துரோகம் இன்றி அமையாதுலகு....- எஞ்சாய்டா மானிடா!வணக்கம் நண்பர்களே....
இது ஒரு காதை(கதையல்ல!)....படத்தை மிஞ்சிய விசயமாகப்படலாம்...ரிஸ்க் எடுக்கறது எமக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று நினைப்பவர்கள்(!) மட்டும் தொடரவும்...

அது ஒரு காலை நேரம்...

ட்ரிங் ட்ரிங்....(தொலைபேசி அழைப்பு!)

ஹாய் மதன் என்ன சொல்லுங்க....

ஹேய் அந்த பார்ட்டி துட்டு கொடுக்கறதா ஒத்துகிட்டான்...அவனுக்கு மீண்டும் ஹெல்ப் வேணும்ல...அதான்...அங்க போய் பாத்துட்டு வந்துடு...

ம்ம்...ஆனா நான் இப்ப லோக்கல்ல இல்ல...இன்னொரு விசயமா வெளிய வந்து இருக்கேன்...மறுபடியும் சிட்டிக்கு போயிட்டு தான் திரும்பனும்...

இல்ல அதுக்கு நேரம் இல்ல...ஏன்னா நான் ஹோசில இருக்கேன்...ப்ளீஸ் நேரடியா போ...ஒன்னும் பிரச்சினை இல்ல...எதுன்னாலும் என்னை போன்ல பிடி...

சரி...போனை ஆன்லயே வை...

ஓகே...

அந்த இடம் போய் சேர்கிறான்...தனக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டலுக்கு செல்கிறான்...

சார்...உங்க பாஸ்போர்ட் ப்ளீஸ்...

ஓ காட்...நான் கொண்டுவரல...வேணும்னா என்னோட டேக்ஸ் அதாரிட்டி கார்ட் ஓகேவா...

கொடுங்க சார்...இது நீங்க செக் அவுட் பண்ணும்போது திரும்ப தருவோம்...

ஓகே...

கொஞ்ச நேரம் லாபியில் இருங்க...உங்கள செக்கின் பண்ணிட்டு கூப்டுறேன்...

ஓகே...

சில நிமிடங்களில்...

திபு திபு என 5 பச்சை உடையணிந்த நிர்வாக காரர்கள்(!) அவனை நோக்கி வருகிறார்கள்....

யெஸ் உங்களுக்கு என்ன வேணும்...

அவர்கள் கேக்கும் கேள்விகள் புரியாமல் விழிக்கிறான் ராஜ்...

அதில் ஒருவன் கேட்ட கேள்வி சற்று புரிந்தது போல இருந்தது...

ஹோட்டல் ரிசப்ஷனில் இருக்கு என் ஐடி கார்ட்....எதுவும் சொல்லாமல் கூட்டி கொண்டு சென்றனர்...அந்த ரிசப்ஷனில் அந்த பெண்ணை காணவில்லை...அடுத்த இரு பெண்களும் இவன் யார் என்று தெரியாமல் விழிப்பது தெரிகிறது...

ப்ளீஸ் என்னோட செக்கினில் என் கார்ட் இருக்கு அதை பாருங்க...இல்லயா...எங்க போனா அந்த பொண்ணு...!

ஓ மை காட்...

வேறு எதாவது...

சீ....என்னோட வாலட்ல என் விசிட்டிங் கார்டு இல்ல...

ஓகே இருங்க ஒரு போன் பண்ணிக்கிறேன்...

நோ...போன் நிர்வாகத்தினர் கைக்கு போனது...

கொஞ்ச நேரத்தில் இருட்டு அறைக்கு கொண்டு போகப்பட்டான் ராஜ்...அரை நாள் கழிந்தது...

அங்கே இருந்த ஒருத்தர் கொஞ்சமாக ஆங்கி(!) பேசலானார்...

ஏன் இங்கு வந்தீங்க...

நான் ஒரு வேலை விசயமா வந்தேன்...

என்ன வேலை..

அதாவது மருந்துப்பொருட்கள் இறக்குமதி செய்த யாவாரி(!) எங்களுக்கான பணத்தை திரும்ப தருவதாக சொல்லி இங்கு வர சொன்னார்...

ஓ...அவர் பெயர்...

திங்...

ஆனா...உங்களை அப்படி யாரும் வந்து இதுவரை சந்திக்க வில்லையே...இப்பவும் எங்க ஆள் ஒருவர் அங்கு தான் இருக்கிறார்...

ஸ்ஸ்...சரி இப்ப என்ன என் மேல் குற்றம்..

உங்களுக்கும் சலவை கல் பிரச்சினைக்கும் சம்பந்தம் இருக்குமோன்னு டவுட்...

ஹாஹா...இல்லையே அந்த முதலைகளை சிக்க வச்சதே நான் தானுங்க...

இருக்கலாம்...எல்லாத்துக்கும் கிளியரான ஃப்ரூஃப் வேணும்...இப்ப உங்க கிட்ட நீங்க யார்...எதுக்கு வந்தீங்கன்னு எந்த வித தடயமும் இல்லயே...

என் ஃப்போனை கொடுங்க நான் ஃப்ரூஃப் பண்றேன்...

ம்ம்...இந்தாங்க...

ராஜ் தன்னை அனுப்பியவனுக்கு போன் செய்தான்...சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்...

அந்த யாவாரிக்கு போன் செய்தால்...ஸ்விச்ட் ஆப்...

தன்னுடைய மொல்லாளிக்கு போன் அடிக்கிறான்....ஒரே நிசப்தம்...பிறகு நாட் ரீச்சபுள்...

அடக்கொடுமையே...

இப்ப சொல்லுங்க....உங்களோட ரியல் விசயம் என்ன....

கடைசியாக ஒரு கால் பண்ணிக்கிறேன்...

ம்ம்...

ஹலோ கரன்...

யெஸ் ராஜ் எப்டி இருக்க...

ஹேய் நான் ஒரு சிக்கல்ல மாட்டி இருக்கேன்...கொஞ்சம் நான் யார்ன்னு இந்த அதிகாரிகிட்ட சொல்லு...எதாவது டாக்குமெண்ட் வேணும்னா என்னாவேணுமோ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...இன்று சனிக்கிழமை யாரும் ஃபோன் எடுக்கல...

என்னடா ஆச்சி...கொடு போனை...

(சில நிமிடங்கள் பேசிய அவன்...ராஜ்ஜிடம் சில மணி நேரத்தில் அங்கு வருவதாக கூறி வைக்கிறான்!)

சில மணி நேரத்துக்கு பிறகு...ராஜ்...கரனை காண்கிறான்...

ம்ம்...ஒன்னும் இல்ல...உன் மேல தவறான புகார் கொடுத்து இருக்காங்க...அதுவும் சலவை மேட்டர்ல உன்னய கோத்து விட்டு தூக்கறதுக்காக...

ஓ...

அதான் அப்பவே சொன்னேன் ஜாக்கிரதையா இருன்னு...

அவனுங்கள விடக்கூடாது...

கவலைப்படாத ரெண்டு பேருக்கு செக் வச்சிட்டேன்...இன்னும் கொஞ்ச நேரத்துல சிக்கிடுவானுங்க...

மூணாவது யாரு..

வேற யாரு....உன்னய இங்க வரவச்சவன் தான் இப்ப இங்க இல்ல..எஸ் ஆகிட்டான்..

கர்ர்ர்ர்ர்ர்...மிகுந்த சிரமத்துக்கிடையே...மொழி புரியாமல்...தன்னை இன்னார் என உறுதிப்படுத்த முடியாமல் ராஜ் பட்ட அவஸ்தை இருக்கே...ஸ்ஸ்ஸ் அபா...

கொசுறு: மக்களே எங்கு சென்றாலும் உங்கள் ஆவணங்களை கையோடு ஒரு காப்பி கொண்டு செல்லுங்கள்...

கொசுறு: பெரிய முதலைகளோடு மோத வேண்டி வந்தால்(!)...பின்விளைவுகளை சிந்தித்து மோதுங்கள்(!)....பின்பு வருத்தப்படுவதில் நம்மை விட குடும்பமே அதிகம் பாதிக்கப்படுகிறது...!..வீரத்தை விட...விவேகம் ரெம்ப முக்கியம்.. 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. அனுபவம் பேசுது மாம்ஸ்...

  ReplyDelete
 2. என்னா சோதனை, என்னா சோதனை. அந்த வேதனையிலும், பிறருக்குப் பாடம் சொல்லிப் புரிய வைப்பதொன்றே சாதனை. இறையருள் எங்கும் தொடரும்.

  ReplyDelete
 3. ம்ம்...

  புரியுது மாம்ஸ்

  ReplyDelete
 4. //கொசுறு: மக்களே எங்கு சென்றாலும் உங்கள் ஆவணங்களை கையோடு ஒரு காப்பி கொண்டு செல்லுங்கள்...//


  ஓகே தல..

  ReplyDelete
 5. உங்கள் அனுபவம் - எல்லோருக்கும் ஒரு பாடம்...

  ReplyDelete
 6. முடிவில் நல்ல மெசேஜ்... :)

  ReplyDelete
 7. அந்நிய நாட்டில 'ரெம்ப' உஷாராத்தான் இருக்க வேண்டி இருக்கிறது

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி