நானும் குழந்தையா இருக்கச்சே!

வணக்கம் நண்பர்களே...இனிய பல நினைவுகளை உள்ளடக்கிய காலம் என்பது பள்ளி மற்றும் கல்லூரிக்காலம்...அதை இப்போது நினைத்து பார்ப்பது என்பது ஒரு வித இனிமையான சந்தோசம்...

இன்று காலை என் பையனுக்கு புதிய பள்ளி திறக்கப்பட்டது..அங்கு அவனை விட்டு வர சென்று இருந்தேன்....அழகான அந்த அறையில போட்டு இருக்க டெஸ்க்கெல்லாம் பாத்து அசந்துட்டேன்...அரசு பள்ளியில் இப்படி இருப்பது அபூர்வமே....

ஒவ்வொரு குழந்தையாக தனக்கான இடத்தில் போய் உட்கார சென்றன...என் பையன் விறு விறுன்னு கடைசி பெஞ்சில போய் உக்காந்தான்...

என் மனைவி...ஏண்டா முன்னாடி வந்து உக்காருவது தானே என்றாள்...அவன் அதை சட்டை செய்த்ததாக தெரியவில்லை...

டீச்சரும்...இருக்குற குழந்தைகளில் உங்க பையன் தான் கொஞ்சம் உயரம் அதிகம் அதான் என்றார்கள் வியட்நாமிய மொழியில்..

கொஞ்சம் பின்னோக்கி போனேன்...(கொசுவ கொல்லாத வத்திய சுத்திக்கங்க!)

இதே வயது இருக்கும்...அப்போது அவனை கொண்டு போயி சேர்த்து இருந்தார்கள் பள்ளியில்....அன்று முதல் நாள்...அந்த இடம அவனுக்கு பிடிக்கவில்லை...தவிர அத்தனை பேரும் சொல்லி வைத்தவர் போல அவனிடம் பேசவில்லை..

அவனால் எதாவது தொண தொணன்னு(!) பேசாமல் இருக்க முடியாது...அப்பவே அவன் அப்பிடித்தானாம்..என்னத்த பண்றது...கொண்டு போயி விட்ட முதல் நாளிலேயே கடைசி பெஞ்ச பிடிச்ச பய அவனாத்தான் இருக்கும்...

ஏன்டா உங்க வீடு எங்கிருக்கு...

எதிர் பய அழுகைய மட்டுமே பதிலாக கொடுத்துக்கொண்டு இருந்தான்...


அப்ப இண்டர்வெல்னு கொஞ்ச நேரம் விட்டாங்க....தக்காளி நாம யாரு...நம்மளயா அடைச்சி வைக்க பாக்குறீங்கன்னு நைசா எஸ்கேப்பாகி அந்த 10 அடி உயர இரும்பு கேட்ட கம்பிய பிடிச்சி கொஞ்ச கொஞ்சமா ஏறி அந்த பக்கமா இறங்கிட்டான்...அது வரைக்கும் யாருமே கவனிக்கலயாம்...என்ன கொடும இது...!

அதுக்குப்பிறகு சரியான பாதையில 1 கிமீ நடந்து வந்து வீட்டுக்குள்ல வந்து புகுந்துட்டான்...வீட்ல யாரும் காணோம்...அப்ப அவன் சாக்லேட் பாட்டி எங்க போனாங்கன்னு தேடிப்பாத்தான்...ஜிம்மி மட்டும் தான் இருந்துது...அட அவிங்க வீட்டு காவல் தெய்வங்க அது....அதை நம்பி கடைக்கு போகும் போது கூட கதவை தாப்பா போடாம போயிருவாங்க அந்த பாட்டி...சரி விசயத்துக்கு வருவோம்...உள்ளார போயி கட்ட பெட்டுன்னு சொல்லுவாங்க அதுக்கு அடியில போயி படுத்து கிட்டான்...

கிட்ட தட்ட 5 மணி நேரமா வீடே அமக்களப்படுது...

எல்லாருக்கும் தகவல் சொல்லி ஆளாலுக்கு எங்கயெல்லாமோ ஆள விட்டு தேடுறாங்க...

அய்யோ குழந்தைய பாத்துக்கங்கன்னு விட்டு வேலைக்கு போன குழந்தையின் அம்மா வந்து கேட்டா என்னத்த சொல்றதுன்னு...அந்த பாட்டி பதறிட்டு இருக்காங்க...

தாத்தாவும்...மாமாவும் ஆளாலுக்கு சைக்கிள எடுத்துகிட்டு ஒவ்வொரு திசையில திரியிறாங்க...

ஸ்கூல் வாட்ச்மேனை கண்டபடி திட்டி தீத்து இருக்காங்க, தலைமை ஆசிரியர்(!)...அப்ப ஒருத்தன் சொல்லி இருக்கான்....அவன் இந்த கேட்டுல ஏறி இறங்குனத பாத்தேன்னு...

ரவுண்டு கட்டி தேடி இருக்காங்க...கடைசியா ஜிம்மிப்பய அடிக்கடி பெட்டுக்கு அடில போறதும் வர்றதுமா இருந்தத பாத்துட்டு என்ன பண்ணுதுன்னு அடியில பாக்கும் போது அவன் அங்கிருக்கறத பாத்து ஆடிப்போயிட்டாங்களாம்...கூட்டுக்குடும்ப அங்கத்தினர்கள்...


அந்த குழந்தையே நாந்தானுங்கோ...

நல்லவேல யாரும் என்னய அப்போ அடிக்கல...இப்ப நெனச்சாலும் இந்த அப்பாவியா இப்படியெல்லாம் பண்ணதுன்னு தோனுது!

கொசுறு: நானும் குயந்தையா இருக்கச்சே...இப்பிடித்தான் பண்ணேன்னு சொல்லும் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பனம்(!)...உட்வர்ட்ஸ் அப்பல்லாம் ஃபேமஸ்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. இவ்வளவையும் நினைவு கூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...

  படத்தில் உள்ளது நீங்களா....? அப்பாவி தாங்க இப்படி எல்லாம் பண்ணும்... ஹா... ஹா...

  ReplyDelete
 2. // என் பையனுக்கு புதிய பள்ளி திறக்கப்பட்டது //

  :-)

  //என் பையன் விறு விறுன்னு கடைசி பெஞ்சில போய் உக்காந்தான்...//

  அதெல்லாம் ஜீன் வேலை நாம ஒன்னும் பண்ணமுடியாது மச்சி.

  // ஏன்டா உங்க வீடு எங்கிருக்கு...

  எதிர் பய அழுகைய மட்டுமே பதிலாக கொடுத்துக்கொண்டு இருந்தான்...//

  அந்தப்பயபுள்ள அழுத காரணம் வேற மச்சி....

  // நல்லவேல யாரும் என்னய அப்போ அடிக்கல... //
  அடிவாங்குனவ எப்ப வெளில சொல்லிருக்காக....

  படிச்சி ஸ்கூல் டேய்ஸ் ஞாபகம் வருது....


  ReplyDelete
 3. @திண்டுக்கல் தனபாலன்

  இவ்வளவையும் நினைவு கூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...

  படத்தில் உள்ளது நீங்களா....? அப்பாவி தாங்க இப்படி எல்லாம் பண்ணும்... ஹா... ஹா...

  >>>>>

  ஹாஹா...அவ்வ்...

  நண்பா அது நானில்லீங்க்...கூகுள் கொடுத்த அப்பாவி போட்டோ புள்ள...

  ReplyDelete
 4. @பட்டிகாட்டான் Jey


  // என் பையனுக்கு புதிய பள்ளி திறக்கப்பட்டது //

  :-)

  //என் பையன் விறு விறுன்னு கடைசி பெஞ்சில போய் உக்காந்தான்...//

  அதெல்லாம் ஜீன் வேலை நாம ஒன்னும் பண்ணமுடியாது மச்சி.

  // ஏன்டா உங்க வீடு எங்கிருக்கு...

  எதிர் பய அழுகைய மட்டுமே பதிலாக கொடுத்துக்கொண்டு இருந்தான்...//

  அந்தப்பயபுள்ள அழுத காரணம் வேற மச்சி....

  // நல்லவேல யாரும் என்னய அப்போ அடிக்கல... //
  அடிவாங்குனவ எப்ப வெளில சொல்லிருக்காக....

  படிச்சி ஸ்கூல் டேய்ஸ் ஞாபகம் வருது....

  >>>>

  யோவ் அப்பல்லாம் நாம ஞானக்குழந்தைய்யா நம்மள வீட்ல அடிக்க மாட்டாங்க...ஒன்லி ஸ்கூல்ல மட்டும் தான் டின்னு கட்டுவாங்கோ!

  ReplyDelete
 5. அப்பவே கேட்டு ஏறி குதிச்சு இருக்கீங்க...

  ReplyDelete
 6. //அந்த குழந்தையே நாந்தானுங்கோ...//

  அந்த அப்பாவி(!) நீங்கதானா?

  ReplyDelete
 7. நண்பா நானும் கடைசி பெஞ்ச்தான்...
  ஒரே ஒரு வித்தியாசம்...
  நான் படு குள்ளம்.

  ReplyDelete
 8. பிளாக்கர் நிறைய பேரு கடைசி பெஞ்ச்தான் போல.....?

  ReplyDelete
 9. மாம்ஸ்....நானும் உங்களோடு உடன்படுகிறேன்...

  ReplyDelete
 10. @கோவை நேரம்

  அப்பவே கேட்டு ஏறி குதிச்சு இருக்கீங்க...

  >>>>

  கேட்டு மட்டும் கொஞ்சம் ஷார்ப்பா இருந்திருந்திச்சி...அவ்வ்

  ReplyDelete
 11. @இந்திரா

  //அந்த குழந்தையே நாந்தானுங்கோ...//

  அந்த அப்பாவி(!) நீங்கதானா?

  >>>>>>>>>

  ஆமங்கோ...அட ஆமாங்கோ!

  ReplyDelete
 12. @உலக சினிமா ரசிகன்

  நண்பா நானும் கடைசி பெஞ்ச்தான்...
  ஒரே ஒரு வித்தியாசம்...
  நான் படு குள்ளம்.

  >>>>>>>

  மாப்ள...கடைசி பெஞ்ச் தான் நாடாளும் போல...ஹிஹி

  ReplyDelete
 13. @வீடு சுரேஸ்குமார்

  பிளாக்கர் நிறைய பேரு கடைசி பெஞ்ச்தான் போல.....?

  >>>>>

  ஹாஹா...அதனால தானோ என்னவோ அறிவாளிகளா இருக்காங்க...யம்மாடி...!

  ReplyDelete
 14. @NKS.ஹாஜா மைதீன்

  மாம்ஸ்....நானும் உங்களோடு உடன்படுகிறேன்...

  >>>>>>

  ஆஹா நீருமா...எஞ்சாய்யா...

  ReplyDelete
 15. ரொம்ப சேட்டை தனம் பண்ணிட்டு இப்ப நினைவா எழுதி இருக்கீங்க! நன்றி!

  இன்று என் தளத்தில்
  வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

  ReplyDelete
 16. ஆஹா இது றீலா அல்லது றியலா ?????......ஒரு வேளை
  உண்மையாகவே இருக்கும் என்றே ஒரு சின்ன சந்தேகம் :)வாழ்த்துக்கள் மேலும் ஆக்கம் தொடரட்டும் .

  ReplyDelete
 17. ந‌ல்லாயிருக்கு உங்க‌ கொசுவ‌ கொல்லாத‌ வ‌த்தி சுத்தின‌ ஃப்ளாஷ்பேக்...! பைய‌ன் கிட்ட‌யும் ப‌கிர்ந்தாச்சா?

  ReplyDelete
 18. அப்பனுக்குப் புள்ளை தப்பாம பொறந்திருக்குன்னு அப்ப ஒரு குரல் கேட்டிருக்குமே! :))

  ReplyDelete
 19. ஹி ஹி நான் கோச்சிக்கிட்டு மொட்டை மாடியில் போயி படுத்துக்கிட்டு நான் முழுக்க தேட வச்சேன்

  ReplyDelete
 20. உங்களின் இளமைக்கால நினைவுகளை அழகாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள் நல்ல நினைவுகள் மிக சரியான வழிகாட்டலும் கூட பாராட்டுகள்

  ReplyDelete
 21. ஹாய் மாமா
  எப்புடி இருக்கீங்க ??

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி