள்ளிவிட மிகவும் ஆபத்தாக போனது அவர் உயிர் பிழைச்சதே கடவுள் அருளால் மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

  ReplyDelete
 11. உங்கள ஒருத்தன் தள்ளிவிட்டத போல நானும் என் நண்பரை விளையாட்டாக தள்ளிவிட மிகவும் ஆபத்தாக போனது அவர் உயிர் பிழைச்சதே கடவுள் அருளால் மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

  ReplyDelete
 12. குரங்கு பிடிய விட்டா மத்த குரங்குக சேர்த்துக்காதுன்னு சொல்வாங்க அதுமாதிரி எங்க ஏரியாவில நீச்சல் தெரியலைன்னா யாரும் விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க...அப்படிப்பட்ட இடத்தில் இப்ப நீச்சல் அடிப்பதற்கான இடங்கள் குறைந்து விட்டன....!

  ReplyDelete
 13. நீங்கள் சொல்வது போல் வருங்காலத்தில் தண்ணீர் தான் மிகப் பெரிய பிரச்சனை...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி