சுந்தர பாண்டியன் - தனியா ஒரு பார்வை!

வணக்கம் நண்பர்களே...இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல...தனி மனிதனின் பார்வை மட்டுமே...அதுக்கு முன்னாடி சில விசயங்களை சொல்லிப்புடுறேன்..

விமர்சனம் எனும் பெயரில் விக்கி பீடியாவை எடுத்து வச்சிகிட்டு ஆங்கில படங்களுக்கு எழுதுவோர்(!) பெருகிவருவதும், இணையத்தை எப்படி தனக்கான வியாபார தளமாக செயல்பட வைக்கலாம் என விமர்சனம் எழுதி அறிவாற்றலை காமித்து வர முயல்வோரும்(!)...நிற்க்க, தன்னோட டெடிகேஷன் எனும் கடின விசயத்தை இன்னும் சரியான பாதையில் செயல்பட அனுமதிக்காமல்(!) விமர்சனம் எனும் குருவி கூட்டுக்குள் நின்று திட்டு வாங்குவோரும்(!) இருக்கும் இக்கால கட்டத்தில்...

படத்த பாத்தமா சத்தம் போடாம பார்வைய எழுதுனமான்னு திரியும் சிலரைப்போல(!) எழுத வந்திருக்கிறேன்...இனி அதகளம் தான்...

சுந்தர பாண்டியன் - துட்டு பெருத்த பணக்காரரின் ஒரே வாரிசு....அப்படியே இருந்தாலும் நாட்டு நடப்பை...அதாம்பா இளைமையில் கற்பதைத்தவிர எல்லோரும் எப்படியெல்லாம் செய்வாங்களோ(!) அதையெல்லாம் சரிவர செய்து வரும் இளங்காளை...

எந்த விசயமா இருந்தாலும் நண்பனுக்காக சட்டுன்னு களத்தில் இறங்கும் அப்பாவி(!)...என்ன ஓபனிங்கல குருவி நாயகனுக்கு(!) போல சாங்க் கொடுத்து கொஞ்சம் பில்டப்ப ஏத்திப்புட்டாய்ங்க...அம்புட்டுதான்..

யதார்த்தம் எனும் வட்டத்துக்குள் ஓட ஆரம்பித்த சசி...தான் ஓடிக்கொண்டே கதையய் தன்னுடன் பயணிக்க வைக்கிறார்...

தன் காதலுக்கு சிக்னல் கொடுக்க போன இடத்தில்....அந்த பெண் பெரிதாக இம்ப்ரஸ் ஆகலன்னு(!)...தனக்கு ஓகே ஆகலன்னு எஸ் ஆகிடுறாரு...

அதே பெண்ணை தன் சக நண்பன் காதலிக்கிறான்(!) என தெரியும் போது...டேய் இது செட் ஆகாது என்று சொல்லி பார்த்தும்...இல்ல இது தான்(!) வேணும் என்று அடம்பிடிக்கும் நண்பனுக்கு(!)...எப்படி கரெக்ட் பண்ணுவது என்று கத்துக்கொடுக்க முற்படுகிறார்...

எப்பவுமே நமக்குன்னா ஒர்க் பண்ணாத மூளை(!)...அடுத்தவங்களுக்காக யோசிக்கும் போது நச்சுன்னு ஒர்க் பண்ணும்(!)...என்ன போறாத காலம் அந்த பெண் இவரைத்தான் லவ்வுவதாக சொல்ல...இடி இறங்குகிறது நண்பனுக்கு....ஆனால் வெளிக்காட்டாமல் எஸ் ஆகிறார்...

இதற்க்கு இடையே அந்தக்கால(!) செந்தில் கணக்காக ஒன்சைட் லவ்வும் அப்புகுட்டி இதை எதிர்க்கிறார்...ஜாலியா இருந்த அப்புகுட்டிய வில்லன் லெவலுக்கு(!) பில்டப் பண்ணி ஜோலிய முடிக்கிறார்கள்...

இதன் பின் கெடைக்கும் கெட்ட பெயர்களை எப்படியெல்லாம் அமைதியுடன்(!!) கையாள்கிறார் ஹீரோ என்பதே கதையின் களம்..

அடிச்சி ஆடி இருக்கார் சசி...

பரோட்டா சூரி வைத்தே காமடி எனும் முழு பாரத்தையும்(!) தாங்க வைத்தது பெரிய விசயம் தான்...மனுசன் பாடி லேங்க்வேஜ் நச்.. 


படம் பார்க்கும் தனி மனிதன் யோசிக்கும் இடங்கள்:

இந்த படம் பாதி காதல்...மீதி நண்பர்களின் துரோகம் என்று மட்டுமே இருக்கே....

கிராம பெண்கள்னா இப்படித்தான் இருப்பாங்க என்று முத்திரை குத்திய மகா மெகா டைர டக்கர்களை ஓரம் கட்ட வைத்து(!)...இப்படியும் தைரியமா தங்கள் கருத்தில் நிலையா நிப்பாங்க என்று காட்டவைத்தது..

பெண்கள் முக்காவாசி காதலித்தவர்களை திருமணம் முடிக்க மாட்டார்கள் என்ற விசயத்தை அழுத்தி சொல்லியது(!)...அதே நேரத்தில் பெண் நினைத்தால் நினைத்தவனையே மணக்க முடியும் என்றும் காட்டியது...

ஓபனிங்க்லயே இவிங்களுக்கு யாரு ஹீரோவா வந்தாலும் கார்த்திக்...பிரபு தான் எப்பவுமே டாப்புன்னு காட்டி...ஜாதி பிரச்சினைய லகுவா உள்ளே சொருகியது...!

எதுக்கு இப்படி கத்தி குத்து வாங்கி...மீண்டும் பொங்கி எழுந்து ஃபைட் பண்றாப்லன்னு புரியாதது...

பிடித்த மகா மெகா விசயங்கள்...

தில்லானவனுக்கு தான் பொண்ணு...

ஒன்னுமே இல்லாதவன் தான் ஊரயே கலாய்க்க முடியும் - பரோட்டா சூரி...ஹீரோ இவரு முன்னாடி பம்மித்தேன் போறாரு...

நேரம் வரும்போது நண்பனும் பகையாவான்...- தனி மனித மிருகத்துவம்!

பொண்ணு அதாம்பா ஹீரோயின் பாந்தமான அழகுடன் வளைய வருவது..

அப்பு குட்டிய வில்லன் ரேஞ்சுக்கு அப்பிபுட்டது..

சித்தியாக வரும் கேரக்டரின் விட்டு புடிக்கும் அறிவாளி(!)த்தனமான முடிவுகள்(!)...

பாடல்கள் பத்தி சொல்ல நாம என்ன கவிஞனா...!..ஓகேபா..

டைரக்டர் ஜெயிச்சிட்டாப்ல...சசியும் ரெண்டு படம் விட்டு மூணாவதுல ஓகேயாயிட்டாப்ல...

மொத்தத்தில் படம் ஓகே...


பஞ்ச் வசனங்கள் 

பெரியவங்க சொல்லுவாங்க தெரியாதவிங்க கிட்ட பாத்து பழகுங்கன்னு....ஆனா தெரிஞ்ச நீங்களே இப்படி பண்ணா என்னாத்த பண்றது!

எதிரியே இல்லாம போனா வாழ முடியும்...வளர முடியாது..

குத்துனவன் நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லக்கூடாது அதான்டா நட்பு....

படத்தில் பலருக்கு பிடிக்காத போன விசயம்..

இத்தனை குத்து வாங்கியும் எழுந்து வந்து சண்ட போடுறானே ஹீரோ - முடியல...

கொசுறு: என்னையும் இப்படி எழுத வச்ச மாசற்ற இரு மாணிக்கங்களுக்கு என் நன்றிகள்...யம்மா யம்மா யப்பா யப்பா!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. முன்னுரையே முழுசா சொல்லுதே சேதி. :)

  ReplyDelete
 2. ஆனாலும் அந்த வெளம்பரம் நமக்கு வேணாம்பா!

  ReplyDelete
 3. அதகளம் அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கு. அருமை விக்கி.

  ReplyDelete
 4. சுந்தரபாண்டியன் மாம்ஸ்சை கவர்ந்திட்டான் போல நான் இன்னும் பார்க்கலை....பார்ப்போம் பிறகு இப்ப நேரம் இல்லை!

  ReplyDelete
 5. ரைட்டு
  அந்த
  இரு
  சிகாமணிகளுக்கு
  நன்றி

  ReplyDelete

 6. சுந்தர பாண்டியனுக்கு நீங்கள் எழுதிய கோனார் உரை நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 7. விமர்சனம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும்
  இருக்கே .வெறுப்பேற்றி தங்களை விமர்சனம் எழுத வைத்த
  அந்தப் புண்ணியவானகள் வாழ்க

  ReplyDelete
 8. அட ரொம்ப வித்தியாசமான விமர்சனம் ... தொடரட்டும் தல .. நேற்று இரவுதான் படம் பார்த்தேன்

  ReplyDelete
 9. பார்வை எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா,, விமர்சனம் எழுதறதயே பொழப்பா வச்சிகிட்டு இருக்குறவங்களுக்கு செம உள்குத்தா இருக்கே!!

  ReplyDelete
 10. விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கு... நன்றி...

  இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 11. சுவையாக சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லிய விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 12. விக்கி மாமாவை கவர்ந்த படத்தை நாங்களும் பார்த்தா போச்சு :))

  ReplyDelete
 13. Oru murai paarkkalaam matrapadi perusaa solikira maathiri edhuvm illai

  ReplyDelete
 14. அருமையான விமர்சனம் சுந்தர பாண்டியனுக்கு பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 15. விமர்சனம் வித்தியாசமாக....

  ReplyDelete
 16. விமர்சனம் வித்தியாசமாக...பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 17. சுந்தரபாண்டியன் பற்றிய உங்கள் விமர்சனம் படத்தின் உண்மைத் தன்மையை படம் பிடித்துக் காட்டியுள்ளது . இதன் பின் படம் பார்க்கும் போது நீங்கள் கூறிய விடயங்கள் எங்கள் ஆழப்பார்வைக்கு வித்திடும் .இவ்விடயங்களை பற்றிய எண்ணங்களே மேலிடும் நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி